Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை!

Posted:

சென்னை:'வங்கக்கடலில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், இன்று முதல், ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழை, கடந்த சில நாட்களாக சற்று குறைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், 'தமிழகம், புதுச்சேரியில், இன்று முதல், ஐந்து நாட்களுக்கு, கனமழை நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மைய இயக்குனர் ரமணன் ...

வெள்ளப் பாதிப்புக்கு உதவ பிரதமர் மோடி உறுதி: தமிழகம் விரைவில் மீளும் என்றும் நம்பிக்கை

Posted:

புதுடில்லி:'பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்' என, பிரதமர் நரேந்திர மோடி, தன், வானொலி உரையில் உறுதி அளித்துள்ளார். மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து, விரைவில் மீளும் வலிமை தமிழகத்துக்கு உண்டு என்றும், அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, மாதம் ஒருமுறை, 'மன் கீ பாத்' என்ற தலைப்பில், அகில இந்திய வானொலி மூலமாக, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார். நேற்று, 14வது முறையாக, வானொலி மூலம், அவர் ஆற்றிய உரை:புவி, வெப்பமயமாவதால் ...

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் பதவி விலக விரும்பிய கலாம்

Posted:

புவனேஸ்வர்:''முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நெருக்கடியான ஒரு கட்டத்தில் பதவி விலகுவது குறித்து யோசித்தார்,'' என, இந்திய செய்தித்தாள் பதிவாளர் அலுவலக டைரக்டர் ஜெனரல் எஸ்.எம்.கான் தெரிவித்துள்ளார்.

அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது அலுவலக செய்திப் பிரிவு செயலராக இருந்தவர், கான். இவர், அப்துல் கலாமுடன் பணியாற்றியது குறித்து, ஒடிஸா தலைநகர் புவனேஸ்வரில், எஸ்.ஏ., பல்கலை மாணவர்களிடையே உரையாற்றினார்; அதன் விவரம்:கடந்த, 2005ல், அப்போதைய பீஹார் கவர்னர் பூட்டாசிங் அளித்த அறிக்கையை ஏற்று, அம்மாநில சட்டசபையை கலைக்க, பிரதமர் மன்மோகன்சிங் ...

கோவாவுக்கு போகாதீங்க: ரஷ்யா எச்சரிக்கை

Posted:

பனாஜி:பாதுகாப்பான சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து, இந்தியாவின் கோவா மாநிலத்தை, ரஷ்யா நீக்கியுள்ளது.

சிரியாவில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய விமானத்தை, தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததாக கூறி, துருக்கி ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். கடந்த வாரம் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து, ரஷ்யா - துருக்கி இடையேயான நல்லுறவு பாதிக்கப்பட்டு உள்ளது.'துருக்கி, ரஷ்யாவின் முதுகில் குத்தி விட்டது' எனக் குற்றம் சாட்டிய, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதித்து, அதிர்ச்சி அளித்தார். துருக்கி நாட்டுக்கு ...

நிதி நெருக்கடி தமிழகத்தை பாதிக்கும்: ஸ்டாலின்

Posted:

சென்னை: அ.தி.மு.க.ல ஆட்சியால் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடி தமிழகத்தை பாதிக்கும் என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரிச்சுமையை பன்மடங்கு ஏற்றிய பிறகும், தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்திருப்பதற்கு, அ.தி.மு.க., அரசின் நிர்வாகத் திறமையின்மை போன்றவையே காரணம். அ.தி.மு.க., அரசின் கையாலாகாத தனத்தால் ஏற்பட்டிருக்கும் இந்த நிதி நெருக்கடி, தமிழகத்தின் வளர்ச்சியை எதிர்காலத்தில் கடுமையாகப் பாதிக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது; இது, தமிழகத்தின் துயரம் தான் என ...

3,500 பேர் படுகொலை: ஐ.எஸ்., அட்டகாசம்

Posted:

பெய்ரூட்: ஐ.எஸ்., பயங்கரவாதிகள், இதுவரை, 3,500 பேரை தீர்த்துக் கட்டியுள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறியுள்ளதாவது:கடந்த ஆண்டு ஜூனில், சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் சில பகுதிகளை பிடித்த ஐ.எஸ்., இயக்கம், தனி இஸ்லாம் நாட்டை உருவாக்கியது. அதுமுதல், 3,500 பேரை, அந்த இயக்கம் கொன்று குவித்துள்ளது. இவர்களில், 103 பேர் பெண்கள்; 77 பேர் குழந்தைகள்.கடந்த மாதத்தில் மட்டும், 53 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்; இவர்களில், 35 பேர் பொதுமக்கள்.இவ்வாறு மனித உரிமை அமைப்பு ...

மேட்டூர் அணை கரையோரம் தேங்கும் கழிவுநீர்: எல்லைப்பகுதியில் ஆய்வு செய்ய முடிவு

Posted:

மேட்டூர் : மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில், கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலையில், தமிழக எல்லையிலுள்ள காவிரி நீர்வரத்து பகுதியில் கழிவுநீர் கலக்கிறதா என்பதை, குழு அமைத்து ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.மேட்டூர் அணையில் தற்போது, 91.36 டி.எம்.சி., நீர் உள்ளது. அணை இடதுகரை மற்றும் மாசிலாபளையம் நீர்பரப்பு பகுதியில், பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் எண்ணெய் படிமங்கள் போல தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. காவிரியில் கழிவுநீர் கலப்பதே இதற்கு காரணம் என, அணை கரையோர மக்கள் குற்றம் சாட்டினர். காவிரியாறு கர்நாடகாவில், 445 கி.மீ., தமிழக-கர்நாடகா எல்லையில், ...

தமிழக மீனவர்கள் விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம்

Posted:

சென்னை: பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க, தேவையான நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுத்து வருகிறது. அதே நேரம், பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில், மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர், சட்ட விரோதமாக கைது செய்வது தொடர்கிறது.புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்களை, நேற்று இலங்கை கடற்படையினர், இரண்டு படகுகளுடன் சிறைப்பிடித்துச் சென்றுள்ளது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இலங்கையில் சிறையில் ...

தமிழக காங்., தலைவர் இளங்கோவன் கைதாகலாம் என பரபரப்பு: மகளிர் அணி புகாரை தீவிரமாக விசாரிக்கிறது போலீஸ்

Posted:

தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதாரணியை, தரக்குறைவாக பேசியதாக, அவரது ஆதரவாளர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளதால், தமிழக காங்., தலைவர் இளங்கோவன் எந்த நேரமும் கைதாகலாம் என்ற, பரபரப்பு உருவாகியுள்ளது. அதற்கேற்ற வகையில், மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரை, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அதேநேரத்தில், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக செயல்பட்டு வருவதால், கட்சி மேலிடம் கடும் கோபம் அடைந்துள்ளது.

தமிழக காங்., தலைவராக இளங்கோவன் நியமிக்கப்பட்ட பின், மாநில அரசுக்கு ...

ரஷ்ய விமானங்கள் குண்டுமழை: சிரியாவில் 18 பேர் உடல் சிதறி பலி

Posted:

பெய்ரூட் : சிரியாவில், பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது ரஷ்ய விமானங்கள் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தின. இதில், அப்பாவி பொதுமக்கள், 18 பேர் கொல்லப்பட்டனர்; ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.மேற்கு ஆசியாவில் உள்ள ஈராக், சிரியா நாடுகளின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள, ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம், தனி இஸ்லாம் நாட்டை உருவாக்கி உள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், அப்பகுதிகளில் உள்ள பிற மதத்தவரையும் இனத்தவரையும் கொன்று குவித்து வருகின்றனர்.சிரியா நாட்டின் அதிபர் பஷார் அல் - அஸாத், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு நெருக்கமானவர். எனவே ...

சகிப்பின்மை பிரச்னை: பார்லி.,யில் இன்று அனல் பறக்கும்

Posted:

புதுடில்லி: சகிப்பின்மை பிரச்னையை கையிலெடுத்து, பார்லிமென்டில் இன்று, அனல் பறக்கும் விவாதங்களை நடத்த எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர், நவ., 26ல் துவங்கியது. முதல் இரண்டு நாட்கள், இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்ட நாள் மற்றும் அரசியல் சட்டத்தை வடிவமைத்த, அம்பேத்கரின், 125வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக விவாதம் நடைபெற்றது.இதையடுத்து, சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின், இன்று மீண்டும் பார்லிமென்ட் கூடுகிறது. இதில், சகிப்பின்மை, மத்திய அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய பேச்சு, எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™