Tamil News | Online Tamil News |
- ஊழல் புகார் அதிகாரிகள்: மத்திய அரசு கிடுக்கிப்பிடி
- பிரதமர் மோடிக்கு காங்., துணை தலைவர் ராகுல்...சவால் குற்றவாளி எனில் சிறையில் அடையுங்கள் என ஆவேசம்
- 'தங்க சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தது 400 கிராம் தான்!'
- நீதிபதிகள் நியமன விதிமுறை தயாரிக்க மத்திய அரசு மறுப்பு
- எங்களை புதைக்க வந்தீர்களா அமைச்சரிடம் மக்கள் ஆவேசம்
- தமிழகத்திற்கு தேவையான உதவியை தர மத்திய அரசு... உறுதி!
- இன்று முதல் நான்கு நாட்களுக்கு கடலோர பகுதிகளில் கன மழை எச்சரிக்கை
- 'முதல்வரிடம் கேளுங்கள்'
- இந்த ஆண்டின் 'சிறந்த மனிதர்' யார்
- இந்திராணியின் கணவர் கைது
| ஊழல் புகார் அதிகாரிகள்: மத்திய அரசு கிடுக்கிப்பிடி Posted: புதுடில்லி:'ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகள் மீது, அவர்கள் ஓய்வு பெறுவதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கும், மத்திய பணியாளர் நலத் துறை வலியுறுத்தியுள்ளது. நடைமுறை சிக்கல்கள் தற்போது, நாடு முழுவதும், 4,800 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சிலர் மீது, லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்கள் ஓய்வு பெறுவதற்கு, ஒரு சில மாதங்கள் அல்லது நாட்களுக்கு முன், நடவடிக்கை எடுக்கும் நடைமுறை ... |
| பிரதமர் மோடிக்கு காங்., துணை தலைவர் ராகுல்...சவால் குற்றவாளி எனில் சிறையில் அடையுங்கள் என ஆவேசம் Posted: புதுடில்லி, :''பிரதமர் மோடி, தன் சகாக்கள் மூலம், என் மீது சேற்றை வாரி இறைக்கிறார்; நான் குற்றவாளி எனில், என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும்,'' என, காங்., துணைத் தலைவர் ராகுல் ஆவேசமாக தெரிவித்து உள்ளார்.'காங்., துணைத் தலைவர் ராகுல், பிரிட்டன் அரசிடம், தன்னை அந்நாட்டு பிரஜை என, குறிப்பிட்டு உள்ளதால், அவரது இந்திய குடியுரிமையை ரத்து செய்து, எம்.பி., பதவியையும் பறிக்க வேண்டும்' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில், டில்லியில், முன்னாள் பிரதமர் இந்திராவின், 98வது பிறந்த நாள் நிகழ்ச்சியில், நேற்று பங்கேற்ற ராகுல் ... |
| 'தங்க சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தது 400 கிராம் தான்!' Posted: புதுடில்லி:'தங்க சேமிப்பு திட்டத்தின் கீழ், இதுவரை நாடு முழுவதும், வெறும், 400 கிராம் தங்கம் தான் முதலீடு செய்யப்பட்டு உள்ளது' என, நவரத்தினங்கள் மற்றும் தங்க நகை ஏற்றுமதி வளர்ச்சி குழுவான, ஜி.ஜே.இ.பி.சி., தெரிவித்து உள்ளது. இந்திய குடும்பங்களில், 52 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் முடங்கியுள்ளது. இதில் குறிப்பிட்ட அளவை, சந்தைக்கு கொண்டு வரும் நோக்கில், பிரதமர் மோடி, கடந்த 5ம் தேதி, தங்க சேமிப்பு, தங்க பத்திரம், தங்க நாணய விற்பனை என, மூன்று திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இதில், வங்கிகளில் தங்கத்தை சேமிக்கும் திட்டத்தின் கீழ், இரு வாரங்களில், 400 கிராம் ... |
| நீதிபதிகள் நியமன விதிமுறை தயாரிக்க மத்திய அரசு மறுப்பு Posted: புதுடில்லி: 'உயர் நீதிமன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, எவ்வித விதிமுறைகளையும் தயாரித்து தர, அரசு தயாராக இல்லை' என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீதிபதிகள் நியமனத்திற்காக, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்டு வரும், 'கொலீஜியம்' எனப்படும், நீதிபதிகள் குழுவுக்கு பதிலாக, நீதித்துறை நியமன கமிஷனை அமைத்து, நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என, மத்திய அரசு, கடந்த ஆண்டில் சட்டம் கொண்டு வந்தது. அதை கடந்த மாதம், சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து, கொலீஜியம் முறையே தொடரும் என உத்தரவிட்டது. மேலும் கொலீஜியம் முறையை ... |
| எங்களை புதைக்க வந்தீர்களா அமைச்சரிடம் மக்கள் ஆவேசம் Posted: சென்னை:மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற, எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சரிடம், 'பத்து நாட்களுக்கு பின் எங்களை புதைக்க வந்தீர்களா?' என, கொரட்டூர்வாசிகள் ஆவேசமாக கேள்வி கேட்டனர். இந்த சம்பவத்தால், அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.சென்னை அம்பத்துார் மண்டலம், கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பழைய அக்ரஹாரம், சிவலிங்கபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும், வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.கடந்த 9ம் தேதி முதல், பகுதிவாசிகளின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அவர்கள், தீபாவளியை கொண்டாட முடியாமல் போனது.மழைநீரை அகற்றுவது என்பது உள்ளிட்ட எந்தவித ... |
| தமிழகத்திற்கு தேவையான உதவியை தர மத்திய அரசு... உறுதி! Posted: சென்னை:தமிழக வெள்ளச் சேதத்தை பார்வையிட, மத்தியக் குழுவை அனுப்பவும், தமிழகத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும், மத்திய அரசு உறுதியளித்து உள்ளது. இந்த தகவலை, நேற்று தன்னிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர் ஜெயலலிதாவிடம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார். முதல்வர் ஜெயலலிதா, நேற்று தொலைபேசியில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசினார். |
| இன்று முதல் நான்கு நாட்களுக்கு கடலோர பகுதிகளில் கன மழை எச்சரிக்கை Posted: சென்னை: 'அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வால், தமிழகம், புதுச்சேரியில், இன்று முதல், நான்கு நாட்களுக்கு மீண்டும் கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் பெய்த மழை பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், மீண்டும் விடுக்கப்பட்டு உள்ள கன மழை எச்சரிக்கையால், பொதுமக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது.வங்கக் கடலில் ஏற்பட்ட காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தால், நேற்றுடன் முடிந்த, ஒரு வாரத்தில், சென்னையில் மிக அதிகபட்சமாக, 44 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில், 25 மாவட்டங்களில் சராசரி மழையை விட கூடுதல் மழை பெய்தது.சென்னை, ... |
| Posted: திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், திருநின்றவூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரணம் வழங்கினார்.தண்ணீர்குளம், ராமாபுரம் பகுதிகளில், வெள்ளச் சேதங்களை பார்வையிட்டார். அப்போது சிலர் அவரிடம், 'நீங்கள் மாவட்டம் முழுவதும் செல்லாமல், குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே செல்கிறீர்களே' என, கேட்டனர்.அதற்கு விஜயகாந்த், 'இந்த கேள்வி எல்லாம் என்னிடம் கேட்கக் கூடாது; முதல்வரிடம் கேளுங்கள்' என கிண்டலாக பதிலளித்தார்.தண்ணீர்குளத்தில் 100 பேருக்கு தலா 10 கிலோ அரிசி, காய்கறி, சேலை ... |
| இந்த ஆண்டின் 'சிறந்த மனிதர்' யார் Posted: நியூயார்க்:அமெரிக்காவின் பிரபல, 'டைம்' பத்திரிகை, இந்தாண்டின் சிறந்த மனிதரை தேர்வு செய்ய வாசகர்களுக்கான போட்டியை நடத்துகிறது. இதில், பிரதமர், நரேந்திர மோடி, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, இந்தியாவைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை உட்பட, 58 பேர் இடம் பெற்றுள்ளனர்.அதிகப்படியான வாசகர்களின் ஓட்டுகளை பெறுபவர், இந்தாண்டின் சிறந்த மனிதராக அடுத்த மாதம் அறிவிக்கப்படுவார். இதுவரை, மோடி, சுந்தர் பிச்சை, ரஷ்ய அதிபர் புடினுக்கு ஆதரவாக, தலா, 1.3 சதவீத வாசகர்கள் ஓட்டளித்துள்ளனர். முகேஷ் அம்பானிக்கு, 0.2 சதவீதம் பேர் ஆதரவு ... |
| Posted: மும்பை,:ஷீனா போரா கொலை வழக்கில், திடீர் திருப்பமாக, இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜி, நேற்று, சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். வட மாநிலங்களில் பிரபலமான தனியார், 'டிவி' சேனலில், மூத்த அதிகாரியாக பணியாற்றியவர், பீட்டர் முகர்ஜி, 59. இவர் மனைவி இந்திராணி, 44; இவர், தன் முதல் கணவர் மூலம், பிறந்த மகளான ஷீனா போராவை, 24, கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திராணியுடன், அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, டிரைவர் ஷ்யாம் ராய் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 2012ல், ஷீனா போராவை கழுத்தை நெரித்து கொன்று, உடலை மும்பையிலிருந்து, 84 கி.மீ., துாரத்தில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 20,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |