Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மழையால் சரிந்த மது விற்பனை: 'டாஸ்மாக்' நிர்வாகம் கவலை

Posted:

'சபரிமலை சீசன்' காரணமாக, மது விற்பனை, 25 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது; தொடர் மழையால், மேலும் சரியும் என, 'டாஸ்மாக்' நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.தமிழகத்தில், 6,800 டாஸ்மாக் கடைகளில், தினமும், சராசரியாக, 70 கோடி ரூபாய்; ஞாயிற்றுக் கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில், 95 கோடி ரூபாய்; தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், மது விற்பனை, 100 கோடி ரூபாயை தாண்டும். சபரிமலை சீசன், நவ., 17ம் தேதி துவங்கியதை அடுத்து, மது விற்பனை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த, 14 நாட்களில், மது விற்பனையில், 25 சதவீதம் சரிவு ஏற்பட்டுஉள்ளது. மது விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவால், இந்த இரு ...

மிகக் குறைந்த விலையில், சூரிய ஒளி மின்சாரத்தை தயாரிக்கும் முயற்சியில் இந்தியா: பிரதமர் மோடி தகவல்

Posted:

பாரிஸ்: சூரிய ஒளி அதிகமாக கிடைக்கக் கூடிய நாடுகளை ஒருங்கிணைத்து, மிகக் குறைந்த விலையில், சூரிய ஒளி மின்சாரத்தை தயாரிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடிகூறினார்.

உலகம் முழுவதும், வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பு, தொழிற்சாலைகள் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவற்றால், வளி மண்டலத்தில், கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து, புவி வெப்பமயமாக மாறி வருகிறது. இதனால், பருவம் தவறிய மழை, வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்கள் அதிகம் நிகழ்ந்து, பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
150 நாடுகள்:
இதையடுத்து, கார்பன் டை ...

எதற்கு இத்தனை வழக்குகள்? தமிழக அரசுக்கு கண்டனம்

Posted:

புதுடில்லி: அவதுாறு வழக்குகளில் பெரும்பாலானவை தமிழகத்தில் இருந்து தாக்கல் செய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதுாறு வழக்குகளின் விசாரணையை நிறுத்தி வைக்கும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த கிரிமினல் அவதுாறு வழக்கை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி புதிய மனு தாக்கல் செய்துள்ளார்; அம்மனு விபரம்:விஜயகாந்த் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு எதிராக, ...

சிறப்பு பூஜை: ஸ்டாலின் ஏற்பாடு!

Posted:

தொடர் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டம், வெள்ள நிவாரணப் பணி என சுற்றித் திரிந்ததால், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. புத்துணர்ச்சி பெற மூலிகை சிகிச்சைக்காக, அவர் கேரளா சென்றுள்ளார்.தமிழகம் - கேரளா எல்லையில், களியக்காவிளைக்கு அருகில் உள்ளது பூவார்; இங்குள்ள பிரபல மூலிகை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் திட்டத்துடன், ஸ்டாலின், கேரளா சென்றுள்ளார். அங்கு, எட்டு நாட்கள் தங்கி, மூலிகை குளியல் உள்ளிட்ட, ஆயுர்வேத சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள உள்ளார். பின் அவர், திருவனந்தபுரம் அருகில் உள்ள, கரிக்காகோம் என்ற ஊருக்கு செல்கிறார். ...

சாலைகளில் பாதாள பள்ளங்கள்: சென்னை வாகன ஓட்டிகள் பீதி; அதிகாரிகள் குழப்பம்

Posted:

சென்னையின் பல பிரதான சாலைகளில், திடீரென ஏற்பட்ட பாதாள பள்ளங்களால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பீதி அடைந்துள்ளனர். இதற்கான உரிய காரணம் தெரியாமல், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

சென்னையில் இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட மிக அதிகமாக கொட்டி தீர்த்தது. வெள்ள பாதிப்பில் இருந்து முழுமையாக மீள்வதற்குள், சாலைகளில் ஏற்பட்ட திடீர் பள்ளங்கள், மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளன.குறிப்பாக, நகரில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள கீழ்கண்ட பகுதிகளில் பள்ளங்கள் உருவாகியுள்ளன.
* மயிலாப்பூர், பி.எஸ்.சிவசாமி சாலை
* ...

தயாநிதியிடம் டிச.,5 வரை சி.பி.ஐ., தொடர் விசாரணை

Posted:

புதுடில்லி: தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதியிடம், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சி.பி.ஐ., விசாரணை துவங்கியது. இந்த விசாரணை வரும் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த, 2004 முதல், 2007 வரை, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி இருந்தார்; அப்போது, அவரது சென்னை வீட்டிற்கு வழங்கப்பட்ட, 300க்கும் மேற்பட்ட அதிவேக தொலைபேசி இணைப்புகளை, அவரது சகோதரர் கலாநிதியின், 'சன் டிவி' நிறுவனம் முறைகேடாக பயன்படுத்தியதாக, சி.பி.ஐ., குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, தன்னை, சி.பி.ஐ., கைது செய்யாமல் இருக்க, தயாநிதி ...

கதவுக்கு கயிறு கட்டி ஓடும் சொகுசு பஸ்!

Posted:

'தமிழகத்தில் அரசு பஸ்கள் பராமரிப்பு, சரியாக இல்லை' என்பதற்கு, மீண்டும் ஒரு உதாரணம் கிடைத்துள்ளது. தாழ்ப்பாள் இல்லாத கதவை, கயிற்றால் கட்டி, நடத்துனர் பிடித்த படி, இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், 22 ஆயிரம் அரசு பஸ்கள் உள்ளன. அவற்றில், 10 ஆயிரம் பஸ்கள் ஆயுட்காலம் முடிந்தவை. போதிய பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படும் இந்த பஸ்கள், ஆங்காங்கே, 'பிரேக் டவுண்' ஆகி நின்று விடுவது வாடிக்கை. 5,000 புதிய பஸ்கள் தரப்பட்டும், நிலைமை சீராகவில்லை.மோசமான பஸ்களின் நிலைமைக்கு சாட்சியாக, சென்னையில் இருந்து மயிலாடுதுறை செல்லும், கும்பகோணம் போக்குவரத்து கழக ...

வீணான மழை நீர் கணக்கிடுவதில் சிக்கல்

Posted:

வடகிழக்கு பருவமழையின் போது, வீணாக கடலில் கலந்த வெள்ள நீரை கணக்கிடுவதில், பொதுப்பணித் துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் இறுதியில் துவங்கிய வடகிழக்கு பருவமழை, தொடர்ந்து பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் சராசரியாக, 50 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, இயல்பு அளவை விட அதிகம். தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் உள்ளிட்ட, 10 மாவட்டங்களில், சராசரி அளவை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த ஆறுகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் நிரம்பி, உபரி நீரை வெளியேற்றும் நிலை உருவாகி உள்ளது. அதே சமயம், வீணாக கடலில் ...

தமிழகம் முழுவதும் தொடர்ந்து 5 நாள் கொட்டப்போகுது கனமழை : குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைவது காரணம்

Posted:

சென்னை: 'வங்கக் கடலில் உருவாகியுள்ள, புதிய காற்று அழுத்த தாழ்வு நிலை, தீவிரமடைந்து வருகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன், நேற்று கூறியதாவது: இரு நாட்களுக்கு முன், அந்தமான் கடலில் உருவான காற்று அழுத்த தாழ்வு நிலை, எதிர்பார்த்த அளவு வலுவடைந்து, தமிழகத்தை நோக்கி நகரவில்லை; மறைந்து விட்டது. தற்போது, வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில், இலங்கை அருகே, புதிய காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இது, ...

ராகுலுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Posted:

புதுடில்லி,: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின், பிரிட்டன் குடியுரிமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. காங்., துணைத் தலைவர் ராகுல், பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்றும், அந்நாட்டு நிறுவனத்திடம் சமர்ப்பித்த ஆவணத்தில், இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாகவும், சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, எம்.எல்.சர்மாஎன்ற வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'ராகுல், பிரிட்டன் குடியுரிமை பெற்றதாக ஆவணங்களில் தெரிவித்துள்ளார். ஆனால், இந்திய குடிமகன் எனக்கூறி, தேர்தல்களில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™