ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....
- Ebooks from Tamil to English
- கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்!
- மனமெனும் நந்தவனத்தில்…
- காயங்களை ஆற்றும் ஒரே மருத்துவர்…
- ரமணி ஹைக்கூ
- வாட்ஸ்அப்பில் எதையும் ஷேர் செய்யுமுன்.. இதைச் செய்யுங்கள் ப்ளீஸ்!
- என்னைப்பற்றிய தகவல்--selvaraj
- அனுபவத் துளிகள்
- தொடத் தொடத் தொல்காப்பியம்(398)
- இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு
- சமையலை கத்துக்கலைன்னா கல்யாணம் கிடையாது...!!
- விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் காலமானார்
- பிரபல பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்
- நவபாஷாணம் பற்றிய அறிய தகவல்கள்
- தலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு - இயற்கை மருத்துவம்
- நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....
- பேய் மழை ,பிசாசு மழை
- பிரச்னைகளிடம் இருந்து விலகி இருக்கணும்..!!
- சென்னையைப் புரட்டிய வெள்ளம் (12 - 16 ,நவம்பர் 2015)
- ஏழாவது ஊதிய ஆணையம்: 15 சத உயர்வுக்கு பரிந்துரை!
- மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்.....
- கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!!
- நன்மை பயக்கும் பச்சையாக சாப்பிடும் சத்து நிறைந்த காய்கறிகள்
- திருமந்திரம் விளக்கப்படங்கள்
- ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள்
- குறள் அந்தாதி
- என்னைவிட்டு செல்கிறாயே
- கங்கைகொண்டசோழபுரம் முதல் கடாரம் கொண்டான் வரை
- பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
- சசியின் குட்டி கவிதைகள்
| தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... Posted: 17 Nov 2015 02:03 PM PST தோல்வி கண்டு துவளாதே!!! "முடியாதது"- மூளையில் ஏறினால்... முடிந்ததும் "முடியாதது" ஆகி விடும்!!! நேற்றைய முயற்சி தன் முன்னேற்றத்தில் கண்ட வெற்றியே இன்றைய தோல்வி!!! முயற்சியின் தளர்ச்சி தொடங்கிய இடம் - தோல்வி!!! முயற்சியின் வளர்ச்சி முடிந்த இடம் - வெற்றி!!! முதல் முயற்சியில் கிடைத்த வெற்றியில் முழு ருசி ஏது??? வெற்றியில் கண்ட பெருமைக்கு ஏது தோல்வியில் கண்ட பொறுமை???!!! எதிர்பார்ப்பது எல்லாம் நடந்தால் எதார்த்தம் இறந்து விடும்!!! எதிர்பார்ப்பு எதார்த்தமாய் இருந்துவிட்டால் ... |
| Posted: 17 Nov 2015 11:35 AM PST Hi friends , in this topic page ,i have plan to upload all tamil ebooks ,English stories ,history,mystory etc...what ever i had ,every things i am ready to share with you friends.if you need any books please let me know i will try to my level best .2 months before i left from my job .now i have searching jobs.in this mean time ,am very interest to spend my time here. Thanks, 1.100 kodi roopai vairam---Indira soundarajan நூறு கோடி ரூபாய் வைரம் 2.6961—sujathaa 3.Analai kaayum ambulikal---Is அனலாய் ... |
| கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Posted: 17 Nov 2015 11:34 AM PST கி.மு., கி.பி (கிறித்துவுக்கு முன்; கிறித்துவுக்கு பின்) வேண்டாம்...................... தி.மு., தி.பி (திருவள்ளுவருக்கு முன்; திருவள்ளுவருக்குப் பின்) எனச் சொல்வோம் ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டா? - வ.வேம்பையன் எழுதிய கட்டுரை நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம். மற்றவை மானம். உயிர். குடும்பம். குமுகாயம். ஊர், நகர், நாடு, உலகம் பற்றிய நிகழ்ச்சிகளைக் கணக்கிடுவதற்குக் கால அளவை இன்றியமையாத ஒன்றாகிறது. 'நாளென ஒன்று போல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின் என்ற ... |
| Posted: 17 Nov 2015 11:08 AM PST - இடியுடன் கூடி மழை வருகிறது பூமியில் மனிதன் – —————— – நிழலைக் குறுக்கும் உச்சிவேளைப் பொழுது பகலவன் விளக்கும் – ——————- – ஏரி குளங்களுக்கு இயற்கை உபாதையாக கழிங்கல் வழி – ——————– – வெட்டிய விறகு விற்று சுள்ளி பொறுக்கிச் சமையல் – ————— – மனமெனும் நந்தவனத்தில் உயிர்ப் பூக்கள் மலர்ந்திட – ஆன்மிகம் ஞான விதைகளைத் தூவும் – =========================== [color:0277= #000000]-த.ராசேந்திரன் மறந்து போன முகங்கள்- கவிதை தொகுப்பிலிருந்து |
| காயங்களை ஆற்றும் ஒரே மருத்துவர்… Posted: 17 Nov 2015 11:02 AM PST - – இன்னல் எனும் காயங்களை ஆற்றும் ஒரே மருத்துவர் எதிர்காலம் – ——————- – மரம் ஒடிந்திடாது கூடு செய்கிறது மரங்கொத்தி – ———————– – பாஞ்சாலியைத் துகிலுரிந்த சேலையைக் காண வேண்டும் கின்னஸ் சாதனைக்கு – ————————- காது, மூக்கு குத்த பெண் குழந்தை அழும் சீர் செய்ய நகைக்கும் – ——————— – புகழ் கொள்வதாய் குறிஞ்சிப் பூவாய் நீ நகைப்பாய் –[color:9b51= #330000] -====================== -த.ராசேந்திரன் மறந்து போன முகங்கள்- கவிதை தொகுப்பிலிருந்து |
| Posted: 17 Nov 2015 09:34 AM PST ரமணி ஹைக்கூ 03/11/2015 1. ஓவியக் கண்காட்சி அகலும் விழிகள் நடுவே கறுப்புக் கண்ணாடி 2. அடைமழை அழிக்கதவு ஓசையுடன் தாழ்ப்பாள் திறந்தார் காற்றில் குழந்தையின் முகம் 3. விண்வெளியில் பம்பரம் சாட்டை எது? அப்பா ஆய்வு மகன் கையில் பட்டம் ***** |
| வாட்ஸ்அப்பில் எதையும் ஷேர் செய்யுமுன்.. இதைச் செய்யுங்கள் ப்ளீஸ்! Posted: 17 Nov 2015 09:33 AM PST உடனடியாக ஏ பாசிட்டிவ் ரத்தம் தேவை, இலவச மருத்துவ சேவைக்கு அணுகவும், கல்வி உதவிக்கு இந்த எண்ணை அழைக்கவும், குழந்தையைக் காணவில்லை... இப்படி தினம்தினம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என பரவிக் கொண்டிருக்கும் எத்தனையோ தகவல்களை நம்மில் பலரும் பரப்பிக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலும், அது உண்மையா... பொய்யா... அல்லது அந்தத் தகவல் முற்றுப்பெற்றுவிட்டதா என எதையும் உறுதிசெய்யாமல் ஷேர் செய்பவர்கள்தான் அதிகமானோர் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. அதன் விளைவு... பலருக்கும் தேவையில்லாத சங்கடங்களை உண்டுபண்ணுவதாகவே இருக்கிறது. ... |
| Posted: 17 Nov 2015 08:51 AM PST என் பெயர் : கோ. செல்வராஜ். ஊர் : திருச்சிராப்பள்ளி வேலை : தரக்கட்டுப்பாட்டு பொறியாளர் பிடித்தது : புத்தகம் படித்தல் கேட்பது : திரை இசை மெல்லிசை பாடல்கள் ஈகரையை அறிந்த விதம்:இணையத்தில் உலவும் பொழுது. |
| Posted: 17 Nov 2015 07:12 AM PST அனுபவத் துளிகள் 01. காக்கை (நேரிசை ஆசிரியப்பா) ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில் தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை! நீரால் தொட்டி நிறைந்தே வழியும் நேரம் பார்த்தே நீரைப் பருக வாயசம் அமரும் வழிகுழாய்! மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே! [வாயசம் = காக்கை] --ரமணி, 21/09/2015 ***** |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(398) Posted: 17 Nov 2015 06:52 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| இன்றைய செய்தி - (சுருக்கமாக) - தொடர் பதிவு Posted: 17 Nov 2015 06:50 AM PST விருதை திருப்பித்தர மாட்டேன்: கமல் 'பளீச்' பதில் - ஐதராபாத் : எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து விருதை திருப்பியளித்து தான் தங்களது கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது இல்லை, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகள் உள்ளன என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், தான் வாங்கிய தேசிய விருதை ஒருபோதும் திருப்பியளிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளார். - ----------- |
| சமையலை கத்துக்கலைன்னா கல்யாணம் கிடையாது...!! Posted: 17 Nov 2015 06:48 AM PST - ஒரு மணி நேரமா டெலிபோன் டைரக்டரியைப் புரட்டிக்கிட்டிருக்கையே. யாரோட போன் நெம்பர் தேடறே? - நம்ம மானேஜர் மனைவிக்கு அடுத்த வாரம் பிரசவம் ஆகப் போகுது. யாருக்கும் இல்லாத பேராகத் தேடி பத்து பேர் எழுதித் தரச் சொல்லறார். - --------------------------------------- - டாக்டர்: இன்னிக்கு டிஸ்சார்ஜ் ஆகிற பெரியவர் எதுக்காக டாக்டர் சர்டிபிகேட் கேட்கிறார்? நர்ஸ்: முதியோர் பள்ளியில் படிக்கிற அவர் பரீட்சைக்குப் பயந்துதானே இங்கே வந்து நோயாளியா சேர்ந்திருக்கார். - கரம், கோவை. - --------------------------------------------- - கணவன்: ... |
| விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் காலமானார் Posted: 17 Nov 2015 06:47 AM PST விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் இன்று மதியம் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 89. உடல் நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் குர்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அசோக் சிங்கால் இன்று மதியம் 2.24 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில உலக செயல் தலைவர் பிரவீன் தொகாடியா கூறினார். மூச்சுத் திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை கடந்த ஞாயிறன்று மோசமடைந்ததை அடுத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து ... |
| பிரபல பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார் Posted: 17 Nov 2015 06:46 AM PST பிரபல பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ்(95) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயருடன் கோவையில் 1920-ம் ஆண்டு பிறந்த பித்துக்குளி முருகதாஸ், தமிழ்க் கடவுளான முருகன் மீது நெஞ்சை உருக்கும் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களை இயற்றி, இசையமைத்துப் பாடியுள்ளார். தலையில் காவித்தலைப்பாகை உடுத்தி, முகத்தில் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து சற்றே வித்தியாசமான முருக பக்தராக காட்சியளித்த பித்துக்குளி முருகதாஸ், கந்தர் அனுபூதி உள்பட முருகன் மீது பல பக்திப்பாடல்களை இயற்றியுள்ளார். ... |
| நவபாஷாணம் பற்றிய அறிய தகவல்கள் Posted: 17 Nov 2015 06:43 AM PST நவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா? நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன.இதில் நீலி என்றொரு வகையும் உண்டு.நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும். ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல்,இயற்பியல் பண்புண்டு.அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்.., 1.சாதிலிங்கம். 2.மனோசிலை 3.காந்தம் 4.காரம் 5.கந்தகம் 6.பூரம் 7.வெள்ளை ... |
| தலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு - இயற்கை மருத்துவம் Posted: 17 Nov 2015 06:39 AM PST தலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு - இயற்கை மருத்துவம் * வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். * கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். * வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து ... |
| நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... Posted: 17 Nov 2015 06:37 AM PST போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன் உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார். என்பெற்ற தாயாரும் என்னைப் பிணமென்று இகழ்ந்துவிட்டார் பொன்பெற்ற மாதரும் போவென்று சொல்லிப் புலம்பிவிட்டார் கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடமுடைத்தார் உற்றொழிய ... |
| Posted: 17 Nov 2015 06:23 AM PST பேய் மழை ,பிசாசு மழை . வெள்ளி அன்று காலை 8 .30 மணி சுமாருக்கு , ஈகரை பதிவேட்டில், வருகை தந்து மற்ற பதிவெல்லாம் பார்க்கலாம் என்று நினைக்கையில் , மழையோ மழை . வீட்டின் முன் இருந்த பெரிய மரம் விழுந்து , ரோடு பிளாக் .பவர் கட் , இன்டர்நெட் கட் . இன்றுதான் , சிறிது நேரம் முன் , இணைப்புக் கிடைத்தது . ஆச்சர்யமான விஷயம் , காலை 7 .45 மணிக்கு மரம் விழுந்தது. காலை 8.20க்கு வார்டு கவுன்சிலர் , கார்பரேஷன் 15ஆட்கள் வந்தனர் மும்முரமாக வேலை செய்தனர் . கையுடன் கொண்டுவந்த, டீசல் பவர் சா , அருவாள்கள் ... |
| பிரச்னைகளிடம் இருந்து விலகி இருக்கணும்..!! Posted: 17 Nov 2015 06:00 AM PST - மனைவி: என்னங்க நம்ம வீட்டுக்குள்ள திருடன் வந்திருக்காங்க எழுந்திருங்க! - போலீஸ் கணவர்: சும்மாயிருடி. நான் இப்ப டூட்டியில இல்ல! - ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை. - --------------------------------------------- - "வட்டாட்சியரை தண்ணீர் இல்லாத காட்டுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணினால் என்ன ஆவாரு...?'' - "பாவம்ங்க... "வாட்ட ஆட்சியரா' ஆயிடுவாரு...!'' - ஜி.வினோத், திருநெல்வேலி. - ------------------------------------------ - "சல்லிசா எது வந்தாலும் தலைவர் வாங்கிடுவார்'' - "ஒரு சின்னக் ... |
| சென்னையைப் புரட்டிய வெள்ளம் (12 - 16 ,நவம்பர் 2015) Posted: 17 Nov 2015 05:33 AM PST சென்னையைப் புரட்டிய வெள்ளம் (12 - 16 ,நவம்பர் 2015) 1) இவை ஏரியல்ல , தரமணி , போக்குவரத்து நிறுவனம்தான்!- 2) சைதாப்பேட்டையை ஒட்டிக் கரைபுரண்டு ஓடும் அடையாறு ! - |
| ஏழாவது ஊதிய ஆணையம்: 15 சத உயர்வுக்கு பரிந்துரை! Posted: 17 Nov 2015 05:17 AM PST - மத்திய அரசு அமைத்துள்ள ஏழாவது ஊதிய ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 15 சத உயர்வு மட்டுமே இருக்கும் என தெரிகிறது. மத்திய அரசு மற்றும் ஓய்வூதியர்களின் ஊதியங்களை மாற்றியமைப்பது தொடர்பாக ஏழாவது ஊதிய ஆணையம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைமையில் அமைக்கப்பட்டது. சுமார் 900 பக்கங்கள் கொண்ட ஆணையத்தின் பரிந்துரைகள் வருகிற 20 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சரிடம் வழங்கப்படும் என தெரிகிறது. பின்னர் அது மத்திய அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு அமல்படுத்தப்படும். ஏழாவது ... |
| மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... Posted: 17 Nov 2015 05:14 AM PST மேல்மலயனுர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் செஞ்சிக்கு அருகில் உள்ளது. குழந்தை வரம் வேண்டி ஒருபெண் பாம்பு போல வளைந்து நெளிந்து ஆடும் சாமி ஆட்டத்தினை இங்கு காணலாம். This posting includes an audio/video/photo media file: Download Now |
| கடாரம் வென்ற சோழன் கப்பல் சென்ற கடல்!! Posted: 17 Nov 2015 05:03 AM PST இந்திய சரித்திரத்தின் வீரப்புருஷர்கள் தற்காப்பு யுத்தத்தையே தூக்கிப் பிடித்தபோது, எதிரிகள் மீது படையெடுத்து அவர்களைப் பந்தாடிய இரண்டு தமிழர்கள் இருந்தார்கள். வடக்குப் படையெடுப்புகளால் முடக்கப்பட்டபோது, தெற்கை எட்டுத்திக்கிலும் பட்டொளி வீசிப் பறக்கும் பளபளக்கும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி தகதகவென மின்னும் தந்தையும், மகனும் வந்தார்கள். அவர்கள் வாள் வீச்சு வடக்கையும் தாக்கி ய து, கடல் கடந்தும் தாவியது. வேழம் அவர்களுக்கு வெள்ளாடாகவும், மலைகள் அவர்களுக்கு மண்மேடாகவும் காட்சியளித்தன. 'வடமேற்கில் தொடர்ந்து ... |
| நன்மை பயக்கும் பச்சையாக சாப்பிடும் சத்து நிறைந்த காய்கறிகள் Posted: 17 Nov 2015 04:45 AM PST பச்சையாக சாப்பிட வேண்டிய சத்து நிறைந்த உணவுகள் - இயற்கை மருத்துவம் உணவுப் பொருட்களை பச்சையாக, அதாவது வேக வைக்காமல் அப்படியே சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள முழு ஊட்டச்சத்துக்களையும் பெற முடியும். • ப்ரோக்கோலி பச்சையாக சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள மைரோசைனேஸ் என்னும் நொதி, கல்லீரலில் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களை வெளியேற்றிவிடும். மேலும் ப்ரோக்கோலியை வேக வைத்து சாப்பிட்டால், அந்த நொதிகள் செயலிழக்கப்படும். எனவே ப்ரோக்கோலியை அவ்வப்போது பச்சையாக சாப்பிடுங்கள். • பூண்டுகளை ... |
| Posted: 17 Nov 2015 03:35 AM PST திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள் அதனால்தானோ என்னவோ திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதி உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ... |
| ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?வாரியார் சுவாமிகள் Posted: 17 Nov 2015 03:30 AM PST ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார் அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான்." பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?".வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம்கொடுத்திருப்பார். ஆனால் ... |
| Posted: 17 Nov 2015 03:05 AM PST அன்பு நண்பர்களே ! யாப்பு அறிந்தவர்கள் எழுதிப் பழகவும் , அறிந்துகொள்ள விரும்புவோரை ஊக்கப்படுத்தவும் , குறள் அந்தாதி என்னும் இத்திரியைத் தொடங்குகிறேன் . " அந்தாதி " என்றால் என்னவென்று அனைவருக்கும் தெரியும் . முதல் பாடலின் கடைசி சொல்லை , அடுத்த பாடலின் தொடக்கமாக வைத்துப் பாடுவதுதான் அந்தாதி ஆகும் . யாப்பிலக்கணத்தில் தவறு இருந்தால் தெரிந்தவர்கள் திருத்தலாம் . இதனால் அனைவரும் குறள் யாப்பதில் பயிற்சி பெறமுடியும் என்று நம்புகிறேன் . "சித்திரமும் கைப்பழக்கம் , செந்தமிழும் நாப்பழக்கம் " என்றாள் ... |
| Posted: 17 Nov 2015 02:56 AM PST உன் உதடுகள் உரசிய எந்தன் கன்னங்களில் இனி கண்ணீர் துளிகள் உரசக்கூடும்!! எத்தனை எத்தனை அழகான பொழுதுகள் நம் இருவருக்கும்!!! மனதை மயக்கும் மாய நாட்கள் இனி மாயமாய் போகக்கூடுமோ?? உனக்குள் தொலைந்து போனவள்! உனக்குள் கரைந்து போனவள்!! இனி அழிந்து போகக்கூடுமோ?? |
| கங்கைகொண்டசோழபுரம் முதல் கடாரம் கொண்டான் வரை Posted: 17 Nov 2015 12:44 AM PST அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தில் கங்கைகொண்டசோழபுரம் என்ற வரலாற்றுச்சிறப்பு மிக்க ஊர் உள்ளது.சற்றொப்ப 350 ஆண்டுகள் தென்கிழக்கு ஆசியநாடுகளுக்கே தலைநகராக விளங்கிய இந்த ஊரில் கங்கைகொண்ட சோழீச்சுரம் என்ற கோயிலை இராசேந்திரசோழன் கட்டினான்.அந்தக் கோயில் மட்டும் இன்று மிகப்பெரிய வரலாற்றைச் சுமந்துகொண்டு நிற்கின்றது.அக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் பல வரலாற்றுத் தகவல்கள் சிதறிக் கிடக்கின்றன.முறையே தொகுத்துப் பாதுகாத்தால் வரும் தலைமுறைக்கு வரலாற்றைப் பாதுகாத்துத் தந்தோம் என்ற பெருமை ... |
| பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Posted: 16 Nov 2015 11:43 PM PST தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா ! அன்பு நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் ! இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ... |
| Posted: 16 Nov 2015 06:21 PM PST விரக்தியில் இருந்தேன் வெளியே வந்தாய் சன்னியாசி ஆனேன்!! _____________________________ மறைத்தாய் முகம்தனை மரமானேன்!! ________-_____-_- காய்ந்த சருகாய் காணப்பட்டேன் புன்னகைத்தாய் மலர்ந்தேன்!!!! _----___-________-----_- கரம்பிடிப்பாயா? கைக்கெட்டா தூரத்தில் காகித பூவாய் நான்!! ____-----________ வார்த்தைகளால் அல்ல வலி உன் மௌனத்தால்!! |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |