Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மருமகள், 3 பேரன்கள் தற்கொலை: ஆந்திர முன்னாள் எம்.பி. காங்கிரசில் இருந்து நீக்கம்

Posted: 10 Nov 2015 10:54 PM PST

தெலுங்கானா மாநிலம் வரங்கல் எம்.பி. தொகுதிக்கு நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்.பி. ராஜய்யா அறிவிக்கப்பட்டார். அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் நிலையில் அவரது மருமகள் அதாவது

வங்காள தேசத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி அனுப்சேதியா இந்தியாவிடம் ஒப்படைப்பு

Posted: 10 Nov 2015 10:15 PM PST

அசாமை சேர்ந்த உல்பா தீவிரவாதி அனுப் சேதியா. இவர் அந்த அமைப்பின் செயலாளராக இருந்தார். இவர் மீது கொலை, ஆள் கடத்தல்கள் மற்றும் கட்டாய வசூல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அதற்காக அவரை போலீசார் தேடி வந்தனர். எனவே அவர் இந்தியாவில் இருந்து தப்பி

தொடர் மழை எதிரொலி: திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது

Posted: 10 Nov 2015 09:31 PM PST

திருப்பதியில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் 2–வது மலைப்பாதையில் 9–வது கிலோ மீட்டர் தொலைவில் மண்ணுடன் சேர்ந்து பாறைகள் சரிந்து நடுரோட்டில் விழுந்தது.

ஆந்திர மாநில வளர்ச்சிக்காக புல்லட் போல் செயல்படுவேன்: சந்திரபாபு நாயுடு பேச்சு

Posted: 10 Nov 2015 09:26 PM PST

ஆந்திராவின் புதிய தலை நகர் அமராவதி குண்டூர் அருகே அமைக்கப்படுகிறது. தலைநகரை சுற்றி 9 மேகா நகரம் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட இருப்பதாக முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

100 ஆண்டுக்கு பிறகு திருப்பதியில் அடைமழை: பாறைகள் உருண்டு விழுந்ததால் 2–வது மலை பாதை மூடப்பட்டது

Posted: 10 Nov 2015 09:12 PM PST

திருப்பதியில் கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு மழை பெய்ய தொடங்கியது. நேற்று வரை இடைவிடாமல் கொட்டியது. அடைமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் 2–வது மலை பாதையில்

மதுபார் ஊழல் வழக்கு: கேரள நிதி மந்திரி மாணி பதவியை ராஜினாமா செய்தாலும் தவறு செய்யவில்லை - உம்மன்சாண்டி பேட்டி

Posted: 10 Nov 2015 08:51 PM PST

கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு மாநிலத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தப் போவதாக கடந்த ஆண்டு அறிவித்தது. இதன்படி மாநிலம் முழுவதும் உரிய விதிமுறைகளின் கீழ் செயல்படாத 418 மது பார்கள் மூடப்பட்டன. இதற்கு மது பார் உரிமையாளர்கள் எதிர்ப்பு

மோடி, அமித் ஷாவுக்கு எதிராக மூத்த தலைவர்களின் புரட்சி - பா.ஜ.க.வின் முதல் வாணவேடிக்கை: ப.சிதம்பரம்

Posted: 10 Nov 2015 07:27 PM PST

பீகார் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்ததன் எதிரொலியாக மூத்த தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்கா, சாந்தகுமார், அத்வானி ஆகியோர் இணைந்து நேற்று கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், "பீகார் தோல்விக்கு அனைவரும் காரணம் என்று

பீகாரில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுமி கற்பழிப்பு

Posted: 10 Nov 2015 07:18 PM PST

பீகார் மாநிலம் பாட்னா காந்திமைதான் பகுதியை சேர்ந்தவர் சோனு ராய் (வயது 20). இவர் பாட்னா கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வரும் 13 வயது சிறுமியின் வீட்டிற்குள் நேற்றுமுன்தினம் இரவு நுழைந்தார். பின்னர் சிறுமியை கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு

அரசு இடத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க தடை: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

Posted: 10 Nov 2015 07:12 PM PST

பால்கர் மாவட்டம், விரார் பகுதியில் சட்டவிரோத அரசு நிலத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு கட்டிடத்தை இடித்து அகற்ற மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. இந்தநிலையில் மாநகராட்சியின் முடிவை எதிர்த்து அடுக்குமாடி

பீகார் சட்டசபை தேர்தல்: பா.ஜனதா தோல்விக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இடஒதுக்கீடு கருத்து காரணம் அல்ல - ராஜ்நாத் சிங்

Posted: 10 Nov 2015 06:59 PM PST

இட ஒதுக்கீட்டை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியது சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா அடைந்த படுதோல்விக்கு, இட ஒதுக்கீடு தொடர்பாக மோகன் பகவத் தெரிவித்த கருத்து தான் காரணம் என்று கூறப்படுகிறது.

ரூ.2 கோடி மோசடி வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 3 ஆண்டு ஜெயில்

Posted: 10 Nov 2015 06:42 PM PST

மராட்டிய மாநிலம் கோலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் பால்வந்த் கவுரவ் (வயது30). முன்னாள் ராணுவ வீரரான இவர் புனே பகுதியை சேர்ந்த 80 வாலிபர்களிடம் ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்ததாக கடந்த ஆண்டு புனே போலீசாரால் கைது

டெல்லி புதிய மெட்ரோ ரெயில் சேவை: வெங்கையா நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தனர்

Posted: 10 Nov 2015 06:40 PM PST

டெல்லி சமய்பூர் பத்ளி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தீபாவளி பரிசாக ஜகாங்கீர்பூர்- சமய்பூர் பத்ளி மெட்ரோ ரெயில் சேவையை டெல்லி மெட்ரோ நிறுவனம் அளித்துள்ளது. இதன் தொடக்க விழா டெல்லி மெட்ரோ பவன் கலையரங்கில் நேற்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

குளிர்கால கூட்டத்தொடருக்கு முன் மராட்டிய மந்திரி சபை விரிவாக்கம்: தேவேந்திர பட்னாவிஸ் தகவல்

Posted: 10 Nov 2015 06:19 PM PST

மராட்டியத்தில் பா.ஜனதா– சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மந்திரி சபையில் 30 பேர் மந்திரிகளாக உள்ளனர். இதில், பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளுக்கும் மந்திரி சபையில் அங்கீகாரம் வழங்கப்படும்

டெல்லி தோல்வியிலிருந்து பாடம் கற்காததால் தான் பீகாரிலும் தோல்வி: பா.ஜ.க மூத்த தலைவர்கள் அறிக்கை

Posted: 10 Nov 2015 04:26 PM PST

டெல்லி சட்டசபை தேர்தல் தோல்வி முடிவிலிருந்தும் பாடம் கற்காததால் தான் பீகாரிலும் தோல்வி அடைந்ததாக பாஜக மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்கா, சாந்தகுமார் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜி-சாட் 15 செயற்கைகோள் விண்ணில் சீறிப்பாய்ந்தது

Posted: 10 Nov 2015 03:25 PM PST

இஸ்ரோ தயாரித்துள்ள நவீன தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜி-சாட் 15 செயற்கைகோள், ஏரியன்-5 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான

பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் சுமுக உறவையே இந்தியா விரும்புகிறது- ராஜ்நாத் சிங்

Posted: 10 Nov 2015 01:43 PM PST

பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் சுமூக உறவையே இந்தியா விரும்புகிறது என்றும் அண்டை நாடுகளுடனான சுமூக உறவு தொடர்ந்து மேம்பட அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்

மோடிக்கு ஹாட்லைனில் தீபாவளி வாழ்த்து சொன்ன ஒபாமா

Posted: 10 Nov 2015 12:18 PM PST

தீபாவளி திருநாளில் பிரதமர் நரேந்திர மோடியை ஹாட்லைனில் அழைத்த ஒபாமா அவருக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். அதே நேரம் அடுத்த வாரம் துருக்கியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் நாம் சந்திப்போம் என்றும் அவர் கூறினார்.

கர்நாடகாவில் வன்முறை: தொண்டரின் கொடூர கொலைக்கு விஷ்வ இந்து பரிஷத் கண்டனம்

Posted: 10 Nov 2015 10:47 AM PST

கர்நாடகாவின் மடிகேரி பகுதியில் திப்பு சுல்தான் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் தொண்டர் ஒருவர் கொடூர கொலை செய்யப்பட்டதற்கு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் மூன்று பேர் உயிரை பறித்த தீபாவளி பட்டாசு: ஓட்டல் டீசல் ஜெனரேட்டர் வெடித்து சிதறிய சோகம்

Posted: 10 Nov 2015 07:51 AM PST

இந்தியா முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடி வருகிறார்கள். ஆனால், ஒடிசாவில் இந்த சந்தோஷ கொண்டாட்டம் மூன்று பேரின் உயிரை பறித்துள்ளது. புவனேஸ்வரில் உள்ள கந்தகிரி பகுதியில் ஓட்டல் ஒன்றுள்ளது. இந்த ஓட்டலில் மின்சாரம் தடைபட்டால் மின்சாரம் வழங்குவதற்காக

கேரள நிதி மந்திரி கே.எம். மாணி தனது பதவியை ராஜினாமா செய்தார்

Posted: 10 Nov 2015 07:12 AM PST

மது பார் ஊழல் வழக்கில் சிக்கிய கேரள நிதி மந்திரி மாணி தனது நிதி மற்றும் சட்டடத்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை முதல் மந்திரி உம்மன்சாண்டிக்கு அனுப்பினார். கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™