Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பார்லி.,யில் கேள்வி எழுப்ப ஏஜன்ட்களை நாடும் அ.தி.மு.க., எம்.பி.,க்கள்: வெற்று படிவங்களில் கையெழுத்து போட்டு கொடுப்பது அம்பலம்

Posted:

பார்லிமென்டில் கேள்விகள் எழுப்ப, ஏஜன்ட்களை தேடிச் செல்கின்றனர் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள். ஏதாவது கேள்விகளை நிரப்பிக் கொள்ளும் வகையில், கட்டுக்கட்டாக வெற்றுக் காகிதங்களில் கையெழுத்துப் போட்டும் கொடுத்து வருகின்றனர்.பார்லிமென்டில், எம்.பி.,க்கள் கேள்விகள் கேட்க வேண்டுமெனில், அந்த கேள்விகளை, 15 நாட்களுக்கு முன், பார்லி., செயலகத்துக்கு அனுப்ப வேண்டும். பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை துவங்க உள்ளதால், நவ., 16 முதல், எம்.பி.,க்கள் பலர் கேள்விகளை அனுப்பி வருகின்றனர்.நட்சத்திர குறியிட்ட கேள்வி கள் ஐந்து, நட்சத்திர குறியிடாத கேள்விகள் ஐந்து என, ...

மாஜி மந்திரி பிரனீத் கவுரின் கறுப்பு பண விவரம் கொடுங்க!

Posted:

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முன்னாள் மத்தியஅமைச்சர் பிரனீத் கவுர் மற்றும் அவர் மகன் பெயரில், சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கியில் உள்ள கணக்கு விவரங்களை தெரிவிக்கும்படி, அந்நாட்டை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.இந்தியாவில் முறைகேடாக சம்பாதித்த பணத்தை, சுவிட்சர்லாந்து உட்பட, சில நாடுகளின் வங்கிகளில் பதுக்கியுள்ள இந்தியர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும், சர்வதேச நெருக்கடிக்கு பயந்தும், தாங்களாக முன்வந்தும், சில நாடுகள், இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்து ...

'முஸ்லிம்களுக்கு இந்தியாவை விட பாதுகாப்பான நாடு கிடையாது'

Posted:

புதுடில்லி: 'இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது எனக்கூறும் பாலிவுட் நடிகர் அமீர் கான், உலகில் எந்த நாட்டில் சகிப்புத்தன்மை அதிகமாக உள்ளது என்பதை கூற வேண்டும். மேலும் அவர், எந்த நாட்டுக்கு செல்லப் போகிறார் என்பதையும் விளக்க வேண்டும்' என, பா.ஜ., தெரிவித்து உள்ளது.

மதத்தின் பெயரால்...
டில்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் ஒருவரான அமீர் கான், 50, பேசியதாவது: நாள்தோறும் பத்திரிகைகளை புரட்டும் போது அச்சமாக உள்ளது. மத சகிப்புத்தன்மையில்லாத தாக்குதல் சம்பவங்கள் ...

இன்னும் 2 நாள் மழை உண்டு: மிரட்டுகிறது அடுத்த புயல்

Posted:

சென்னை,:'வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் இலங்கை அருகே கடல் பரப்பில் இருந்து 1.5 கி.மீ. உயரத்தில் காற்று அழுத்த சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதே போல் அந்தமான் கடல் பகுதியில் கடல் பரப்பில் இருந்து 3.1 கி.மீ. உயரத்தில் காற்று மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவை குறைந்த காற்று அழுத்த தாழ்வாக மாறி நாளை தீவிரமடையும்.இதனால் தமிழகம் ...

பள்ளியில் மது அருந்திய 4 மாணவியர் 'டிஸ்மிஸ்'

Posted:

நாமக்கல்: பள்ளி வகுப்பறையில் பிறந்த நாள் விருந்து கொண்டாடிய அரசு பள்ளி மாணவியர், குளிர்பானத்தில் மது கலந்து குடித்து, போதையில் மயங்கி விழுந்தனர். இதையடுத்து, நான்கு மாணவியரையும், 'டிஸ்மிஸ்' செய்து, பள்ளி தலைமையாசிரியை 'டிசி' வழங்கினார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 2,000-க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். தமிழகத்தில், கடந்த சில நாட்களாக தொடர்மழை காரணமாக, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள், 21ம் தேதி நடத்தப்பட்டது. திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய, ...

சென்னையில் கன மழைக்கு காரணம் என்ன

Posted:

'கிழக்கு நோக்கி வீசிய காற்றும், பூமியில் நிலவிய ஈரப் பதமுமே, சென்னை மற்றும் துாத்துக்குடியில், நேற்று முன்தினம் மாலையில் பெய்த கன மழைக்கு காரணம்' என, வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குனர், ஒய்.ஏ.இ.ராஜ் கூறியதாவது:கடல் பகுதியில் இருந்து, மணிக்கு, 25 - 30 கி.மீ., வேகத்தில், பூமியை நோக்கி காற்று வீசும்போது, தரைப் பகுதியில் இருக்கும் ஈரப்பதத்தை, வானத்தை நோக்கி இழுத்துச் செல்லும் வலுவுடன் இருக்க வேண்டும். இப்படி வீசும் காற்று, வானத்தை நோக்கி பூமியின் ஈரப்பதத்தை கொண்டு சென்று, மேகத்தோடு மோதும்போது மழை ...

ஈஞ்சம்பாக்கத்தில் ரூ.1,000 கோடி நில மோசடி: அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு

Posted:

சென்னையின் புறநகரான, ஈஞ்சம்பாக்கத்தில், அரசுக்கு சொந்தமான, 1,000 கோடி ரூபாய் நிலம், அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கத்தில், கால்நடை பராமரிப்புத் துறைக்கு சொந்தமான, 55 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. 1 ஏக்கர் என்பது, 18 கிரவுண்ட்; அதன்படி, 55 ஏக்கர், 1,000 கிரவுண்ட்; இந்தப் பகுதியில், 1 கிரவுண்ட் நிலம், ஒரு கோடி ரூபாய்க்கு விலைபோகிறது.இந்த புறம்போக்கு இடம், கால்நடைகளின் மேய்ச்சலுக்காக விடப்பட்டது. கால்நடைகள் எண்ணிக்கை குறைந்ததால், ...

மழைநீர் அகற்றுவதில் கோபாலபுரத்திற்கு பாரபட்சம்?

Posted:

சென்னை : முதல்வர் ஜெயலலிதா வீடு உள்ள, போயஸ் கார்டன் பகுதி யில் மழைநீர் தேங்கினால், அதை அகற்ற, சுழற்சி முறையில் ஆட்களை நியமித்துள்ள சென்னை மாநகராட்சி, முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு உள்ள கோபாலபுரம் பகுதியை கண்டு கொள்ளவில்லை.சென்னையில், நேற்று முன்தினம், நான்கு மணி நேரத்தில், 8.5 செ.மீ., மழை பெய்தது. இதனால், முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. குறிப்பாக, முதல்வர் வசிக்கும் போயஸ் கார்டன் பகுதியிலும், கோபாலபுரத்தில் உள்ள, முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு முன்பும், மழைநீர் குளம் போல் தேங்கியது.கனமழை இரவு, 8:30 மணியளவில் ஓய்ந்தது. உடனே, முதல்வர் வீடு ...

வெள்ள சேதத்தை பார்வையிட மத்திய குழு நாளை வருகை?

Posted:

தமிழகத்தில் வெள்ள சேதத்தை பார்வையிட, மத்திய குழு, நாளை வரலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில், கன மழையால், பெரும்பாலான மாவட்டங்களில், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மழைக்கு, 170க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்; ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்; லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன; ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன.'மழையால், 8,481 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இடைக்கால நிவாரணமாக, 2,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும். வௌ்ள சேதத்தை மதிப்பிட, மத்திய குழுவை அனுப்ப வேண்டும்' என, பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் கடிதம் ...

கொட்டித்தீர்த்த கனமழையால் அரசுக்கு பாடம்: ஆக்கிரமிப்புகளால் தான் சேதம் அதிகம்

Posted:

தமிழகத்தில், கொட்டித் தீர்த்த கனமழை, அரசுக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. மழையை விட ஆக்கிரமிப்புகளால் தான் சேதம் அதிகம். எதிர்காலத்தில் இதுபோன்ற சேதங்களை தவிர்க்க, நீர் நிலைகளில் உள்ள, ஆக்கிரமிப்புகளை அகற்ற, அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தில், நவ., 8ல் கனமழை துவங்கியது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட, உயர் காற்றழுத்த தாழ்வு நிலை, 10ம் தேதி, மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின.இந்த மாவட்டங்களில், ...

துனிஷீயாவில் ராணுவ பஸ் மீது வெடிகுண்டு தாக்குதல்: 12 பேர் பலி -அவசர நிலை பிரகடனம்

Posted:

துனீஷ்: துனிஷியாவில் ராணுவ பஸ் மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 12பேர் பலியாயினர்.இதையடுத்து அந்நாட்டின் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுதுனிஷியாவின் தலைநகர் துனீஷ் நகரில் அதிபரின் பாதுகாப்புபடையைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பஸ் மீது திடீரென சரமாரியாக வெடிகுண்டு வீசி தாக்குதல் நடந்தது. இதில் 12 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.அதிபரின் பாதுகாப்புபடை வீரர்கள் என்பதால் அதிபரை கொல்ல நடந்த முயற்சியாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றனஐ.எஸ். அமைப்பு ...

பார்லி.,யில் பிரச்னை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயார்

Posted:

புதுடில்லி :பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை(26-11-15) துவங்குகிறது. இந்தத் தொடரில், நாட்டில் சகிப்புத்தன்மை குறைவு, விலை வாசி உயர்வு உட்பட, பல பிரச்னைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை துவங்கி, டிச., 23 வரை நடக்கிறது. இதற்கு முன் நடந்த, மழைக்கால கூட்டத் தொடர் முழுமையாக வீணானது. ஐ.பி.எல்., கிரிக்கெட் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் உதவி செய்த விவகாரம் தொடர்பாக, இருவரும் ராஜினாமா செய்ய வேண்டும். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™