ஈகரை தமிழ் களஞ்சியம் |
- எப்போது வேப்பங்காய் இனிக்கும்?
- வெற்றியின் அளவுகோல்
- மடச்சாம்பிராணி
- கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும்
- ரசித்த சில சிலேடைகள்
- உண்மை
- இந்தாங்க லட்டு…
- சாத்தியமற்ற பொதுமை
- பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா
- கோலம்
- வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை.....!
- மறுப்பு
- கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை
- பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
- அனுபவங்கள் சொல்கின்றன...!
- ரமணியின் கவிதைகள்
- நடிகை இலியானா
- படிக்காதவன் பாடம் நடத்தறான்..!
- 108 மஞ்சள் நீராட்டு விழா நடத்தப் போறாராம்…!
- பேத்தி கொடுத்த சர்டிபிகேட்...
- பூனைக்குப் பிறந்தது புலி ஆகுமா...?
- ஊதிய கமிஷன் பரிந்துரையின் 10 முக்கிய அம்சங்கள்
- செல்ஃபோன் டேட்டா கட்டணங்கள் குறையும்: ஃபிட்ச் தகவல்
- கர்நாடகாவிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவு: மேட்டூர் அணை மாசடையும் அபாயம்
- ஒரு நாள் இரவில்… – விமர்சனம்
- பெண் சுதந்திரம்
- நடிகை ஓவியா
- அகல் விளக்குகள் விற்பனைக்கு…
- பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது
- திருச்சி மலைக்கோட்டை கோவிலில் 25–ந்தேதி கார்த்திகை தீப திருவிழா
- சேலையில், எளிமையாக இருப்பது எனக்கு பிடிக்கும்’’ – ஐஸ்வர்யாராய்
- சர்வதேச பட விழாவில், ரேடியோ பெட்டி!
- இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு
- தாழ்வு மனப்பான்மை...!!
- இந்த வாரம் - வாட்ஸ் அப்-ல் பெறப்படவை
- மலேசியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்: எதிர்பார்ப்பில் தமிழர்கள்
- நான் ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
- கார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையே>..!!
- முனிமூன் போயிட்டு வந்தேன்…!
- ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மாத்துவோம்...!
| எப்போது வேப்பங்காய் இனிக்கும்? Posted: 22 Nov 2015 08:23 AM PST இவளோடு படும் பாடு பெரும்பாடு ஆகிவிட்டது. "ஏதோ ஒன்று, `பின்னே போனால் உதைக்கிறது; முன்னே போனால் கடிக்கிறது' என்பார்கள். "இவளுக்கும் அதற்கும் ஒரு வேறுபாடும் இல்லாமல் போயிற்று. "என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் தவறு கண்டுபிடிக்கிறாள்; குற்றம் சொல்கிறாள்; முரண்டு பிடிக்கிறாள்; பிணங்கிக்கொள்கிறாள். "ஏதும் சொல்லாவிட்டாலும் ஏதும் செய்யாவிட்டாலும் வம்பாகிப் போகிறது. "இவளைத் திருமணம் செய்துகொண்டேனே, என்னை எதனால் அடித்துக்கொள்வது?" என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை; எப்படி அவளைச் ... |
| Posted: 22 Nov 2015 07:56 AM PST தவறுகளை அனுமதியா திருப்பதே திறமையின் திறவுகோல் ஆகும் - அதுவே வெற்றியின் அளவுகோல் ஆகும் மறதிகளை அண்டவிடாமல் தவிர்ப்பதே மாறுபாடில்லா வழித்துணை ஆகும் - அது முயற்சியால் திருவினை ஆகும் எதிர்ப்புகளை இனங்கண்டு முறிப்பதே ஏறுமுகத்தின் பீடுநடை ஆகும் - அது எதிரிக்குப் புலப்படாமற் போகும் வெறுமைகளைப் புறங்காணச் செய்வதே வெற்றிக்கு வித்தாய் ஆகும் - அது உயர்வின் அடையாளம் ஆகும் |
| Posted: 22 Nov 2015 07:53 AM PST அதாகப்பட்டது, "(ஆன்மீக) மடங்களில் கூடம் போன்ற இடத்தில் ஒரு பெரிய கட்டிச் சாம்பிராணி இருக்கும். இதை வழக்கம் போல தழலில் இட்டு தூபத்திற்கு உபயோகப்படுத்துவதில்லை. அது இருந்த இடத்திலேயே இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் காற்றில் கரைந்து, நாளடைவில் உருமாறி ஒழுங்கற்ற ஒரு தோற்றத்தை அடையும். இது தான் மடசாம்பிராணி எனப்படுகிறது". நன்றி முகநூல் |
| கவி காளமேகம் "தங்கள் பாடலால் என் சத்திரத்துப் பெயர் கெட்டுப்போகும் Posted: 22 Nov 2015 07:27 AM PST நாகைப்பட்டினத்தில் காத்தான்வருணகுலாதித்தன் என்பவர் தர்ம சிந்தையோடு அன்னசத்திரம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த வழியாய் வந்த காளமேகம் பசி தீர்க்க, மாலை இருட்டும் நேரத்துக்கு அதனுள் ஆர்வத்தோடு நுழைந்தான். சத்திரத்து நிர்வாகி அவனை வரவேற்று உட்கார வைத்தார். "கொஞ்சம் பொறுங்கள், சாப்பாடு தயாரானதும் அழைக்கிறேன்" என்று வாசல் திண்ணையில் அமர வைத்தார். காளமேகமும் தன்னைப் போல் சாப்பாட்டுக்கு வந்திருந்தோருடன் அமர்ந்தான். ஆனால் வெகு நேரம் காத்திருந்தும் கூப்பிடுவதாய் இல்லை. காளமேகத்துக்கோ அகோரப்பசி. பொறுமை ... |
| Posted: 22 Nov 2015 07:15 AM PST திருமுருக கிருபானந்த வாரியாரின் உபன்யாசங்களில் அவ்வப்போது அழகான சிலேடைகள் வெளிப்படும். அவர் ஒரு சொற்பொழிவில் அந்த நாளைய சில பெரியவர்களுக்கும் இந்தக்காலத்து பெரியவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிப்பிட்டார். "அந்தக் காலத்தில் பழங்கள் என்றால் விரும்பி உண்பார்கள். இப்போதெல்லாம் பழங் "கள்" என்றால் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்." அவரது கந்தபுராணச் சொற்பொழிவில் காமதகனப் படலத்தில் காமனை(மன்மதன்)ப் பற்றிக் கூறுகையில் (இந்துக்களுக்கு ஒரு காமன், கிறித்துவர்கள், இஸ்லாமியர் ஆகிய மற்ற மதத்தினர் ... |
| Posted: 22 Nov 2015 06:45 AM PST இப்படி இருந்து பார்த்ததில்லை அடுத்தவர் நினைப்புக்குள் வெந்து போகிறவள். என்ன நடக்கிறது மனதோட்டத்திற்கு ஈடுதராத சுற்றத்திற்குள் மடியாயிருந்தாயே இன்று அதைவிடவும் மோசமானதாய் இருப்பு. எப்பொழுதும் மூலையில் அடித்துக் கொண்டிருப்பவள் இறந்தால் மொழி மட்டுமல்ல இயக்கமும் மௌனமாகும். எதிலேயும் அறை அதிலேயும் குறையாகவா? ஏன் இப்படி தானாக ஓயும்வரை அன்றி நீயாக நிறுத்தாதே எதையும். முனைவர் ப. குணசுந்தரி தர்மலிங்கம் |
| Posted: 22 Nov 2015 06:36 AM PST மனைவி: இந்தாங்க லட்டு – கணவன்: எதுக்கு? – மனைவி: நான் கர்ப்பமா இருக்கேன்! – கணவன்: அட..ரொம்ப சந்தோசமான விசயம் உன் அம்மா அப்பாகிட்டே சொல்லிட்டியா? – மனைவி: சொல்லலை! – ஏன்? – மனைவி: அடிப்பாங்க! – கணவன்: அடிப்பாங்களா, ஏன்? – மனைவி: ஆமாங்க, இப்படித்தான் நான் காலேஜ்ல படிக்கும்போது ஒரு தடவ சொன்னேன், பின்னி எடுத்துட்டாங்க! – ————————————- |
| Posted: 22 Nov 2015 06:34 AM PST இவை என்னுடையவை என்பதில் மகிழ்ச்சி அனுமதி மீறப்படுகிறபோது அப்பாவானாலும் வாய் முனுமுனுக்கத்தான் செய்கிறது. அவளும் இப்படித்தான் இருந்திருப்பாள் எப்படி மனம் வந்தது எல்லாம் என்னுடையவை எனப் பொதுவில் வைக்க உதறமுடியாமல் மரத்தில் தேய்த்தாலும் எருமை சேத்துல புரளுகிற மாதிரி வேரும் மண்ணும் காணாமல் மாறிப் போகும் வடிவம் தருகிற தேய்வா கூட்டத்தில் கரைந்து போகும் இயல்பின் வாசம் கிழிசல்களில் மூடிய தசைகளின் கதுப்பில் பளபளப்பாகத்தான் இருக்கிறது. உடம்பு சிலிர்க்கையில் விலாவினை ... |
| பாரீஸ் தாக்குதல் பாடம் கற்குமா இந்தியா Posted: 22 Nov 2015 06:31 AM PST பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் அரசு நடத்திய தேடுதல் வேட்டை உலகையே வியக்க வைத்துள்ளது. இந்தியாவுக்கு சிறந்த பாடத்தையும் புகட்டி உள்ளது. பாரிஸில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை எதிர்பார்க்காத பிரான்ஸ், முதலில் அதிர்ச்சி அடைந்தது உண்மை தான். ஆனால், அதன் பிறகு அது நடத்திய வேட்டை தான் முக்கியம். தங்கள் நாட்டின் போலீசாருக்கு எந்த சேதமும் இல்லாமல், பாரிஸ் அபார்ட்மென்ட்களில் ஒளிந்திருந்த பயங்கரவாதிகளை தேடித்தேடி வேட்டையாடியது. இதில் ஆச்சரியம் இல்லாவிட்டாலும், நாம் வியக்க வேண்டியது, இந்த வேட்டைக்கு ... |
| Posted: 22 Nov 2015 06:24 AM PST பச்சரிசி மாவு தெருவெல்லாம் சாரை சாரையாக எறும்புகள் புண்ணியம் என்பார் அப்பா. பொருமினாலும் வெளியில் பெருமைதான். கோடுகள் புள்ளியைச் சுற்றியும் புள்ளியின் மீதும் அவளுக்குத் தெரிந்ததெல்லாம் வளைவுகள் நேர்க்கோடுகளின் வடிவை புதுக்கவிதை என்பாள் சலிப்புடன் வெட்டியும் மடக்கியும் மறைத்திருக்கிறதாம் புள்ளியை நினைப்பவைகளைத் தரமுடிகிறதே என்பேன். புரியாது அவளுக்கு. புள்ளிகளை வேலிகளாக்கி வெற்றிடம் காட்டும் கோடுகளினும் புள்ளிகளுக்கு வேலிகளாகும் கோடுகள் அழகானவை என்பாள். பசுந்தரையில் பளிச்செனத் ... |
| வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை.....! Posted: 22 Nov 2015 06:15 AM PST வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை.....! திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண நாளைக் கொண்டாடினார்கள். ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் போட விரும்பினார். நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண ... |
| Posted: 22 Nov 2015 06:10 AM PST உன் வார்த்தைகளில் என் வாழ்க்கை புதைக்கப்பட்டிருப்பதாக நினைப்பு வடிவும் பொருளும் மாறுவதற்குள் எத்தனை முகங்களைக் காணவேண்டுமோ மேகங்களின் வெள்ளாடையினால் நிலங்கள் வண்ணம் பூசிக் கொள்வது வழக்கமாகிவிட்டது. நீ வெள்ளை மேகங்களில் நீரைச் சேமிக்க பொருள் குவித்துக் கொண்டிருக்கிறாய். என் நன்னிலத்தைப் பத்திரப்படுத்தியுள்ளேன் மழைத்துளிகள் விழாதவாறு. முனைவர்ப. குணசுந்தரி தர்மலிங்கம் |
| கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை Posted: 22 Nov 2015 05:31 AM PST கபாலீஸ்வரர் கோவில்,மயிலாப்பூர்,சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் ... |
| பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Posted: 22 Nov 2015 05:08 AM PST தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா ! அன்பு நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் ! இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ... |
| Posted: 22 Nov 2015 04:47 AM PST ![]() |
| Posted: 22 Nov 2015 04:45 AM PST கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| Posted: 22 Nov 2015 04:41 AM PST - - - 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் திகதி பிறந்த இலியானா பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள ஒரு தென்-இந்திய நடிகை ஆவர். - |
| படிக்காதவன் பாடம் நடத்தறான்..! Posted: 22 Nov 2015 03:43 AM PST ![]() |
| 108 மஞ்சள் நீராட்டு விழா நடத்தப் போறாராம்…! Posted: 22 Nov 2015 03:34 AM PST - - |
| Posted: 22 Nov 2015 03:11 AM PST ![]() |
| பூனைக்குப் பிறந்தது புலி ஆகுமா...? Posted: 22 Nov 2015 02:32 AM PST ![]() |
| ஊதிய கமிஷன் பரிந்துரையின் 10 முக்கிய அம்சங்கள் Posted: 22 Nov 2015 02:14 AM PST - நீதிபதி மாத்தூர் தலைமையிலான 7-வது ஊதிய கமிஷனின் பரிந் துரை அறிக்கை மத்திய அரசிடம் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப் பட்டது. அதன் முக்கிய பரிந் துரைகள் வருமாறு: * ஒட்டுமொத்தமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55% ஊதிய உயர்வு. அடிப்படை ஊதியத்தில் 16% உயர்வு. * படிகளில் 63% உயர்வு. ஆண்டுக்கு 3% ஊதிய உயர்வு. 52 படிகள் ரத்து, 36 படிகள் இதர படிகளோடு இணைப்பு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக நிர்ணயம். * அதிகபட்ச ஊதியம் ரூ.2.5 லட்ச மாக நிர்ணயம், குரூப் இன்சூரன்ஸ் தொகை ரூ.50 லட்சமாக உயர்வு. இதனால் ... |
| செல்ஃபோன் டேட்டா கட்டணங்கள் குறையும்: ஃபிட்ச் தகவல் Posted: 22 Nov 2015 02:08 AM PST இந்தியாவில் செல்ஃபோன் data கட்டணங்கள் 15 முதல் 20 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக பிரபல மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் தெரிவித்துள்ளது. - இந்திய செல்ஃபோன் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கால் பதிக்க உள்ளதன் விளைவாக நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி உருவாகும் என்றும் இதன் மூலம் கட்டணம் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் ஃபிட்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. - முன்னணி 4 தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே ஏற்படும் கடும் போட்டியால் அவற்றின் லாப விகிதங்கள் ... |
| கர்நாடகாவிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவு: மேட்டூர் அணை மாசடையும் அபாயம் Posted: 22 Nov 2015 02:06 AM PST கர்நாடகாவிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவுகளால் மேட்டூர் அணை மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. - தமிழக - கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. - இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர் தேக்க பகுதிகளில் தண்ணீர் அவ்வப்போது நிறம் மாறுவதுடன் துர்நாற்றமும் வீசுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். - 16 கண் மதகு பாலம் வழியில் அதிக அளவு துர்நாற்றம் வீசுவதாகவும், கர்நாடகாவிலிருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவு நீர் காவிரியில் கலப்பதே ... |
| Posted: 21 Nov 2015 11:54 PM PST - 'ஷட்டர்' மலையாளப்படத்தின் தமிழ்ப்பதிப்புதான் – 'ஒரு நாள் இரவில்' – 'நைட் ஷோ' என்ற ஆபாசமான தலைப்பில் எடுக்கப்பட்டு 'ஒரு நாள் இரவில்' என்ற அர்த்தபூர்வமான பெயரில் வெளியாகியிருக்கிறது. – கதை? – தன்னுடைய மகள் சக மாணவனுடன் சகஜமாக பழகுவதை காதல் என்று தவறாக நினைக்கும் சத்யராஜ், மகளின் படிப்பை நிறுத்தி விட்டு அவசர அவசரமாக திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். அதனால், குடும்பத்தில் ஏற்பட்ட டென்ஷனில், நண்பர்களுடன் தன் வீட்டுக்கு முன்னால் உள்ள காலியாக இருக்கும் கடையில் சரக்கு அடிக்கிறார். ஆட்டோ ... |
| Posted: 21 Nov 2015 11:43 PM PST சுதந்திரம் என்பது சுருக்கு பையிலிருக்கும் காசு போன்றது!! இன்னும் கழுத்தை நெரித்து கொண்டுதான் இருக்கிறது!!! முன்னெப்பொழுதும் இல்லாது பெண் மறைமுகமாக களங்கப்படுத்தப்படுகிறார்கள்! வலைதள வக்கிரங்களும் வார்த்தை ஜாலம்களும் பெண்களை இழிவுபடுத்துகிறது! இன்னும் பெண் சூழ்நிலைகளுக்காக நிர்பந்த படுத்தபடுகிறார்கள்!! பாலியல் வல்லுறவுக்கு பள்ளி செல்லும் குழந்தையும் விலக்கு அல்ல!! என்பதை அடிக்கடி சமூகம் நினைவுபடுத்துகிறது!! போதாக்குறையாக போதை வஸ்த்துகளும் பெண்கள் மீது ... |
| Posted: 21 Nov 2015 11:42 PM PST - * பிரபல நடிகர்களுடன், குத்து பாடல்களில் நடனமாட, சம்மதம் சொல்லி வருகிறார் ஓவியா. – |
| Posted: 21 Nov 2015 11:32 PM PST - கார்த்திகை தீபத்திருநாள் நெருங்கிவரும் நிலையில் அதை தீபம் ஏற்றிக் கொண்டாடும் வகையில் புதுக்கோட்டையிலுள்ள கோயில் சன்னதியில் அனைவரையும் கவரும் வகையில் பல்வேறு ரகங்களிலும், மாதிரிகளிலும் களி மண்ணில் தயாரான வண்ணமயமான அகல் விளக்குகள் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ளன. – ————————– |
| பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது Posted: 21 Nov 2015 11:31 PM PST - பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா காப்பு கட்டுதலுடன் நவம்பர் 19ல் தொடங்கியது. – அறுபடை வீடுகளில் 3–ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா ஆண்டுதோறும் 7 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழாவில் 6–ம் நாள் பரணி தீபமும், 7–ம் நாள் கார்த்திகை தீபமும் ஏற்றப்படுகிறது. – விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர். |
| திருச்சி மலைக்கோட்டை கோவிலில் 25–ந்தேதி கார்த்திகை தீப திருவிழா Posted: 21 Nov 2015 11:30 PM PST - தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப் பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார். மலைக்கோட்டை 273 அடி உயரமும்,417 படிகள் கொண்டதாகவும் உள்ளது. இந்த மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், மலையின் நடுப்பகுதியில் தாயுமானசுவாமியும், மட்டுவார் ... |
| சேலையில், எளிமையாக இருப்பது எனக்கு பிடிக்கும்’’ – ஐஸ்வர்யாராய் Posted: 21 Nov 2015 11:27 PM PST - மும்பை, 'சேலை அணிந்து எளிமையாக இருப்பது எனக்கு பிடிக்கும்' என்று நடிகை ஐஸ்வர்யாராய் கூறினார். உலக அழகி ஐஸ்வர்யாராய் உலக அழகி பட்டம் வென்று 21 வருடங்கள் ஆகிறது. 2007–ல் அபிஷேக்பச்சனை மணந்தார். இவர்களுக்கு 4 வயதில் ஆரத்யா என்ற மகள் இருக்கிறாள். குழந்தை பிறந்த பின் சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இரண்டு இந்திப்படங்களில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார். தனக்கு பிடித்த விஷயங்கள் குறித்து ஐஸ்வர்யாராய் மனம் திறந்து பேட்டி அளித்தார். ... |
| சர்வதேச பட விழாவில், ரேடியோ பெட்டி! Posted: 21 Nov 2015 11:26 PM PST - – பணி ஓய்வு பெற்ற தந்தைக்கும், நாகரிக மோகம் கொண்ட ம கனுக்குமிடையே நடக்கும் பிரச்னையை சொல்லும் படம், ரேடியோ பெட்டி! ஹரி விஸ்வநாத் இயக்கியுள்ள இப்படம், டிசம்பர் மாதம், கோவாவில் நடைபெறவிருக்கும், இந்தியாவின், 46வது சர்வ தேச திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமா பிரிவில், திரையிட தேர்வாகியுள்ளது. இப்படம், கடந்த மாதம், தென்கொரியாவில் நடைபெற்ற, 'புசான்' திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு, பாராட்டு பெற்றது குறிப்பிடத்தக்கது. – ————————————– —சினிமா பொன்னையா. |
| இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு Posted: 21 Nov 2015 11:07 PM PST விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில் - ஐதராபாத் : எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது இல்லை, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும் திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார். - ----------- |
| Posted: 21 Nov 2015 10:29 PM PST * தாழ்வு மனப்பான்மை…!! * ஒரு முறை முல்லா நசிருதீன் என்னிடம் வந்தார். அவர் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டார். " என்ன ஆயிற்று? " என்று கேட்டேன். " நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும். சமீப காலமாக எனக்குப் பயங்கரமான தாழ்வுமனப்பான்மை வந்துவிட்டது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. நீங்கள்தான் எப்படியாவது… ". அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்கள். இந்தத் தாழ்வு மனப்பான்மைக்கு என்ன காரணம்? " " நான்தான் இருப்பதிலேயே மிகவும் உயர்ந்தவன் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சமீபகாலமாக மற்றவர்களும் ... |
| இந்த வாரம் - வாட்ஸ் அப்-ல் பெறப்படவை Posted: 21 Nov 2015 10:08 PM PST - ![]() |
| மலேசியா, சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம்: எதிர்பார்ப்பில் தமிழர்கள் Posted: 21 Nov 2015 09:54 PM PST - பிரதமர் நரேந்திர மோடி விரைவில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற் கொள்கிறார். இதனால் அங்குள்ள தமிழர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. மலேசியாவில் சுமார் 20 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால் அந்நாட்டுடன் அரசியல் ரீதியிலான உறவுகளை தாண்டி, இந்தியாவுக்கு நெருங்கிய நட்புறவு இழைந்தோடுகிறது. சுருக்கமாக சொல்வதென்றால் உறவுகளை விட்டு கடல் கடந்து சென்றாலும் அங் கிருக்கும் தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் மலேசியா தங்களது தாயகமாகவே ... |
| நான் ரசித்த திரைப்பட பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு) Posted: 21 Nov 2015 08:51 PM PST - செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தால் சம்மதமே செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே உன் பாதம் போகும் பாத நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு பாத்து காத்து நின்னேனே உன் பாதம் போகும் பாத நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு பாத்து காத்து நின்னேனே உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு என் மனம் தானா பாடிடலாச்சு என்னோட பாட்டுச் சத்தம் தேடும் உன்ன பின்னாலே எப்போதும் உன்ன தொட்டு பாடப் போறேன் தன்னாலே செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் ... |
| கார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையே>..!! Posted: 21 Nov 2015 08:24 PM PST கார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையே - - இது எந்த படத்தில் வரும் பாடல்? |
| Posted: 21 Nov 2015 08:10 PM PST ![]() |
| ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மாத்துவோம்...! Posted: 21 Nov 2015 07:46 PM PST ![]() |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






