Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இலவச பொருட்களுக்காக வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.1,400 கோடி

Posted:

அரசு இலவச திட்டத்திற்காக, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி சப்ளை செய்த நிறுவனங்களுக்கு, தமிழ்நாடுநுகர்பொருள் வாணிப கழகம், 1,400 கோடி ரூபாய், நிலுவை வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு, 1.85 கோடி குடும்பங்களுக்கு, இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி அல்லது மின் அடுப்பு வழங்கும் திட்டத்தை, 2011 செப்டம்பர் முதல் செயல்படுத்தி வருகிறது. இதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தனியாரிடம் இருந்து, இலவச பொருட்களை கொள்முதல் செய்கிறது.

குற்றச்சாட்டு:
கடந்த, 2014 வரை, 95 லட்சம் இலவச பொருட்கள் கொள்முதல் செய்து வினியோகிக்கப்பட்டது. எஞ்சிய, 90 ...

தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணியா? ராகு - கேது பெயர்ச்சிக்கு பின் முடிவு

Posted:

சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க, தி.மு.க., - தே.மு.தி.க., இடையே, ரகசிய பேச்சு துவங்கப்பட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அ.தி.மு.க.,வை எதிர்க்க கூட்டணி அவசியம் என, தி.மு.க., தலைவர் கருணாநிதியும், மகளிர் அணி செயலர் கனிமொழியும் கருதுகின்றனர். ஆனால், தனித்தே போட்டியிட, பொருளாளர் ஸ்டாலின் விரும்புகிறார். அதற்கு, கூட்டணி சேர, ஆட்சியில் பங்கு வேண்டும் என, நெருக்கடி கொடுப்பது தான் காரணம். ஆனால், தே.மு.தி.க., - காங்கிரசுடன் கூட்டணி அமைக்க, கனிமொழி, களமிறங்கி உள்ளார். கனிமொழியின் ஆதரவாளர்கள் சிலர், சமீபத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் குடும்பத்தினருடன் ...

ஜம்மு - காஷ்மீருக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசு: ரூ.80,000 கோடி திட்டங்கள் அறிவிப்பு

Posted:

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக, 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று அறிவித்தார். ''ஜம்மு - காஷ்மீர், நவீன மற்றும் முற்போக்கான, வளம் மிகுந்த மாநிலமாகமாற்றப்படும்,'' என, அவர் உறுதியளித்தார்.ஜம்மு - காஷ்மீரில், பா.ஜ.,வுடன் சேர்ந்த கூட்டணி அரசில், ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் முப்தி முகமது சயீத் முதல்வராக உள்ளார். இம்மாநில தலைநகர் ஸ்ரீநகரில், ஷெர் - இ - காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில், நேற்று நடந்த பிரம்மாண்ட கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் முப்தி முகமது சயீத் உள்ளிட்ட ...

கேரள உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ., வளர்ச்சி; காங்., தளர்ச்சி

Posted:

திருவனந்தபுரம்:கேரளாவில் நடைபெற்ற, உள்ளாட்சித் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியான, எல்.டி.எப்., கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.கேரள உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள, ஆறு மாநகராட்சிகளில், நான்கு மாநகராட்சிகளை, எதிர்க்கட்சியான, எல்.டி.எப்., கைப்பற்றியது; காங்கிரஸ் தலைமையிலான, ஆளும், யு.டி.எப்., கூட்டணி, இரண்டு மாநகராட்சிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதே போல், நகராட்சி மற்றும், கிராம ...

கேரளாவில் வெற்றி: ஜெயலலிதா மகிழ்ச்சி

Posted:

சென்னை: அ.தி.மு.க., வரலாற்றில், கேரளா உள்ளாட்சி தேர்தல் வெற்றி, மேலும் ஒரு புதிய சகாப்தம் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.முதல்வர் ஜெயலலிதா, நேற்று வெளியிட்ட அறிக்கை:அண்டை மாநிலங்கள் துவங்கி, அந்தமான் பிரதேசம் வரை, அடுக்கடுக்கான வெற்றிகளை, அ.தி.மு.க., குவித்து வருவது கண்டு, எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.செப்டம்பரில் அந்தமான் தீவு உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட, மூன்று பேர் வெற்றி பெற்றனர். கேரளா உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.,வினர் ஆறு பேர், மகத்தான வெற்றி பெற்றுள்ளனர்; அவர்களில், ஐந்து பேர் மகளிர் என்பது, மிகுந்த மன நிறைவை ...

மழையில் நனையும் தானியங்கள்: வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

Posted:

தமிழகத்தில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் முறையான பராமரிப்பு இல்லாததால், உணவு தானியங்கள் பாழாகி வருகின்றன.உணவு துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனங்களுக்கு, மொத்தம், 15 லட்சம் டன் கொள்ளளவு உடைய, 270 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. வாணிப கழக கிடங்குகளில், ரேஷன் கடைகளுக்கு வழங்க அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.சேமிப்பு கிடங்கு நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள கிடங்குகளை, இந்திய உணவு கழகம், வாணிப கழகம், கூட்டுறவு சர்க்கரை ஆலை, 'டாஸ்மாக்' மற்றும் பாடநுால் கழகம் ...

காங்., மீது பிரணாப் கோபம்!

Posted:

'நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது; இதற்கு மோடி அரசு தான் காரணம்' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் புகார் அளித்தது காங்கிரஸ். சோனியா மற்றும் ராகுல் தலைமையில், பார்லிமென்டிலிருந்து எம்.பி.,க்கள் ஊர்வலமாக செல்ல, 'டிவி'க்கள் இதை, 'லைவ்' ஆக காட்டின.இச்சம்பவத்திற்கு முன்தினம், சோனியா, ஜனாதிபதியை தனியாக சந்தித்தார். அப்போது, காங்கிரசின் நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தாராம் பிரணாப் முகர்ஜி. 'சகிப்புத்தன்மை குறித்து நீங்கள் பேசுகிறீர்கள்; ஆனால், உங்கள் கட்சி, பார்லிமென்ட் கூட்டத்தொடரில் எப்படி நடந்து கொண்டது; அவையின் நடவடிக்கைகளை ...

'தமிழகம் வேண்டாம்': போன் நிறுவனங்கள் அலறல்

Posted:

தமிழகத்தில் தொழில் துவங்க, பல துறைகளைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டினாலும், மொபைல் போன் நிறுவனங்கள், தமிழகத்தை புறக்கணிக்க துவங்கி உள்ளன.சென்னை அருகே, ஸ்ரீபெரும்புதுாரில் இயங்கிய, 'நோக்கியா' மொபைல் போன் ஆலை, பல ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி மற்றும் வணிக வரி பிரச்னையில் சிக்கி, 2014 நவம்பரில் மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதற்கு உதிரிபாகங்களை சப்ளை செய்த, உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான, 'பாக்ஸ்கான்' நிறுவனமும், அங்கிருந்து நடையை கட்டியது.'நோக்கியா, பாக்ஸ்கான்' ஆலைகளின் தொழிலாளர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழக ...

இன்றும், நாளையும் கனமழை கொட்டும்: புயல் உருவாக வாய்ப்பு என எச்சரிக்கை

Posted:

'வங்க கடலில் உருவாகி வரும் காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று இரவு முதல், இரு நாட்களுக்கு கனமழை கொட்டும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 'காற்று அழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடையும்போது, புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது' என்றும் எச்சரித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: வங்க கடலின் தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டிருந்த, காற்று மேலடுக்கு சுழற்சி, காற்று அழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இது, அடுத்த, 48 மணி நேரத்தில், காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும் வாய்ப்பு ...

எழுத்தாளர் மற்றும் கலைஞர்களுக்கு எதிராக அனுபம்கெர் டில்லியில் பேரணி

Posted:

புதுடில்லி:இந்தியாவில், சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக எழுத்தாளர்களும், கலைஞர்களும் நடத்தி வரும் போராட்டங்களுக்கு எதிராக, பிரபல நடிகர் அனுபம்கெர் தலைமையில், டில்லியில் நேற்று, பேரணி நடந்தது. இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக குற்றம்சாட்டி வரும் பிரபல எழுத்தாளர்கள், கலைஞர்கள், தமக்கு மத்திய அரசால் அளிக்கப்பட்ட விருதுகளை திருப்பி அளித்து வருகின்றனர். தனிநபர் உரிமைகளில் தலையிடுவதை தடுக்க வலியுறுத்தி, இவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியாவுக்காக பேரணிஇந்நிலையில், டில்லியில், தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து, ஜனாதிபதி ...

சி.பி.ஐ., காவலில் 'சோட்டா' ராஜன்

Posted:

புதுடில்லி :மும்பை நிழல் உலக தாதா, 'சோட்டா' ராஜனை, சி.பி.ஐ., போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய, நிழல் உலக தாதா, தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து, அதன்பின், பகையாளியாகமாறியவன் சோட்டா ராஜன். இவன் மீது, கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், போதை மருந்து கடத்தல், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட, 70க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று, 27 ஆண்டுகளாக, சர்வதேச போலீஸ் கையில்சிக்காமல், 'தண்ணி' காட்டி வந்தான். போலீசாருடன், சோட்டா ராஜன் நடத்தி வந்த, 'கண்ணா மூச்சி' ஆட்டம், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™