Tamil News | Online Tamil News |
- அமீர் கான் மீது தேச துரோக வழக்கு?
- ஜி.எஸ்.டி., மசோதா ஆதரவு விவகாரத்தில் ராகுல் மழுப்பல்: பார்லி.,யில் ஒத்துழைக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
- ஆளுங்கட்சியினருடன் போலீசார் அராஜக சோதனை: ஒத்துழைத்த ஏஜன்ட்கள், ஹாக்கர்கள் மீது நடவடிக்கை பாயுமா
- வழிக்கு வந்தது தமிழக அரசு: ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
- அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., 'ஆப்சென்ட்'
- சீன உப்பில் கலந்துள்ளது பிளாஸ்டிக்!
- வெள்ளத்தால் சென்னை புறநகரில் ஒரு லட்சம் வீடுகள் விற்பனை 'அவுட்'
- 10 ஆண்டுகளில் இலவசங்களால் வீணான வரிப்பணம் ரூ.10,000 கோடி: கட்டமைப்புக்கு செலவிட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருத்து
- கனமழையால் அரசு போக்குவரத்துகழகத்துக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு
- வெள்ள சேதம் பார்வையிட தமிழகம் வந்தது மத்திய குழு
| அமீர் கான் மீது தேச துரோக வழக்கு? Posted: கான்பூர்: 'நாட்டை பிளவுபடுத்தும் வகையில், சகிப்புத்தன்மை குறித்து பேசிய நடிகர் அமீர் கான் மீது, தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என, உ.பி., மாநிலம் கான்பூர் கோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான், 50. இவர், சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், 'நாட்டில், மத சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. இந்தியாவை விட்டு வெளியேறலாமா என, என் மனைவி கேட்கிறார்' என்றார். அமீர் கானின் இந்த பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும், பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உ.பி., ... |
| Posted: புதுடில்லி,: மத சகிப்பின்மை குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர், இன்று துவங்குகிறது. முக்கியத்துவம் வாய்ந்த, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேற, அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பையும், பிரதமர் நரேந்திர மோடி கோரியுள்ளார். ஆனால், காங்., துணை தலைவர் ராகுல், இது தொடர்பாக, மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர், இன்று துவங்கி, அடுத்த மாதம், 23 வரை நடக்கிறது. ஜி.எஸ்.டி., மசோதா, ரியல் எஸ்டேட் மசோதா, ஊழல் எதிர்ப்பு மசோதா உள்ளிட்ட, 38 மசோதாக்கள் நீண்ட காலமாக ... |
| ஆளுங்கட்சியினருடன் போலீசார் அராஜக சோதனை: ஒத்துழைத்த ஏஜன்ட்கள், ஹாக்கர்கள் மீது நடவடிக்கை பாயுமா Posted: அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகிப்பதை தடுப்பதாகக் கூறி, ஆளுங்கட்சி பிரமுகர்களுடன் சென்ற போலீசார், நேற்று காலை, நாளிதழ்களை எடுத்துச் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். நாளிதழ் வௌியாவதற்கு முன், அதை பரிசோதனை செய்தது, பத்திரிகைச் சுதந்திரத்திற்கு எதிரானது. மேலும், 'நாளிதழ்களுடன் துண்டு பிரசுரங்களை வைக்க அனுமதிக்கும் ஏஜென்டுகள், அதற்கு உதவியாகச் செயல்படும், 'ஹாக்கர்'கள் என்றழைக்கப்படும் வீதிகளில் பேப்பர்களை விநியோகிப்போர் மற்றும் பத்திரிகைக்குள் நோட்டீசுகளை வைக்கும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுத்து, அவர்களை கைது ... |
| வழிக்கு வந்தது தமிழக அரசு: ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு Posted: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், மழை நீர் வெளியேற இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும்படி, அதிகாரிகளுக்கு தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. |
| அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., 'ஆப்சென்ட்' Posted: குளிர்கால கூட்டத் தொடரில், விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள விஷயங்கள் குறித்து முடிவு செய்வதற்காக, மத்திய அரசு கூட்டியிருந்த, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பார்லி மென்ட்டின், மூன்றாவது பெரிய கட்சியான, அ.தி.மு.க., சார்பில் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை. |
| சீன உப்பில் கலந்துள்ளது பிளாஸ்டிக்! Posted: புதுடில்லி: சீனாவிலிருந்து வரும் அரிசியில், பிளாஸ்டிக் அரிசிகள் கலப்படம் செய்யப்படுவது உறுதியான நிலையில், தற்போது, சீன உப்பில், பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.உலக அளவில், உப்பு உற்பத்தியில், சீனா முதலிடம் பெற்றுள்ளது. இங்கு, கடல், தாதுக்கள், நீரூற்றுகள் மற்றும் கிணற்று நீரில் இருந்து உப்பு எடுக்கப்படுகிறது. இவற்றில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பது குறித்த ஆய்வுக்காக, நாடு முழுவதிலும் இருந்து, 15 நிறுவன தயாரிப்புகள் சேகரிக்கப்பட்டன.இவற்றை, ஷாங்காய் நகரில் உள்ள, கிழக்கு சீன பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ... |
| வெள்ளத்தால் சென்னை புறநகரில் ஒரு லட்சம் வீடுகள் விற்பனை 'அவுட்' Posted: மழை, வெள்ள பாதிப்புகளால், சென்னை புறநகரில், ஒரு லட்சம் வீடுகள் விற்பனை முடங்கி உள்ளது. இந்த நிலை சீராக, மூன்று மாதங்கள் ஆகும் என்பதால் கட்டுமான நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளன. அண்மையில் பெய்த கன மழையின் காரணமாக, சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. குறிப்பாக, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லுார், துரைப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம், சிட்லபாக்கம், கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், முடிச்சூர், பழைய பெருங்களத்துார், ஊரப்பாக்கம், வண்டலுார், போரூர், குன்றத்துார், அய்யப்பன் தாங்கல், காட்டுப்பாக்கம், அம்பத்துார், ரெட்டேரி, கொளத்துார் ... |
| Posted: 'தமிழகத்தில், 10 ஆண்டுகளில் மக்களுக்கு இலவசப் பொருட்கள் வழங்குவதற்காக, அரசு, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இந்நிதியை கட்டமைப்புக்கு செலவிட்டிருந்தால், மழை, வெள்ள நிவாரணத்துக்கு, கையேந்த வேண்டிய நிலை வந்திருக்காது' என, நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.வடகிழக்கு பருவ மழை, நவ., 8ல் துவங்கி, இப்போதும் தொடர்கிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், விழுப்புரம் என, வட கடலோர மாவட்டங்கள், பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. கடலுார் மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான வீடுகள், கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன; பயிர்கள் சேதமடைந்தன. ... |
| கனமழையால் அரசு போக்குவரத்துகழகத்துக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு Posted: திருச்சி,: தமிழகத்தில் பெய்த தொடர் மழையால், 10 நாளில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு, 100 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால், சென்னையில், 65 சதவீத அரசு பஸ்களும்; பிற மாவட்டங்களில், 40 சதவீத பஸ்கள் வரையிலும், 10 நாட்களுக்கும் மேலாக இயக்கப்படாததால், அரசு போக்குவரத்து கழகத்துக்கு, 100 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச் செயலர் லஷ்மணன் கூறியதாவது:ஏற்கனவே இயக்கப்படாத பஸ்களுடன், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற இணையதளங்களில், பஸ்சுக்குள் மழைநீர் ... |
| வெள்ள சேதம் பார்வையிட தமிழகம் வந்தது மத்திய குழு Posted: தமிழகத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட, மத்திய அரசு நியமித்துள்ள குழு, நள்ளிரவு தமிழகம் வந்தது. 'தமிழகத்தில், மழையால், 8,481 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது. இடைக்கால நிவாரணமாக, 2,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும். வெள்ள சேதத்தை மதிப்பிட, மத்திய குழுவை அனுப்ப வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக, மத்திய அரசு, 940 கோடி ரூபாய் ஒதுக்கியது; மத்திய குழுவை அனுப்பவும் உறுதி அளித்தது.அதன்படி, மத்திய உள்துறை இணை செயலர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவில், மத்திய வேளாண் துறை கூடுதல் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 26,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |