Tamil News | Online Tamil News |
- தேர்தல் படம்: விஜயகாந்த் திட்டம்
- 'தே.மு.தி.க., தேவையில்லை': கருணாநிதியிடம் கனிமொழி வலியுறுத்தல்
- பள்ளியில் மது குடிக்கும் அவலம்: 2 ஆண்டில் 16 பேர் டிஸ்மிஸ்
- தங்க சேமிப்பு பத்திரத்தில் ரூ.246 கோடி முதலீடு? 63 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன
- சுடச்சுட சாப்பாடு, செல்பி... கலக்குறீங்க மோடி!
- 'தமிழக அரசு கூறிய இடங்களை ஆய்வு செய்தோம்': மத்திய குழு வெளிப்படையான பேச்சு
- தலைவர்களின் தீராப் பகை
- முட்டை டெண்டர் விவகாரத்தால் அரசுக்கு நெருக்கடி: ஐகோர்ட்டில் அடுத்தடுத்து குவிகிறது வழக்குகள்
- நிபந்தனையற்ற பேச்சுக்கு தயார் பாக்., பிரதமர் நவாஸ் அறிவிப்பு
- சீனாவை விரோதியாக பார்ப்பதை நிறுத்த வேண்டும்: விமானப்படை தளபதி அறிவுரை
- கலாம் பெயரில் உதவித்தொகை, விருது: அமெரிக்க பல்கலை அறிவிப்பு
| தேர்தல் படம்: விஜயகாந்த் திட்டம் Posted: ஆர்.எஸ்.எஸ்., இயக்க கொள்கையை மையமாக வைத்து, மகனுடன் தாம் நடிக்கும், 'தமிழன் என்று சொல்' படத்தின் கதையை, விஜய காந்த் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தில், அனல் பறக்கும் அரசியல் வசனங்களும் இடம் பெறுவதால், 'தேர்தல் படமாக அது அமையும்' என, கூறுகின்றனர்.ரமணா படத்தை போல, மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்டும் கதையம்சம் உள்ள படத்தில், தன் மகன் சண்முகபாண்டியனை நடிக்க வைக்க வேண்டும் என, விஜயகாந்த் விரும்பினார்; அந்த படத்தில், தானும் நடிக்கவும் திட்டமிட்டார். |
| 'தே.மு.தி.க., தேவையில்லை': கருணாநிதியிடம் கனிமொழி வலியுறுத்தல் Posted: 'விஜயகாந்த் கருணையால் தான், தி.மு.க., தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில்லை; அவர் இல்லாமலேயே, தேர்தலை சந்திக்கத் தயாராவோம்' என, அக்கட்சியின் மகளிர் அணி செயலர் கனிமொழி, கட்சித் தலைவர் கருணாநிதியிடம் கூறிய தகவல் வெளியாகி உள்ளது. லோக்சபா தேர்தலில், காங்கிரசை கழற்றிவிட்ட தி.மு.க., தலைமை, தே.மு.தி.க.,வை இழுக்க முயற்சித்தது. ஆனால், போக்குக் காட்டிய விஜயகாந்த், கடைசி நேரத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தார்; அனைத்து இடங்களிலும் தோற்றார். |
| பள்ளியில் மது குடிக்கும் அவலம்: 2 ஆண்டில் 16 பேர் டிஸ்மிஸ் Posted: நாமக்கல்,: நாமக்கல் மாவட்டத்தில் மட்டும், கடந்த இரண்டு ஆண்டுகளில், மது குடித்த அரசு பள்ளி மாணவ, மாணவியர், 16 பேர், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில், மது அருந்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. வயது பாகுபாடின்றி ஆண், பெண் என பலரும், மதுவுக்கு அடிமையாகின்றனர். அதில், சிறு குழந்தைகள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவியரும் தப்பிவில்லை.'வாட்ஸ் ஆப்' இது, 'வாட்ஸ் ஆப்' மூலம் வெட்டவெளிச்சமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளதால், மாணவ, மாணவியர் பள்ளிக்கு போதையில் வருவது சர்வ சாதாரணமாகி விட்டது. அதன் ... |
| தங்க சேமிப்பு பத்திரத்தில் ரூ.246 கோடி முதலீடு? 63 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன Posted: புதுடில்லி,: தங்க சேமிப்பு பத்திரம், தற்போது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற துவங்கி உள்ளது. இதுகுறித்து, மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: தங்க சேமிப்பு பத்திரம், நவ., 5ல் அறிமுகம் செய்யப்பட்டது; ஒரு கிராம் தங்கம், 2,684 ரூபாய் என, விலை நிர்ணயிக்கப்பட்டது. பொதுத் துறை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன; 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. |
| சுடச்சுட சாப்பாடு, செல்பி... கலக்குறீங்க மோடி! Posted: புதுடில்லி:பா.ஜ., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபாவளி விருந்துக்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள், பிரதமர் மோடியுடன், 'செல்பி' எடுப்பதற்காக அலை மோதியது பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி, கடந்தாண்டு தீபாவளியின் போது, 'தீபாவளி மிலன்' என்ற பெயரில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில், ஏராளமான பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். அதேபோல இந்தாண்டும் தீபாவளி விருந்துக்கு, டில்லியில் உள்ள பா.ஜ., தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி, பல்வேறு பத்திரிகைகள் மற்றும், 'டிவி' சேனல்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் அங்கு ... |
| 'தமிழக அரசு கூறிய இடங்களை ஆய்வு செய்தோம்': மத்திய குழு வெளிப்படையான பேச்சு Posted: தமிழகத்தில் வெள்ள சேதத்தை மதிப்பீடு செய்யும் பணியை, மத்திய குழுவினர், நேற்று நிறைவு செய்தனர். இன்று, புதுச்சேரியில் ஆய்வு செய்ய உள்ளனர்.தமிழகத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட, மத்திய உள்துறை இணை செயலர் பிரசாத் தலைமையில், எட்டு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பியது. இக்குழுவினர் காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில், வெள்ள சேதங்களை பார்வையிட்டனர். நேற்று காலை, வடசென்னை, சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள, மாநகராட்சி பள்ளியில், பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். நிவாரண முகாமில் இருந்த மக்களிடம், ... |
| Posted: பார்லிமென்டின் குளிர் கால கூட்டத் தொடரின் முதல் நாள், சபைக்குள் நுழையும் பிரதமர், சபையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குச் சென்று வணக்கம் தெரிவிப்பார்; இது ஒரு சம்பிரதாயம். பிரதமர் மோடி மக்களவையில் நுழைந்தார். அப்போது, சபைக்குள் வந்த சோனியா, மோடி வருவதைப் பார்த்ததும், அவருடைய இருக்கையான முதல் வரிசைக்கு வராமல் நின்று, சபையின் கடைசி வரிசையில் அமர்ந்து விட்டார்.தன் அரசியல் எதிரியின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லையாம் சோனியா. தேர்தல் பிரசாரத்திலிருந்து, அனைத்து ... |
| முட்டை டெண்டர் விவகாரத்தால் அரசுக்கு நெருக்கடி: ஐகோர்ட்டில் அடுத்தடுத்து குவிகிறது வழக்குகள் Posted: சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், சத்துணவு முட்டை கொள்முதலில் முறைகேடு நடப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், அடுத்தடுத்து வழக்கு தொடரப்படுவது, தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, சத்துணவு வழங்கப்படுகிறது. குழந்தை மையங்களில், 13.88 லட்சம்; பள்ளி சத்துணவு மையங்களில், 54.62 லட்சம் பேர் சத்துணவு சாப்பிடுகின்றனர். அவர்களுக்கு சத்துணவுடன், வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது. இதற்காக தினமும், மாநிலம் ... |
| நிபந்தனையற்ற பேச்சுக்கு தயார் பாக்., பிரதமர் நவாஸ் அறிவிப்பு Posted: இஸ்லாமாபாத்"''இந்தியாவுடன் நிபந்தனையற்ற பேச்சுக்கு தயார்,'' என, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.'பாகிஸ்தானுடன் அமைதி பேச்சு நடந்தால், அதில், பயங்கரவாதம் தொடர்பாக மட்டுமே பேசப்படும்' என, இந்தியா சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், 'ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும் பேச்சு நடத்த வேண்டும்' என, பாகிஸ்தான் தெரிவித்தது. இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததால், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சு, ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று கூறியதாவது: இந்தியாவுடன், எப்போதும் ... |
| சீனாவை விரோதியாக பார்ப்பதை நிறுத்த வேண்டும்: விமானப்படை தளபதி அறிவுரை Posted: ஹசிமரா: இனிமேல் சீனாவை விரோதியாக பார்ப்பதை நிறுத்த வேண்டும் என விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அரூப் ராஹா கூறியுள்ளார்.மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துவார் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவும், சீனாவும் ஒரே பிராந்தியத்தில் இருக்கிறோம். இருவரும் ஒரே நோக்கத்தை கொண்டுள்ளோம். இனிமேலும் சீனாவை விரோதியாக பார்க்க வேண்டும் என எண்ணவில்லை. இரு நாடுகளுக்கு இடையே மோதல் நடந்ததும், எல்லைப்பிரச்னை இருப்பதும் உண்மையே. இருப்பினும் இனிமேல் இரு நாடுகளுக்கு இடையில் ஒரு முதிர்ச்சியான நட்புறவு இருக்க வேண்டும். இதன் மூலம் இரு நாடுகளும் பல ... |
| கலாம் பெயரில் உதவித்தொகை, விருது: அமெரிக்க பல்கலை அறிவிப்பு Posted: அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக் கழகம், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரில், இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் விருது வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 2012ல் அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலையில், மாணவர்களிடையே உரையாற்றினார். பசுமை எரிசக்தியின் அவசியம் பற்றியும், தொடர்ந்த, நீடித்த வளர்ச்சியை உலக நாடுகள் தங்கள் வளர்ச்சித் திட்டங்களில் கொள்கையாக எப்படி உருவாக்க வேண்டும், அமல்படுத்த வேண்டும் என்பது பற்றியும் பாடம் எடுத்தார்.கலாமின் இந்த நினைவை போற்றும் வகையில், தெற்கு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 29,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |