மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மானியமல்லாத எரிவாயு சிலிண்டர் விலை ரூ.61.50 அதிகரிப்பு
- ஐதராபாத்தில் பள்ளிக்கூடத்தில் குழந்தை பெற்ற 9–ம் வகுப்பு மாணவி: ஆசிரியர்கள் அதிர்ச்சி
- பாரிஸ் பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் நரேந்திர மோடி டெல்லி வந்தடைந்தார்
- மோடியின் தூய்மை இந்தியா எங்களது நிர்மல் பாரத் திட்டத்தின் காப்பி: போட்டுத்தாக்கும் காங்கிரஸ்
- தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி: திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி விடுதிகளில் போலீசார் சோதனை
- ஆந்திராவில் பலத்த மழை: திருப்பதி கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது
- சபரிமலையில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் குவிந்தனர்: நெய்அபிஷேக நேரம் அதிகரிப்பு
- காட்டுக்குள் கடத்திச் சென்று 2 நண்பர்களுடன் சேர்ந்து பள்ளி மாணவியை கற்பழித்த வாலிபர்
- அவதூறாக குற்றம் சாட்டியதால் உம்மன்சாண்டி மீது வழக்கு தொடர அனுமதி கேட்கும் போலீஸ் டி.ஜி.பி.
- நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் உணவகம், வீடு, கார் ஏலம் விடப்படுகிறது
- கர்நாடக மேல்-சபை தேர்தல் வேட்பாளர் பட்டியலுடன் சித்தராமையா இன்று டெல்லி பயணம்
- 10-ம் வகுப்பு தேர்வில் சமஸ்கிருதம், கன்னட பாடத்தில் 100-க்கு 100: மாணவிக்கு பிரதமர் மோடி பாராட்டு கடிதம்
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் குளிப்பதற்கு சுடுநீர்
- தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத இஸ்லாமிய குடும்பத்தினர் திரையரங்கிலிருந்து வெளியேற்றம்: வலுக்கும் கண்டனம்
- சல்மான் ருஷ்டி புத்தகத்துக்கு தடை: ப.சிதம்பரம் கருத்து பற்றி காங்கிரஸ் பதில்
- மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி அமெரிக்கா சென்றார்
- மதரசாக்களில் பாலியல் தொந்தரவு: கேரள பெண் நிருபரைத் தொடர்ந்து இயக்குனரும் புகார்
- ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு உளவு பார்த்தவர்கள் கைது: பாகிஸ்தான் தூதரக ஊழியருக்கு தொடர்பு இருப்பது அம்பலம்
- மத்திய அரசு ஊழியர்களையும் விசாரிக்கும் அதிகாரத்துடன் ஜன்லோக்பால் சட்டம்: டெல்லி சட்டசபையில் தாக்கல்
- சகிப்பின்மை விவகாரம்: பாராளுமன்றத்தில் அமளி - 4 முறை சபை ஒத்திவைப்பு
| மானியமல்லாத எரிவாயு சிலிண்டர் விலை ரூ.61.50 அதிகரிப்பு Posted: 30 Nov 2015 11:01 PM PST மானியமல்லாத வெளிச்சந்தை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 61 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்துள்ளன. எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை மாதந்தோறும் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. |
| ஐதராபாத்தில் பள்ளிக்கூடத்தில் குழந்தை பெற்ற 9–ம் வகுப்பு மாணவி: ஆசிரியர்கள் அதிர்ச்சி Posted: 30 Nov 2015 10:30 PM PST ஐதராபாத் அருகே உள்ள மாதாம்பூரைச் சேர்ந்த 15 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவி அதனை மறைத்து தினமும் பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கூடத்தில் வகுப்பு நடந்து கொண்டு இருக்கும் போது மாணவி வயிறு வலிப்பதாகவும் கழிவறை செல்ல வேண்டும் என்று |
| பாரிஸ் பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் நரேந்திர மோடி டெல்லி வந்தடைந்தார் Posted: 30 Nov 2015 10:17 PM PST பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா. உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் சென்றிருந்த பிரதமர் மோடி தனது இரண்டுநாள் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து இன்று காலை தலைநகர் டெல்லியை வந்தடைந்தார். |
| மோடியின் தூய்மை இந்தியா எங்களது நிர்மல் பாரத் திட்டத்தின் காப்பி: போட்டுத்தாக்கும் காங்கிரஸ் Posted: 30 Nov 2015 09:52 PM PST சுவாச் பாரத் எனப்படும் பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டமானது முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிர்மல் பாரத் திட்டத்தின் பிரதிதான் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் மத்திய தலைமையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- |
| தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதிரொலி: திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி விடுதிகளில் போலீசார் சோதனை Posted: 30 Nov 2015 09:43 PM PST ஐ.எஸ்.தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் எதிரொலியாக திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி பகுதிகளில் உள்ள விடுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்பட பல்வேறு மத வழிபாட்டு தலங்களுக்கும், பல்வேறு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் ஐ.எஸ்.தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்படலாம் என்று ஆந்திர மாநில அரசுக்கு, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. |
| ஆந்திராவில் பலத்த மழை: திருப்பதி கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது Posted: 30 Nov 2015 09:37 PM PST குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருகிறது. திருப்பதியில் நேற்று காலை சாரலுடன் தொடங்கிய மழை பின்னர் வலுத்தது. திருமலையில் இடைவிடாமல் மழை கொட்டியது. இதனால் ஏழுமலையான் கோவிலை சுற்றி குளம் போல் தண்ணீர் தேங்கியது. |
| சபரிமலையில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் குவிந்தனர்: நெய்அபிஷேக நேரம் அதிகரிப்பு Posted: 30 Nov 2015 09:29 PM PST சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது. கோவில் நடை திறந்த முதல் நாளில் இருந்து அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சபரிமலையில் அவ்வப் போது பலத்த மழை பெய்து வருகிறது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். |
| காட்டுக்குள் கடத்திச் சென்று 2 நண்பர்களுடன் சேர்ந்து பள்ளி மாணவியை கற்பழித்த வாலிபர் Posted: 30 Nov 2015 08:59 PM PST ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் போடிபூடிவாரி பாளையத்தை சேர்ந்த 16 வயது மாணவி ராணி (பெயர் மாற்றம்). இவர் அருகில் உள்ள வீணுகொண்டா பள்ளியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். தனது கிராமத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் காட்டுக்குள் நடந்து வந்து தொண்டமுல்லா என்ற இடத்தில் பஸ் ஏறி பள்ளிக்கு செல்ல வேண்டும். |
| அவதூறாக குற்றம் சாட்டியதால் உம்மன்சாண்டி மீது வழக்கு தொடர அனுமதி கேட்கும் போலீஸ் டி.ஜி.பி. Posted: 30 Nov 2015 08:44 PM PST கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி கட்சியின் ஆட்சி நடக்கிறது. காங்கிரசை சேர்ந்த உம்மன்சாண்டி முதல்–மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அவரது ஆட்சிக்கு கேரள காங்கிரஸ் (எம்) உள்பட சில கட்சிகள் ஆதரவு அளித்து வருகிறது. |
| நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் உணவகம், வீடு, கார் ஏலம் விடப்படுகிறது Posted: 30 Nov 2015 08:14 PM PST மும்பை தொடர்குண்டு வெடிப்பு தாக்குதலில் இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராகிமுக்கு ஒருகாலத்தில் சொந்தமாக மும்பையில் இருந்த உணவகம், வீடுகள் மற்றும் கார் உள்ளிட்ட சொத்துகளை வரும் 9-ம் தேதி ஏலத்தில்விட கடத்தல் மற்றும் அன்னிய செலாவணி மோசடி தடுப்புத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். |
| கர்நாடக மேல்-சபை தேர்தல் வேட்பாளர் பட்டியலுடன் சித்தராமையா இன்று டெல்லி பயணம் Posted: 30 Nov 2015 07:26 PM PST பெங்களூரு மாநகராட்சி மேயர் தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தது. அதுபோல, மேல்-சபை தேர்தலிலும் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்பட்டது. மேலும் மேல்-சபை தேர்தல் கூட்டணி தொடர்பாக பெங்களூருவுக்கு |
| Posted: 30 Nov 2015 07:18 PM PST கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி டவுனை சேர்ந்தவர் சையத் அலீம். தொழில் அதிபர். இவரது மனைவி ஷகீலா பானு. இந்த தம்பதியின் மகள் ரிஷ்பா (வயது 17). இவர் தற்போது தீர்த்தஹள்ளியில் உள்ள அரசு ஜூனியர் கல்லூரியில் அறிவியல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். |
| திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் குளிப்பதற்கு சுடுநீர் Posted: 30 Nov 2015 07:18 PM PST திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சாம்பசிவராவ் திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், லட்டு பிரசாதம் தயாரிக்கும் கூடம், லட்டு கவுண்ட்டர்கள், அன்னதான கூடம். பக்தர்கள் ஓய்வறை-2, லாக்கர் ஒதுக்கீடு செய்து கொடுக்கும் இடம், கழிப்பறை, குளியல் அறை ஆகிய இடங்களை நேரில் சென்று சுத்தமாக உள்ளதா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். லட்டு தயாரிக்கும் கூடத்தில் உள்ள பாத்திரங்களை சுடுநீரில் சுத்தம் |
| Posted: 30 Nov 2015 04:08 PM PST சினிமா திரையரங்கில் இந்திய தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்ட போது, எழுந்து நிற்காத இஸ்லாமிய குடும்பத்தை, அங்கிருந்தவர்கள் திரையரங்கை விட்டு வெளியேற்றிய சம்பவம் நாடு முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. |
| சல்மான் ருஷ்டி புத்தகத்துக்கு தடை: ப.சிதம்பரம் கருத்து பற்றி காங்கிரஸ் பதில் Posted: 30 Nov 2015 03:40 PM PST கடந்த 1988-ம் ஆண்டு, எழுத்தாளர் சல்மான் ருஷ்டி புத்தகத்துக்கு ராஜீவ் காந்தி அரசு தடை விதித்தது தவறானது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதபம்ரம், கடந்த சனிக்கிழமை ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் கூறினார். அவரது கருத்து பற்றி கேட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் |
| மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி அமெரிக்கா சென்றார் Posted: 30 Nov 2015 03:13 PM PST காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மருத்துவ பரிசோதனைக்காக அடிக்கடி அமெரிக்கா சென்று வந்தார். பீகார் சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்ததை தொடர்ந்து, கடந்த 2 மாதங்களாக அவரால் அமெரிக்கா செல்ல முடியவில்லை. |
| மதரசாக்களில் பாலியல் தொந்தரவு: கேரள பெண் நிருபரைத் தொடர்ந்து இயக்குனரும் புகார் Posted: 30 Nov 2015 02:26 PM PST கேரளாவைச் சேர்ந்த பெண் நிருபர் ஒருவர், அண்மையில் மதரசாவில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக பதிவிட்டதையடுத்து, அவரது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், தற்போது, கேரளாவில் மதரசா எனப்படும் இஸ்லாமிய பள்ளிகளில் பாலியல் வன்முறை சம்பவங்கள் நிகழ்வதாக, பிரபல திரைப்பட இயக்குனர் அலி அக்பர் புகார் |
| ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு உளவு பார்த்தவர்கள் கைது: பாகிஸ்தான் தூதரக ஊழியருக்கு தொடர்பு இருப்பது அம்பலம் Posted: 30 Nov 2015 02:12 PM PST பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அண்மையில் காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணியாற்றி வந்த அப்துல் ரஷீத்தும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த கைபதுல்லாகான் என்பவரும் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். |
| மத்திய அரசு ஊழியர்களையும் விசாரிக்கும் அதிகாரத்துடன் ஜன்லோக்பால் சட்டம்: டெல்லி சட்டசபையில் தாக்கல் Posted: 30 Nov 2015 12:18 PM PST டெல்லி மாநில துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா நேற்று ஜன்லோக்பால் சட்டமசோதாவை அறிமுகப்படுத்தினார். அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- தேசிய தலைநகரான டெல்லி நகரில் அரசோ, பொதுமக்களோ அல்லது |
| சகிப்பின்மை விவகாரம்: பாராளுமன்றத்தில் அமளி - 4 முறை சபை ஒத்திவைப்பு Posted: 30 Nov 2015 11:46 AM PST சகிப்பின்மை அதிகரித்து வருவது தொடர்பாக பாராளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டு எம்.பி.க்கள் கொண்டு வந்த நோட்டீசு ஏற்கப்பட்டது. அதன்படி இப்பிரச்சினை நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தின் மீது பேசிய மார்க்சிஸ்டு எம்.பி. முகமது சலீம் பிரதமர் மோடியை கடுமையாக தாக்கினார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |