Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


யோர்தானில் அகதிகள் செயலாக்க மையம் ஒன்றை திறந்துள்ளது கனடா

Posted: 30 Nov 2015 08:13 PM PST

u

uயோர்தானில் அகதிகள் செயலாக்க மையம் ஒன்றினை கனடா திறந்து வைத்துள்ளது.

செயலாக்க மையம் யோர்தான் தலைநகர் அமானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கனடாவுக்குள் உள்வாங்கப்படுவதற்கு பதிவுசெய்யப்படும் சிரிய நாட்டு அகதி மக்களை பரிசீலனைக்கு உட்படுத்துவதற்காகவே இந்த அகதிகள் செயலாக்க மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதத்தினுள் 25,000 சிரிய அகதிகள் கனடாவுக்குள் அழைத்துவரப்படவுள்ள நிலையில், இந்த மையத்தின் ஊடாகவே அதிகளவான அகதிகள் கனடாவுக்குள் உள்வாங்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

அகதிகளை உள்வாங்குவதற்கான ஆரம்பநிலை செயற்பாடுகள் இடம்பெறும் இந்த நிலையத்திற்கு மூன்று மத்திய அமைச்சர்கள் நேற்றைய தினம் சென்றிருந்ததுடன்,அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை நேரில் அவதானித்துள்ளனர்.u

அந்த மூன்று அமைச்சர்களில் ஒருவரான கனேடிய மத்திய குடிவரவுத்துறை அமைச்சர் ஜோன் மக்கலம் கருத்து வெளியிடுகையில், தாம் எதிர்பார்த்தபடியே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

முதல்நாளன்றே பெருமளவான சிரிய அகதிகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும், யோர்தானில் இருந்து அவர்கள் வெளியேறுவதற்கு கடுமையான ஆவணங்கள் தேவையில்லை என்பதனால் கனடாவை நோக்கிய அவர்களின் வெளியேற்றம் இலகுவானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நேற்றைய நாள் அனைத்துப் பணிகளையும் முடித்துக்கொண்டு அவர்கள் யோர்தானை விட்டு புறப்பட்ட பின்னரே, அவர்களின் யோர்தான் பயணம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டே அவர்களின் பயணம் இரகசியமாக வைக்கப்பட்டது எனவும், அவர்களின் பயணத்தின் போது ஊடகவியலாளர்களும் இணைத்துக் கொள்ளப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

The post யோர்தானில் அகதிகள் செயலாக்க மையம் ஒன்றை திறந்துள்ளது கனடா appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிரிய அகதிகள் விடயம் தொடர்பில் ஆலோசிக்க ரொரன்ரோவில் மாநாடு

Posted: 30 Nov 2015 08:59 AM PST

சிரிய அகதிகள் விடயம் தொடர்பில் இரண்டு நாள் மாநாடு ரொன்ரோவில் நடைபெற்றுள்ளது. சிரிய நாட்டு அகதிகளை கனடாவில் குடியமர்த்தும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கனேடிய மத்திய அரசாங்கத்தால் இந்த மாநாடு ஏற்பாடு செய்ய்பபட்டது. மாநாட்டில், சிரிய அகதிகளைக் கையாளவுள்ள மத்திய மாநில அரசு அதிகாரிகள், நகர அதிகாரிகள், அவசரகால உதவி அதிகாரிகள், குடியேற்றத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பல துறைகளைச் சேர்ந்த பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் மாலை ரொரன்ரோ […]

The post சிரிய அகதிகள் விடயம் தொடர்பில் ஆலோசிக்க ரொரன்ரோவில் மாநாடு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தேங்காய் தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்

Posted: 30 Nov 2015 07:23 AM PST

hh

hhதேங்காய் தண்ணீர் சுவையானது மட்டுமல்லாமல் ஒரு சத்தான பானமும் கூட. அதை பருகுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன என்று தெரியுமா?

இளநீரில் உள்ளது போன்று தேங்காய் தண்ணீரிலும் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. எனினும் அவை குறித்து பெரும்பாலானோர் அறிந்திருப்பதில்லை.

தேங்காய் தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

செரிமான பிரச்சனை தீர:

உணவு செரிமானம் ஆகாமல் அவதிப்படுபவர்கள் தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஒரு வாரம் அருந்திவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து அருந்தி வந்தால் வாயு தொல்லையில் இருந்தும் விடுதலை பெறலாம்.6

உடல் எடை குறைய:

மேலும் தேங்காய் தண்ணீரை அருந்துவதால் உடலில் கொழுப்புகள் சேருவது குறையும். தேங்காய் தண்ணீர் பசியையும் கட்டுப்படுத்துகிறது.

இதன் காரணமாக உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.

மது பழக்கம் உள்ளவர்களுக்கு:

தேங்காய் தண்ணீரை பருகினால் ஆல்கஹால் மூலம் உடலில் ஏற்படும் வறட்சியை தடுக்கலாம்.

அளவுக்கு அதிமாக மது அருந்துவதால் ஏற்படும் ஹேங்ஓவர் எனப்படும் தலைவலியையும் தேங்காய் தண்ணீர் அருந்துவதன் மூலம் நிவர்த்தி செய்யலாம்.

அதேபோல் மற்ற பானங்களை விட தேங்காய் தண்ணீரில் சக்கரையின் அளவு குறைவு என்பதால் இது ஒரு சிறந்த 'எனர்ஜி ட்ரிங்' ஆகவும் விளங்குகிறது.7

மற்ற நோய்களுக்கு:

மேலும் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் அருந்திவந்தால் இரத்த கொதிப்பையும் கட்டுப்படுத்தலாம்.

சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் தேங்காய் தண்ணீர் அருந்துவதால் குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் கர்ப்பிணிகளும் தேங்காய் தண்ணீரை பருகி வந்தால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

அதேவேளையில் தேங்காய் தண்ணீரை அதிகமாக அருந்தக்கூடாது.

அவ்வாறு அருந்தினால் உடலில் கலாரியின் அளவு அதிகரித்துவிடும் என்பதையும் கவனத்தில் வைத்துகொள்ள வேண்டும்.hh

The post தேங்காய் தண்ணீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நோர்த் யோர்க் அடுக்குமாடிக் குடியிருப்பில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

Posted: 30 Nov 2015 07:18 AM PST

u

uநோர்த் யோர்க் அடுக்குமாடிக் குடியிருப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று காலையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த அந்த நபர் உடனடியாகவே மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jane வீதிக்கு அருகில் Falstaff அவனியூவில் உள்ள ரொரன்ரோ சமூகக் குடியிருப்புப் கட்டிடத்தில் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 5.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாகவும். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் மீது ஒரு துப்பாக்கிச் சூட்டுக் காயம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் அவர் உயிராபத்தான நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.u

எனினும் காவல்த்துறையினர் வெளியிட்டுள்ள பிந்திய தகவலில் பாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் உயிர் பிழைத்து விடுவார் என நம்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளான நபரின் கழுத்துப் பகுதியிலேயே துப்பாக்கிச் சூட்டுக் காயம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேக நபர் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன்,இந்த சம்பவத்தில் சந்தேக நபர் குறித்த தகவல்கள் எதனையும் காவல்த்துறையினர் வெளியிடவில்லை.

இதற்கிடையில் அந்த சம்பவம் இடம்பெற்ற பகுதியின் அயலவர்களிடம் வினவிய போது, குறித்த இரவு வேளையில் அவ்வாறான துப்பாக்கிச் சத்தத்தையோ, குழப்பத்தையே தாம் கேட்கவில்லை என்று கூறியுள்ளனர்.

The post நோர்த் யோர்க் அடுக்குமாடிக் குடியிருப்பில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™