ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நானும் எனதும்
- என்னுடையது
- ஏமாற்றம்
- சலனம்
- சின்னம்
- மரணம் தின்ற நட்பு...
- கோலியும் வெற்றியும் !
- அழியாத நினைவுகள்.......
- டோர் டூ டோர் முடியுமா?
- நாட்டு நடப்புதாங்க சிரிப்பு !
- கதகதப்பைத் தேடும் கம்பளி !
- பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்...
- 2020 டூ 2015 - (10 செகண்ட் கதைகள்)
- தீபாவளி நல்வாழ்த்துகள்!!!
- சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா?
- உன் காதலி
- இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்
- 14-8-1955 - கல்கியில் வந்த கிளாஸிக் ஜோக்ஸ்
- திருப்புறம்பியப் போர்
- தங்கம் விலை நிலவரம்
- முகங்களும் பாவனைகளும்
- இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை!
- வில்வவனநாதர் கோவில், திருவைகாவூர்
- தீபாவளி ஜோக்ஸ்
- தயாநிதீஸ்வரர் கோவில், வடகுரங்காடுதுறை
- கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி
- பாலுகந்த ஈஸ்வரர் கோவில், திருஆப்பாடி
- செஞ்சடையப்பர் கோவில், திருப்பனந்தாள்
- *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....
- புறாக்களுக்கு பிறப்புக் கட்டுப்பாட்டு உணவு
- திரைச்செய்தி - தொடர்பதிவு
- வடமூலநாதர் கோவில், திருப்பழுவூர்
- அக்னீஸ்வரர் கோவில், திருகஞ்சனூர்
- பிராண நாதேஸ்வரர் கோவில், திருமங்கலக்குடி
- தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
- வலை பாயுதே...! (வலையில் வசீகரித்தவை)
- ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள்
- இலக்கியமும் சூழலியலும் நூல்ஆசிரியர் : முனைவர் யாழ் சு. சந்திரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
- கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை
- ரிலாக்ஸ்...(கொலு ஜோக்குகள்)
- முத்தமா, வேணாம்பா சளி புடிக்கும்...!!
- நல்லது பண்ணா கை தட்டாத சாமி...!
| Posted: 07 Nov 2015 10:26 AM PST நானும் எனதும் சுழியில் விரிந்து விளிம்புகளை இழக்கும் நீருருவாய் பேச்சு அவளின் இதுவரையிலான ஆதங்கத்திற்கு வடிகாலாகவும் இருக்கலாம் உறுத்து விழிக்கும் ஆங்காரத்துள் ஏமாற்றம் விரிய உயிர்காற்றில் பிசுபிசுக்கிறது தோற்றம் இனமறியாத மனத்தின் நெருடலில் எதிர்பார்ப்புகள் மொன்னையாக ஏற்பும் மறுப்பும் வெறுமையாக்குகிறது. திடீரென கனக்கும் நெஞ்சுக்கூட்டில் சமாதானமாகாமல் பிசைகிறது கண்டம் கண்முன் விளக்கமாகும் மண்ணுடனான உறவில் ஒவ்வொரு மணித் துளியிலும் பதிய விரும்புகிறேன் ... |
| Posted: 07 Nov 2015 10:22 AM PST என்னுடையது ------------------------ அதைப் பற்றிய பயம் இருந்தது இல்லை பெரிசா எனக்குப் பட்டது. எதையும் சொல்லக் கேக்கிறதை விட பட்டுத் தெரிஞ்சிக்கணும்னு சொல்லுகிற தாத்தா எப்பவும் நெனப்புல. என்னிலிருந்து கரைந்து போகிற உயிர்ப்புக்காக வருத்தப்பட்டதில்ல நெனச்சும் பார்த்தது இல்ல. புத்தகத் தூசியும் தட்டினாத்தான் உதிரணுங்கிற நெனப்ப மீறி ஒவ்வொரு முறையும் அது தானே நிகழுது. கிழிஞ்சது கிழியாதது எல்லாம் என் பகுதியில் பத்திரமாய் தாத்தாவையும் மிஞ்சிட்டன்னு சொல்லுகிற ... |
| Posted: 07 Nov 2015 10:20 AM PST ஏமாற்றம் ---------------- சமாதானமாகாத உறவுக்குள் நினைவுகளைப் பதியவைப்பதில் அர்த்தமில்லை அவசியமுமில்லை. கண்ணிலிருந்து கரிக்கும் நீரை துடைத்தெறிகிறேன். வலிக்கும் முதுகுத் தண்டின் சில்லிட்டப்பகுதியில் எண்ணெய் தேத்தது போல் இருக்கிறது. எனக்குள் தோன்றும் எவையும் புருவ முடிச்சுகளுள் ரணத்தை ஏற்படுத்துகின்றன. நேந்து போன உறுப்புகள் இழந்ததை சுவாசம் அழுக்காக்கியுள்ளது. தேய்மானங்களின் எச்சங்களை பெருமூச்சு நிராகரிக்கிறது. உங்களை என்னைப் போலவே வெறுக்கிறேன். ... |
| Posted: 07 Nov 2015 10:17 AM PST சலனம் --------------- நம்பிக்கை இழப்புகளை ஊடறுத்துத் தெளியும் நாணல் இருமுனை இணைப்பில் இயல்பு காட்டும் இயல்பு என்றும் வேறாவதில்லை வண்ணத்தைக் கரக்கும் கருப்பும் மிகுத்துக் காட்டும் வெண்மையும் அந்நியமல்ல எனக்கு அயலானவை விரைய நழுவும் பார்வை இருவினைக்கு முன்னுள்ள வானம் போல் சிவந்தே இருக்கிறது. இரக்கம் திட்டமிட்ட ஒதுக்கம்போல் சலனப்படாமல் விஞ்சியிருக்கிறது. மென்மை நளினம் வசீகரம் தொடர்புடையது தான் எல்லாக் காலத்தும் இடத்தும் பொருத்தம் பெறுவதில்லை இயல்புக்கு ... |
| Posted: 07 Nov 2015 10:01 AM PST சின்னம் ------------- நடக்கிறதெல்லாம் உறுத்தறது இல்ல. எத்தனை காலம் கல்லாவும் மண்ணாவும் இருக்கிறது. முடியல இழந்து போனவர்களின் எண்ணக் குவியல்ல மூச்சுத்திணறுது யாரை முன்னிறுத்திச் சொல்றது சமாதானமும் விருப்பங்களும் முனுமுனுப்புகளும் சாட்டுச் சொற்களும் பழிவாங்களும் இடிபாடுகளின் அழுகிய வாசத்தில் நசித்துப் போயிற்று நெனப்பு இன்னைக்கும் பார்வையைத் தெறிக்கிற தூசியா இருக்குது பதிலுக்குப் பதிலாகவும் இருக்கலாம் எப்படிச் சொல்றது அடுத்தவன் தகர்க்கும் ... |
| Posted: 07 Nov 2015 09:55 AM PST மரணம் தின்ற நட்பு... விழித்திருக்கும்போதே இதழ்கள் பிரிக்கப்பட இலைகள் உதிர்ந்து போயின. புழுக்களுக்குப் பயந்து வெளியில் நீட்டிய வேர்களை சூரியன் தீய்த்துப் போட்டது. இதமான காற்றில் மறந்தபடி மனத்தின் ஊறலை வேடிக்கைப் பார்க்கிறேன். மறத்துப் போகும் மான உணர்வுகளில் சிதைந்து கொண்டிருக்கிறது உறவு முரண்பாடுகள் நெருடல்கள் உடன்பாடில்லாத சில போதுக்குள் கடத்தப்படுகின்றன. எங்களின் மகிழ்ச்சியோடு எதுவோ நெடுநேர சல சலப்பில் புரிந்தது மறைந்திருந்தது கண்ணீர் ... |
| Posted: 07 Nov 2015 08:16 AM PST இந்திய அணி டி 20, ஒரு நாள் போட்டிகளுக்குப் பிறகு டெஸ்டில் இந்த அளவிற்கு விளையாடும் என்று தென்னாப்பிரிக்க அணியினர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆடுகளத்தில் குறை இருக்கோ இல்லையோ தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி கடுமையான சவாலைக் கொடுத்திருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ சவாலான, சுவாரசியமான கிரிக்கெட் காத்திருக்கிறது. இரண்டு இன்னிங்ஸிலும் விஜய் மற்றும் புஜாரா முக்கியமான பங்களிப்பைத் தந்துள்ளனர். ஜடேஜா , முன்பு விளையாடிய போட்டிகளில் மோசமான பங்களிப்பையே தந்துள்ளார். ... |
| Posted: 07 Nov 2015 07:52 AM PST அழியாத நினைவுகள்....... ************************* கொரியத் தமிழ் உறவுகள் குறித்தான பன்னாட்டுக் கருந்தரங்கம் முடிந்து வீடு வந்து சேர மணி 7.30 ஆயிற்று. நேற்று முழுவதும் ஏதையோ இழந்த மாதிரியே இருந்தது. மனம் ஒரு நிலையில் இல்லை. என் அலைபேசிக்கு கவிஞர் கவிவாணன் அவர்களிடமிருந்து நான்கைந்து அழைப்புகள் வந்திருந்தன. எடுக்காததால் ஒரு குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தார். அதிர வைத்த அந்தக் குறுஞ்செய்தி VAIGAI ANISH EXPIRED. அன்பு நண்பர் வைகை அனிஷ் இதயக் கோளாறினால் அவதிப்பட்டுக்கொண்டு இருந்தார். ... |
| Posted: 07 Nov 2015 07:47 AM PST டோர் டூ டோர் முடியுமா? தலைவர் – டோர் டூ டோர் போயி கேன்வாஸ் பண்ணனும் தெரிஞ்சுதா? தொண்டன் – போகலாம் ! ஆனா நான் போற பகுதியில் எந்த வீட்டுக்கும் டோரே இல்லையே ? |
| Posted: 07 Nov 2015 07:46 AM PST நாட்டு நடப்புதாங்க சிரிப்பு ! ஒருவர் – 'அருணாசலம் எனக்கு ரொம்ப வேண்டியவர் ! அவர் இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுக்குக் கட்டாயம் சொல்லி வேலைவாங்கித் தருகிறேன்!' என்றீர்களே , அருணாசலம் இயக்குநராகிவிட்டார் ! மற்றவர் – அவரு …..ரொம்ப நெருக்கம் இல்லை ! எப்பவோ ஒருமுறை பார்த்திருக்கேன்; அவ்வளவுதான்…… ! |
| Posted: 07 Nov 2015 07:44 AM PST கதகதப்பைத் தேடும் கம்பளிப் பூச்சி (5-11-2015) ! |
| பிரம்ம முஹூர்த்ததின் மகத்துவம்... Posted: 07 Nov 2015 07:09 AM PST மனதின் பிரச்னைகளை அகற்றவும்..இறைவனின் அன்பில் மனதை நிலை நிறுத்தவும்..இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான நேரம் பிரம்ம முஹூர்த்தம்..இந்த பிரம்ம முஹூர்த்தம் என்பது பிரம்மா சிவபெருமானை நினைத்து அற்புத வரங்களை பெற்றதால் பிரம்ம முஹூர்த்தம் என்ற சொல் வழக்கில் வந்தது..படைப்பு கடவுளான பிரம்மா நீண்டகாலமாக உறங்கிவிட்டதால் அவரை உறக்கத்திலிருந்து எழுப்பிய சிவபெருமான்..இந்த கலியுகத்தை அதாவது பிரம்மாவின் இரவை பிரம்மாவின் பகல் ஆக்கவேண்டும் அதாவது சத்யுகம் என்ற உலகத்தை இந்த பூமியில் ஏற்படுத்தவேண்டும் என்று ... |
| 2020 டூ 2015 - (10 செகண்ட் கதைகள்) Posted: 07 Nov 2015 05:49 AM PST ![]() |
| Posted: 07 Nov 2015 05:45 AM PST ஈகரை உறவுகளுக்கு உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!!! அன்புடன் சாமி தீபாவளிப் பண்டிகை - நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! பதிவை படிக்கவும் http://www.eegarai.net/t86604-topic#1026102 தீபாவளி ஏன்? - வாரியார் சுவாமிகள் பதிவை படிக்கவும் http://www.eegarai.net/t88509-topic#1026103 |
| சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா? Posted: 07 Nov 2015 05:42 AM PST சோழநாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு எச்சதத்தன்-பவித்திரை தம்பதியினர் வசித்தனர். இவர்களது மகன் விசாரசருமன். இவன் சிறு வயதிலேயே சிவபக்தி கொண்டவனாக வளர்ந்தான். பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டதால் பசுக்கள் இவனை தாங்கள் உயிராக கருதின. மாடு மேய்க்க செல்லும் இடத்தில் மணலில் சிவலிங்கம் வடிப்பது இவனது வழக்கம். மேய செல்லும் பசுக்கள் அதன்மேல் பாலை சுரந்து அபிஷேகம் செய்யும். இவ்வாறு சிவ சேவை செய்த பசுக்கள் வீட்டுக்கு வந்த பிறகும் தங்கள் எஜமானர்களுக்கும் தேவையான பாலை சுரந்து கொடுத்தன. ... |
| Posted: 07 Nov 2015 05:32 AM PST உன்னை விட்டு நான் எங்கும் சென்று விடவில்லை!! உன் விழியின் வெளிச்சமாய் நானிருப்பேன்!! உன் சுவாசத்தின் காற்றாய் நானிருப்பேன்!! உன் இதயத்தின் துடிப்பாய் நானிருப்பேன்!! உன் நினைவுகளில் நீங்கா இடம்பெற்றிருப்பேன்!! நீ தொடும் மலராய் நானிருப்பேன்!! நீ பார்க்கும் பார்வையின் பொருளாய் நானிருப்பேன்!! நீ காணும் காட்சியாய் நானிருப்பேன்!! நான் ஒன்றும் கடவுள் அல்ல!! உன் காதலி!! |
| இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் நாளை தொடக்கம் Posted: 07 Nov 2015 05:29 AM PST - நவம்பர் 04, 2015, 10:36:12 PM -------------- இந்திய- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நாளை தொடங்குகிறது. தென்னாப்பிரிக்க அணியில் காயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுமினி விளையாடவில்லை.வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு ஒரு போட்டியில் கலந்து கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளதால் முதல் டெஸ்டில் அவர் விளையாடவில்லை. தொடக்க வீரர்களாக ஷீகர் தவானும், முரளி விஜய் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் விராட் கோலியுடன், சேட்டேஸ்வர் புஜாரா, ... |
| 14-8-1955 - கல்கியில் வந்த கிளாஸிக் ஜோக்ஸ் Posted: 07 Nov 2015 05:23 AM PST ![]() |
| Posted: 07 Nov 2015 05:22 AM PST திருப்புறம்பியப் போர் தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பத்தை தந்த போர். களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் முடிந்த பிறகு எழுந்த இரண்டு பேரரசுகளான பாண்டியர்களும் பல்லவர்களும் தங்களுக்கும் சுமார் 200 ஆண்டுகளுக்குள் 27 முறை போர் புரிந்தனர் என்பது வரலாறு. இந்த மேலாதிக்கப் போர்களினால் இரண்டு அரசுகளும் பலவீனமடைந்தன. திருப்புறம்பியப் போர் இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல் அமைந்து, இரண்டு அரசுகளையும் உருக்குலைத்தது. இப்போர் நடந்த சில வருடங்களுக்குள் ஆதித்த சோழன் பல்லவன் நண்பனான அபராஜித வர்மனின் ... |
| Posted: 07 Nov 2015 05:17 AM PST --- --------------- சென்னை : தங்கம் விலை இன்று(நவ.7ம் தேதி) சவரனுக்கு ரூ.136 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,438-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.180 குறைந்து ரூ.26,080-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 60 காசுகள் சரிந்து ரூ.37.70-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.555 சரிந்து ரூ.35,220-க்கும் விற்பனையாகிறது. - ---------------- தினமலர் |
| Posted: 07 Nov 2015 05:01 AM PST அனுமந்தபுரம். செங்கல்பட்டு |
| இராமர் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகை! Posted: 07 Nov 2015 02:57 AM PST இராமர் தன் மனைவி சீதாதேவியுடன் சேர்ந்து தீபாவளிப் பண்டிகை கொண்டாடியதாக இராமாயணம் கூறுகிறது. பலகாலமாக, கிருஷ்ணரால் கொல்லப்பட்ட நரகாசுரனின் நாள்தான் தீபாவளியாக கொண்டாடப்படுவதாக நம்பவைக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. சிவவிரதங்களில் ஒன்றுதான் தீபாவளி என்பதை மறக்கடிக்க வைத்து விட்டார்கள். புராணக் கூற்றின்படி மகாபாரதத்திற்கு முந்தைய காலத்தது இராமாயணம். இராமாவதாரத்திற்குப் பின்னர் நிகழ்ந்ததுதான் கிருஷ்ணாவதாரம். அப்படியிருக்க இராமர் எப்படி தீபாவளி கொண்டாடியிருக்கமுடியும்? ஆக இராமர் சிவவிரதமிருந்து ... |
| வில்வவனநாதர் கோவில், திருவைகாவூர் Posted: 07 Nov 2015 02:47 AM PST தகவல் பலகை சிவஸ்தலம் பெயர் திருவைகாவூர் இறைவன் பெயர் வில்வவனநாதர் இறைவி பெயர் சர்வஜனரட்சகி, வளைக்கை அம்மை பதிகம் திருஞானசம்பந்தர் - 1 எப்படிப் போவது கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை வழியாக நகரப் பேருந்து வசதிகள் திருவைகாவூர் செல்ல இருக்கின்றன. சுவாமிமலையிலிருந்து நாகுகுடி என்ற ஊருக்குச் செல்லும் கிளைப்பாதையில் நாகுகுடி சென்று, அங்கிருந்து திருவைகாவூர் செல்லும் பாதையில் சென்று இத்தலத்தை அடையலாம். ஆலய முகவரி அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோயில் திருவைகாவூர் திருவைகாவூர் அஞ்சல் கும்பகோணம் ... |
| Posted: 07 Nov 2015 02:37 AM PST - போன தீபாவளிக்கு இந்த தீபாவளி நம் வயதில் ஒன்றை ஏற்றிவிட்டது - ஆனாலும் சிரிக்கிறோம். அதுதான் தீபாவளி - ------------------------------ |
| தயாநிதீஸ்வரர் கோவில், வடகுரங்காடுதுறை Posted: 07 Nov 2015 02:35 AM PST சிவஸ்தலம் பெயர் வடகுரங்காடுதுறை இறைவன் பெயர் தயாநிதீஸ்வரர், குலைவணங்குநாதர், வாலிபுரீஸ்வரர், அழகுசடைமுடிநாதர் இறைவி பெயர் அழகுசடைமுடி அம்மை, ஜடாமகுட நாயகி பதிகம் திருஞானசம்பந்தர் - 1 எப்படிப் போவது கும்பகோணம் - திருவையாறு சாலையில் சென்றால் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் ஆகிய ஊர்களைத் தாண்டிய பின்னர், உள்ளிக்கடை எனும் ஊர் வரும். அதற்கடுத்து உள்ளது ஆடுதுறை. கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. ஆலய முகவரி அருள்மிகு ... |
| கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி Posted: 07 Nov 2015 02:34 AM PST வஸ்தலம் பெயர் திருந்துதேவன்குடி (தற்போது நண்டாங் கோயில் என்று வழங்குகிறது) இறைவன் பெயர் கற்கடேஸ்வரர், தேவதேவேசர் இறைவி பெயர் அருமருந்துநாயகி, அபூர்வநாயகி பதிகம் திருஞானசம்பந்தர் - 1 எப்படிப் போவது கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவியலூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் திருந்துதேவன்குடி சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து திருவிசநல்லூர் செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. திருவிசநல்லூரில் இருந்து நடந்தோ அல்லது ஆட்டோ மூலமோ கற்கடேஸ்வரர் கோவில் சென்று வரலாம். ஆலய ... |
| பாலுகந்த ஈஸ்வரர் கோவில், திருஆப்பாடி Posted: 07 Nov 2015 02:30 AM PST சிவஸ்தலம் பெயர் திருஆப்பாடி இறைவன் பெயர் பாலுகந்த ஈஸ்வரர் இறைவி பெயர் பெரியநாயகி பதிகம் திருநாவுக்கரசர் - 1 எப்படிப் போவது கும்பகோணம் - அணைக்கரை மர்க்கத்தில் அமைந்துள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருப்பனந்தாள் அருகில் தென்மேற்கே சுமார் 2 கி.மி. தொலைவில் மண்ணியாற்றின் தென்கரையில் திருஆப்பாடி சிவஸ்தலம் இருக்கிறது. ஆலயம் பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி இருப்பதால் திருப்பனந்தாளில் இருந்து ஆட்டோவில் வருவது நல்லது. நேரமும் மிச்சமாகும். இத்தலம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி. மீ. ... |
| செஞ்சடையப்பர் கோவில், திருப்பனந்தாள் Posted: 07 Nov 2015 02:26 AM PST சிவஸ்தலம் பெயர் திருப்பனந்தாள் இறைவன் பெயர் செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர் இறைவி பெயர் பிரஹந்நாயகி பதிகம் திருஞானசம்பந்தர் - 1 எப்படிப் போவது கும்பகோணம் - அணைக்கரை வழித்தடத்தில் கும்பகோணத்தில் இருந்து 18 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை வழியிலுள்ள ஆடுதுறை அடைந்து அங்கிருந்தும் திருப்பனந்தாள் செல்ல சாலை வசதி உள்ளது. ஆடுதுறையில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் திருமங்கலக்குடி தலத்தையும் தரிசிக்கலாம். காவிரி தென்கரை தலங்களில் ஒன்றான தென்குரங்காடுதுறை என்ற ... |
| *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... Posted: 07 Nov 2015 01:45 AM PST மெழுகுவர்த்தி உறவுகள் , உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை , உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை ! |
| புறாக்களுக்கு பிறப்புக் கட்டுப்பாட்டு உணவு Posted: 07 Nov 2015 01:37 AM PST சிங்கப்பூர் - - ஓராண்டு காலத்துக்கு ஹாஜி முகம்மது சாலே பள்ளிவாசலுக்கு வெளியே பறந்து வரும் புறாக்களுக்கு நாள்தோறும் அளிக்கப்படும் காலை உணவில் கூடுதல் அம்சம் சேர்க்கப்பட்டிருக்கும். சோளத்தைச் சார்ந்திருக்கும் அந்தக் காலை உணவில் 'நிக்கர் பசின்' எனும் மருந்து சேர்க்கப்பட்டிருக்கும். அந்த மருந்து பெண் புறாக்கள் முட்டை இடுவதைத் தடுக்கும். அப்படியே முட்டை இட்டாலும் அது குஞ்சாகப் பொறிக்காது. - ஷென்டன் வே, பால்மர் ரோட்டுக்கு அருகில் உள்ள அந்தப் பள்ளிவாசலுக்கு வெளியே உள்ள திடலுக்கு ... |
| Posted: 07 Nov 2015 01:14 AM PST - தெலுங்கு முன்னணி நாயகன் அல்லு அர்ஜுன் நடித்து வரும் புதிய படம் 'சரைனொடு'. பொய்யப்பட்டி சீனு இயக்கும் இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ராகுல் பிரீத்சிங், கேத்ரின் தெரசா ஆகியோர் நடித்து வருகிறார்கள். தமன் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு குத்தாட்டப் பாடலுக்கு நட்பின் அடிப்படையில் அஞ்சலி நடனம் ஆடுகிறார் - --------------------------- |
| வடமூலநாதர் கோவில், திருப்பழுவூர் Posted: 07 Nov 2015 12:47 AM PST சிவஸ்தலம் பெயர் திருப்பழுவூர் ( தற்போது கீழப்பழுவூர் என்று வழங்குகிறது) இறைவன் பெயர் ஆலந்துறையார், வடமூலநாதர், வடமூலேஸ்வரர் இறைவி பெயர் அருந்தவநாயகி, ஸ்ரீயோக தபஸ்வினி பதிகம் திருஞானசம்பந்தர் - 1 எப்படிப் போவது அரியலூர் - திருவையாறு சாலை வழித்தடத்தில் அரியலூரிலிருந்து தெற்கே சுமார் 12 கி.மி. தொலைவிலும், திருவையாறில் இருந்து வடக்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும் கீழப்பழுவூர் உள்ளது. கீழப்பழுவூர் என்ற சிறிய ஊரில் பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் இந்த சிவஸ்தலம் ஆலயம் இருக்கிறது. சாலையோரத்தில் ... |
| அக்னீஸ்வரர் கோவில், திருகஞ்சனூர் Posted: 07 Nov 2015 12:36 AM PST சிவஸ்தலம் பெயர் திருகஞ்சனூர் இறைவன் பெயர் அக்னீஸ்வரர் இறைவி பெயர் கற்பகாம்பாள் பதிகம் திருநாவுக்கரசர் - 1 எப்படிப் போவது மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மி. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு. ஆடுதுறையிலிருந்து திருமங்கலக்குடி, சூரியனார் கோவில் வழியாக துகிலி செல்லும் சாலையில் சென்று "கோட்டூர்" "கஞ்சனூர்" என்று வழிகாட்டிப் பலகையுள்ள திசையில் பிரிந்து இத்தலத்தை அடையலாம். ஆலய முகவரி அருள்மிகு ... |
| பிராண நாதேஸ்வரர் கோவில், திருமங்கலக்குடி Posted: 07 Nov 2015 12:34 AM PST றைவன் பெயர் பிராண நாதேஸ்வரர் இறைவி பெயர் மங்களநாயகி, மங்களாம்பிகை பதிகம் திருநாவுக்கரசர் - 1 திருஞானசம்பந்தர் - 1 எப்படிப் போவது கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை வழியிலுள்ள ஆடுதுறை அடைந்து அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மி. தொலைவில் திருமங்கலக்குடி சிவஸ்தலம் இருக்கிறது. ஆலய முகவரி அருள்மிகு பிராணவரதேஸ்வரர் திருக்கோவில் திருமங்கலக்குடி திருமங்கலக்குடி அஞ்சல் திருவிடைமருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 612102 இவ்வாலயம் காலை 6-30 மணி முதல் 12-30 மணி வரையும், ... |
| Posted: 07 Nov 2015 12:08 AM PST தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இக்கோவில் இரண்டாம் ராசராசனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில், கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன. உலகப் பாரம்பரிய சின்னம். 1987-ல், பெருவுடையார் கோயில் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 2004-ல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலும் ... |
| வலை பாயுதே...! (வலையில் வசீகரித்தவை) Posted: 06 Nov 2015 08:25 PM PST ![]() |
| ஹைக்கூ உலகம் -இலையுதிர் காலம் ஹைக்கூக்கள் Posted: 06 Nov 2015 08:04 PM PST ஹைக்கூ உலகம் போட்டி எண் – 3 (ஹைக்கூ - இலையுதிர் காலம்) – முடிவுகள்: S Naga Lingam 1.இலையுதிர்கால/ மரக்கிளையில் அசைந்தாடுகிறது/ ஏழைச்சிறுவனின் கிழிந்த சட்டை 2.குளிர் காற்றில்/ நடுங்குகிறது பறவைகள்/ இலையுதிர்கால மரத்தில் கூடு 3.மாலை நிலவொளியில்/ ஆச்சரியக்குறி போல காட்சி தரும்/ தூக்கணாங்குருவி கூடு 4.நீண்ட இரவு/ ஆனந்தம் பொங்குகிறது/ கரகாட்ட நிகழ்ச்சி 5.சோளக்கொல்லையோரம்/ சாய்ந்துகிடக்கிறது/ பாட்டியின் ஊன்றுகோல் --- முல்லை நாச்சியார் 1.பனிமூட்ட இரவினில்/ இலையுதிர் காலத் ... |
| இலக்கியமும் சூழலியலும் நூல்ஆசிரியர் : முனைவர் யாழ் சு. சந்திரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Posted: 06 Nov 2015 07:21 PM PST இலக்கியமும் சூழலியலும் நூல்ஆசிரியர் : முனைவர் யாழ் சு. சந்திரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்பமுதலி தெரு, மதுரை-1. பேச : 0452 2345971, பக்கங்கள் : 120. விலை : ரூ. 80. ***** 'இலக்கியமும் சூழலியலும்' நூலின் தலைப்பே மிக நுட்பமாக உள்ளது. நூல் ஆசிரியர் இனியதோழி முனைவர் யாழ் சு. சந்திரா அவர்கள், என்னுடைய நூல் தந்தவுடன் மதிப்புரை தந்து சிறப்பிக்கும் நல்ல உள்ளத்திற்குச் சொந்தக்காரர். மதுரையின் புகழ்மிக்க ஸ்ரீ மீனாட்சி ... |
| கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை Posted: 06 Nov 2015 07:10 PM PST கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் ... |
| Posted: 06 Nov 2015 06:24 PM PST ![]() |
| முத்தமா, வேணாம்பா சளி புடிக்கும்...!! Posted: 06 Nov 2015 06:19 PM PST ![]() |
| நல்லது பண்ணா கை தட்டாத சாமி...! Posted: 06 Nov 2015 06:15 PM PST ![]() |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |





