Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சபரிமலையில் கனமழை: மலையேற பக்தர்களுக்கு தடை

Posted: 18 Nov 2015 10:48 PM PST

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. முதல் நாளில் இருந்தே சபரிமலையில் கன மழை பெய்து வருகிறது. மழையையும் பொருட்படுத்தாமல் அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

பா.ஜனதாவுக்கு புதிய தலைவரை நியமிக்க முடிவு: மோடி தீவிர ஆலோசனை

Posted: 18 Nov 2015 09:49 PM PST

பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மிகப்பெரும் பின்னடைவை சந்தித்தது. பிரதமர் நரேந்திர மோடியை முன்னிறுத்தி இந்த தேர்தலில் பா.ஜனதா நடத்திய பிரசாரம் அம்மாநில மக்களை கவரவில்லை என்று கட்சியினர் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, அருண்ஷோரி, யஷ்வந்த் சின்கா ஆகியோர் குற்றம் சாட்டினர்.

திருப்பதி கோவிலில் நடத்திய யாகமே மழைக்கு காரணம்: ஆந்திர கவர்னர் நரசிம்மன் பேச்சு

Posted: 18 Nov 2015 09:31 PM PST

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திர மாநிலம் சித்தூர், நெல்லூர், கடப்பா மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் பலத்த மழை பெய்தது. மழையால் இந்த 3 மாவட்டங்களும் வெள்ளத்தால் மிதக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. நெல்லூரில் ஏற்பட்ட வெள்ளச்சேத பகுதிகளை

மழையால் பக்தர்கள் குறைந்தனர்: திருப்பதி கோவிலில் 15 நிமிடத்தில் தரிசனம்

Posted: 18 Nov 2015 09:19 PM PST

திருப்பதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் 2–வது மலை பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தது. தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் 2–வது மலை பாதையின் ஒரு பகுதி மூடப்பட்டு வாகன போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. மேலும் இரவு 10.30 மணிக்கு மலை பாதை முற்றிலும் மூடப்பட்டு காலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு வருகிறது. இந்த

அச்சுறுத்தலாக உள்ள தெரு நாய்களை கொல்ல தடை இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Posted: 18 Nov 2015 07:49 PM PST

கேரளாவில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த தெரு நாய்களை திருவனந்தபுரம் மாநகராட்சி பிடித்து கொன்றது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 2½ லட்சம் தெருநாய்களை பிடித்து கொல்ல அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டத்துக்கு

ஏ.டி.எம். மையத்தில் பெண் அதிகாரி மீது தாக்குதல் சம்பவம் நடந்து இன்றுடன் 2 ஆண்டுகள் ஆகிறது

Posted: 18 Nov 2015 07:37 PM PST

பெங்களூரு மிஷன் ரோட்டில் உள்ள கூட்டுறவு வங்கியில் மேலாளராக இருந்தவர் ஜோதி உதய் (வயது 40). இவர் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ந் தேதி எல்.ஐ.சி. ரோட்டில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து உள்ளே சென்ற மர்மநபர் ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை பாதியளவில்

பெங்களூரு: வீட்டில் இருந்து திருடிய ரூ.10 லட்சம் நகை-பணத்தை நண்பருக்கு பரிசளித்த மாணவி

Posted: 18 Nov 2015 07:25 PM PST

பெங்களூரு எலகங்கா நியூ டவுன் பகுதியில் வசித்து வருபவர் சங்கர். இவருடைய மகள் நந்தினி (வயது 20). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கரின் மனைவி வீட்டில் இருந்த தங்க நகை மற்றும் பணம் என மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மாயமாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

முக்கிய தலைவர்களை கொல்ல திட்டமிட்ட நிழல் உலக தாதா சோட்டா ஷகிலின் கூட்டாளி கைது

Posted: 18 Nov 2015 06:58 PM PST

பெங்களூரு நகரில் சில முக்கிய தலைவர்களை கொலை செய்ய விஷமிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2,932 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்

Posted: 18 Nov 2015 04:16 PM PST

பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 2022-ம் ஆண்டுக்குள், நகர்ப்புற ஏழைகளுக்கு 2 கோடி வீடுகள் கட்டித்தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, வீடுகளின் கட்டிட வடிவமைப்புக்கு ஏற்றவாறு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் வரை மத்திய அரசு நிதியுதவி அளிக்கும்.

சீனா சென்றார் ராஜ்நாத் சிங் - பாதுகாப்பு கூட்டுறவு குறித்த முக்கிய பேச்சுவார்த்தை

Posted: 18 Nov 2015 03:45 PM PST

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், 6 நாள் அரசு முறைப் பயணமாக புதன்கிழமை சீனா சென்றார். இந்தப் பயணத்தின்போது, இரு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதக் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது ஆகிய பிரச்னைகள் குறித்து அந்நாட்டு பிரதமர் லீ

21-ம் தேதி முதல் பிரதமர் மோடி மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு சுற்றுபயணம்

Posted: 18 Nov 2015 02:16 PM PST

ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய கூட்டமைப்பு கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, 21-ம் தேதி முதல் மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு சுற்றுபயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலர் அனீல் வத்வா செய்தியாளர்களிடம் கூறுகையில் "மலேசிய தலைநகர்

புதிய நூடுல்ஸ் ஆசனா - ராம்தேவ்வை கிண்டல் செய்யும் காங்கிரஸ்

Posted: 18 Nov 2015 01:48 PM PST

மேகி நூடுல்ஸ் பிரச்சனையில் சிக்கி தற்போது மீண்டு வந்துள்ள நிலையில், மேகிக்கு போட்டியாக பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இன்ஸ்டன்ட் நூடுல்சை கடந்த திங்கட்கிழமை அறிமுகம் செய்தது. தலைசிறந்த ஆராய்ச்சி குழுவினரால் ரைஸ் பிரான் ஆயில், டீஹைட்ரேட் செய்யப்பட்ட காய்கறிகள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட

தீவிரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை: பிரதமர் மோடி வற்புறுத்தல்

Posted: 18 Nov 2015 01:44 PM PST

டெல்லியில், ஊழல் சொத்துகள் பறிமுதல் குறித்த 6-வது சர்வதேச மாநாடு, சி.பி.ஐ. மற்றும் ஊழல் தடுப்பு அமைப்புகளின் 21-வது மாநாடு நேற்று நடந்தது. இதில் 33 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசும்போது, அண்மையில் பாரீஸ் நகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை சுட்டிக்காட்டி பேசினார்.

பொதுத்துறை நிலக்கரி நிறுவனத்தின் 10 சதவீத பங்குகள் விற்பனை: மத்திய மந்திரிசபை முடிவு

Posted: 18 Nov 2015 12:48 PM PST

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மந்திரிகள் பியுஷ் கோயல், ஜிதேந்திர சிங் ஆகியோர் விளக்கிக் கூறினர். அவர்கள் கூறியதாவது:-

நிதிஷ்குமார் பதவியேற்பு விழாவில் மோடியின் பிரதிநிதியாக வெங்கையா நாயுடு

Posted: 18 Nov 2015 12:31 PM PST

பீகாரில் சட்டமன்ற தேர்தலில் அமோகவெற்றி பெற்ற நிதிஷ் குமார் வரும் 20-ம் தேதி மீண்டும் முதல் மந்திரியாக பதவியேற்கிறார். மகாகூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம்,ராஷ்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில் மகாகூட்டணியின் சட்டப்பேரவைக்

இன்று நாடு தழுவிய தர்ணா - வேலைக்கு வராவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: மத்திய அரசு எச்சரிக்கை

Posted: 18 Nov 2015 11:47 AM PST

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு, ரெயில்வே மற்றும் பாதுகாப்பு துறைகளில் அன்னிய நேரடி முதலீடு கூடாது என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) நாடு தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர். இந்த தர்ணாவில் 50 லட்சம் பேர் பணியில்

பிரதமர் மோடி இல்லம் அருகே நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் ஓரு விபத்து என காவல்துறை விளக்கம்

Posted: 18 Nov 2015 10:16 AM PST

இன்று இரவு 8.30 மணியளவில் டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லம் அருகே துப்பாக்கி சூடு நடைபெற்றதாக என்.டி.டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது டெல்லியில் 7, ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரதமர் இல்லம் அருகே உள்ள காவல் சோதனை சாவடியில் இருக்கும் பாதுகாவலரின்

பீகாரில் வன்முறை கும்பல் தாக்குதல்: போலீஸ் அதிகாரி பலி

Posted: 18 Nov 2015 10:12 AM PST

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டம் லால்கஞ்ச் நகர் அருகே உள்ள அகார்பூரில் நேற்று சாலையோரம் இருந்த வீட்டுக்குள் ஒரு ஆட்டோ புகுந்தது. இதில் அந்த வீட்டில் இருந்த 6 மாத பெண் குழந்தையும், அவளுடைய தாத்தாவும் உயிரிழந்தனர்.இதைக்கண்டித்து இன்று காலை அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அந்த வழியாக

காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 3.1 ஆக பதிவு

Posted: 18 Nov 2015 09:27 AM PST

காஷ்மீரில் இன்று லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 3.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இரவு 8.02 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், பீதி அடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்தனர்.

என் முன்னால் விசாரிக்க வேண்டாம்: கோட்சே வழக்கிலிருந்து ஒதுங்கிக் கொண்ட நீதிபதி

Posted: 18 Nov 2015 07:46 AM PST

கோட்சே குறித்த வழக்கிலிருந்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஒதுங்கிக் கொண்ட சம்பவம் அதிகரித்து வரும் காந்தி-கோட்சே கருத்தியல் மோதலின் தீவிரத்தன்மையை உணர்த்துவதாக உள்ளது. மும்பையைச் சேர்ந்த முன்னாள் பத்திரிக்கையாளரான கேத்தன் டிரோட்கர், கோட்சேவை மகானாகப் புகழும் இணையதளம் ஒன்றைக் கண்டு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™