Tamil News | Online Tamil News |
- வட மாவட்டங்களுக்கு மழை அபாயம் தொடர்கிறது: இன்றும், நாளையும் கொட்டும் என எச்சரிக்கை
- தண்ணீரால் தனித்தீவான சென்னை
- தமிழகத்தில் மழைக்கு இதுவரை 77 பேர் பலி
- அரசியலாக்க பார்க்கின்றனர்: ஜெ.,
- இலங்கை தமிழர் விடுதலை: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
- பிரிட்டன் பிரஜை' ராகுல்: இந்திய குடியுரிமை ரத்தாகுமா?
- விஜயகாந்துக்கு துணை முதல்வர் பதவி: பிரேமலதா நிபந்தனை
- பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள்: 'ஜி - 20' மாநாட்டில் மோடி கண்டனம்
- பாரிசில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பதிலடி: சிரியாவில் பிரான்ஸ் விமானங்கள் கடும் தாக்குதல்
- பத்தாவது நாளாக பள்ளிகள் மூடல்: பல்கலை தேர்வுகள் மீண்டும் ரத்து
- 'மேகி'க்கு போட்டியாக பதஞ்சலி நூடுல்ஸ்
| வட மாவட்டங்களுக்கு மழை அபாயம் தொடர்கிறது: இன்றும், நாளையும் கொட்டும் என எச்சரிக்கை Posted: தென் மேற்கு வங்கக்கடலில், இலங்கை அருகே நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆந்திரா நோக்கி சென்றாலும், தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு மழை அபாயம் உள்ளது. 'இன்றும், நாளையும் கனமழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை, ஒரு வாரமாக தீவிரம் காட்டி வருகிறது. மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது.இந்த சூழ்நிலையில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன், நேற்று ... |
| Posted: சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், மாநகரே வரலாறு காணாத வகையில் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மக்கள் வீடுகளில் தங்க முடியாமல் வெளியேற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. வாகன போக்குவரத்து பெருமளவில் துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான உணவுப்பொருட்கள், மின்வினியோகம் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு காணப்படுகிறது. காய்கறி, பால் வினியோகத்தில் குறைபாடு ஏற்பட்டுள்ளதால் அவற்றின் விலை ஏறியுள்ளது. ஓட்டல்கள் மூடிக்கிடக்கின்றன. |
| தமிழகத்தில் மழைக்கு இதுவரை 77 பேர் பலி Posted: சென்னை: தமிழகத்தில் பெய்த பலத்த மழைக்கு, இதுவரை, 77 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, தலா, நான்கு லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.மாவட்டம் - பலிகடலுார் - 42காஞ்சிபுரம் - 12விழுப்புரம் - 6வேலுார் - 3நாமக்கல் - 2கன்னியாகுமரி - 3சேலம் - 2கிருஷ்ணகிரி - 2திருவண்ணாமலை - 1திருவள்ளூர் - 1நீலகிரி - 1திருநெல்வேலி - 1சென்னை - 1 |
| அரசியலாக்க பார்க்கின்றனர்: ஜெ., Posted: சென்னை:''கன மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை, சிலர் அரசியலாக்க பார்க்கின்றனர். சில எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள், தேர்தல் நேரத்தில், எப்படியாவது ஓட்டுகளை கவர்ந்து விட வேண்டும் என்பதற்காக, உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி வருகின்றனர்,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள, ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகள், பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளை, வேனில் அமர்ந்தபடி, ஜெயலலிதா பார்வையிட்டார்; நிவாரணப் பணிகளை, விரைவாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:வட கிழக்கு பருவமழை ... |
| இலங்கை தமிழர் விடுதலை: பிரதமருக்கு கருணாநிதி கடிதம் Posted: சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று, பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடித விவரம்:இலங்கை, தமிழ் தேசியக் கூட்டணி தலைவர் சம்பந்தனிடம், தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதாக, இலங்கை அதிபர் சிறிசேன சொன்னதை நம்பி தான், தமிழர்கள் அவருக்கு ஓட்டளித்தனர். அதனால், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளில், இலங்கை சிறைகளில், நீண்டகாலமாக வாடும் தமிழர்களை, விடுதலை செய்வதும் ஒன்று. இதற்கு, 1971ல், சிங்கள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி, விடுதலை செய்த நிகழ்வு முன்னுதாரணமாக எடுத்துச் சொல்லப்பட்டது.அதன்படி, 12ம் தேதி, ... |
| பிரிட்டன் பிரஜை' ராகுல்: இந்திய குடியுரிமை ரத்தாகுமா? Posted: புதுடில்லி : ''காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், தன்னை பிரிட்டன் பிரஜையாக அறிவித்த ஆவணங்கள் சிக்கியுள்ளதால், அவரின் இந்திய குடியுரிமையை ரத்து செய்து, எம்.பி., பதவியை பறிக்க வேண்டும்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் ஆவணத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், தன்னை, 'பிரிட்டன் பிரஜை' என, குறிப்பிட்டுள்ளார். அந்நிறுவனம், பிரிட்டன் நாட்டின் கம்பெனிகள் சட்ட ஆணையத்திடம் வழங்கிய ஆவணங்கள் மூலம், இது தெரிய வந்துள்ளது.தற்போது அந்த நிறுவனம் செயல்படவில்லை என்றாலும், ... |
| விஜயகாந்துக்கு துணை முதல்வர் பதவி: பிரேமலதா நிபந்தனை Posted: சட்டசபை தேர்தலில், எப்படியும் அ.தி.மு.க.,வை வீழ்த்தியாக வேண்டும் என்ற முனைப்பில், தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., கட்சிகள் உள்ளன. ஆனால் அதற்காக, நிபந்தனை எதுவுமின்றி, தி.மு.க.,வுடன் சேர, தே.மு.தி.க., தயாராக இல்லை. இருப்பினும், தே.மு.தி.க.,வை எப்படியாவது சமாதானப்படுத்தி, கூட்டணிக்கு கொண்டு வர, தி.மு.க., தரப்பில், தீவிர முயற்சி நடக்கிறது.இதற்கிடையில், பா.ஜ., மூலம், தே.மு.தி.க.,வை இழுக்கும் முயற்சியில், ஸ்டாலின் தரப்பு ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக, பா.ஜ., தலைவர் அமித் ஷாவுடன் பேசும் தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து, தி.மு.க., வட்டாரம் ... |
| பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள்: 'ஜி - 20' மாநாட்டில் மோடி கண்டனம் Posted: அன்டல்யா: ''பயங்கரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ள நிலையில், சில நாடுகள், பயங்கரவாதத்தை தங்களின் கொள்கையாகவே பின்பற்றுகின்றன; அத்தகைய நாடுகளை, உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும்,'' என, பிரதமர் மோடி கூறினார்.மேற்காசிய நாடுகளில் ஒன்றான துருக்கியின், அன்டல்யா நகரில், 'ஜி - 20' எனப்படும், பொருளாதாரத்தில் வளர்ந்து வரும், 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற, இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இரண்டாவது நாள் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: பயங்கரவாதம், உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது. அதை உலக நாடுகள் அனைத்தும் ... |
| பாரிசில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு பதிலடி: சிரியாவில் பிரான்ஸ் விமானங்கள் கடும் தாக்குதல் Posted: பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அவர்களின் தலைநகரமாக கருதப்படும், சிரியாவின் ரக்கா நகரில், பிரான்ஸ் விமானங்கள் நேற்று குண்டு மழை பொழிந்து, ஏராளமான பயங்கரவாதிகளை கொன்று குவித்தன. மேற்காசிய நாடுகளான, ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும், ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் கொடுமைகளுக்கு பயந்தும், உள்நாட்டுப் போருக்கு அஞ்சியும், ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள ஏராளமான சிரியா அகதிகளுக்கு, பிரான்சும் அடைக்கலம் கொடுத்து வருகிறது. அதே நேரத்தில், அமெரிக்கா ... |
| பத்தாவது நாளாக பள்ளிகள் மூடல்: பல்கலை தேர்வுகள் மீண்டும் ரத்து Posted: சென்னை: தொடர்ந்து, 10வது நாளாக, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தீபாவளியை முன்னிட்டு, 6ம் தேதி சனிக்கிழமை முதல், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது; தீபாவளி முடிந்து, 11ம் தேதி பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.ஆனால், கனமழை காரணமாக கடலுார், விழுப்புரம், நாகை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், 11ம் தேதி பள்ளிகளை திறக்க முடியவில்லை; திறந்திருந்த பள்ளிகளும், பாதியில் மூடப்பட்டன.இதையடுத்து, தொடர் மழை பெய்ததால், 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், பள்ளி, ... |
| 'மேகி'க்கு போட்டியாக பதஞ்சலி நூடுல்ஸ் Posted: புதுடில்லி : யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் சார்பில், உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காத, உடனடி நுாடுல்ஸ் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனம், ஆயுர்வேத மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனம் சார்பில், உடனடி நுாடுல்ஸ் தயாரிக்கப்பட்டு, நேற்று விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்து, பதஞ்சலி நிறுவனம் தரப்பில் கூறப்பட்டதாவது: பதஞ்சலி நுாடுல்சில், காரீயம், ரசாயன உப்பு ஆகியவை கலக்கப்படவில்லை. உடல் நலத்துக்கு முக்கியத்துவம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 17,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |