Tamil News | Online Tamil News |
- 'மார்க்கெட்டிங்' அரசியல் எடுபடாது ஸ்டாலினுக்கு கருணாநிதி 'அட்வைஸ்'
- அ.தி.மு.க., கூட்டணி: ராகுல் விருப்பம்
- மழை நிவாரணம்: தேர்தலுக்கான ஆயுதம்
- 7வது ஊதியக்குழு அறிக்கை அமலானால் தமிழக அரசுக்கு ஏற்படப்போகும் கூடுதல் செலவு ரூ.1,500 கோடி
- பயங்கரவாதத்தை ஒழிக்க பிரதமர் மோடி யோசனை: ஆசியான் - இந்தியா மாநாட்டில் உரை
- மத்திய அரசிடம் இருந்து உதவி பெறுவதில் தமிழக அரசு அலட்சியம்: வெள்ள சேதத்தை பார்வையிட்ட மத்திய அமைச்சர்கள் புகார்
- ராகுலை துரத்தும் சுவாமி!
- சாய்பாபா 90வது அவதார நாள் சிறப்பு
- நடிகையுடன் 'செல்பி' எடுத்த முதல்வர்: கடுப்பில் கொதிக்கிறது காங்கிரஸ்
- ஐ.எஸ்., அமைப்பில் தமிழக வாலிபர்கள்?
- தூர்வாரும் பணிக்கு ரூ.20.50 கோடி செலவு: உரிய விசாரணை நடந்தால் உண்மை வெளிவரும்
- ஷீனா கொலை செய்யப்பட்டது ஏன்? இந்திராணி குறித்து பரபரப்பு தகவல்
| 'மார்க்கெட்டிங்' அரசியல் எடுபடாது ஸ்டாலினுக்கு கருணாநிதி 'அட்வைஸ்' Posted: 'மக்கள் மத்தியில், 'மார்க்கெட்டிங்' செய்து கொள்வதால் மட்டும், தேர்தலில் வெற்றி பெற்று விட முடியாது' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு, அக்கட்சி தலைவர் கருணாநிதி ஆலோசனை கூறிய தகவல் ெவளியாகி உள்ளது. லோக்சபா தேர்தலில், பா.ஜ., பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட மோடி, சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு வகை மீடியாக்கள் மூலம், மக்களிடம் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார். இதற்காக, மோடியின் ஆலோசகராக, தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனரான பிரசாந்த் கிஷோர் செயல்பட்டார். அவர் வகுத்த திட்டங்களின்படி மோடி செயல்பட்டதால், அவர் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. தற்போது, அவர் ... |
| அ.தி.மு.க., கூட்டணி: ராகுல் விருப்பம் Posted: தமிழகத்தில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேருவதற்கான வாய்ப்புகளை ஆராயும்படி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், தங்கபாலு ஆகியோரிடம், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கூறிய தகவல் வெளியாகி உள்ளது.தமிழக காங்கிரஸ் தலைமையின், தி.மு.க., ஆதரவு போக்குக்கு தடை போட்ட ராகுல், தற்போது, அ.தி.மு.க.,வுடன் நெருக்கத்தை ஏற்படுத்த விரும்புவதை, சிதம்பரம், தங்கபாலு ஆதரவாளர்கள் உறுதி செய்தனர். |
| மழை நிவாரணம்: தேர்தலுக்கான ஆயுதம் Posted: சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது. இது, எதிர்க்கட்சி களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை, வழக்கத்தை விட, அதிகமாக பெய்துள்ளது. இதில், கடலுார் மாவட்டம், பெரும் பாதிப்புக்கு உள்ளானது. அதற்கு அடுத்தபடியாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களும் பாதிப்படைந்துள்ளன.இது தவிர, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும், மழைக்கு இறந்தவர்களின் ... |
| 7வது ஊதியக்குழு அறிக்கை அமலானால் தமிழக அரசுக்கு ஏற்படப்போகும் கூடுதல் செலவு ரூ.1,500 கோடி Posted: ஏழாவது ஊதியக்குழு அறிக்கை, மத்திய நிதி அமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களிடமும், ஊதிய உயர்வு தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த அறிக்கையை, தமிழகத்தில் அமல்படுத்தும் போது, ஆண்டுக்கு கூடுதலாக, 1,500 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.மத்திய அரசு பணியில், 48 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்; 55 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். ஊழியர்களின் ஊதியம் மற்றும் முன்னாள் ஊழியர்களின் ஓய்வூதிய விகிதம், 10 ஆண்டுகளுக்கு, ஒருமுறை மாற்றி அமைக்கப்படும். இதற்காக ஊதியக்குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் ... |
| பயங்கரவாதத்தை ஒழிக்க பிரதமர் மோடி யோசனை: ஆசியான் - இந்தியா மாநாட்டில் உரை Posted: கோலாலம்பூர்,:''உலகளாவிய பயங்கரவாத சவாலை எதிர்கொள்ள, 'ஆசியான்' அமைப்பு நாடுகளிடையேஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்; பிராந்திய சச்சரவுகளுக்கு, அமைதியான வழிமுறைகளில்தீர்வு காணப்பட வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான, மலேஷியாவில், மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் கோலாலம்பூரில் நேற்று, தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த, 10 நாடுகளின் கூட்டமைப்பான, ஆசியான் மற்றும் இந்தியா சேர்ந்து நடத்தும், 'ஆசியான் - இந்தியா' உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்றார்; அவர் ... |
| Posted: சென்னை: தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். 'இந்த விவகாரத்தில், மத்திய அரசிடம் இருந்து உதவி பெறுவதில் தமிழக அரசு அலட்சியமாக உள்ளது' என, அவர்கள் புகார் தெரிவித்தனர்.சென்னை, காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர், பா.ஜ., சார்பில் நேற்று பார்வையிட்டனர். பின், ... |
| Posted: நம்ம ஊர் சுப்பிரமணியன் சுவாமி, ஒருத்தர் மீது கண் வைத்து விட்டால், அவருடைய கதி, அதோ கதி தான்! காங்., தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுல் மீது பல வழக்குகளைத் தொடந்துள்ளார். திடீரென ஒருநாள், 'ராகுல் இந்திய குடிமகன் இல்லை; இங்கிலாந்து பிரஜை' என, குண்டைத் துாக்கிப் போட்டு, அதற்கான ஆவணங்களையும் காட்டினார். 'சுவாமி காட்டிய ஆவணத்திலேயே, ராகுல், இந்திய பிரஜை என்று குறிப்பிடப்பட்டுள்ளது' என, காங்கிரஸ் பதில் அளித்தது. 'ஒரே ஆவணத்தில், எப்படி, ஒருவர் இரு நாட்டு குடிமகனாக இருக்க முடியும்; லண்டனில் ராகுல் கம்பெனி துவங்கிய போது, சமர்ப்பித்த ஆவணங்களில், இந்திய ... |
| சாய்பாபா 90வது அவதார நாள் சிறப்பு Posted: சாய்பாபா அவதரித்தது 1926 கார்த்திகை மாதம் சோமவாரத்தில் ஆகும். தற்போது, 90வது அவதார நாளும் அதே போல கார்த்திகை சோமவாரத்தில் வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வகையில், இது மிக சிறப்பான அவதார நாளாக அமைகிறது. |
| நடிகையுடன் 'செல்பி' எடுத்த முதல்வர்: கடுப்பில் கொதிக்கிறது காங்கிரஸ் Posted: ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், 'யுனிசெப்' அமைப் பின் நிகழ்ச்சிக்கு வந்த பிரபல நடிகையுடன், அம்மாநில முதல்வர், 'செல்பி' எடுத்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சத்தீஸ்கரில், பா.ஜ., முதல்வர் ராமன் சிங் தலைமையிலான அரசு உள்ளது. இம்மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில், குழந்தைகள் உரிமை குறித்த மாநாட்டை, யுனிசெப் அமைப்பு நடத்தியது. நேற்று முன்தினம் நடந்த, மாநாட்டின் நிறைவு விழாவில், சிறப்பு விருந்தினராக பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் பங்கேற்றார். இதே விழாவுக்கு வந்திருந்த, முதல்வர் ராமன் சிங்கும், கரீனா கபூரும் அருகருகே அமர்ந்திருந்தனர். விழா நடந்து ... |
| ஐ.எஸ்., அமைப்பில் தமிழக வாலிபர்கள்? Posted: சென்னை: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில், தமிழக வாலிபர்கள் சேர முயன்ற விவகாரம் போலீசாரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேற்காசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள், பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் கொடூர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன், இந்தியாவைச் சேர்ந்த, 150 பேர் நேரடி தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், சென்னை மற்றும் கரூரைச் சேர்ந்த, இரண்டு வாலிபர்கள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர, துருக்கி வரை சென்று பிடிபட்டுள்ளனர்.இதுகுறித்து ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூறியதாவது:சென்னை, ... |
| தூர்வாரும் பணிக்கு ரூ.20.50 கோடி செலவு: உரிய விசாரணை நடந்தால் உண்மை வெளிவரும் Posted: சென்னை: சென்னையில் பருவமழை துவங்கும் முன், மழைநீர் வடிகால் துார்வாரும் பணிகள், நீர்வழித்தடங்களில் ஆகாய தாமரைகளை அகற்றும் பணிகளுக்கு, 20.5 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், வெள்ள பாதிப்பு அதிகமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.சென்னை மாநகராட்சியின், பழைய மண்டலங்களான, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய ஏழு மண்டலங்களில், தற்போது 1,880 கி.மீ., துாரத்திற்கு, மழைநீர் வடிகால் உள்ளது. அதை ஒவ்வொரு ஆண்டும், பருவமழை துவங்கும் முன், துார்வாருவது வழக்கம். துார்வாருவதற்கு, மனிதர்களை ... |
| ஷீனா கொலை செய்யப்பட்டது ஏன்? இந்திராணி குறித்து பரபரப்பு தகவல் Posted: மும்பை: இந்திராணி முகர்ஜி, தன் மகள் ஷீனா போராவை, ஏன் கொலை செய்தார் என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. வட மாநிலங்களில் பிரபலமான, 'டிவி' சேனலின் தலைமை நிர்வாகியாக பணியாற்றியவர் பீட்டர் முகர்ஜி, 59. இவரது மனைவி இந்திராணி, 43. ஏற்கனவே, இருமுறை திருமணமான இந்திராணி, மூன்றாவதாக பீட்டர் முகர்ஜியை, 2002ல் திருமணம் செய்தார். இந்திராணிக்கு, முதல் கணவர் மூலம் பிறந்த ஷீனா போரா, 24, என்ற மகள் இருந்தார். பீட்டர் முகர்ஜிக்கும், முதல் மனைவி மூலம், ராகுல் என்ற மகன் உள்ளார்.இந்நிலையில், தன் மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக, சில மாதங்களுக்கு முன், இந்திராணி கைது ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 22,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |