Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மீண்டும் பீகார் முதல் மந்திரியாக நிதிஷ் குமார் 20-ம் தேதி பதவியேற்பு

Posted: 09 Nov 2015 10:16 PM PST

பீகாரின் அடுத்த முதல் மந்திரியாக நிதிஷ் குமார் வரும் 20-ம் தேதி பதவி ஏற்றுக்கொள்வார் என்றும் அவரது தலைமையிலான மந்திரிசபையில் லல்லுவின் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 16 பேரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஐந்து பேரும் இடம்பெறுவார்கள் எனவும் தெரியவந்துள்ளது.

எய்ட்ஸ் தடுப்பு மருந்து தயார்: அடுத்த மாதத்தில் இருந்து கொல்கத்தாவின் பிரபல சோனாகச்சி பகுதியில் கிடைக்கும்

Posted: 09 Nov 2015 09:51 PM PST

இந்தியாவின் மாபெரும் விபச்சார சந்தையான கொல்கத்தாவின் சோனாகச்சி பகுதியில் உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயை தடுக்கும் மருந்து அடுத்த மாதத்தில் இருந்து கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை கடலில் விழுந்த ஹெலிகாப்டர்: விமானியின் உடல் ஒரு வாரத்துக்கு பின்னர் மீட்பு

Posted: 09 Nov 2015 08:39 PM PST

மும்பை கடலில் அமைந்துள்ள ஓ.என்.ஜி.சி. எண்ணெய் மற்றும் எரிவாயு வயலில் உள்ள தளத்தில் இருந்து கடந்த 4–ந் தேதி இரவு பவன் ஹன்ஸ் ரக ஹெலிகாப்டர் ஒன்று கரைப்பகுதிக்கு புறப்பட்டு சென்றது. சற்று நேரத்தில், அது அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில்

கடும் மழை எதிரொலி: திருப்பதி மலைப்பாதையில் நிலச்சரிவு - வாகனங்கள் நிறுத்தம்

Posted: 09 Nov 2015 08:28 PM PST

ஆந்திராவின் சித்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்துவரும் தொடர்மழையால் திருப்பதி பகுதியிலும் கடந்த 30 மணிநேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. திருப்பதியை ஒட்டியுள்ள அலிப்ரி மற்றும் ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள திருமலையிலும் சுழற்காற்றுடன் பெருமழை நீடித்து

விருதுகளை அடுத்து பதக்கங்களை திருப்பி அளிக்கும் போராட்டத்தை இன்று தொடங்கும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள்

Posted: 09 Nov 2015 07:45 PM PST

சகிப்புத்தன்மையின்மை, கருத்து சுதந்திரத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் போன்றவற்றை எதிர்த்து நாட்டின் பிரபல எழுத்தாளர்கள், படைப்பாளிகள், சிந்தனையாளர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களுக்கு அளிக்கப்பட்ட நாட்டின் மதிப்புமிக்க விருதுகளை திருப்பி அளித்து வருகின்றனர்.

அனைவருக்கும் நீதி கிடைக்க பாடுபடுவோம்: பிரதமர் மோடி உறுதி

Posted: 09 Nov 2015 06:54 PM PST

21-வது தேசிய சட்டப்பணிகள் தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:- அனைவருக்கும் வளர்ச்சி கிடைக்கச் செய்வதுடன், அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்வோம் என்பதே எனது புதிய மந்திரம். ஏழைகளுக்கு சட்ட

மது பார் ஊழல் வழக்கில் சிக்கிய கேரள நிதி மந்திரி மாணி பதவி விலகுகிறார்?

Posted: 09 Nov 2015 03:58 PM PST

மது பார் ஊழல் வழக்கில் சிக்கிய கேரள நிதி மந்திரி மாணிக்கு பல்வேறு வகையிலும் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் விமானப்படை மார்ஷல் மெஹ்ரா காலமானார்

Posted: 09 Nov 2015 02:43 PM PST

முன்னாள் விமானப்படை மார்ஷல் ஓம் பிரகாஷ் மெஹ்ரா காலமானார். 96 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக, டெல்லி ராணுவ ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார், அங்கு நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு டெல்லி

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு

Posted: 09 Nov 2015 01:44 PM PST

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஜனாதிபதிக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். நேற்று நடந்த இந்த சந்திப்பு குறித்து ஜனாதிபதி அலுவலகத்தின் ட்விட்டர்

பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜி-சாட் 15 செயற்கைகோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது

Posted: 09 Nov 2015 01:32 PM PST

பிரெஞ்சு கயானாவில் இருந்து 'ஏரியன்-5' ராக்கெட் மூலம் 'ஜி-சாட் 15' செயற்கைகோள் நாளை (புதன்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 'கவுண்ட்டவுன்' தொடங்கியது என்று 'இஸ்ரோ' அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான

24 மணி நேரத்தில் அந்தமான் தீவுகளில் 12 முறை நில நடுக்கம்

Posted: 09 Nov 2015 12:39 PM PST

அந்தமான்- நிகோபார் தீவுகளைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் 24 மணி நேரத்திற்குள் 12 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதன் முதலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.04 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவானது.

ஷீனா போரா கொலை வழக்கு: இந்த மாத இறுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted: 09 Nov 2015 12:00 PM PST

ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இந்திராணி முகர்ஜி உட்பட 3 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை சிபிஐ அதிகாரிகள் மும்பை நீதிமன்றத்தில் இந்த மாத இறுதிக்குள் தாக்கல் செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தரவனக் காட்டில் நண்டு பிடிக்கப் போனவரை புலி இழுத்துச் சென்று கொன்றது

Posted: 09 Nov 2015 11:29 AM PST

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள சுந்தரவனம் காட்டுப் பகுதியில் இருக்கும் வலை நண்டுகளை பிடிக்கச் சென்ற நபரை புலி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள 3 பேர் நேற்று பிர்காலி வனப்பகுதியில் வலை நண்டுகளை

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம்: முன்னாள் வீரர்களின் ஆட்சேபனையை நிராகரித்த மத்திய மந்திரி

Posted: 09 Nov 2015 10:12 AM PST

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக மத்திய அரசு ஒப்புக்கொண்ட போதும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளிவராமல் இருந்தது. பீகார் சட்டசபை தேர்தலால் இத்திட்டத்தை

பீகார் தேர்தல் தோல்விக்கு மோகன் பகவத்தும், அமித்ஷாவும் தான் காரணம்: ஜித்தன்ராம் மாஞ்சி சாடல்

Posted: 09 Nov 2015 09:21 AM PST

பீகார் சட்டசபை தேர்தலில், பா.ஜ.க., கூட்டணிக்கு ஏற்பட்ட தோல்விக்கு ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்தின் இடஒதுக்கீடு குறித்த கருத்து தான் காரணம் என்று பீகார் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பீகார் முன்னாள் முதல்வர் ஜித்தன்ராம் மாஞ்சி

நிதிஷ்குமாரை புகழும் சத்ருகன் சின்கா மீது பா.ஜ.க. தலைவர்கள் கடும் தாக்கு

Posted: 09 Nov 2015 07:20 AM PST

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அவருக்கு எதிராக மறைமுகமாக கூட்டு சதி நடந்துள்ளதாக மத்திய மந்திரி உமா பாரதி கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உமா பாரதி, சகிப்புத்தன்மை, இடஒதுக்கீடு, மாட்டுக்கறி உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தப்படுத்தி கொண்டதாக

இடஒதுக்கீட்டு கொள்கைக்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். எதிரானது அல்ல: அருண்ஜெட்லி கருத்து

Posted: 09 Nov 2015 06:39 AM PST

இடஒதுக்கீடு கொள்கைக்கு பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் எதிரானது அல்ல என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி கூறினார். மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- பீகார் மாநில மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம். புதிதாக அமையவுள்ள அரசு அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும்

உ.பி.யில் நாங்கள் 2017-ல் ஆட்சியைப் பிடிப்பதை யாரும் தடுக்க முடியாது: மாயாவதி அறிக்கை

Posted: 09 Nov 2015 05:41 AM PST

உ.பி.யில் நாங்கள் 2017-ல் ஆட்சியைப் பிடிப்பதை யாரும் தடுக்க முடியாது என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பா.ஜனதா கட்சியின் தவறான கொள்கைகள், செயல்படும் விதம் மற்றும் இனவாத மனப்போக்கிற்கு எதிராக பீகார் மக்கள் மகா கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களால் வெற்றி பெற முடியாமல் போனது.

நிதிஷ்குமாருடன் பா.ஜ.க. அதிருப்தி எம்.பி சத்ருகன் சின்கா சந்திப்பு

Posted: 09 Nov 2015 02:49 AM PST

பா.ஜ.க., எம்.பியும், பிரபல பாலிவுட் நடிகருமான சத்ருகன் சின்கா, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை இன்று சந்தித்தார். பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதற்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில்,

ஜம்மு-காஷ்மீரில் தர்பார் மாற்றம்: இன்று முதல் மாநில தலைநகர் ஆனது, ஜம்மு

Posted: 09 Nov 2015 02:28 AM PST

தமிழக அரசின் தலைமை செயலகம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருவதைப் போல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில தலைமை செயலகமும் அந்த மாநிலத்தின் தலைநகரில் இயங்கி வருகின்றன. ஆனால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் கோடை மற்றும் கடுங்குளிர் காலங்களில் தலைமை செயலகம் முறையே ஸ்ரீநகரிலும், ஜம்முவிலும் என இரு இடங்களில் இயங்கி வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™