Tamil News | Online Tamil News |
- அ.தி.மு.க., மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு!
- முக்கிய மசோதாக்கள் நிறைவேறுமா? 26ல் பார்லி., குளிர்கால தொடர் துவக்கம்
- கறுப்பு பண பேர்வழிகள் மீது நடவடிக்கை துவக்கியுள்ளது
- மதத்துடன் பயங்கரவாதத்தை இணைக்க வேண்டாம்: மலேஷியாவில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
- 'அரசியல் பகடை காயாக பயன்படுத்துகின்றனர்'
- கர்நாடகா கவர்னரின் 'மசாஜ்' செலவு ரூ.1.72 லட்சம்!
- திறன் அடிப்படையில் சம்பளம்? ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன் பரிந்துரை
- தமிழகத்தில் 'மெகா' கூட்டணி அமைக்க ஸ்டாலினுக்கு ஆலோசனை: பீஹாரில் தலைவர்கள் வகுத்த வியூகம் பற்றி பரபரப்பு தகவல்
- தமிழக அரசு வழங்கிய மின்விசிறி கர்நாடகாவில் கூவி கூவி விற்பனை
- கொற்றலை ஆற்றில் 10 டி.எம்.சி., தண்ணீர் கடலில் சென்று வீணாக கலப்பு
- 'மார்க்கர்' பேனா பயன்படுத்த தேர்தல் கமிஷன் திட்டம்
| அ.தி.மு.க., மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு! Posted: முகூர்த்த நாளான நேற்று, அ.தி.மு.க., மாநில நிர்வாகி கள் பட்டியலை, அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்டார். 41 பேர் இடம் பெற்றுள்ள இப்பட்டியலில், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட, ஆறு பேர் புதுமுகங்கள். அ.தி.மு.க., உட்கட்சி தேர்தல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். 2014 அக்டோபர் 29ல், பொதுச்செயலர் தேர்தல் நடந்தது. அதில், கட்சியின் பொதுச்செயலராக ஏழாவது முறையாக, முதல்வர் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். பின், 14 கட்டமாக நடந்த உட்கட்சி தேர்தல், ஏப்ரலில் நிறைவடைந்தது. அதன்பின், மாவட்ட செயலர்கள் பட்டியல் வெளியானது. இந்நிலையில் ... |
| முக்கிய மசோதாக்கள் நிறைவேறுமா? 26ல் பார்லி., குளிர்கால தொடர் துவக்கம் Posted: புதுடில்லி: வரும், 26ல் துவங்கும் பார்லி மென்ட் குளிர்கால கூட்டத் தொடரில், மூன்று அவசர சட்டங்கள் தொடர்பான மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், குறிப்பிடத்தக்க வகையில் அலுவல் எதுவும் நடக்காமல், வீணடிக்கப்பட்டது. அத்தொடரில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்தை, முறைப்படி சட்டமாக்குவதற்கான மசோதா ராஜ்ய சபாவில் நிறைவேற்ற முடியாமல் போனது. இதனால், அந்த அவசர சட்டம், காலாவதியானது. இந்நிலையில், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், வரும், 26ல் துவங்குகிறது. இத்தொடரில், வேறு ... |
| கறுப்பு பண பேர்வழிகள் மீது நடவடிக்கை துவக்கியுள்ளது Posted: புதுடில்லி: அமலாக்க இயக்குனரகம், வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் குறித்த, புலனாய்வு நடவடிக்கைகளை துவக்கியுள்ளது.அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சுவிட்சர்லாந்து, எச்.எஸ்.பி.சி., வங்கியில், கறுப்பு பணம் பதுக்கியுள்ள, 628 இந்தியர்களின் பெயர்களை, பிரான்ஸ் அரசு, சில ஆண்டு களுக்கு முன், இந்தியாவிற்கு வழங்கியது; அதில், 200 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. 428 பேரின் வங்கிக் கணக்கில், 4,500 கோடி ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், 'வங்கி தகவல்கள், திருடப்பட்டவை என்பதால், அது குறித்த முழுமையான விவரங்களை, உள்நாட்டு சட்டப்படி, ... |
| மதத்துடன் பயங்கரவாதத்தை இணைக்க வேண்டாம்: மலேஷியாவில் பிரதமர் மோடி வலியுறுத்தல் Posted: கோலாலாம்பூர் : ''மதத்தையும், பயங்கரவாதத்தையும் தனியே பிரிக்க வேண்டும்; அவை இரண்டையும், ஒன்றாக இணைக்க வேண்டாம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.மூன்று நாள் பயணமாக மலேஷியா சென்ற பிரதமர் மோடி, இரண்டாவது நாளான நேற்று, கோலாலம்பூரில், இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:உலகிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக, பயங்கரவாதம் உள்ளது; அதற்கு எல்லை இல்லை. பயங்கரவாதிகள், தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற, மதத்தை பயன்படுத்தி, மக்களை இழுக்கின்றனர். ஆனால், பயங்கரவாதத்திற்கு, அனைத்து மதத்தினரும் பலியாகின்றனர். ... |
| 'அரசியல் பகடை காயாக பயன்படுத்துகின்றனர்' Posted: புதுடில்லி: அரசியல் பகடை காயாக தான் பயன்படுத்தப்படுவதாக, காங்., தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா கூறியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருகமன் ராபர்ட் வாத்ரா. ஹரியானாவில், பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, நிலபரிமாற்ற ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.இதுகுறித்து, நீதிபதி எஸ்.என்.திங்க்ரா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது. இந்த கமிஷன், தன் அறிக்கையை, விரைவில் தாக்கல் செய்யவுள்ளது. இந்நிலையில், ராபர்ட் வாத்ரா கூறியுள்ளதாவது:ராஜஸ்தான், ஹரியானா ... |
| கர்நாடகா கவர்னரின் 'மசாஜ்' செலவு ரூ.1.72 லட்சம்! Posted: பெங்களூரு : கர்நாடகா கவர்னர் வஜுபாய் வாலாவுக்கு, மசாஜ் செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கு, மாதந்தோறும் 72,750 ரூபாய் வழங்கப்படுகிறது. மசாஜ் செய்வதற்கு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்க, மாதம், ஒரு லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, குஜராத்தைச் சேர்ந்த வஜுபாய் வாலா, 76, கவர்னராக உள்ளார். 'இங்குள்ள, கவர்னர் மாளிகை யில் எவ்வளவு ஊழியர்கள் உள்ளனர்? அவர்களின் பணிகள் என்னென்ன? எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது?' என, ஹலசூருவைச் சேர்ந்த ... |
| திறன் அடிப்படையில் சம்பளம்? ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன் பரிந்துரை Posted: புதுடில்லி: ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன், மத்திய அரசின் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும், திறன் அடிப்படையிலான சம்பளம் வழங்க பரிந்துரைத்துள்ளது.ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன் அளித்த பரிந்துரைகள் விவரம்:மத்திய அரசின் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் திறன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். அவர்களின் செயலாற்றல், வகுக்கப்பட்ட வரையறைக்கு உட்படவில்லை எனில், வருடாந்திர ஊதிய உயர்வு அளிக்கக் கூடாது. சிறந்த செயலாற்றலுக்கான அளவீட்டை, 'நன்று' என்பதில் இருந்து, 'மிக நன்று' என உயர்த்த வேண்டும். பணியில் சேர்ந்த, 20 ஆண்டுக்குள், நிர்ணயிக்கப்பட்ட திறன் ... |
| Posted: 'தமிழகத்தில், தி.மு.க., தலைமையில், 'மெகா' கூட்டணி அமைக்க வேண்டும்' என, அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலினுக்கு, வட மாநில அரசியல் தலைவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இது தொடர்பாக, பீஹார் தலைநகர் பாட்னாவில், தலைவர்கள் வகுத்த வியூகம் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த, 2010 சட்டசபை தேர்தலில், பீஹாரில், எதிரும் புதிருமாக இருந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவும், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமாரும், சமீபத்தில், அம்மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஒன்றாக கைகோர்த்தனர். அத்துடன், காங்கிரசையும் சேர்த்து, மெகா கூட்டணி அமைத்து ... |
| தமிழக அரசு வழங்கிய மின்விசிறி கர்நாடகாவில் கூவி கூவி விற்பனை Posted: பெங்களூரு: தமிழக அரசு வழங்கிய விலையில்லா மின்விசிறி, தற்போது, சாம்ராஜ் நகர் உட்பட, கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில், கூவி கூவி விற்கப்படுகிறது.முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசு, தமிழகத்தில் உள்ள ஏழைகளுக்கு, விலையில்லா மின்விசிறி, கிரைண்டர் மற்றும் மிக்சியை வழங்கி வருகிறது. ஜெயலலிதாவின் புகைப்படம் உள்ள இந்த மின்விசிறிகளை, சில இடைத்தரகர்கள், சேலம், அந்தியூர், பவானி சாகர், கோயம்புத்துார் உட்பட பல இடங்களில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி வந்து, கர்நாடகாவில் விற்கின்றனர்.கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், ஹனுாரு, மங்கலா, ... |
| கொற்றலை ஆற்றில் 10 டி.எம்.சி., தண்ணீர் கடலில் சென்று வீணாக கலப்பு Posted: கொற்றலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நீர், 10 நாட்களில், 10 டி.எம்.சி., அளவிற்கு கடலில் சென்று வீணாகியுள்ளது.ஆந்திர மாநிலத்தில் துவங்கும் கொற்றலை ஆறு, திருவள்ளூர் மாவட்டத்தில், 110 கி.மீ., வரை பயணிக்கிறது. இது, மணலிபுதுநகர் அருகேயுள்ள நாப்பாளையம் என்ற இடத்தைக் கடந்து, வங்கக் கடலில் கலக்கிறது. ஆந்திராவில் உள்ள அணைகள் நிரம்பியதாலும், பூண்டி ஏரியில் திறக்கப்பட்ட உபரி நீர் காரணமாகவும், பருவ மழை காரணமாகவும், கொற்றலை ஆற்றில் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்த ஆற்றில், போதுமான தடுப்பணைகளை பொதுப்பணித் துறையினர் ... |
| 'மார்க்கர்' பேனா பயன்படுத்த தேர்தல் கமிஷன் திட்டம் Posted: புதுடில்லி:தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்ததற்கு அடையாளமாக, ஆட்காட்டி விரலில், பிரஷால் அழியாத மை வைப்பதற்கு பதில், 'மார்க்கர்' பேனாவை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது. தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்ததற்கு அடையாளமாக, பாட்டிலில் நிரப்பப்பட்ட அழியாத மையை, பிரஷில் எடுத்து, ஓட்டு போட்ட நபரின் ஆட்காட்டி விரலில் அடையாளம் பதிப்பது, 1962 முதல், நடைமுறையில் உள்ளது. ஆனால், 'பிரஷ் மூலம், கைவிரலில் மை வைப்பது, நேர்த்தியாக இல்லை' என, இளம் வாக்காளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், தேர்தல் சமயங்களில், இங்க் பாட்டில் மற்றும் பிரஷ்களை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 23,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |