Tamil Star |
- தொடரூந்துடன் சிற்றூர்தி மோதி விபத்து: அதிஸ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்
- அகதிகளை கனடாவிற்கு அழைத்துவருவதில் உதவுவதாக எயர் கனடா அறிவிப்பு
- 15 வருடங்களின் முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் சந்தேக நபர் கைது
- விமான விபத்தில் இருவர் பலி
- முருங்கைகீரையின் பக்குவமான 12 மருத்துவகுறிப்புகள்!
| தொடரூந்துடன் சிற்றூர்தி மோதி விபத்து: அதிஸ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள் Posted: 10 Nov 2015 07:18 PM PST
Rutherford தொடரூந்து நிலையத்திற்கு தெற்காக, Langstaff வீதியில் உள்ள தொடரூந்து பாதைக் கடவையில், இன்று மாலை 5.30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. தொடரூந்து கடவையை கடந்துசெல்ல முனைந்த குறித்த அந்த சிற்றூர்தி, ஏதோவொரு காரணத்தினால் தொடரூந்து பாதையில நின்று போனதாகவும், அந்த வேளையில் அருகே இருந்த தொடரூந்து நிலையம் நோக்கி வந்த GO தொடரூந்து சிற்றூர்தி மீது மோதியதாகவும் யோர்க் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடரூந்து மிகவும் மெதுவாகவே நகர்ந்துவந்து சிற்றூர்தி மீது மோதியதால் பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும், விபத்தினை அடுத்து சுமார் ஒன்றரை மணி நேரங்களின் பின்னரே தொடருந்து அந்த இடத்திலிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இநத விபத்து காரணமாக அந்த வழித்தடம் ஊடான ஏனைய தொடரூந்து சேவைகளும் தடங்கலுக்கு உள்ளானதால், ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்தை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. The post தொடரூந்துடன் சிற்றூர்தி மோதி விபத்து: அதிஸ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அகதிகளை கனடாவிற்கு அழைத்துவருவதில் உதவுவதாக எயர் கனடா அறிவிப்பு Posted: 10 Nov 2015 06:04 PM PST
புதிய லிபரல் அரசாங்கம் 25,000 சிரிய அகதிகளை கனடாவில் குடியேற்றுவதான உறுதிமொழியினை முன்வைத்துள்ளது. அதனால் இந்த வருடத இறுதிக்குள் 25,000 சிரிய அகதிகளை கனடாவுக்குள் அழைத்து வரவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே சிரிய அகதிகளைக் கனடாவிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைக்கு உதவுவதாக எயர் கனடா அறிவித்துள்ளது. அதேவேளை எயர் கனடா விமானம் நேரடியாக சிரியாவுக்கு பயணிக்க முடியாது என்ற காரணத்தினால், அது இஸ்தான்புல் மற்றும் பெய்ரூட் ஆகிய இடங்களிலேயே தரையிறங்கி சிரிய அகதிகளை ஏற்றிவர முடியும் என்று கூறப்படுகிறது.
சிரிய அகதிகளை கனடாவுக்கு அழைத்துவரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சுமூகமாக முன்னெடுப்பதற்கு துணையாகவே எயர் கனடாவும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிரியாவில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில்,சுமார் ஒரு மில்லியன் சிரிய அகதிகள் லெபனானில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனத்திடம் தம்மை ஏற்கனவே பதிவு செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது. The post அகதிகளை கனடாவிற்கு அழைத்துவருவதில் உதவுவதாக எயர் கனடா அறிவிப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| 15 வருடங்களின் முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் சந்தேக நபர் கைது Posted: 10 Nov 2015 08:33 AM PST
இந்த கத்திக்குத்துச் சம்பவம் 15 வருடங்களின் முன்னர் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. 1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி ரொரன்ரோவைச் சேர்ந்த 38 வயதான சுரிந்தர் சிங்க பார்மார் என்பவரே கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். டான்ஃபோர்த் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் குளியல் அறையினுள் உயிரிழந்த நிலையில் அவரின் சடலம் மீட்கப்பட்டதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த அந்த கொலைச் சம்பவம் தொடர்பில் தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்த்துறையினர், எனினும் இந்த சம்பவம் தொடர்பில் அதிகாமான தகவல்களை வெளியிடவில்லை. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விபரங்கள் இன்றைய ஊடக சந்திப்பின் போது வெளியிடப்படும் என ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். The post 15 வருடங்களின் முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் சந்தேக நபர் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 10 Nov 2015 07:57 AM PST
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக் குறித்து மாலை 7.30 மணியளவில் நபர் ஒருவர் காவல்த்துறையினரின் அவசர இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் தெரிவித்திருந்ததாக ஒன்ராறியோ மாகாணக் காவல்த்தறையினர் தெரிவித்துள்ளனர். அந்த நபர் நெடுஞ்சாலை 400 இல் மோட்டார் வாகனத்தில் பயணம் மேற்கொண்டிருந்த போது விமானம் விபத்துக்குள்ளானதை கண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் அந்த சிறிய ரக விமானத்தில் இருவர் இருந்ததாகவும், அவர்கள் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அந்த இருவரும் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் தொடர்பில் கனேடிய போக்குவரத்து பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சம்பவ இடத்தினை வந்தடையும் வரை, அங்கு ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் காவலில் ஈடுபட்டிருப்பாரகள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. The post விமான விபத்தில் இருவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| முருங்கைகீரையின் பக்குவமான 12 மருத்துவகுறிப்புகள்! Posted: 10 Nov 2015 06:03 AM PST
வாரத்திற்கு இருமுறையாவது இதனை உணவில் சேர்த்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். 1.முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் நீங்கும். 2.முருங்கையை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். 3. இரத்தம் சுத்தமாகும். முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் கல்சியம் உள்ளது. 4. உடல் மெலிவாக இருப்பவர்கள் வாரம் இரண்டு முறை முருங்கை கீரையை உண்டு வந்தால் உடல்-தேறும். 5.முருங்கை இலையில் விட்டமின் A, B, C, கால்ஷியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. 6.ஒரு கிண்ணம் முருங்கை சாறில் 9 முட்டை அல்லது அரைக்கிலோ வெண்ணை அல்லது 8 டம்ளர் பாலில் அடங்கி இருக்கும் விட்டமின் A உள்ளது. 7.வயிற்று புண்ணை ஆற்றும். அஜீரண கோளாறுகளை போக்கி மலச்சிக்கலை நீக்கும். 8.இரத்தத்தில் கலந்து இருக்கும் தேவையில்லாத நீர்களை பிரித்து வெளியேற்றும். 9. சிறுநீரை பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் பக்க விளைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை தினமும் எடுத்து கொள்வதிலிருந்து தப்பிக்கலாம். 10.உடல் சூட்டை குறைக்கும், கண் பார்வை நரம்புகள் வலுப்பெறும். பித்தத்தை குறைக்கும். 11.இளநரையை நீக்கும் உடல் சருமத்தை பளபளக்க செய்யும். 12.தாய்ப்பாலை அதிகமாக ஊறவைப்பதால், குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். The post முருங்கைகீரையின் பக்குவமான 12 மருத்துவகுறிப்புகள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

இன்று மாலை ரொரன்ரோவில் GO தொடரூந்துடன் சிற்றூர்தி ஒன்று மோதி விபத்துக்குள்ளான போதிலும், அதிஸ்டவசமாக சிற்றூர்தியிலிருந்த பயணிகள் ஐந்து பேரும், பாரிய காயங்கள் ஏதும் இன்று உயிர்தப்பியுள்ளனர்.
சிரிய அகதிகளைக் கனடாவிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைக்கு உதவுவதாக எயர் கனடா அறிவித்துள்ளது.


முருங்கைக்காய் போன்றே முருங்கைகீரையிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.