Tamil Star |
- 10,000 அகதிகளை உள்வாங்குவது சாத்தியமானது – ஒன்ராறியோ மாகாண முதல்வர்
- ரொரன்ரோவில் இஸ்லாமியப் பெண்ணின் மீது தாக்குதல்
- Brockton Villageஇல் தீ விபத்து: மூவர் மருத்துவமனையில்
- ரொரன்ரோவில் தனித்துக் கிடந்த இதயத்தினால் பரபரப்பு
- மயொனைஸ் அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்! ஆபத்தை தெரிந்துகொள்ளுங்கள்!
- ஈற்ரோபிக்கோவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி
| 10,000 அகதிகளை உள்வாங்குவது சாத்தியமானது – ஒன்ராறியோ மாகாண முதல்வர் Posted: 18 Nov 2015 08:03 PM PST
தாம் ஏற்கவே வழங்கிய வாக்குறுதிப்படி, 2016ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒன்ராறியோ 10,000 அகதி மக்களை குடியமர்த்தும் என்பதனை தாம் மீள் உறுதிப்படுத்த விரும்புவதாக கத்தலின் வின் கூறியுள்ளார். கடந்த வாரம் பாரீசில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுடன், இந்த அகதிகள் விவகாரத்தினை சிலர் இணைத்து பார்ப்பதாகவும் தெரிவித்துள்ள அவர் அவ்வாறான ஒரு அச்சம் தேவையற்றது எனவும் கருத்து வெளியிட்டுள்ளார். நாட்டின் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒன்ராறியோவிற்குள் அழைத்துவரப்படும் அகதி மக்களும், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே அழைத்து வரப்படுவார்கள் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். ஒன்ராறியோவிற்கு அழைத்து வரவுள்ள அகதிகளை வரவேற்பதற்கு ஒன்ராறியோ தயாராக உள்ளதாகவும், அவர்களுக்கான தங்குமிடங்கள் மற்றும் மொழிப் பயிற்சிகள் உள்ளிட்டவற்றை வழங்கும் செயற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் மேலும் தெரிவித்துள்ளார். The post 10,000 அகதிகளை உள்வாங்குவது சாத்தியமானது – ஒன்ராறியோ மாகாண முதல்வர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோவில் இஸ்லாமியப் பெண்ணின் மீது தாக்குதல் Posted: 18 Nov 2015 09:03 AM PST
நேற்று பிற்பகல் அளவில் குறித்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலையிலிருந்து தனது பிள்ளையை அழைத்து வருவதற்காக சென்ற வேளையிலே அவர் தாக்கப்பட்டுள்ளார். அவர் மீது இனம் தெரியாத நபர்கள் தாகுதல் மேற்கொண்டதாகவும்,தாக்குதல்தாரிகள் இஸ்லாமுக்கு எதிராக இனவாத ரீதியில் திட்டியதாகவும், அவரை பயங்கரவாதி என்றும், அவருக்கு கனடாவில் இடமில்லை எனவும், தமது நாடுகளுக்கே திரும்பிச் செல்லுமாறும் சத்தமி்ட்டதாகவும் பாதிக்கப்பட்ட அந்த பெண் தெரிவித்துள்ளார். அத்துடன் திட்டிய வாறே ஒருவர் தமது முகத்திலும் வயிற்றிலும் குத்தியதாகவும், மற்றையவர் அவரின் முக்காட்டினை இழுத்து அகற்றியதாகவும் கூறியுள்ளார் அந்தப் பெண் நிலத்தில் வீழ்ந்து தன்னை தாக்கவேண்டாம் என கத்திய போதிலும், தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்ட அவர்கள், அந்த பெண்ணிடமிருந்த கைத்தொலைபேசியையும் அபகரித்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். குறித்த இந்த தாக்குதல் சம்பவமானது இனக் குரோதம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதலாகவே இருக்கக்கூடும் என காவல்த்துறையினரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை காவல்த்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. The post ரொரன்ரோவில் இஸ்லாமியப் பெண்ணின் மீது தாக்குதல் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Brockton Villageஇல் தீ விபத்து: மூவர் மருத்துவமனையில் Posted: 18 Nov 2015 08:27 AM PST
College Street மற்றும் Lansdowne Avenue பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று காலை 5.30 அளவில் தீப் பரவல் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. தீ மோசமாக கொழுந்துவிட்டெரிந்த வேளையில் சம்பவ இடத்துக்கு 18 தீயணைப்பு வாகனங்களும், 75 தீயணைப்பு படையினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். கடுமையான முயற்சிகளின் பின்னர் காலை ஆறு மணியளவில் தீப் பரவல் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டதாக ரொரன்ரோ தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். தீவிபத்தின் போது மூச்சுத் திணறலுக்கு ஆளான மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு பாரதூரமானது இல்லை என கருதப்படுவதாகவும் கூறப்படுகிறது. தீ வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து பரவ ஆரம்பித்திருக்க கூடும் என நம்பப்படுகின்ற போதிலும், தீப் பரவலுக்கான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. The post Brockton Villageஇல் தீ விபத்து: மூவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோவில் தனித்துக் கிடந்த இதயத்தினால் பரபரப்பு Posted: 18 Nov 2015 07:59 AM PST
இன்று காலையில் குறித்த அந்த பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் அந்த இதயத்தினை கண்டுள்ளார். குறித்த அந்த பகுதியில் அவ்வாறு இதயம் ஒன்று காணப்பட்டதனை ரொரன்ரோ காவல்த்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் அதன் அளவினைப் பார்க்கும் போது, அது மனிதருடைய இதயமாக இருக்காது என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். குப்பைகளை சேகரிக்கும் போது குறித்த அந்த இதயம் குப்பை பை ஒன்றினுள் இருந்து வீழ்ந்திருக்க கூடும் என, குப்பை சேகரிக்கும் அந்த பணியாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இதேவேளை குறித்த அந்த இதயத்தினை பரிசோதனை செய்வதற்காக சம்பவ இடத்துக்கு புலன் விசாரணை அதிகாரிகளும், உடற்கூற்று நிபுனர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். The post ரொரன்ரோவில் தனித்துக் கிடந்த இதயத்தினால் பரபரப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மயொனைஸ் அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்! ஆபத்தை தெரிந்துகொள்ளுங்கள்! Posted: 18 Nov 2015 07:57 AM PST
ஐரோப்பிய நாட்டு மக்களால் அதிகம் சாப்பிடப்படும் மயொனைஸை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். வினிகர், மிளகு, முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை எண்ணெய்யில் சேர்த்து கலக்கினால் மயொனைஸ் தயாராகிவிடும். வெளிர் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களில் இருக்கும் இதனை குண்டாக இருக்கும் குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்கவேண்டும், ஏனெனில் இதில் கொழுப்பு அதிகம் நிறைந்திருக்கும். பெரும்பாலான மயொனைஸ் சோயாபீன் எண்ணெய், சோள எண்ணெய் அல்லது தாவரஎண்ணெய்களில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் Omega 6 fatty acid நிறைந்திருப்பதால் இது மனித ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும், ஏராளமான அமெரிக்கர்கள் ஒமோகா 3 யை விட ஒமேகா 6 ஐ அதிகம் பெற்றிருக்கின்றன. ஆனால், இது இதயநோய்கள், சிலவகை புற்றுநோய்கள், டைப் 2 நீரிழிவு நாய் போன்றவை வருவதற்கு காரணமாகின்றன. அதனால் இந்த மயொனைஸை ஆலிவ் எண்ணெய்யில் தயார் செய்து சாப்பிடலாம். மேலும், நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிடும் போது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு இதனை சாப்பிடவேண்டும் என்று ஆசையாக உள்ளது என்றால் ஆலிவ் ஆயில், முட்டை கரு மற்றும் லெமன்சாறு ஆகியவற்றை கொண்டு தயார் செய்து சாப்பிடுங்கள். இருப்பினும் இதில் அதிக கொழுப்பு மற்றும் புரதங்களே நிறைந்துள்ளன, அதனால் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. The post மயொனைஸ் அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்! ஆபத்தை தெரிந்துகொள்ளுங்கள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈற்ரோபிக்கோவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி Posted: 17 Nov 2015 07:07 PM PST
Humber College Boulevard மற்றும் நெடுஞ்சாலை 27 பகுதியில் Alba Place இல் இன்று இரவு எட்டு மகணிக்கு சற்று முன்னராக இந்த துப்பாக்கிச் சூட்டச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. குறித்த நேரத்தில் அந்த பகுதியில் பல துப்பாக்கிச் சூட்டுத் சத்தத்தை கேட்க முடிந்தாக கூறப்பட்ட போதிலும், உயிரிழந்தவர் எத்தனை முறை தாக்கப்பட்டுள்ளார் என்ற தகவல்களை அறிய முடியவில்லை. அதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் ஒரு ஆண் நபரைத் தேடி வருகின்றனர் என்ற போதிலும், அவரின் அடையாளங்கள் வெளியிடவில்லை. அத்துடன் சம்பவம் இடம்பெற்ற பகுதியின் சுற்றுவட்டராப் பகுதிகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. The post ஈற்ரோபிக்கோவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ஒன்ராறியோ மாகாணத்தில் பத்தாயிரம் சிரிய அகதிகளை உள்வாங்குவதென்பது சாத்தியமானதே என ஒன்ராறியோவின் முதல்வர் கத்தலின் வின் தெரிவித்துள்ளார்.



மயொனைஸ்(MAYONNAISE) என்பது முட்டையில் தயாரிக்கப்படும் சாஸ் வகை உணவாகும்.
ஈற்ரோபிக்கோ வடக்கில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆண் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.