Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மத்திய பிரதேசத்தில் நாளை இடைத்தேர்தல்: பா.ஜனதாவுக்கு மீண்டும் ஒரு பலப்பரீட்சை

Posted: 19 Nov 2015 10:48 PM PST

பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா படுதோல்வி அடைந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு சரிந்து விட்டதால் தான் பீகாரில் தோல்வி ஏற்பட்டதாக ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பாரதிய ஜனதாவுக்கு மீண்டும் ஒரு பலப்பரீட்சையாக நாளை மத்திய பிரதேசத்தில் ஒரு எம்.பி. தொகுதி மற்றும் ஒரு எம்.எல்.ஏ. தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

பணியின்போது குடிபோதையில் இருந்த துணை தாசில்தார் சஸ்பெண்ட்

Posted: 19 Nov 2015 10:32 PM PST

மந்திரியின் திடீர் ஆய்வின்போது குடிபோதையில் இருந்த துணை தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் அரியானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள வருவாய்துறை தாசில்தார் அலுவலகத்தில் முறைகேடுகள் நடந்துவருவதாக எழுந்த புகார்களையடுத்து, அரியானா மாநில சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ் நேற்று அங்கு அதிரடி சோதனை நடத்த முடிவு செய்தார். அனில் விஜ் அங்கு சென்றபோது, பலர் வேலைக்கு வராமல் இருப்பதும், மக்களிடம் இருந்து பெறப்பட்ட கட்டணங்கள் உள்ளிட்ட பணத்துக்கு முறையாக கணக்குகள் கையாளப்படாமல் இருந்ததும்

ஆதிசங்கரர் பிறந்த தினம் தத்துவ தினமாக கொண்டாட்டம்: மத்திய அரசு முடிவு

Posted: 19 Nov 2015 10:23 PM PST

ஆதி சங்கராச்சாரியார் 8–ம் நூற்றாண்டில் கர்நாடகாவில் உபரிசம் தத்துவத்தை கூறினார். இதன் மூலம் இந்திய தத்துவத்துறை விழிப்புணர்வுக்கு ஆதி சங்கரர் முக்கிய காரணமாக இருந்தார். இதனால் ஆதிசங்கரர் பிறந்தநாளை தத்துவ தினமாக கொண்டாட வேண்டும் என்று சிருங்கேரி சங்கர மடம் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை

பிரதமர் மோடி தொடங்கி வைத்த தங்கம் டெபாசிட் திட்டத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை

Posted: 19 Nov 2015 10:13 PM PST

நாடு முழுவதும் புழக்கத்தில் வராமல் வீடுகள் மற்றும் பதுக்கல்காரர்களிடம் முடங்கி கிடக்கும் 20,000 டன் தங்கத்தை நாட்டுக்கும், மக்களுக்கும் பயனுள்ள வகையில் கையாளுவதற்காக பிரதமர் மோடி கடந்த 5–ந் தேதி 3 விதமான தங்கம் டெபாசிட் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பசு மாட்டை கொல்பவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமை இல்லை: உத்தரகாண்ட் முதல்–மந்திரி பேச்சு

Posted: 19 Nov 2015 09:56 PM PST

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்–மந்திரி ஹரீஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அரித்துவாரில் நடந்த விழா ஒன்றில் முதல்–மந்திரி ஹரீஷ் ராவத் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:– உத்தரகாண்ட் மாநிலத்தில் பசுக்களை பாதுகாக்க மாநில அரசு எதையும் செய்யத் தயங்காது. உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டுமே பசுக்களை

நிதிஷ்குமார் இன்று பதவி ஏற்கிறார்: 9–ம் வகுப்பு வரை படித்துள்ள லல்லுவின் மகன் துணை முதல்–மந்திரி

Posted: 19 Nov 2015 09:56 PM PST

பீகாரில் நிதிஷ்குமார் மந்திரிசபையில் லல்லுவின் மகன் துணை முதல்–மந்திரியாக இடம் பெறுகிறார். பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்–ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்த கூட்டணியின் சட்டசபை குழு தலைவராக (முதல்–மந்திரியாக) நிதிஷ்குமார் கடந்த 14–ந்தேதி தேர்வு செய்யப்பட்டார்.

ஆந்திராவில் பலத்த மழை: மோட்டார் சைக்கிளில் சென்று சேதங்களை பார்த்த நடிகை ரோஜா

Posted: 19 Nov 2015 09:50 PM PST

வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திர மாநிலம் நெல்லூர், சித்தூர், கடப்பா மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் 3 மாவட்டங்களும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மழையால் நெல்லூர் மாவட்டம் தான் மிகவும் சேதம் அடைந்துள்ளது. சித்தூரில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 பேர் பலியானார்கள். திருப்பதியில் பெய்த அடை மழையால் மலை பாதையில் பாறைகள் உருண்டு

கிஸ் ஆப் லவ் போராட்டம் என்ற போர்வையில் விபச்சாரமா?: விசாரிக்க தயாராகும் கேரள அரசு

Posted: 19 Nov 2015 09:41 PM PST

கேரளாவில் ஆன்லைன் மூலம் விபச்சாரம் நடத்திவந்ததாக கிஸ் ஆப் லவ் எனப்படும் முத்தப் போராட்டப் பிரச்சார ஒருங்கிணைப்பாளர் ராகுல் பசுபாலன், அவரது மனைவியும் பிரபல மாடலுமான ரஷ்மி நாயர் உள்பட 8 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் நெருக்கமாக பழகிவந்த இளம் ஜோடிகளை அதிகாரம் செய்து வந்தவர்களை

தெலுங்கானா கட்சி தலைவர்கள் 6 பேரை கடத்திய மாவோயிஸ்டுகள்

Posted: 19 Nov 2015 09:39 PM PST

தெலுங்கானா மாநிலம் பத்ராச்சலம் தொகுதியை சேர்ந்தவர் எம்.ராமகிருஷ்ணன். தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி கட்சி தொகுதி பொறுப்பாளராக உள்ளார். இவருடன் கட்சியின் மண்டல தலைவர்களான வெங்கடேஸ்வரலு, வி.ராமகிருஷ்ணன், சுரேஷ், சத்திய நாராயணா, ஜனார்த்தனன் ஆகியோர் நேற்று மாலை பூசுருப்பா கிராமத்துக்கு சென்றனர்.

திருப்பதி கோவிலில் லட்டு விலை உயருகிறது: ஆர்ஜித சேவை கட்டணமும் உயர்த்த முடிவு

Posted: 19 Nov 2015 09:39 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதத்துடன் ரூ.25 விலையில் கூடுதலாக 4 லட்டும் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு வழங்க தினமும் 3 லட்சம் முதல் 4 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகிறது. இருந்த போதிலும் லட்டுவுக்கு கடும் கிராக்கி உள்ளது.

வரன் தேடும் இணையதளம் மூலம் வாலிபருக்கு திருமண ஆசைகாட்டி ரூ.43 லட்சம் ஏமாற்றிய நைஜீரிய நாட்டினர் கைது

Posted: 19 Nov 2015 08:31 PM PST

திருமணத்துக்கு வரன் தேடும் இணையதளத்தின் மூலம் மும்பையைச் சேர்ந்த வாலிபரிடம் 43 லட்சம் ரூபாயை ஏமாற்றியதாக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த ஒரு வாலிபர் திருமணத்துக்கு வரன் தேடும் இணையதளத்தில் தனக்கேற்ற மணமகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டபோது அவரது பார்வையை ஒரு இளம்பெண்ணின் புகைப்படம் கவர்ந்தது. இதையடுத்து, அந்தப் 'பெண்ணுடன்'

நிதிஷ்குமார் பதவி ஏற்பு விழாவில் சித்தராமையா பங்கேற்பு

Posted: 19 Nov 2015 07:07 PM PST

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சித்தராமையா மற்றும் மந்திரிகள், அதிகாரிகள் கலந்துகொண்டு தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-

எனக்கு பயமில்லை, சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளேன்: மோடிக்கு ராகுல் சவால்

Posted: 19 Nov 2015 04:10 PM PST

எனக்கு பயமில்லை. நான் தவறு செய்துள்ளேன் என்று உங்களால் நிரூபிக்க முடியும் என்றால் என்னைச் சிறையில் தள்ளுங்கள்' என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.

சத்தீஸ்கரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

Posted: 19 Nov 2015 03:43 PM PST

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நக்சலைட்டு இயக்கத்தின் தளபதியாக ட்மா என்பவர் செயல்பட்டு வருகிறார். பல்வேறு நாச வேலைகளுக்கு மூளையாக செயல்பட்ட இவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் சுக்மா மாவட்டத்தில் உள்ள

நீர்வள அமைச்சகத்தின் நதிகள் இணைப்பு திட்ட அறிக்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Posted: 19 Nov 2015 03:37 PM PST

நாட்டில் உள்ள நதிகள் அனைத்தையும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் இணைக்க வேண்டும், நதிகள் இணைப்பு தொடர்பாக திட்டம் தீட்டி செயல்படுத்துவதற்கு உயர்மட்டக் குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2012-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ந்தேதி தீர்ப்பு அளித்தது. அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பினை வழங்கியது.

சபரிமலையில் தொடர்ந்து கன மழை: பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பக்தர்களின் வாகனங்கள் மூழ்கின

Posted: 19 Nov 2015 03:32 PM PST

சபரிமலையில் கடந்த 16-ந் தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் ஏராளமான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்று தரிசனம் செய்கிறார்கள். இந்த நிலையில் சபரிமலையில் கனமழை பெய்து வருகிறது. இது பக்தர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

ஊழல் நோய் தாக்காதவாறு பணியாற்றுங்கள்: இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

Posted: 19 Nov 2015 02:35 PM PST

2013-ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 169 பேர், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தனர். இவர்கள் அவரவர் மாநிலங்களில் பணி அமர்த்தப்படாமல், டெல்லியிலேயே உதவி செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடையே பிரதமர் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

உயர் பாதுகாப்புக்கொண்ட திகார் சிறையில் அடைக்கப்பட்ட சோட்டா ராஜன்

Posted: 19 Nov 2015 02:10 PM PST

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் நேற்று திகார் சிறையில் அடைக்கப்பட்டான். மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியாக இருந்தவர் சோட்டா ராஜன். மிகப்பெரிய கடத்தல் மன்னனான இவர் மீது மும்பையில் 20 கொலை வழக்குகள், ஒரு பொடா வழக்கு உள்பட 75 வழக்குகள்

தமிழக வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட மத்திய குழு விரைவில் வருகிறது: ஜெயலலிதாவிடம் மத்திய அரசு உறுதி

Posted: 19 Nov 2015 12:22 PM PST

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை, முதல்- அமைச்சர் ஜெயலலிதா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழக வெள்ள நிலைமை குறித்து எடுத்துரைத்தார். முன் எப்போதும் இல்லாத அளவில் பெய்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக தமிழகத்தில், குறிப்பாக சென்னை, திருவள்ளூர்,

நிதிஷ் குமார் பீகார் முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்பு: 9 மாநில முதல்-மந்திரிகள், தலைவர்கள் பங்கேற்பு

Posted: 19 Nov 2015 11:47 AM PST

பாட்னாவில் இன்று நடக்கிற கோலாகல விழாவில், பீகார் முதல்-மந்திரியாக நிதிஷ் குமார் பதவி ஏற்கிறார். இந்த விழாவில் 9 மாநிலங்களின் முதல்-மந்திரிகள், தேசிய தலைவர்கள் கலந்து கொள்வதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™