Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இவ்வளவு மழை பெய்தும் இயல்பை எட்டவில்லை

Posted:

சென்னை:விடாது பெய்த கனமழையால், சென்னை உட்பட, பல மாவட்டங்கள் தத்தளிக்கின்றன. இதில் இருந்து மீளும் வகையில், 'தமிழகத்தில் கன மழை குறையும். ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்யும். திருவள்ளூர் மாவட்டத்தில், கனமழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வளவு நாட்களில், அதிக அளவில் மழை பெய்தும், வழக்கமான அளவை, தமிழகம் இன்னும் எட்டவில்லை.

வெள்ளத்தில்...:
தமிழகத்தில், ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் உள்ளிட்ட வட மாவட்டங்கள், வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சென்னையில், ...

இந்திய பொருளாதார வளர்ச்சிஅருண் ஜெட்லி பெருமிதம்

Posted:

துபாய்:''சர்வதேச அளவில், மிக நெருக்கடியான பொருளாதார சூழல் நிலவினாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை,'' என, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி கூறினார்.

ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் ஒன்றான துபாயில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பங்கேற்ற மாநாட்டில், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது:
பொருளாதார சிக்கல்:
முன்பெல்லாம், 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான், சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும். இப்போது, நிலைமை மாறிவிட்டது. அடிக்கடி, பொருளாதார ...

ஆண்டுக்கு 40 நாள் விடுமுறை உ.பி., அரசு ஊழியர்களுக்கு 'ஜாலி'

Posted:

லக்னோ,:உ.பி.,யில், இந்தாண்டுக்கான அரசு விடுமுறை, 40 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது; இங்கு, சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும், 'சத்' திருவிழா மிகவும் பிரபலம். இதுவரை, இந்த திருவிழாவுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது இல்லை. முதல் முறையாக, இந்தாண்டு, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தாண்டில், அரசு விடுமுறை, 40 நாட்களாக அதிகரித்துஉள்ளது.
இதுகுறித்து, உ.பி., அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:உ.பி.,யில், சில ஆண்டுகளுக்கு முன்வரை, ...

224 பேருடன் ரஷ்ய விமானத்தை தகர்த்தது வெடிகுண்டு: தகவல் தெரிவிப்போருக்கு ரூ.325 கோடி சன்மானம்

Posted:

மாஸ்கோ:'ரஷ்ய விமானத்தை தகர்த்தவர்கள் குறித்து தகவல் தருவோருக்கு, 325 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும்' என, ரஷ்யா அறிவித்துள்ளது. சம்பவத்துக்கு காரணமாக கருதப்படும், ஐ.எஸ்., பயங்கரவாதிகளை பழிவாங்குவோம் என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சபதம் செய்துள்ளார். ஆப்ரிக்காவின் வட கிழக்கு பகுதியில் உள்ள எகிப்து நாட்டின் சினாய் பகுதியில், அக்., 31ல், ரஷ்ய விமானம், 224 பேருடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த விமானம் திடீரென வெடித்துச் சிதறியதில், அதில் பயணம் செய்த அனைவரும் உடல் சிதறி உயிரிழந்தனர். சிரியா, ஈராக் நாடுகளின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள, ஐ.எஸ்., ...

வெள்ள நிவாரணம்: தி.மு.க., ரூ.1 கோடி நிதி

Posted:

சென்னை,:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:பத்து நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழை, வெள்ளம் காரணமாக, அனைத்துப் பிரிவு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்; பலர் வீடு இழந்து, வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர்.

அவர்களின் துயரில் பங்கேற்கும் விதமாக, தி.மு.க., சார்பில், துயர் துடைப்பு நிதியாக, ஒரு கோடி ரூபாய், தமிழக அரசிடம் வழங்கப்படும்.மேலும், அரசு அறிவித்துள்ள, 500 கோடி ரூபாய் என்பது, ஏற்பட்டிருக்கும் இழப்பின் அளவோடு ஒப்பிடுகையில், மிகவும் குறைவு. அதனால், மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, பெரும் அளவுக்கு நிதி பெறவும், வசதி ...

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கிறார் நிதிஷ்

Posted:

புதுடில்லி, ;பீஹாரில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய, மெகா கூட்டணி, மகத்தான வெற்றி பெற்றது; பா.ஜ., படுதோல்வி அடைந்தது.இதையடுத்து, பா.ஜ.,வுக்கு, பலமான மாற்று அணியை உருவாக்கும் நடவடிக்கைகளை, நிதிஷ் குமார் தீவிரப் படுத்தியுள்ளார்.

பீஹாரில் அமைந்ததை போல், தேசிய அளவில், பலமான கூட்டணியை உருவாக்கி, மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, வரும் 20ல், பீஹாரில் நடக்கவுள்ள புதிய அரசின் ...

மழை வெள்ளத்தில் மிதக்கும் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பங்களாக்கள்

Posted:

சென்னை : சென்னை, அடையாறில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், மணப்பாக்கத்தில், 40 ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வசிக்கும், 'ரிவர் வியூ' காலனி, நீரில் மூழ்கியது. அங்கிருந்து, 500 பேரை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் படகுகள் மூலம் மீட்டனர்.சென்னையில், செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால், நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதனால், அடையாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆலந்துார் மாநகராட்சி மண்டலம், 157வது வார்டு, மணப்பாக்கம், அடையாறு ஆற்றை ஒட்டி, 'ரிவர் வியூ' காலனி உள்ளது. அங்கு, 40 ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பங்களாக்கள் உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன; 200 ...

சென்னையைச் சுற்றி வெள்ளத்தில் சிக்கி தவிப்போர் 50,000 பேர்: ஏரி, கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் தண்ணீர் வடிய வழியில்லை:

Posted:

கொட்டி தீர்த்த கனமழையால், சென்னை மற்றும் புறநகரில், 50 ஆயிரம் பேர், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். ஏரிகள், கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், வடிய வழியில்லாமல், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி உள்ளது. வீடுகள் மற்றும் மொட்டை மாடிகளில் பரிதவிப்போரை, ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்கும் பணியில், அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கடந்த சில தினங்களாக பெய்த கனமழை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி, உபரிநீர் அதிக அளவில் வெளியேறி ...

எச்சரிக்கையுடன் உள்ளோம்: ராஜ்நாத் அறிவிப்பு

Posted:

புதுடில்லி:''பிரான்ஸ் தலைநகர் பாரிசில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், கொடூரத் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; எச்சரிக்கையுடன் உள்ளோம்,'' என, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த ராஜ்நாத் சிங் கூறிஉள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில், கடந்த வாரம், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில், 129 பேர் உயிர்இழந்தனர்; 300 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, இந்தியா உள்ளிட்ட நாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டில்லியில் ...

தத்தளிக்குது கோயம்பேடு மார்க்கெட்: வடிகாலை தேடும் சி.எம்.டி.ஏ.,

Posted:

சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. அங்கு, 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் வசதிகள் என்ன ஆனது என்பது புதிராக உள்ளது.சென்னை போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக, கோயம்பேட்டில், காய், கனி, பூ மொத்த விற்பனை அங்காடி அமைக்கப்பட்டது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., இந்த அங்காடி வளாகத்தை அமைத்து, நிர்வகித்து வருகிறது. இந்த வளாகத்தில், அடிப்படை வசதிகளில் குறைபாடு உள்ளதாக, வணிகர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில், இங்கு, சாலைகள், மழைநீர் வடிகால் வசதிகள், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™