Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கோபி அருந்துவதன் மூலம் கல்லீரலில் ஏற்படும் நோய்கள் குணமாகும் – ஆய்வில் தகவல்

Posted: 19 Nov 2015 07:39 PM PST

gj

gjஅவுஸ்திரேலியாவின், மோனாஷ் பல்கலைக்கழக இரைப்பை மருத்துவர் அலெக்ஸ் ஹாட்ஜ் கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கோபி குணமாக்குமா, என்ற நோக்கில் ஆய்வு நடத்தினார்.

ஹெப்படைட்டிஸ் சி, ஹெப்படைட்டிஸ் பி மற்றும் மதுப்பழக்கத்தால் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றால், பாதிப்பிற்குள்ளான 1100 நோயளிகளிடம் ஒவ்வொரு நாளும் மூன்று முறை கோபி குடிக்க வைத்து ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த நோயாளிகளில் முக்கியமாக ஹெப்படைட்டிஸ் சி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் கல்லீரல் சீரடைந்ததாக தெரியவந்தது.

எனினும், கோபியின் எந்த மூலக்கூறு கல்லீரலின் முன்னேற்றத்துக்கு காரணம் என்பது தெரியவரவில்லை.

ஆகவே, இந்த மூலக்கூறினைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக மேற்கொண்டு ஆராய்ச்சி நடத்தப்பட இருப்பதாக அலெக்ஸ் ஹாட்ஜ் தெரிவித்துள்ளார்.gj

The post கோபி அருந்துவதன் மூலம் கல்லீரலில் ஏற்படும் நோய்கள் குணமாகும் – ஆய்வில் தகவல் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சன நெரிசலான மார்க்கம் சந்திப்பு பகுதியில் விபத்து

Posted: 19 Nov 2015 07:28 PM PST

i

iசன போக்குவரத்து அதிகமாக காணப்படும் மார்க்கம் சந்திப்புப் பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை மோசமான விபத்து ஒன்ற இடம்பெற்றுள்ளது.

அந்த விபத்தை அடுத்து அந்த சந்திப்புப் பகுதி போக்குவரத்திற்கு மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்புப் பகுதியின் நெடுஞ்சாலை 7 இல் பிற்பகல் 4 மணிக்கு சற்று முன்னராக அந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ரக் ரக வாகனம் ஒன்று தூண் ஒன்றில் மோதியதாகவும்,அதனை செலுத்திச் சென்ற வாகன ஓட்டுனர் உயிராபத்தான காயங்களுக்கு ஆளானதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனினும் எவ்வாறு விபத்து சம்பவித்துள்ளது என்பது குறித்து தெளிவான தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

விபத்தை அடுத்து குறித்த சந்திப்புப் பகுதியை போக்குவரத்திற்கு மூடியிருந்த காவல்த்துறையினர், விபத்துக் குறித்த விசாரணைகளுக்காக குறிப்பிட்ட மணித்தியாளங்களுக்கு அந்த பகுதியூடான போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.

The post சன நெரிசலான மார்க்கம் சந்திப்பு பகுதியில் விபத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்க அதிபரைச் சந்தித்தார் கனடாவின் புதிய பிரதமர்

Posted: 19 Nov 2015 06:35 PM PST

hj

hjகனடாவின் புதிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ அமெரிக்க அதிபர் பராக் ஒபாமை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

ஆசிய பிராந்திய பொருளாதார ஒத்துளைப்பு மாநாட்டின் இறுதி நாளின் போது அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும், கனடாவின் புதிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கும் இடையிலான அந்த நேரடிச் சந்திப்பு நடைபெற்றிருந்தது.

கனடாவின் புதிய பிரதமராக ஜஸ்டின் ரூடோ பதவியேற்றுக் கொண்டதன் பின்னர், இருவருக்கும் இடையே இடம்பெற்றுள்ள முதலாவது அதிகாரபூர்வ நேரடி சந்திப்பு இது என்பதுடன், இதன் போது இரு நாட்டு தலைவர்களும் சுமார் 23 நிமிடங்கள் உரையாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கலந்துரையாடல்களின் போது இரு தலைவர்களும் ஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள், அகதிகள் விவகாரம், பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விவாதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.hj

பல்வேறு மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்திவரும் உலக பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் கனடா அசாதாரணமான வகையில துணை நிற்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்புகளின் போது கனேடிய பிரதமர் அமெரிக்காவுக்கான தனது முதலாவது வருகையை புதுவருட காலத்தில் மேற்கொள்ள வேண்டும் என்ற அழைப்பினையும் பராக் ஒபாமா முன்வைத்துள்ளார்.

அத்துடன் பசுபிக் ஒத்துளைப்பு இணக்கப்பாட்டிலும் கனடாவும் அமெரிக்காவும் விரைவில் இணைந்த பங்காளிகளாக பரினமிப்பார்கள் எனவும் அமெரிக்க அதிபர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

குறித்த அந்த உடன்படிக்கை தொடர்பில் கனேடியர்களுடனும், நாடாளுமன்றத்துடனும் ஆலோசரனைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக பிரமதமர் ஜஸ்டின் ரூடோ கூறியுள்ள போதிலும், அநத விடயத்தில் அவர் தம்முடன் ஒத்துளைப்பார் எனவும் பராக் ஒபாமா எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

The post அமெரிக்க அதிபரைச் சந்தித்தார் கனடாவின் புதிய பிரதமர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்காபரோவில் வாகன விபத்து – 47 வயது ஆண் உயிரிழப்பு

Posted: 19 Nov 2015 04:40 PM PST

yuk

yukஸ்காபரோவின் மார்க்கம் வீதி மற்றும் எக்ளிங்டன் அவனியூ பகுதியில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று புதன்கிழமை மாலை ஐந்து மணியளிவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மார்க்கம் வீதி மற்றும் எக்ளிங்டன் அவனியூ பகுதியில் வீதியினைக் கடக்க முயன்ற ஒருவர், வீதியின் நடுவே நின்று கொண்டிருந்த போது, வீதியில் தெற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த SUV ரக வாகனம் முதலில் அவரை மோதியதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.இதன் போது அவர் வடக்கு நோக்கி பயணிக்கும் சாலையில் தூக்கி வீசப்பட்டடார் என்றும், அப்போது வடக்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று அவரை மோதியதாகவும் கூறப்படுகிறது.yuk

வாகனங்களால் அடுத்தடுத்து மோதப்பட்ட 47 வயதுடைய ஆண் நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வித்தில் சம்பந்தப்பட்ட இரண்டு வாகனங்களைச் செலுத்திச் சென்ற சாரதிகள் சம்பவ இடத்தில் தரித்து நின்று காவல்த்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக் குறித்து விசாரணைகளில் ஈடுபட்டு வரும் காவல்த்துறையினர், விபத்துச் சம்பவித்த வேளையில் நிலவிய காலநிலை குறித்த விபத்திற்கு காரணமாக அமைந்திருக்ககலாம் என்ற கோணத்திலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஸ்காபரோவில் வாகன விபத்து – 47 வயது ஆண் உயிரிழப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிரியாவில் உயிரிழந்த கனேடிய வீரரின் உடல் நாளை கனடாவுக்கு கொண்டுவரப்படுகிறது

Posted: 19 Nov 2015 06:42 AM PST

UI

UIசிரியாவில் உயிரிழந்த கனேடிய வீரரின் புகழுடல் நாளை வெள்ளிக்கிழமை தாய்நாட்டிற்கு கொண்டுவரப்படுகின்றது.

32 வயதான John Gallagher என்ற கனேடிய வீரர் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடுவதற்காக சிரியாவிற்கு சென்றிருந்தார்.

இந்த மாத முற்பகுதியில் சிரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையின் போது அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கனேடிய வீரர் John Gallagher தற்கொலை குண்டுதாரியால் கொல்லப்பட்டார் என்றும், அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்பபட்டார் எனவும் அவரின் மரணம் குறித்து குழப்பமான தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் அவரின் குடும்பத்தினர் John Gallagher உடல் கனடாவிற்கு கொண்டுவரப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையிலேயே அவரின் புகழுடல் கனடாவிற்கு கொண்டுவரப்படவுள்ளதான தகவலை கனேடிய வீரர்கள் அறக்கட்டளை தனது இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளது.UI

உயிரிழந்த கனேடிய வீரரான John Gallagher இன் புகழுடல் வெள்ளிக்கிழமை பிற்பகல் ரொரன்ரோவிலிருந்து நெடுஞ்சாலை 401 வழியாக ஒன்ராறியோவின் தென்மேற்கு குடியிருப்பு பகுதியான Blenheim ற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையின் பால்களின் மருங்கில் மக்கள் அணிவகுத்து நின்று அவருக்கு தமது மரியாதையை செலுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து ரொரன்ரோவில் பொது நிகழ்வு ஒன்றும் நடாத்தப்படவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சிரியாவில் உயிரிழந்த கனேடிய வீரரின் உடல் நாளை கனடாவுக்கு கொண்டுவரப்படுகிறது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தேனுடன் எதனை கலந்து குடிக்கலாம்….அவை தரும் ஆரோக்கியங்கள் என்னென்ன?

Posted: 19 Nov 2015 06:12 AM PST

MN

MNஇதய நோய்களுக்கு சிறந்த உணவானை தேனை அன்றாடம் எடுத்துக்கொள்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் பெற்றுக்கொள்ளலாம்.

100 கிராம் தேனில் உள்ள சத்துக்கள்

கொழுப்பு - 0 %, சோடியம் 4 மி.கி, பொட்டாசியம் 52 மி.கி, பைபர் 0.2 கி, சர்க்கரை 82 கி, கார்போஹட்ரேட் 82 கி, விட்டமின் ஏ, கால்சியம், விட்டமின் டி, விட்டமின் B12, விட்டமின் B-6 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

மருத்துவ பயன்கள்

பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் சுலபமாக நீங்கி விடுகின்றன.

குழந்தைகளுக்கு உண்டாகும் பல்நோய், இருதய நோய் ஆகியவற்றுக்குத் தேன் ஒரு சிறந்த சஞ்சீவியாகும்.

தேன் மூலம் சுவாசக் கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி நோய், தாகம், வாந்தி பேதி, தீப்புண், விக்கல், மலச்சிக்கல் ஆகிய நோய்கள் குணமாகும், பசியை அது வளர்க்கும். ஜீரணத்துக்கும் உதவும்.

தேன் கொழுப்பைக் கரைக்கக் கூடியது. ஆகவே உடல் மிகவும் பருமனாக உள்ளவர்கள் தொடர்ந்து தேன் சாப்பிட்டு வந்தால் பருமனும் எடையும் குறையும்.

ரத்தப் பித்தத்துக்கு அதாவது வாய், மூக்கு முதலியவற்றிலிருந்து ரத்தம் வடியும் வியாதிக்கு, ஆட்டின் பாலில் தேனைக் கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கம்.

நமது உடலின் மேல் ஏற்படும் புண் காயங்களுக்கு மாத்திரமன்றி, உள்ளே ஏற்படும் இரைப்பைப் புண் போன்றவற்றையும் தேன் சாப்பிட்டு குணமாக்கலாம்.;LL

தேனுடன் எதனை கலந்து குடிக்கலாம்?

1.தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

2. தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து குணமாகலாம்.

3. இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

4. தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

5. உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

6. தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.

7. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.

8. கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.

9. வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

10. தேனுடன் பால், எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.MN

தேன் பேஷியல்

தேனில் விட்டமின் ஈ சத்து நிறைந்திருப்பதால், பேஸ் மாஸ்க்குகள் அனைத்திலுமே தேன் சேர்க்கப்படும்.

அதிலும் முதுமைத் தோற்றத்தைப் போக்குவதற்கு, 1 டேபிள் ஸ்பூன் தேன், 1/2 டீஸ்பூன் விட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை மசாஜ் செய்து குளிர்ந்து நீரில் அலச வேண்டும்.

இதனால் முகம் நன்கு மென்மையாகவும், இளமைத் தோற்றத்துடனும் இருக்கும்.L;,KK

The post தேனுடன் எதனை கலந்து குடிக்கலாம்….அவை தரும் ஆரோக்கியங்கள் என்னென்ன? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™