Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மிசிசாகாவில் வாகனத்தினுள் பெண்ணின் சடலம் – ரொரன்ரோ நபர் கைது

Posted: 09 Nov 2015 08:57 PM PST

jh

jhகடந்த ஏப்ரல் மாதம் மிசிசாகா பகுதியில் வாகனம் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் பிணம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த காவல்த்துறையினர், ரொரன்ரோவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி, Robert Speck Parkway பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த BMW sedan ரக கார் ஒன்றினுள் இருந்து, காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த 59 வயதான Ming-Chien 'Theresa' Hsin எனப்படும் பெண் சடலமாக மீட்கப்பட்டார்.jh

தாக்குதலுக்கு இலக்கான நிலையில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த காவல்த்துறையினர், சம்வம் தொடர்பில் ரொரன்ரோவைச் சேர்ந்த 21 வயதான Mark Dookhram என்பவரை கைது செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளனர்.

நாளை அவர் பிரம்டன் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ள காவல்த்துறையினர், குறித்த அந்த சம்பவம் தொடர்பில் அல்லது சந்தேக நபர் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post மிசிசாகாவில் வாகனத்தினுள் பெண்ணின் சடலம் – ரொரன்ரோ நபர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நோபல் பரிசு பெற்ற கனேடிய விஞ்ஞானிக்கு மற்றுமொரு பரிசைப் பெறுகிறார்

Posted: 09 Nov 2015 10:30 AM PST

Arthur_McDonald_-_11092015

Arthur_McDonald_-_11092015அண்மையில் நேபல் பரிசு பெற்ற கனேடிய விஞ்ஞானியான Arthur McDonald என்பவர் மற்றுமொரு பரிசை வென்றுள்ளார்.

அடிப்படை இயற்பியலிற்காக அவா உள்ளிட்டவர்களுக்கு அந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசுத் தொகையாக 3மில்லியன் டொலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அந்த தொகை ஐந்து ஆய்வுகளுக்கு சமமாகப் பங்கிடப்படவுள்ளது.

Sudbury Neutrino ஆய்வகத்தில் அய்வுகளை மேற்கொண்ட
Arthur McDonald உம் அந்த பங்கிடப்பட்ட பரிசுத் தொகையப் பெறவுள்ளார்.Arthur_McDonald_-_11092015

Arthur McDonald தற்போது பரிசு பெற்றுக்கொள்ளும் இதே ஆய்வுக்காவே கடந்த மாதம் நோபல் பரிசை மற்றொரு விஞ்ஞானியுடன் இணைந்து பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூட்ரினோக்களுக்கும் திணிவு உண்டு என்பதனை காட்டும் "நியூட்ரினோ ஏற்றத்தாழ்வு" என்ற அந்த கண்டுபிடிப்பை Arthur McDonald உடன் ரக்காகி கஜிரா என்ற விஞ்ஞானி இணைந்து மேற்கொண்டிருந்த நிலையிலேயே அவர்கள் இருவருக்கும் 2015ஆம் அண்டின் இயற்பியலிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

The post நோபல் பரிசு பெற்ற கனேடிய விஞ்ஞானிக்கு மற்றுமொரு பரிசைப் பெறுகிறார் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனேடிய சரக்கு தொடரூந்து தடம்புரண்டு விபத்து – உயிர்ச்சேதங்கள் எதுவும் இல்லை என தெரிவிப்பு

Posted: 09 Nov 2015 10:10 AM PST

train_derailed_-_11092015

train_derailed_-_11092015அமெரிக்காவின் விஸ்கான்சின்(Wisconsin) பகுதியில் மசகு எண்ணெயை ஏற்றிச் சென்ற மற்றொரு கனேடிய சரக்கு தொடரூந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இரண்டு நாட்களின் முன்னர் கடந்த சனிக்கிழமை விஸ்கான்சின் மாநிலத்தில் மசகு எண்ணெயை ஏற்றிச் சென்ற கனேடிய சரக்கு தொடரூந்து ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளான நிலையில், தற்போதைய இந்த இரண்டாவது விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டாவது விபத்து விஸ்கான்சின் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் நேற்று ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் இரண்டு மணியளவில் சம்பவித்துள்ளது.

விபத்தின் போது தொடரூந்தின் பத்து பெட்டிகள் வரையில் தடம்புரண்டதாகவும், அவற்றில் சில பெட்டிகளில் இருந்து மசகு எண்ணெய் கசிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.train_derailed_-_11092015

எனினும் விபத்துக் குறித்து கனேடிய தொடரூந்து நிறுவனம் வெளியிட்ட தகவலில், விபத்து நேர்ந்த இடத்தில் தீப் பரவல் ஏற்படவில்லை எனவும், விபத்தின் போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த விபத்தினை மிகவும் பாரதூரமான விடயமாக கருதுவதாக தெரிவித்துள்ள கனேடி தொடரூந்து நிறுவன அதிகாரிகள், விபத்தினை கையாள்வதற்கு நிபுனர்கள் குழு ஒன்றையும் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ளது.

The post கனேடிய சரக்கு தொடரூந்து தடம்புரண்டு விபத்து – உயிர்ச்சேதங்கள் எதுவும் இல்லை என தெரிவிப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Kensington Market இல் வாள்வெட்டுச் சம்பவம்

Posted: 09 Nov 2015 09:42 AM PST

Kensington_Market_-_11092015

Kensington_Market_-_11092015Kensington Market பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக காவல்த்தறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை காலையில் இடபெற்றுள்ளது.

Nassau வீதி மற்றும் Bellevue அவனியூவில் அதிகாலை வேளை 1.30 மணியளவில் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதை காவல்த்துறையினரும் உருதிப்படுத்தியுள்ளனர்.Kensington_Market_-_11092015

வாள் வெட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நபரின் காயம் உயிராபத்தானது இல்லை என்று நம்பப்படுவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் ஒருவரை ஆயுதத்துடன் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்த்துறையினர், மேலும் இருவரை தேடி வருவதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

The post Kensington Market இல் வாள்வெட்டுச் சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™