Tamil News | Online Tamil News |
- வெள்ள தடுப்பு திட்டங்களை கிடப்பில் போட்ட அதிகாரிகள்
- ஜி.எஸ்.டி.,க்கு கைகொடுக்குமா திருமண அரசியல்?
- சோம்பல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: சி.பி.ஐ., மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி
- சென்னை மிதக்க காரணம் என்ன? பொதுப்பணித்துறை அதிகாரி விளக்கம்
- நீர்நிலைகளை தூர்வார மறந்ததால் வெள்ள பாதிப்பை சந்திக்கும் மக்கள்
- பிரியங்கா வருகை காங்கிரசுக்கு பலம்: ராகுல்
- தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்? இரு எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் அழைப்பு
- சென்னையில் முடங்கியது போக்குவரத்து: பெட்ரோல், டீசல் விற்பனை பாதிப்பு
- வெள்ள சேத மீட்பு, நிவாரண பணிகளில் கட்சிகள் தாராளம்: தேர்தல் நெருங்குவதால் போட்டி போட்டு உதவி
- அதிபர் பதவி வேண்டாம்: விலகினார் பாபி ஜிண்டால்
- டேவிட் ஹெட்லி மனு; விசாரணைக்கு ஏற்றது மும்பை கோர்ட்
| வெள்ள தடுப்பு திட்டங்களை கிடப்பில் போட்ட அதிகாரிகள் Posted: வீணாகும் நீரை சேமிக்கவும், வெள்ள பாதிப்பை தடுக்கவும், அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலை திட்டங்கள் அளித்து, ஏழு ஆண்டுகளாகியும் தமிழக அரசு நிர்வாகம் துாங்கி வழிவதால், வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை வெளியேற முடியவில்லை.சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், 2005ல் மிகப்பெரிய அளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. மத்திய அரசின் நிலத்தடி நீர் வாரியம், மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை, சென்னை பல்கலை மற்றும் அண்ணா பல்கலை ஆகியவை இணைந்து, பல ஆய்வுகள் மேற்கொண்டு, சென்னையை மிரட்டும் வெள்ளத்துக்கு தீர்வு என்ன என, திட்டங்கள் வகுத்தன.இதன்படி, மூன்று ஆய்வுகள் ... |
| ஜி.எஸ்.டி.,க்கு கைகொடுக்குமா திருமண அரசியல்? Posted: குளிர்கால கூட்டத் தொடர் அடுத்த வாரம் துவங்கவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் கட்சியின் துணைத் தலைவர் ராகுலை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்து, தன் மகள் திருமண விழா அழைப்பிதழை வழங்கியுள்ளது, டில்லி அரசியல் வட்டாரங்களில், பலவித யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.வரும் 26ல், பார்லிமென்ட்டின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கவுள்ளது. இந்த தொடரில், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி உட்பட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. பீஹார் தேர்தல் முடிவு, பா.ஜ.,வுக்கு எதிராக அமைந்துள்ள நிலையில், ... |
| சோம்பல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: சி.பி.ஐ., மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி Posted: புதுடில்லி,: 'ஊழலில் ஈடுபடுவோர் மீது, எவ்வித பாரபட்சமும் இல்லாமல், மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஊழல் செய்வோர், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. பொதுமக்களுக்கு சரியாக சேவை செய்யாத, மூத்த அதிகாரிகள், 45 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். டில்லியில், சர்வதேச அளவிலான, சொத்து மீட்பு குறித்த மாநாடு, நேற்று நடந்தது. சி.பி.ஐ., ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில், 35 நாடுகளின் விசாரணை அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.இதில், பிரதமர் மோடி பேசியதாவது:இந்தியாவுக்கு மட்டுமல்ல, சர்வதேச ... |
| சென்னை மிதக்க காரணம் என்ன? பொதுப்பணித்துறை அதிகாரி விளக்கம் Posted: வெள்ளத்தில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மிதப்பதற்கான காரணத்தை, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் விளக்கிஉள்ளார்.பெயர் வெளியிட விரும்பாத அவர் கூறியதாவது:சென்னை, 178 கி.மீ., பரப்பளவு கொண்டது. இது, கடல் மட்டத்தில் இருந்து, 6 - 10 மீட்டர் உயரத்தில் உள்ளது. சென்னையின் நிலப்படுகை, நீரை குறைவாக உறிஞ்சும் தன்மை கொண்டது. பொதுவாகவே மழைநீர், மேடான நிலப்பரப்பில் இருந்து பள்ளமான நிலப்பரப்பை நோக்கி ஒடிவரும். இயல்பாகவே, தண்ணீர், ஐந்து கி.மீ., முதல், 10 கி.மீ., வரை பயணம் செய்தால் தான், ஒரு மீட்டர் பள்ளம் உள்ள இடம் கிடைக்கும். எனவே, கடல் மட்டத்தில் இருந்து உயரமான ... |
| நீர்நிலைகளை தூர்வார மறந்ததால் வெள்ள பாதிப்பை சந்திக்கும் மக்கள் Posted: கடலுார்: கடலுார் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை துார்வாராத காரணத்தால், விவசாயம் அழிவை சந்திப்பதுடன், மக்கள் ஆண்டுதோறும் வெள்ள பாதிப்பை சந்திக்க வேண்டியுள்ளது என, விவசாயிகள் வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர். நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுனாமி, தானே புயல், பருவம் தவறிய மழை, அதிக வெயில், கனமழை, மூடுபனி போன்றவைகளால் பிரதான தொழிலான விவசாயம் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், மழை வெள்ளத்தால், பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பெய்த ... |
| பிரியங்கா வருகை காங்கிரசுக்கு பலம்: ராகுல் Posted: பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., தோல்வி அடைந்ததை தொடர்ந்து, டில்லியில் உள்ள நிருபர்களை, துக்ளக் லேனில் உள்ள, தன் அலுவலகத்தில், நேற்று முன்தினம் காங்., துணை தலைவர் ராகுல் சந்தித்தார்.அப்போது, அவர் கூறியதாவது: 'காங்கிரசில், 60 வயது கடந்தவர்கள் ஓய்வு பெற வேண்டும்' என, மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்த கருத்தில், எனக்கு உடன்பாடு கிடையாது. கட்சிக்கு மூத்தவர்களும் தேவை; இளையவர்களும் தேவை. ஏ.கே.அந்தோணிக்கு, 76 வயது ஆகிறது. அவருக்கு, நாட்டின் பாதுகாப்புப் பணிகள் குறித்து, அனைத்து விவரங்களும் தெரியும். பொருளாதார சீர்திருத்ததை கொண்டு வந்த, மன்மோகன் சிங், ... |
| தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்? இரு எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் அழைப்பு Posted: ஸ்ரீரங்கம் மற்றும் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க, முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்ததால், விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் வரும் என, தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சொத்து குவிப்பு வழக்கில், தனக்காக ஆஜரான வழக்கறிஞர்கள் ஆறு பேருக்கு, காலியாக உள்ள, அரசு பணியாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் பதவி வழங்கவும், முதல்வர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.அமைச்சர்கள் பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மோகன், காமராஜ், ஆகியோர் கூடுதல் துறைகளை கவனித்து வருகின்றனர். அந்த துறைக்கு புதிய அமைச்சர்களை நியமிக்கவும், சர்ச்சைக்குள்ளான அமைச்சர்களை ... |
| சென்னையில் முடங்கியது போக்குவரத்து: பெட்ரோல், டீசல் விற்பனை பாதிப்பு Posted: கனமழையால், சென்னையில் போக்குவரத்து முடங்கியுள்ளதால், பெட்ரோல், டீசல் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில், 150; காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், தலா, 200 உட்பட தமிழகத்தில், 4,500 பெட்ரோல் 'பங்க்'கள் உள்ளன. ஒரு, 'பங்க்'கில், தினமும் சராசரியாக, 2,000 லிட்டர் பெட்ரோல்; 3,000 லிட்டர் டீசல் விற்பனையாகிறது. மொத்தமாக, தமிழகத்தில் தினமும், 90 லட்சம் பெட்ரோல்; 1.35 கோடி லிட்டர் டீசல் விற்பனையாகிறது. ஒரு வாரமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில், கனமழை பெய்து வருவதால், சாலைகளில், தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. சில இடங்களில், மழைநீரில் சாலைகள் அடித்து செல்லப்பட்டன. பல ... |
| வெள்ள சேத மீட்பு, நிவாரண பணிகளில் கட்சிகள் தாராளம்: தேர்தல் நெருங்குவதால் போட்டி போட்டு உதவி Posted: மழை வெள்ளத்தால், சென்னை உள்ளிட்ட, தமிழகத்தின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்பை, தேர்தலுக்கான ஆயுதமாக கையில் எடுத்துள்ள கட்சித் தலைவர்கள், நேரில் ஆய்வு, நிவாரண உதவி என்ற பெயரில், வெள்ளப் பகுதிகளை சுற்றி வந்து, தாராளம் காட்டத் துவங்கி உள்ளனர். முதல்வர் ஜெ.,:'எதற்கும் கவலைப்படாதீர்கள்!'வீடுதோறும் ரூ.3,000? உணவு பொட்டலங்கள், பாய், போர்வை தி.மு.க., தலைவர் கருணாநிதி: 'வெள்ளப் பாதிப்புக்கு உதவி தேவைப்படுவோர், தொடர்பு கொள்ளலாம்': போன்: 044 - 24320280/ மொபைல் எண்: 7810878108நிவாரண நிதி: ... |
| அதிபர் பதவி வேண்டாம்: விலகினார் பாபி ஜிண்டால் Posted: வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து, இந்திய வம்சாவளி இந்தியரான, லுாசியானா மாகாண கவர்னர் பாபி ஜிண்டால், 45, விலகியுள்ளார்.லுாசியானா மாகாண கவர்னர் பாபி ஜிண்டாலின் குடும்பம், 45 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் குடியேறியது. அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பாக போட்டியிட, பாபி ஜிண்டால் விரும்பினார். அதற்கான தீவிர பிரசாரத்தில், அவர் ஈடுபட்டு வந்தார். இருப்பினும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என, காட்டிக் கொள்வதை தவிர்க்கும் வகையில், சமீபத்தில், பாபி ஜிண்டால் அறிக்கை வெளியிட்டிருந்தார்.இது, அமெரிக்க வாழ் ... |
| டேவிட் ஹெட்லி மனு; விசாரணைக்கு ஏற்றது மும்பை கோர்ட் Posted: மும்பை : மும்பை தாக்குதல் வழக்கில், லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த, டேவிட் ஹெட்லிக்கு தொடர்புள்ளதாக, போலீசார் தாக்கல் செய்த மனுவை, மும்பை கோர்ட், விசாரணைக்கு ஏற்றது. மும்பையில், 2008ல், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 160க்கும் அதிகமான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். தாஜ் ஓட்டல், சத்திரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்ட ஹெட்லி, மும்பை தாக்கு தலில் தனக்கு தொடர்புள்ளதை ஒப்புக் கொண்டான். இதையடுத்து, அவன் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டான். ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 19,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |