Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஊர் சுற்றும் பிரதமர் மோடி: ராகுல் பாய்ச்சல்

Posted:

லக்னோ:''விவசாயிகளும், தொழிலாளர்களும் துயரத்தில் இருக்கும் போது, பிரதமர் மோடி, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது ஆச்சரியமாக உள்ளது,'' என, காங்., துணைத் தலைவர் ராகுல் கூறினார். உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கரும்பு விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி, காங்., துணைத் தலைவர் ராகுல், நேற்று பாதயாத்திரையை துவக்கினார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நாட்டிலுள்ள விவசாயிகள், கடன் நெருக்கடியால் சோகத்தில் உள்ளனர். தொழிலாளர்கள், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விரக்தியில் உள்ளனர். ...

தூத்துக்குடியை புரட்டிப்போட்ட கனமழை: வெள்ள காடான கடலூர்

Posted:

துாத்துக்குடி:துாத்துக்குடியில் கொட்டித்தீர்த்த மழையால் நேற்று வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. தண்ணீர் சூழ்ந்ததால் பலர் வீட்டு மாடிகளில் தஞ்சம் புகுந்தனர். உணவு, குடிநீர் இல்லாமல் தவித்து வரும் நிலையில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் சிக்கல் நீடிக்கிறது.துாத்துக்குடி மாவட்டத்தில் இரு நாட்களாக கனமழை பெய்து வருவதால், அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. நேற்று மழை நீர் வெள்ளப்பெருக்காக மாறியது. திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்ட தீயணைப்புத்துறையினர் மற்றும் அனல் மின் நிலையம், துறைமுகம், கடலோர காவல்படையினர் ...

'மத்திய அரசு கூட்டணியில் இல்லை: முதல்வர் ஜெ.,

Posted:

'மத்திய அரசு கூட்டணியில் நாம் இல்லை. பிரச்னை அடிப்படையில் மட்டுமே, அந்த அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம்; அதை உணர்ந்து செயல்படுங்கள்' என, அ.தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கி உள்ளார்.பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர், 26ல் துவங்க உள்ளது. இதையொட்டி, அ.தி.மு.க.,வின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் கூட்டம், தலைமைச் செயலகத்தில், நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா, தலைமை வகித்தார்.கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர், தமிழக அரசுக்கு அவப்பெயர் ...

'இந்திய - மலேஷிய உறவு வலுப்படுத்தப்படும்'

Posted:

கோலாலம்பூர்: பிரதமர் மோடி நேற்று காலை, மலேஷியாவின் நிர்வாக தலைநகரான புத்ரஜயாவின், பெர்டானா சதுக்கத்தில் உள்ள, அந்நாட்டின் பிரதமர் நஜீப் ரசாக்கின் மாளிகைக்கு சென்றார்.காரில் வந்திறங்கிய மோடியை, நஜீப் ரசாக் அன்புடன் கட்டித் தழுவி வரவேற்றார். இதையடுத்து, ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்ற மோடிக்கு, நஜீப் ரசாக் தன் அமைச்சரவை சகாக்களை அறிமுகம் செய்து வைத்தார்.தொடர்ந்து, மோடியும், நஜீப் ரசாக்கும், இந்தியா - மலேசியா இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது குறித்து தனியே பேசினர். பின், இரு நாட்டு அதிகாரிகள் இடையேயான பேச்சு நடைபெற்றது. இதையடுத்து, இரு ...

ரூ.1 கோடி தருகிறேன்... நேரம் ஒதுக்குங்க: கருணாநிதி கோரிக்கை

Posted:

சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் பெய்து வரும் பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைக்க, 'தி.மு.க., சார்பில், ஒரு கோடி ரூபாய், தமிழக அரசிடம் வழங்கப்படும்' என, அறிவித்திருந்தேன். தி.மு.க., தலைமை அலுவலகத்தின் சார்பில், தலைமை செயலர் அலுவலகத்தை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஒரு கோடி ரூபாயை வழங்க நேரம் கேட்டும், நேரம் வழங்க வாய்ப்பு தராமல், அதிகாரிகள் தட்டிக் கழிக்கின்றனர்.இதிலிருந்து, 'இந்த நிதியை பெறக் கூடாது' என, அவர்களின் மேலிடம் கட்டளை இட்டிருக்கிறதோ என, கருத வேண்டியுள்ளது. ...

4 மணி நேரத்தில் 8.5 செ.மீ.: மூழ்கியது சென்னை

Posted:

சென்னை : சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில், பிற்பகல் முதல் இரவு வரை, நான்கு மணி நேரத்தில், 8.5 செ.மீ., மழை கொட்டியது. மழை நீர் வௌ்ளமென சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.சென்னை வானிலை மையம், 'சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில், நேற்று கன மழை பெய்யும்' என, எச்சரித்தது. ஆனால், வெயிலோடு காலை வேளை துவங்கியதால், ஒரு வாரமாக, மழை வௌ்ளத்தில் சிக்கித் தவித்த மக்களுக்கு, சற்று நிம்மதி ஏற்பட்டது. இந்த நிம்மதி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பகல், 1:30 மணிக்கு, மழை லேசாகத் துவங்கியது; 2:30 மணியளவில் தீவிரமடைந்தது. மாலை, 5:30 மணி வரை, 7 செ.மீ., மழை பெய்தது. ...

கேட்டது 2,000 கோடி... கிடைத்தது ரூ.940 கோடி!

Posted:

'தமிழகத்தில், வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, 8,481 கோடி ரூபாய் தேவை. இடைக்கால ஏற்பாடாக, 2,000 கோடி ரூபாயை, மத்திய அரசு உடனடியாக தர வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். அடுத்த சில மணி நேரங்களில், முதற்கட்டமாக, 940 கோடி ரூபாய் ஒதுக்கி, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.தமிழக வெள்ள சேதம் தொடர்பாக, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா, நேற்று எழுதிய கடிதத்தின் முக்கிய அம்சங்கள்:வங்கக் கடலில் உருவான உயர் காற்றழுத்த தாழ்வு நிலை, நவ., 10ல், மரக்காணம் அருகே, தமிழக கடற்கரையைத் தாக்கியது. இதனால், ...

அரையாண்டு தேர்வு தள்ளிப்போகும் என்ற தகவலால் மாணவர்கள் குஷி

Posted:

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வை தள்ளி வைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன், அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களையும் குறைக்காமல் இருப்பது குறித்து, கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. எனவே, மாணவர்கள் குஷியாகியுள்ளனர்.வட கிழக்கு பருவ மழையின் போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், சென்னை, கடலுார், விழுப்புரம், வேலுார், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், பள்ளிகளுக்கு, நவ., 9 முதல் தொடர் விடுமுறை ...

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ள இந்தியர்கள் எத்தனை பேர்?

Posted:

புதுடில்லி : 'ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில், இதுவரை, 23 இந்தியர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களில், ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்' என, உளவு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ள இந்தியர்கள் தொடர்பாக, அன்னிய நாட்டு நிறுவனம் ஒன்று தயாரித்த அறிக்கை, இந்திய உளவு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில், இதுவரை, 23 இந்தியர்கள் தான் சேர்ந்துள்ளனர்; அவர்களில், ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இறந்த ஆறு பேரும், தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் உ.பி., மாநிலங்களைச் ...

சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா கோலாகலம்

Posted:

புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், 90வது பிறந்த நாள் விழா புட்டபர்த்தியில் விமரிசையாக நடந்தது.பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு, புட்டபர்த்தில் உள்ள ஹில்வியூ ஸ்டேடியத்தில், பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். சாய்பாபாவின் திருஉருவப் படம் தங்கரதத்தில் வைத்து கொண்டு வரப்பட்டது. அப்போது, ெஹலிகாப்டரில் இருந்து மலர் துாவப்பட்டது. சிறப்பு வழிபாடு, குழந்தைகளின் இசைநிகழ்ச்சிகள் நடந்தன.மாலையில், 16 நாடுகளைச் சேர்ந்த 90 இசைக்கலைஞர்கள் பங்கேற்ற சாய் - சிம்பொனி இசை நிகழ்வு ...

நிதி பற்றாக்குறையால் கிடப்பில் போனது காவல் நிலையங்களை இணைக்கும் திட்டம்

Posted:

புதுடில்லி : நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் இணைக்கும், மிகப் பெரிய திட்டம், நிதி பற்றாக்குறை காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கடந்த, 2008ல் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 160 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம், நாட்டின் மோசமான பாதுகாப்பு கட்டமைப்பை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இதையடுத்து, நாட்டில் உள்ள, 15 ஆயிரம் காவல் நிலையங்களையும், 'கிரைம் அண்ட் கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் அண்ட் சிஸ்டம்ஸ்' என, அழைக்கப்படும், சி.சி.டி.என்.எஸ்., என்ற, ஒரே மென்பொருளில் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு, 2009 மத்திய ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™