Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வானில் விரியும் சிறகுகள் - டாக்டர் ஆர் .கோவிந்தராஜ் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )

Posted: 21 Nov 2015 08:37 AM PST

டாக்டர் ஆர் .கோவிந்தராஜ் - வானில் விரியும் சிறகுகள் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . நூலை பற்றி , நாம் அறிந்திராத ஆபுர்வ பறவைகளின் அற்புத வாழ்க்கை ரகசியங்கள் அறிவிப்பு : இரண்டு நாட்களுக்கு பின்பு இந்த டவுன்லோட் லிங்க் நீக்கப்படும் , நண்பர்கள் அனைவரும் இத்தனை நாள் எனக்கு கொடுத்த ஆதரவை போல இனி வரும் காலத்திலும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் . பதிப்பக துறை கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே இரண்டு நாட்களுக்கு மட்டும் டவுன்லோட் லிங்க் கொடுக்கபடுகிறது ...

கும்பாபிஷேகத்தில் கும்பத்தில் இருந்து மாவிலையில் தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர்

Posted: 21 Nov 2015 08:27 AM PST

கும்பாபிஷேகத்தில் கும்பத்தில் இருந்து மாவிலையில் தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர் தெரியுமா? முக்கனிகளில் முதல் கனியானது மா..இந்த மாங்கனி கிடைக்காத காரணத்தால் முருகன் பழனியில் ஆண்டி அவதாரம் பூண்டார் என்று புராணமும் கூறுகின்றது..உண்மையில் மாம்பழம் என்பது ஞானத்தை குறிப்பதாகும்..இந்த ஞானத்தின் ஒருதுளி நீர் பட்டால் கூட ஜென்ம ஜென்மாந்திரமான பாவங்கள் விலகிவிடும்.. இதனால் தான் இந்த ஞானம் பெற்று சத்கதி அடைந்த 33 கோடி தேவர்களும் கங்கை நீருடன் இணைந்து கலசத்தில் உள்ளார்கள் என்ற ஐதீகமும் உண்டு..அந்த புனித ...

மகிஷி வதம்..

Posted: 21 Nov 2015 08:21 AM PST

ஐயப்பன் மகிஷி என்னும் அரக்கியை வதம் செய்ய ..அவள் சாபம் நீங்க பெற்றவளாய் மாறி தெய்வீகமான பெண்ணாகி ஐயப்பனை மணந்துகொள்ள விருப்பம் தெரிவித்தால்..ஆனால் சிவபெருமானின் மகனோ இது சிவபெருமானுக்காக வாழும் வாழ்க்கை..இதில் பிரம்மச்சரியம் மிக முக்கியம் என்றும் பிரம்மச்சரியத்தால் மிகுந்த சக்தியை அடைய முடியும் என்பதை அவளுக்கு அறிவுறுத்துகின்றார்.. மேலும் தெய்வீக பெண்ணாக மாறிய அவளிடம் சத்யுகம் என்னும் பொற்காலத்தில் மணந்துகொள்வதாகவும்..அதுவரை..மலை மீது ஆன்ம ஜோதியாக இருந்து சிவபரமாத்மா என்ற ஜோதியை நினைத்து தவத்தில் ...

அள்ளியணைக்கும் அமிர்தம்

Posted: 21 Nov 2015 08:16 AM PST

மலர்ந்த முகம் கண்டு மல்லிகையின் இதம் உணர்ந்து ஜவ்வாது மணம் நுகர்ந்து ஜாடை சொல்லி கூப்பிடுவோம் சத்தம் தான் உணர்ந்து சைகைதான் அளந்து உற்றுப் பார்க்கும் உருண்டை விழி மெல்ல உருட்டி பார்க்கும் உருட்டி பார்க்கும் பார்வையதில் உயிர் பிடிக்கும் உள்ளூர சிறைபிடிக்கும் இமை இமைக்கும்-அதில் மயிலிறகின் இதம் இருக்கும் சுளி சுளிக்கும் நெளி நெளிக்கும் மை தீட்டிவிடும் புருவமதில் மாட்டிவிடும் -மதி முழுதும் மாட்டிவிடும் வாய் மெல்ல திறந்திருக்கும் வான் பொழியும் கருணையதில் வந்திருக்கும் நா ...

பூக்களைப் பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்

Posted: 21 Nov 2015 08:11 AM PST

பூக்களை பற்றி நிறைய பாடல்கள் வெளிவந்துள்ளன,இங்கே உங்களுக்கு தெரிந்த பூவைப்பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்,

கலித்தொகை

Posted: 21 Nov 2015 07:53 AM PST

சங்க நூல்களில் நற்றிணை, குறுந்தொகை, அகநாநூறு, புறநாநூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை ஆகியவற்றை எட்டுத்;தொகை நூல்களுள் அடக்குவர். அகவற்பா, விருத்தப்பா(ஆசிரியம்), வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பாவென்னும் ஐந்து பாவினங்களுள் கலிப்பாவென்னும் பாவகையைச் சார்ந்து பல புலவர்களால் இயற்றப்பட்ட செய்யுள்களின்; தொகுப்பாயமைந்தது கலித்தொகையாகும். கலித்தொகையும் பரிபாடலும் இசைகலந்து எடுத்துப் பாடப்படக்கூடிய இன்னிசைப் பழம்பாட்டுவகையினவென்று இசைவல்லார் கூறுவர். கலித்தொகை பண்டைய தமிழரின் அகவாழ்வைப் ...

கே.ஜே.யேசுதாஸின் 50 ஆண்டு சாதனை!

Posted: 21 Nov 2015 07:44 AM PST

கர்நாடக சங்கீத இசை மேதையும், பிரபல பின்னணிப் பாடகருமான, கே.ஜே. யேசுதாஸ் திரைத்துறையில் பாடகராக அறிமுகமாகி 50 ஆண்டுகாலத்தை நிறைவு செய்துள்ளார். திரைப்படத்துறையில் இது மிகப்பெரிய சாதனையாக போற்றப்படுகிறது. எப்போதெல்லாம் நல்ல இசை கேட்கிறோமோ, அந்த நிமிடங்களில் மனம் ...

தமிழ், தானாக வளர்ந்துவிடாது

Posted: 21 Nov 2015 07:44 AM PST

தமிழ் என்பது தமிழன் சக தமிழனுடன் கொள்ளவேண்டிய உறவின் அடிப்படை   தமிழ்வழிக் கல்வியை அமல்படுத்துவதில் தமிழ் எழுத்தாளர்கள் ஆற்ற வேண்டிய பங்கு முக்கியமானது. தமிழ் வாழ்வு, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகிற ஒரு வரலாற்று நிகழ்வுதான் தமிழ்வழிக் கல்விக்கான போராட்டம். இவ்வரலாற்று நிகழ்வை தெளிவற்ற, மேலோட்டமான சிந்தனைகள் சார்ந்து படைப்பாளிகள் எதிர்கொள்ள முடியாது. அதிகாரத்தைச் சுயநலம் சார்ந்து சுரண்டுவது தமிழ் அரசியலின் பொதுக்குணம். அச்சுரண்டலுக்குத் துணை நிற்கும் முகமூடிகளை ...

கோபுரம் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 21 Nov 2015 07:29 AM PST

கோபுரம் ! கவிஞர் இரா .இரவி !


காற்றின் தயவால்
காகிதம் சென்றது
கோபுரம் !

மாடப்புறாக்களின்
இலவச தங்குமிடம்
கோபுரம் !

குனிந்த தலை நிமிராத பெண்ணையும்
நிமிர வைக்கும்
கோபுரம் !


வாழ்கின்றது
கலசங்களால்
கோபுரம் !

வானைத் தொடும்
ஆனால் தொடாது
கோபுரம் !

கர்வம் கொள்வதில்லை
உயரமாக இருந்தாலும்
கோபுரம் !

கன்னத்தில் பதிஞ்சிருக்கிற கைரேகையைப் பார்த்து…

Posted: 21 Nov 2015 07:20 AM PST

- – நாளை என்பதுநம் கையில் இல்லை…! – இன்னிக்கே என் கையில் எதுவும் இல்லை டாக்டர்…! – வி.சாரதிடேச்சு – ———————————– – குற்றப்பத்திரிகை படிச்சதை தலைவர் இப்படி சொல்லக் கூடாது…! – அப்படி என்ன சொன்னார்? – ஜர்னலிசம் படிச்சேன்னு சொல்றாரே..! – சடையப்பன் – ———————————– – போன்ல பேசும்போது உங்க சம்சாரத்துக்கு கைரேகை பார்க்கணும்னு சொன்னீங்க…இப்ப அவங்களை கூட்டிட்டு வராம நீங்க மட்டும் தனியா வந்து இருக்கீங்களே..? – என் கன்னத்துல அவ கைரேகை பதிஞ்சிருக்கு… அதைப்பார்த்து சொல்லுங்க சோசியரே…! – லட்சுமணன் – ——————————— – எதுக்காக ...

புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் இரு நாட்களுக்கு மழை வாய்ப்பு

Posted: 21 Nov 2015 07:01 AM PST



-
இன்று (21.11.2015) காலை 8.30 மணியளவில் எடுக்கப்பட்ட
செயற்கைக்கோள் புகைப்படம்| பட உதவி: ஐ.எம்.டி. இணையதளம்.
---------------------
-
"தென் மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த
தாழ்வு நிலையால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு
மழை பெய்ய வாய்ப்பு" »

சிவன் சொத்தால் குலம் விளங்கும்..

Posted: 21 Nov 2015 06:50 AM PST

உலகில் ஒரு பழமொழி உண்டு "சிவன் சொத்து குல நாசம்"..சிவனிடமிருந்து சகல ஐஸ்வர்யங்களை அடைவதற்கு.. தன்னுடைய பெயர்..புகழ்..குடும்ப கெளரவம்..மரியாதை.. அதாவது சிவனின் சொத்தை அடைய உலகியலான நான்..இன்னார்..போன்ற குல மரியாதைகளை அழித்துவிடவேண்டும்..அதாவது தியாகம் செய்துவிட வேண்டும்..இதுதான் "சிவன் சொத்து குல நாசம்"என்று சொன்னார்கள்..மற்றபடி நாசம் அடைந்த குலத்தையும் விளங்கவைப்பவர் இறைவன்.. குலத்தை நாசம் செய்பவர் அல்ல..முழு உலகமே அவருடைய சொத்துதான்..பாவம் செய்தவன் அதனுடைய பலனை அனுபவிக்கவேண்டும் என்ற விதி இருக்க ...

தத்துவம் மச்சி தத்துவம்

Posted: 21 Nov 2015 05:41 AM PST

- கடைக்குப் போய் 22 சட்டை வாங்கினா, எண்ணிப் பார்க்கலாம், 22 பழம் வாங்கினால் அதை எண்ணிப் பார்க்கலாம் அவ்வளவு ஏன், 22 ரூபாய் வாங்கினால்கூட அதையும் எண்ணிப் பார்க்கலாம். – ஆனா 22 காரட் தங்க நகை வாங்கினா அதை எண்ணிப் பார்த்து வாங்க முடியுமா? – தாரணி – ——————————- – என்னதான் பேய்ப்படம் என்றாலும் அதை நாம்தான் போய்ப் பார்க்க வேண்டும், பேயெல்லாம் வந்து பார்க்காது..! – பேய் என்ற பேரைக் கேட்டாலே பயந்தோடும் பயந்தாங்கொள்ளிகள் சங்கம் – என்.கசேநிதிரன் – ——————————– – உலகத்திலேயே நம்பர் ...

பெண் எனும் பகடை காய் _சசி

Posted: 21 Nov 2015 05:12 AM PST

பொது வெளியில்  பெண்கள் இன்னும்  காட்சி பொருளாகத்தான்  காட்சிப்படுத்தப்படுகிறாள்!!  இல்லை இல்லை  பார்ப்பவர்களின்  கண்களில் தான்  இருக்கிறது என்று  கருத்துக்களை  கூடை கூடையாய்  கூறுபவர்களே!  பார்க்கும் விதத்திலும்  பாலியல் இச்சையை  தூண்டும் விதத்தில் தான்  காட்சிப்படுத்தப்படுகிறாள்!!  பாவம் அவள் என்ன செய்வாள்?? அவளுக்கான  பிரச்சினையாக  கருதவில்லை  போலும்!!  இவள் விற்பனைக்கு  என்று கழுத்தில்  கட்டி தொங்கவிடாத நிலைத்தான்  இன்று பெண்களுக்கு!!  கவிஞர்களோ  ஒரு படி ...

என்றாவது புவீர்ப்பு நின்றதுண்டா?

Posted: 21 Nov 2015 05:09 AM PST

- – உண்ட உணவு ஏழு தாதுக்களாகும் அது எப்படி? – ஒவ்வொரு உருண்டையும் தப்பாமல் உருளும் மோதாமல் அருளும் இது எப்படி? – ஒரு உருளைக்கிழங்கு அந்தரத்தில் சுற்றுது அதன்பாதை வகுத்தவன் மேதை! அவன் யார்? – சில சமயம் மனிதன் கண்டு பிடித்த மின்சாரம் தடைப்படும் என்றாவது புவீர்ப்பு நின்றதுண்டா? இதுஎதன் மூலம் அதன் மூலம் அதுவே மூலம்… – —————- -சு.பாரதிகுமார் இது ஒரு நல்ல ஆரம்பம் – கவிதை தொகுப்பிலிருந்து =========================

சிவன் சொத்து குலநாசம்

Posted: 21 Nov 2015 04:54 AM PST

- பார்வதி தேவியின் தவத்தின் பொருட்டும்; சங்கன், பதுமன் ஆகியநாகங்களுக்கும் மற்று முள்ள பலருக்கும் சிவன் வேறு, அரி வேறல்ல என்பதைஉணர்த்தும் பொருட்டும் சிவபெருமான் சங்கர நாராயணராகக் காட்சி தந்த தலம்சங்கரன் கோவில்! - இவ்வாறு சிவபெருமான் ஒரு பாதி சிவனாகவும் மறுபாதி நாராயண னாகவும் காட்சிதந்த அந்த அரிய நிகழ்ச்சி, ஆடி மாதத்தில் ஆடித்தபசு விழாவாக சங்கரன்கோவில் தலத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது நாமறிந்ததே. - அத்தகைய சிறப்பு வாய்ந்த சங்கரன் கோவில் தலத்தில் மேலும் ஒரு அற்புதத்தைநிகழ்த்தியிருக்கிறார் ...

மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு

Posted: 21 Nov 2015 04:47 AM PST

- பிரதமர் நரேந்திர மோடி (இடது), ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே (வலது)- பின்னணியில் தலைகீழாக இந்திய தேசியக் கொடி | படம்: ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்திலிருந்து. --------------------------- பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் அபேவும் சந்தித்தபோது பின்னணியில் இருந்த இந்திய தேசியக் கொடி தலைகீழாகக் கட்டப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. - 13-வது ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மலேசியா சென்றுள்ளார். கோலாலம்பூரில் நடைபெறும் இந்த மாநாட்டில் ...

இனி இண்டர்நெட் இல்லாமலே கூகுளிடம் வழி கேட்கலாம்!

Posted: 21 Nov 2015 04:03 AM PST

- எல்லாருடைய கைகளிலும் ஸ்மார்ட்ஃபோன் தவழும் இன்றைய தேதியில், கிட்டத்தட்ட எல்லா ஆப்ஸ்களுமே இணைய வசதி இருந்தால் மட்டுமே இயங்கக்கூடியதாக இருக்கின்றன. ஆனால் தங்கு தடையற்ற இணைய இணைப்பு, அதன் வேகம் போன்றவை இடத்துக்கு இடம் மாறுபடுவதால் 'ஆஃப்லைன் ஃபர்ஸ்ட் மொபைல் டெவெலப்மெண்ட்' உலகளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கூகுள் தன் மேப்ஸ் சேவையை, மொபைல் இணையத்துடன் இணைக்கப்படாமல் இருக்கும்போதும் பயன்படுத்த ஏதுவாக மாறுதல்கள் செய்துள்ளதாக, கடந்த வாரம் அறிவித்தது. தற்போது ஆன்ட்ராய்ட் பயனர்களுக்கும், ...

மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்.....

Posted: 21 Nov 2015 03:53 AM PST

மேல்மலயனுர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் செஞ்சிக்கு அருகில் உள்ளது. குழந்தை வரம் வேண்டி ஒருபெண் பாம்பு போல வளைந்து நெளிந்து ஆடும் சாமி ஆட்டத்தினை  இங்கு காணலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சென்னையில் வெள்ளத்துக்குப் பிறகு பாம்புகள் பிரச்சினை

Posted: 21 Nov 2015 03:10 AM PST

- சென்னையில் தாழ்வாக உள்ள பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ள நிலையில், தண்ணீரில் இருந்து பாம்புகள் பலவும் அச்சறுத்தலாக இருக்கின்றன. தாம்பரம், முடிச்சூர், மடிப்பாக்கம், துரைப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் வீடுகளில் வெள்ளநீர் நிரம்பியுள்ளது. தண்ணீர் வற்றியவுடன் பாம்புகள் தென்பட வாய்ப்பிருப்பதாக விலங்கு மீட்பாளர் நிஷாந்த் ரவி என்பவர் தெரிவித்தார். நீரை விட வறண்ட சூழலில் பாம்புகள் ஆக்ரோஷமானவை என்று கூறும் நிஷாந்த் ரவி, "முடிச்சூர் பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ...

குடியரசு தின விழா தலைமை விருந்தினர் பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே

Posted: 21 Nov 2015 02:47 AM PST

- 2016 குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராக இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே. - நாட்டின் 67-வது குடியரசு தின விழா 2016 ஜனவரி 26-ல் கொண்டாடப்படுகிறது. - இந்த விழாவின் தலைமை விருந்தினராக பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹாலந்தே வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. - --------------------------------

பிறவி சக்கரம்..

Posted: 21 Nov 2015 01:16 AM PST

தெய்வங்களுக்கு முன்பு தீபாராதனை காட்டும் அர்ச்சகர் அந்த தீபத்தை இடமிருந்து வலமாக ஒரு முறை சுற்றி வந்து தீபத்தை தெய்வத்தின் முகத்திற்கு நேராக காட்டுவார்..அதனுடைய அர்த்தம் ஆன்மா என்னும் தீபம் இந்த பிறவி சக்கரத்தை ஒரு முறை சுற்றி இறுதியை அடைந்தவுடன் பரமாத்மா என்ற இறைவனை காண்கின்றது என்பதே ஆகும்..

சிவபெருமான் ஜோதியாக இருப்பதால் அவருக்கு கொடுக்க வேண்டிய அடையாளங்கள் சங்கர பெருமானுக்கு பக்தியில் என்னென்ன கொடுக்கப்பட்டுவிட்டன..

Posted: 21 Nov 2015 12:51 AM PST

1)புலித்தோல் : இறைவன் எந்த ஒரு உயிருக்கும் தீங்கு நினையாதவர்..அவர் ஒரு உயிரை கொன்று அதன் தோலை அணிந்துகொள்வாரா..உண்மையில் புலி பசித்தாலும் புல்லை தின்னாது அது போல இந்த கலியுகத்தின் எந்த ஒரு தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் வைராக்யமாக இருக்கவேண்டும் என்பதாகும்.. 2)உடுக்கை: எப்பொழுது இரவு நேரம் வருகின்றதோ அப்பொழுது குறிசொல்பவர் நல்ல காலம் பிறக்குது என்று சாமத்தில் சொல்ல ஆரம்பிப்பார்..இறைவன் கூட இந்த கலியுகம் என்ற இரவு முடிந்து சத்யுகம் என்ற பகல் பிறக்கின்றது என்பதை ஞானமாக கொடுக்கின்றார்..இதுவே ...

பூஜை சாமான்கள்.

Posted: 21 Nov 2015 12:46 AM PST

மனதை பரிசுத்தம் ஆக்கி..அதில் வரும் நல்ல எண்ணங்களை தீர்த்தமாக்கி என்னை உலக நன்மையின் காரியத்தில் பயன்படுத்தவேண்டும் என்று தேங்காயும்..இந்த தேகத்தில் இருந்தே எல்லா பாவ கணக்குகளையும் முடித்து முக்திப்பழம் ஆகிடவேண்டும் என்று வாழைப்பழமும்.. என்னிடமிருந்து நல்ல எண்ணங்கள் என்ற நறுமணம் அனைவருக்கும் பரவவேண்டும் என்று அகர் பத்தியும் கோவிலில் வழிபாட்டுக்கு வைக்கப்படுகின்றது..வாழ்த்துக்கள்..

சிவபெருமான் ஒரு ஜோதியானவர் என்று உணர்ந்துகொள்ள...

Posted: 21 Nov 2015 12:41 AM PST

எங்கே சிவபெருமானின் கோவில் இருக்கின்றதோ..அங்கே சிவ லிங்கத்திற்கு மேலே ஒரு தீபத்தை ஏற்றி வைத்து அதை சுற்றிலும் கண்ணாடி வைத்திருப்பார்கள்..செல்பவர்கள் முதலில் அந்த ஜோதியைதான் பார்க்கவேண்டும் அதுவே சிவபெருமானின் அடையாளம்..அதற்க்கு கீழே உள்ள சிவலிங்கம் அந்த ஜோதியின் நினைவார்த்த சின்னத்தின் அடையாளமான சிலை ஆகும் ..நாம் கொண்டு செல்லும் அபிசேக பொருட்கள் ஜோதிக்கு அபிசேகம் செய்யமுடியாத காரணத்தால் இன்றும் லிங்கத்திற்கு அபிசேகம் செய்யப்படுவதை காணலாம்..

வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…!

Posted: 21 Nov 2015 12:17 AM PST

ஓசூர் டி.வி.எஸ் அகாடமியில்,வித விதமான செடிகளுக்கு நடுவே மழலைகள் ஓடியாடி வேர்வை சிந்த வேலைபார்த்துக் கொண்டிருந்தனர். "வகுப்பு நேரத்தில் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்…?" என புரியாமல் நாம் நிற்க விளக்கினார் ஆசிரியை கிருஷ்ணவேனி. "இது எங்க பள்ளியோட ஓப்பன் கிளாஸ்ரூம்.எல்லா வகுப்பு மாணவர்களும் வெவ்வேறு விதமான தோட்டக்கலையில் ஈடுபடுறாங்க. பாடம் குறைவுங்கிறதால சின்ன குழந்தைகள் பள்ளி நாட்களில் இதுக்காக தினமும் ஒருமணி நேரம் செலவிடுறாங்க. எல்.கே.ஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை இருக்கும் மாணவர்கள் ...

சட்னி, சாம்பார்ல சிதறு தேங்காய்தான் சேர்க்கிறோம்…!

Posted: 21 Nov 2015 12:07 AM PST

நீதாண்டா  வாசகன் !

Posted: 20 Nov 2015 11:34 PM PST

ஐயையோ வேலைக்காரியை எதுக்கு மடியல உக்கார வெச்சிருக்கீங்க?'' ''நீதானே சொன்னே... வேலைக்காரியை வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும்னு! *************************************************************************************** மச்சான்னு கூப்பிடறதாலே நமீதா உனக்குக் கொழுந்தியாளும் இல்லை. உன் கொழுந்தியாள் உன்னை மச்சான்னு கூப்பிடறதாலே அவ நமீதாவும் இல்லை! ********************************************************************************************* மொட்டை பிட்டு ! சாமி தலையில் இருந்த தங்கக் கிரீடத்தை திருடினியா ...

வலிக்கிற மாதிரி அடிச்சிட்டு, தூங்காம தவிக்கிற அப்பா..!

Posted: 20 Nov 2015 11:29 PM PST

பணத்தை சரியான கழுதையா பார்த்துக் கொடுங்க…!

Posted: 20 Nov 2015 11:27 PM PST

தூய்மைப் பணியாளினிக்கு…

Posted: 20 Nov 2015 10:57 PM PST

- தூய்மைப் பணியாளினிக்கு கழிப்பறை வசதியுடன் சமத்துவபுரத்தில் வீடு – ————————– – ஓட்டைச் சட்டி ஓய்வின்றி கொழுக்கட்டை வேக – ———————– – சந்தையில் விற்க பசுவின் சோகம் கொட்டகை வசதி – ——————— – பட்டு ஆடைகள் பகட்டுடன் விலை பட்டுப்போகும் நெசவாளி – ——————— – பால் அங்கங்கள் கசங்கும் போதெல்லாம் இதயம் கல்லாக விலைமாது – ——————– – த.ராசேந்திரன் மறந்து போன முகங்கள்- கவிதை தொகுப்பிலிருந்து

கருப்பை வாய் – புற்றுநோய் -பெண்களே உஷார்

Posted: 20 Nov 2015 10:46 PM PST

கருப்பை வாய் – புற்றுநோய் இந்தியாவில் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் காரணமாக ஆண்டுதோறும் புதிதாக 1.32 லட்சம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதில் 74 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த புற்றுநோயைக் கண்டறிய குறைந்த செலவில் பரிசோதனைகள் இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகும். கர்ப்பப்பைவாய் புற்று நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் முழுமையாகக் குணப்படுத்தி உயிரிழப்பைத் தடுக்க முடியும். பெரும்பாலான வளரும் நாடுகளில் புற்றுநோயால் பெண்கள் உயிரிழப்பு என்றாலே அது கர்ப்ப வாய் புற்றுநோயாகத்தான் ...

பொன்மொழிகள்....

Posted: 20 Nov 2015 10:33 PM PST

பொன்மொழிகள்.... * எப்பொழுதும் உன்னை நினைத்துச் சுயநலமாக இருப்பதைவிட, மற்றவர்களை நினைத்துப் பொதுநலமாக சிந்தி, நீ நன்றாக இருப்பாய். * வாழ்க்கை ஒருமுறை, அதை மற்றவர்களுக்காகவும் வாழ்ந்து காட்டப் பழகிக் கொள்ள வேண்டும். * நீ இந்தப் பூமியை விட்டு வெளியேறும்போது நீதி, நேர்மை, மனிதாபிமானம் போன்றவற்றை விட்டுச் செல், அது உன் சந்ததியை நன்றாக வழிநடத்தும். * நீ எப்பொழுதும் நல்லவற்றையே சிந்தி, உனக்கு எல்லாம் நல்லவைகளாகவே நடக்கும் இது விதி, தீயவற்றைச் சிந்தித்தால் தீயவையே நடக்கும் இதுவும் விதி. * ...

குடிக்காதடா...

Posted: 20 Nov 2015 09:46 PM PST

குடிக்காதடா... குடிக்காதடா மனிதா - நீ குடிச்சியினா குடல் அழுகிச் செத்துருவடா... குடும்பத்த கொஞ்சம் நெனச்சிப் பாருடா.. குடிக்கிற காச தினம் சேர்த்து வையுடா... (குடிக்காதடா...) குடி குடியைக் கெடுக்கும்னு உனக்குத் தெரியாதா? கூடி நின்னு குடிச்சா அது உடலைக் கெடுக்காதா? மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடுனு புரியாதா? அதை மாற்றத்தான் உன்னால் முடியாதா? (குடிக்காதடா...) குடிப்பதிலே என்ன சாதனை கண்டாய்? குடும்பத்தையும் குதூகலத்தையும் வீதியில் ...

ரமணியின் சிறுகதைகள்: கைக்கு எட்டியது!

Posted: 20 Nov 2015 09:44 PM PST

ரமணியின் சிறுகதைகள்: கைக்கு எட்டியது! 'இலக்கிய வேல்' நவம்பர் 2015 இதழில் வெளிவந்த என் சிறுகதை. http://ramanishortstories.blogspot.in/2015/11/014.html கைக்கு எட்டியது! சிறுகதை ரமணி (மே 2015) (இலக்கிய வேல் நவ 2015) வீட்டின் சின்னத் தோட்டத்தில் ஒரு பெரிய பங்கணபள்ளி மாமரம். ஒவ்வோர் ஆண்டும் அது எங்கள் நாக்குத் தினவைத் தீர்த்துவைக்கும். அதுவும் போன வருடம் நாங்கள் ஒரு மாம்பழம் கூடக் கடையில் வாங்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! முன்னொரு காலம் நாங்கள் லாயிட்ஸ் சாலையில் ஒரு வாடகை ...

உங்களைத்தான் அங்கிள்….

Posted: 20 Nov 2015 09:38 PM PST


-

மனப் புயல்...!!

Posted: 20 Nov 2015 09:35 PM PST

.மனப் புயல்…!! * புயல் மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. கரைகடந்தப் புயலினால் வயல்வெளிகள் உருக்குலைந்து விட்டன. . வீடு வாசல்கள் இழந்து மனித உயிர்கள் வாழ்வை இழந்து வெறுங்கையர்களாய் நிற்க வைத்துவிட்டது. வெள்ளம். எங்கும் பெருவெள்ளம். கரைபுரண்டு ஓடும் தண்ணீர் வெள்ளம். மக்கள் முகங்களில் தெம்பும் துயரமும் காணப்படுகின்றன. எத்தனையோ ஆண்டுகள் நீரைக்காணாத ஆறுகள் ஏரிகள் அணைகள் குளம் குட்டைகள் எல்லாம் நீர் நிரம்பி வழிகின்றன. பனிரெண்டு ஆண்டுக்கொருமுறை வரும் மகாமகத் திருவிழா போன்று, ஆற்றங்கரையில் நின்று மக்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™