Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இணையத்தில் பணம்

Posted: 16 Nov 2015 12:59 PM PST

இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் என்று கேள்விப்பட்டதும் அதற்கான வேலையில் இறங்கிவிட்டேன் ஆனால் மூன்று வருடங்கள் ஆகியும் கைக்கு பணம் வந்து சேரவில்லை ,சிலர் இணையத்தின் மூலம் சம்பாதிக்கிறார்கள் எப்படி என்று கேட்டால் ? இணையத்தில் நான் செய்யும் வேலைகளைத்தான் செய்கிறார்கள் என்பார்கள். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை , என்னுடை முறையில் ஏதேனும் தவறு உண்டே என்று நினைப்பதும் உண்டு நண்பர்களே ஏதேனும் வழிமுறைகள் இருந்தால் கூறுங்கள் நாட்டின் பணத்தொகையை சற்று உயர்த்தலாம் ( இம்மூன்று வருடத்துள் ஏதேனும் ...

ஊழல் பேர்வழிகள் ---2

Posted: 16 Nov 2015 12:54 PM PST

ஊழல் பேர்வழிகள் . தமிழகத்தில் ஜூலை 1 முதல் தலைகவசம் அணிவது கட்டாயமாகிறது . இதன் தொடர்பாக பலகருத்துகள் வந்துள்ளன . தலைகவசம் அணிவது அவசியம் என கருதும் போது , கவனித்து , நடைமுறை படுத்தவேண்டிய போலிசே தலைகவசம் அணியாது போவதும் , தலைகவசம் அணியாது செல்பவர்களை , போலிஸ் பிடித்தாலும் கவனிக்க வேண்டிய விதத்தில் ,கவனித்தால் ,அவர்களை கண்டுக்காமல் விடுவதும் காலம் காலமாக நடந்து வருகின்ற நடை முறையே . தமிழ்நாட்டில் ,சட்டத்தை மீறி , பணம் வசூலிப்பதில் யார் யார் /தவிர்ப்பது எப்பிடி என்று திண்ணைப் ...

எல்லாம் பெட்ரூமிலேயே...

Posted: 16 Nov 2015 12:52 PM PST

எல்லாம் பெட்ரூமிலேயே... சென்னையில், ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் உறவுப் பெண்ணின் பேத்தி, சமீபத்தில் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். எங்கள் காலத்தில், இரவில் தூங்குவதற்கு மட்டும் தான் படுக்கையறையை பயன்படுத்துவோம்; பகல் வேளையில் படுக்க மாட்டோம். ஆனால், இவளோ, எப்போது பார்த்தாலும், பெட்ரூமிலேயே உட்கார்ந்து, மெத்தையில், 'லேப் - டாப்'பை வைத்து, அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். நானும், சின்னப் பெண் தானே என்று ஒன்றும் சொல்லவில்லை. அன்று, சமையலறையில், மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தேன். ...

பால் நிறம்

Posted: 16 Nov 2015 12:46 PM PST

நாம் எல்லோருக்கும் பாலின் நிறம் என்ன என்று கேட்டால் சட்டென்று வெள்ளை நிறம் என்பார்கள் ,ஆனால் இளம் சிகப்பு (pink) நிறத்திலும் பால் தரும் மிருகம் உண்டு என்றால் ஆச்சரியப்படுவீகளா? அம் மிருகம் நீர்யானையாகும்

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு

Posted: 16 Nov 2015 12:43 PM PST

குற்றம் பார்க்கில்---- ஈகரை திண்ணைப் பேச்சு :   வீட்டில் நாலு உறவினர்கள் சேர்ந்து விட்டால் , பேசுகின்ற விஷயங்களுக்கா பஞ்சம் ? ஆண்களாக இருந்தால் , அரசியல் , கிரிகெட் , சினிமா etc பெண்களாக இருந்தால் நகைகள் , புடவைகள் , டிவி சீரியல்கள் இளைஞர் /இளைஞி ----கேலிகள் , லேடஸ்ட் மொபைல் , வகையற குழந்தைகள் --விளையாட்டு பொருட்கள் இப்பிடியாக பல இருப்பினும், இல்லாத ஒன்றை பற்றி அலசுவது , இல்லாத ஒருவரைப்பற்றி பேசுவது கிண்டல் அடிப்பது சகஜம் . இப்பிடிப்பட்ட ஒரு  நிகழ்ச்சி. இல்லாத ஒருவரை பற்றிப் ...

இராம ஜெயம்

Posted: 16 Nov 2015 12:42 PM PST

நம் இந்தியக் குடும்பங்களில் குறிப்பாகத் தமிழ்நாட்டுக் குடும்பங்களில்  "இராம ஜெயம்" எழுதுவதை சிலர் அன்றாட வழக்கமாகக் கொண்டுள்ளனர். காலையில் கடவுளை வணங்கிய பின்னர் ஒரு நோட்டுப் புத்தகத்தில் 108 முறை தினமும் "இராம ஜெயம்" எழுதுவர். அலுவலகம் செல்பவர்கள் கூட சிலர், அந்த நோட்டுப் புத்தகத்தை உடன் எடுத்துச் செல்வர். உணவு இடைவேளை மற்றும் ஓய்வு நேரம் கிடைக்கும்போது எல்லாம், " இராம ஜெயம் " எழுதுவர். நினைத்த காரியம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக ' இராம ஜெயம் " எழுதுவர். போரில் இராமன் வெற்றி பெற்றதை சீதையிடம் ...

IIT - பயிற்சி பள்ளி பாட்னா

Posted: 16 Nov 2015 12:39 PM PST

இப்படி ஒரு பயிற்சி பள்ளி தமிழ்நாட்டில் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள ஆசை : பாட்னா நகரில் ஒரு கணித ஆர்வலர் மற்றும் ஒரு போலீஸ் உயர் அதிகாரி நடத்தும் IIT பயிற்சி வகுப்புகள். சூப்பர் 30 : ராமானுஜன் ஸ்கூல் ஆப் மதமடிக்ஸ் அதன் பெயர். 2003 ஆண்டு தொடங்கி பல ஏழை மாணவர்களை IIT  மற்றும் IISC அனுப்பி வருகிறது. பல விருதுகளை மற்றும் பல்வேறு  அங்கிகாரம் பெற்று உள்ளது. 2010 வரை 212 மாணவர்களை நுழைவு தேர்வு வெற்றி பெற செய்து உள்ளது. நன்றி : http://super30.org

முடியும்

Posted: 16 Nov 2015 12:37 PM PST

முடியுமென முயற்சி செய்

முடியாத்தும் முடியும்

சொத்துக் குவிப்பு வழக்கு : முன்னேற்றமா ? பின்னேற்றமா ?

Posted: 16 Nov 2015 12:36 PM PST

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு என்ற நாடகத்தின் இறுதிக்காட்சி, கடந்த திங்களன்று புது தில்லியில் அரங்கேறியது. இந்த நாடகத்தின் சூத்திரதாரியான ஜெயலலிதா, இது குறித்து எந்த கவலையும் இல்லாமல், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கிக் கொண்டிருந்தார். _MG_1679new எப்போதும் போல, தங்கள் விசுவாசத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக, அதிமுக வழக்கறிஞர்கள், சம்பந்தமே இல்லாமல், நீண்ட வரிசையில் நின்று, பார்வையாளர் அனுமதிச் சீட்டு வாங்கி நீதிமன்ற அறை எண் 12க்குள் முண்டியடித்துக் கொண்டு நின்றிருந்தார்கள். உயர்நீதிமன்றத்தில் ...

மதுவிலக்கு வேண்டும் - #bantasmac

Posted: 16 Nov 2015 12:34 PM PST

மது அரக்கனின் கோரப்பிடியில் ஆண்கள், பெண்கள் என்ற நிலை மாறி, தற்பொழுது மாணவ, மாணவியர் மற்றும் குழந்தைகள் வரை சிக்கி சீரழியும் கேவலமான நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது! இந்நிலை தொடர்ந்தால், தமிழர்களைப் போன்ற கேவலமான பிறவிகள் உலகில் வேறெங்கும் இல்லை என்ற நிலையை அரசியல்வாதிகள் உருவாக்கிவிடுவார்கள்! ஈழத்தை தேர்தலுக்குப் பயன்படுத்திய அரசியல்வாதிகள், இனிமேல் அங்கு பேச எதுவும் இல்லை என்பதறிந்து இப்பொழுது டாஸ்மாக்கை தேர்தல் களத்திற்குக் கொண்டுவந்து விட்டார்கள். இவர்களின் அரசியல் ஆதாயத்திற்கு ...

நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு!

Posted: 16 Nov 2015 12:33 PM PST

"நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதி மன்றம் ஒன்று இருக்கிறது. அது தான் மனச்சாட்சி என்ற நீதிமன்றம். அது அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது" இன்றைய தீர்ப்பு குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கருத்து இது. இந்த மண்ணாங்கட்டி மனசாட்சி நீதிமன்றம் தான் வெல்லும் என்றால், எதற்கு நீதிமன்ற வளாகங்கள் மற்றும் நீதிபதிகள்! ஒருவர் குற்றவாளி என்று கூறி தண்டனை வழங்கிய தீர்ப்பு, எப்படி மற்றொரு நீதிபதியால் முற்றாக அடித்து நொறுக்கப்பட்டு "இவர் புடம் போடப்பட்ட தங்கம்" என்ற சான்றிதழுடன் விடுதலை செய்ய ...

அரசு ஊழியர் என்பவர்..........செயல்பாடு......

Posted: 16 Nov 2015 12:32 PM PST

அரசு ஊழிர்கள் / சங்கங்கள் அரசு நிர்வாகத்திற்கு இப்படி செயல்படலாமே........... எக்காலத்திலும் தன்கடமையை உரிய காலத்தில் விருப்புவெறுப்பின்றி செய்யவேண்டும்.மக்களுக்காக நாம்பணியாற்றுகிறோம் என்றஎண்ணம் மனதில் நிறைவாக இருக்கவேண்டும் அரசியல்கட்சி சார்பாக எப்போதும் ஒருபோதும் செயல்படவேக்கூடாது. அரசுக்கு உதவிடும் அரசுப்பணியாக நினைத்து நமக்குள்ள கடமையை கண்ணியமாக சுயநலன்றி செய்வதாக இருக்கனும். வேலைநிறுத்தமோ, போராட்டமோ, உண்ணாவிரதமோ, மறியலோ,ஒட்டுமொத்த சிறுவிடுப்போ எடுத்து அசுக்கு எதிர்ப்பாக ...

சட்டம்--நீதித்துளிகள்...

Posted: 16 Nov 2015 12:29 PM PST

கணவன் மனைவி பிரிந்து வாழ்தால் வரதட்சனை கொடுமை இல்லை என்று சொல்ல முடியாது-டெல்லி நீதி மன்றம்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சிறு தண்டனை கொடுக்க கூடாது - உச்ச நீதி மன்றம்.

குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் குடி கெடுக்கும் நடை பிணங்கள்...நீதி மன்றம்.

நகை பறிக்கும் திருடர்களை கடுமையாக கையாள வேண்டும்- டெல்லி நீதிமன்றம்.


உருவ பொம்மை எறிப்பது குற்ற மல்ல -சென்னை உயர் நீதி மன்றம்.

ஃபேஸ்புக் அடிமைகளா நாம்?

Posted: 16 Nov 2015 12:27 PM PST

உழைப்பு யாருடையது, செல்வம் யாருடையது... என்பது ஆந்திராவின் மக்கள் கவிஞரான செரபண்ட ராஜுவின் கவிதை வரி. இந்த ஆவேச வரிகள் உழைக்கும் மக்களுக்காக எழுதப்பட்டவை. ஃபேஸ்புக் தொடர்பாக அமெரிக்கரான மைக்கேல் ரோசன்பிளம் என்பவர் எழுதியுள்ள இணைய பத்தியை படிக்கும்போது இந்த வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. உழைப்பாளிகளுக்கான செரபண்ட ராஜுவின் தார்மீக கோபம் போல, ரோசன்பிளம் இணையவாசிகளின் சார்பில், உள்ளடக்கம் யாருடையது, செல்வம் யாருடையது? என கேட்டு இந்தப் பத்தியை எழுதியிருக்கிறார். ஹஃபிங்டன் போஸ்ட் இணைய ...

இன்றளவும் உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கும் அந்த 13 குடும்பங்கள் ( இல்லுமினாட்டிகள் ).

Posted: 16 Nov 2015 12:26 PM PST

லூசிபியர் , இலுமிநாட்டி , நியூ வேர்ல்ட் ஆர்டர் இவைகளை சிலர் கேள்வி பட்டிருக்கலாம் , சிலர் இதை முதல் முறை கேள்வி பட கூடும். இந்த பதிவு இவர்களை பற்றி உலகம் அறிந்ததும் , இவர்களின் நோக்கமும் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான். லுசிபியர் என்பது சாத்தானை வழிபாடும் கூட்டத்திற்கு சொல்வது. என்னடா இது ஆரம்பத்திலே சாத்தானா ? என்று நினைக்க வேண்டாம். நீங்கள் விரும்பினாலும் வெறுத்தாலும் சாத்தானின் கொள்கை தான் உலகத்தில் அதிகமாக இயங்கி கொண்டிருக்கிறது. இந்த தொடரில் நீங்கள் இந்த மூன்றிற்கும் சொந்தமான ...

அரசுக்கு மனு அனுப்ப ,கருத்து தெரிவிக்க இணையம்...

Posted: 16 Nov 2015 12:24 PM PST

தம்முடைய கருத்துகளை அல்லது கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்க இணையம

http://cmcell.tn.gov.in இல் ஓர் கணக்கை ஆரம்பித்து இணையுங்களேன் ...

நாம் இழந்த பழமை ,அவை எங்கே?

Posted: 16 Nov 2015 12:22 PM PST

எங்கே? எங்கே? எங்கே? இயற்கை எங்கே? பனையோலை விசிறி எங்கே? பல்லாங்குழி எங்கே? கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே? கோகோ விளையாட்டு  எங்கே? சாக்கு பந்தயம் எங்கே? கில்லி எங்கே? கும்மி எங்கே? கோலாட்டம் எங்கே? திருடன் போலீஸ் எங்கே? ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே? மரப்பாச்சி கல்யாணம் எங்கே  மட்டை ரெயில் எங்கே? கமர்கட் மிட்டாய் எங்கே? குச்சி மிட்டாய் எங்கே? குருவி ரொட்டி எங்கே? இஞ்சி மரப்பா எங்கே? கோலி குண்டு எங்கே? கோலி சோடா எங்கே? பல் துலக்க   ஆலங்குச்சி   எங்கே  எலந்தை ...

கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள்

Posted: 16 Nov 2015 12:20 PM PST

விதைப்புக்கு ஊற வைத்த நெல்-முளை விட்ட மூடை அவிழ்க்க வரும் வாசனை பிடிக்கும் பழைய தவிடு வாசனை நுகர பிடிக்கும் நெல் வேகவைத்த நீராவி வாசனை பிடிக்கும் சூடு (போர்) அடிக்க போட்டு உள்ள வைக்கோல்- போர் புரட்ட வரும் வாசனை பிடிக்கும் பசுந்தீவனம் அடிக்கி வைக்க புழுங்கிய ஆவி வரும் வாசனை பிடிக்கும் பருத்தி பஞ்சு பொதி கிளற வரும் வாசனை பிடிக்கும் நெற்பயிர் விதைப்பு தொளி உழவு மண்வாசனை பிடிக்கும் புளுதி மண்ணில் மழைத்துளி விழவரும் வாசனை பிடிக்கும் ஆடு,மாடு தொழு சாண கோமிய வாசனை பிடிக்கும் சுண்ணாம்பு ...

வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை.....!

Posted: 16 Nov 2015 12:15 PM PST

வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை.....! திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண நாளைக் கொண்டாடினார்கள். ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் போட விரும்பினார். நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண ...

வேதலாம் படத்திற்கு 150 டிக்கெட் எடுத்த ரசிகர்

Posted: 16 Nov 2015 12:10 PM PST



இவர் என்னவோ உலக சாதனை செய்ததை போல 150 டிக்கெட் எடுத்ததை வாட்சாபில் பரப்புகிறார்கள்

உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்!

Posted: 16 Nov 2015 12:05 PM PST

கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை.. அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது, அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு. இதுவே சரியான இடம் என்று அது சென்றது அங்கு. அப்போது கருமேகங்ள் சூழ்ந்தன. மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன. மான் தன் இடப்பக்கம் பார்த்தது.. அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான். மானின் வலப்பக்கமோ பசியுடனான ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒரு கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் காட்டு தீயும் ...

அவர் தான் நம் காமராஜர்..!

Posted: 16 Nov 2015 12:03 PM PST

படித்தேன் ...கண்களில் கண்ணிர் பெருகியது >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> முதலமைச்சர் காமராஜரும்.. பிரதமர் நேருவும்.. கூட்டமொன்றில் பங்கேற்க.. மதுரை அருகே.. காரில் சென்று கொண்டிருந்தார்கள்..!! உரையாடலின் நடுவே.. நினைவு வந்தவரான. நேரு. " மிஸ்டர் காமராஜ் உங்கள் சொந்த ஊர் இந்த பக்கம் தானே..? என்று கேட்கிறார்..!! "ஆமாங்க இன்னும் கொஞ்சம் தூரத்தில் தான் இருக்கிறது..!!என்கிறார் காமராஜர்..!! "அப்படியானால் உங்கள் தாயாரை பார்த்து விட்டு.. நலம் விசாரித்து விட்டு செல்ல வேண்டும் அல்லவா..? என்று ...

செம்பு குடங்களில் நீர் எதற்கு.....?

Posted: 16 Nov 2015 11:58 AM PST

அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ, நாடே நவீன மயமாகிவிட்டதால், கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பல தண்ணீர்கள் முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். சித்தர்கள் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா? செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரைவைத்திருந்து ...

நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது

Posted: 16 Nov 2015 11:50 AM PST

நமது தாய் மொழி "தமிழ்". கல் தோன்றா மன் தோன்றா முன்பே பிறந்த இனம் பேசிய மொழி. கல் என்பது கல்வியையும், மன் என்பது மன்னர் ஆட்சியையும் குறிக்கிறது.   அதாவது, கல்வியும், மன்னர் ஆட்சியையும் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய மாந்தர்கள் கதைத்த மொழி தமிழ் மொழி. இன்றிய உலக மொழிகளும், அம்மொழிகளை பேசும் இன மக்களும் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இயல், இசை, நாடகத்தில் திளைத்து வளர்ந்த மொழி நமது உலக செம்மொழி தமிழ். இத்தனை சிறப்பு கொண்ட நமது தமிழ் மொழியில் இருக்கும் வார்த்தைகள் எவ்வாறு பிறந்தன, ...

அப்பா

Posted: 16 Nov 2015 11:47 AM PST

அனைத்து அப்பாக்களும்..

கேட்பாறற்று கிடக்கும் இராசேந்திர சோழனின் கல்லறை! தமிழர்கள் நாம் என்ன செய்ய போகிறோம்?

Posted: 16 Nov 2015 11:45 AM PST

தமிழ்மொழியைச்சாட்டி-தமிழினத்தைச்சாட்டி அதிகரத் திற்காக போரிடும் தலைவர்களென வேடமிடு பவர்களும் அத்தகைய வேந்தர்களுக்கும் இதுதான் கதி. தஞ்சைப்பெரிய கோவிலையே மராட்டியருக்கு தாரை வார்த்த இராயராய சோழனுக்கு கல்லறை கூடு இல்லை ஒரு முதியவர் அந்த இடத்தை பராமரித்து வரும்நிலை. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக் காவி லிருந்து முப்பது கி.மீ தொலைவில் இருக்கிறது நாட்டேரி என்ற அழகான கிராமம். நாட்டேரிக்குப் பக்கத்தில் பிரம்மதேசம் என்னும் ஊர். இந்த ஊரின் வெளிப்புறத்தில் பசுமையான வயல்வெளிக்கு மத்தியில் ...

பெற்றோர்கள் கவனத்திற்கு ,

Posted: 16 Nov 2015 11:40 AM PST

பெற்றோர்கள் கவனத்திற்கு , நான் இரண்டு நாட்களுக்கு முன் தீபாவளி விடுமுறைக்காக எனது கிராமத்திற்கு சென்றிருந்தேன் , அங்கே எனது வீடருகே சிறுவர்கள் விளையாடிகொண்டிருன்தனர் , அவர்களிடம் பெயர் , படிக்கும் வகுப்புக்களை கேட்டு கொண்டிருந்தேன் , வகுப்புகளை கேட்கும் பொழுது தமிழ் வழி கல்வியா ?, ஆங்கில வழி கல்வியா ? என கேட்க்கும் பொழுது அவர்களுக்கு நான் கேட்க்கும் கேள்வி புரியவில்லை .. இங்க்லீஷ் மீடியமா ? தமிழ் மீடியமா ? என்று கேட்டேன் ஒரு சிலர் இங்க்லீஷ் மீடியம் என்றனர் , இன்னும் பலர் தமிழ் மீடியம் ...

கூந்தலுக்கு மணம் உண்டா?

Posted: 16 Nov 2015 11:38 AM PST

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? ' என்ற கேள்விக்கு விடைகாணும் பொருட்டு பல காலங்களாக கருத்து மோதல்கள் இருந்து வந்துள்ளன என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்தக் கேள்வியே எவ்வளவு தவறானது என்பதைப் பற்றியும் நம்மை வியப்பில் ஆழ்த்தப் போகின்ற சில உண்மைகளைப் பற்றியும் இக் கட்டுரையில் நாம் காணலாம். குறுந்தொகைப் பாடல்: குறுந்தொகையில் கீழ்க்காணும் ஒரு பாடல் வருகிறது. கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறிஎயிற்று அரிவை ...

தமிழர்களின் உணவு உண்ணும் முறை ....

Posted: 16 Nov 2015 11:31 AM PST

உணவுப் பழக்கத்தை 12 வகையாக தமிழர்கள் பிரித்துள்ளனர். மிகச்சிறிய அளவே உட்கொள்வது- அருந்துதல் பசிதீர சாப்பிடுவது- உண்ணல், நீர் சேர்ந்த பண்டத்தை ஈர்த்து உண்பது - உறிஞ்சுதல் நீரியல் உணவை உறிஞ்சி பசி நீங்க உட்கொள்வது- குடித்தல், பண்டங்களை கடித்து உட்கொள்வது- தின்றல், ரசித்து மகிழ்வது-துய்த்தல்- பனி கூழ் நாக்கினால் துழாவி உட்கொள்ளுதல்- நக்கல் முழுவதையும் ஒரே வாயில் உறிஞ்சினால்- மிடங்கல், நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது பருகல், பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொண்டால் - மாந்தல், ...

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 16 Nov 2015 10:08 AM PST

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

காதல்

Posted: 16 Nov 2015 09:00 AM PST

மீண்டும் மீண்டும் மனம் விழைவது... மீண்டு வர மறுப்பது... காதல் அரும்பிய கணநேரத் துளிகள்... விரும்பியே தொலைத்த மனதைத் தேடாத விருப்பங்கள்... இதயம் தொலைந்த இடம் இதுதான் என்றறியாத என் அறியாமை மிகுந்த நொடிகள்... கண்களில் தொலைத்த காதலை இதயத்தில் தேடிய வெகுளித்தனங்கள்... உயிர் குடிக்கும் பார்வை கொண்டே உயிர் கொடுக்கும் காதலின் முரண்பாட்டுத் துளிகள்... இணை பிரியா இதழ் விரிகையில் இடைநின்ற புன்னகை வரிகள்... இதுபோதும் எனக்கு என்று எப்போதும் கூறாத தாகங்கள்... தவிப்புகள்... இதயம் ...

முற்பகல் செய்யும் வினை பிற்பகல் விளையும்

Posted: 16 Nov 2015 08:05 AM PST

வனங்கள், ஏரிகள், ஆறுகள், வன உயிர்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 51- ஏ வகுத்துள்ள 10 ஷரத்துகளில் ஒன்று. ஆனால், அந்த சட்டத்தை அரசுகளே மதிக்கவில்லை. தமிழகத்தில் 1970-களின் தொடக்கத்தில் முதன்முதலாக ஏரிகளின் மீது கையை வைத்தது அரசாங்கம்தான். குடிசை மாற்று வாரியத்துக்காக, பேருந்து நிலையத்துக்காக, அரசு அலுவலக கட்டிடங்களுக்காக... என ஏராளமான ஏரிகளை அழித்தது. அந்தக் காலகட்டத்தில் அதைத் தவறென்று சுட்டிக் காட்ட சுற்றுச்சூழல் குறித்த ...

இவ்வளவுதான் அறிவியல் (2)

Posted: 16 Nov 2015 07:57 AM PST

ஏன் சோனிக் வேகத்தில் விமானங்கள் தயாரிக்கப்படுவதில்லை தெரியுமா சோனிக் வேகத்தில் [அதாவது ஒலியின் வேகம்] ஒரு விமானம் இயங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். 1,2,3,4,5,6 என்ற சம இடைவெளியில் விமானம் பறக்கிறது எனக் கொள்வோம் (இதென்ன பாடம் நடத்துகிறானே என நினைக்க வேண்டாம்...புரிகிற மாதிரி சொல்ல வேண்டாமா) 1ம் புள்ளியில் விமானம் ஒரு ஒலியலையை வெளியிடும். உதாரணமாக   இதுதான் விமானம்   இதுதான் ஒலியலை (வேற ஸ்மைலி கிடைக்கலீங்கோ) 1 ___2___3___4___5___6 விமானம் ஒலியின் வேகத்தில் செல்வதால் ...

இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க...

Posted: 16 Nov 2015 07:53 AM PST


-

ஆத்மா எனபது என்ன? மனம் எனபது என்ன? - இராஜயோக தியானம் - பகுதி- 1

Posted: 16 Nov 2015 07:41 AM PST

அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவருமே எத்தனையோ தடவை "நான்" "நான்" என்ற வார்த்தையைச் சொல்லி கொண்டே இருக்கிறார்கள். தினந்தோறும் நான் எனது என்று சொல்லி கொண்டே இருந்த போதிலும், அவ்வாறு நான் என்று சொல்லும் பொருள் எது?. அதன் உருவம் என்ன என்ன என்பதை யாருமே தெரிந்து கொள்ள முடியவில்லை. விஞ்ஞான வளர்ச்சி பற்றி சொல்லவே வேண்டாம். விளங்காத புதிர்களை விஞ்ஞானத்தின் மூலம் விளக்கிவிட்டாலும் கூட நான் என்று சொல்வது எது? என்பதை பற்றிய உண்மை தெரியாது. பிறவற்றை பற்றி தெரிந்து கொள்பவர் தன்னை பற்றி சரியான ரீதியில் அறிவதில்லை. ...

பிரார்த்தனை

Posted: 16 Nov 2015 07:29 AM PST

படித்ததில் பிடித்தது """""""""""""""""""""""""""""""""" ஒரு உல்லாச கப்பல் கடலில் சென்ற போது அடித்த புயலினால் கப்பல் உடைந்தது. அதில் இருந்த இரு ஆண்கள் மட்டுமே தப்பி நீந்தி வந்து அருகில் உள்ள ஒரு சிறிய தீவை சென்று அடைந்தனர். அந்த இருவரும் அந்தஸ்த்தில் வேறுபட்டவர்கள். ஒரே நிறுவனத்தில் ஒரே இடத்தில் பணிபுரியும் சூழ்நிலையால் நண்பர்கள் ஆனவர்கள். அந்த தீவில் வெறும் புற்களும், புதர்களும் மட்டுமே இருந்தது. சாப்பிடவோ ஒதுங்க நிழலுக்கு மரம் கூட இல்லாதிருந்தது..! அவர்களுக்கு என்ன செய்வது என்பதே தெரிய ...

1930- 1990 வரை பிறந்த நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!

Posted: 16 Nov 2015 07:17 AM PST

1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..! • தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான் • எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை. • கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை. • புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை. • சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை. • பள்ளியில் ...

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் ஹர்ஷித் (ஜேன் செல்வகுமார் )

Posted: 16 Nov 2015 07:04 AM PST

ஈகரை சார்பாக இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் ஹர்ஷித் (ஜேன் செல்வகுமார் )

டாப் 10 : செல்பீ எடுத்தா.. இங்க தான் எடுக்கணும்..!!

Posted: 16 Nov 2015 06:24 AM PST

செல்பீ - தெரிஞ்சவங்க, ரொம்ப பிடிச்சவங்க என எல்லோர் உடனும் செல்பீ எடுத்து முடித்து பின்பும், ரோட்ல மேயும் ஆட்டுக்குட்டி கூட, வீட்டுக்குள்ள இருக்கும் நாய்க்குட்டி என ஒன்றையும் விட்டு வைக்காமல் உடன் நின்று செல்பீ எடுத்து தள்ளும் அருமை மக்களே. இன்னும் எவ்வளவு நாள் தான் மேல தெரு, கீழ தெரு, பக்கத்து தெருனு லோக்கலில் செல்பீ எடுத்துக் கொண்டு இருப்பீர்கள். அடுத்த லெவலுக்கு போக வேண்டாமா...? அப்படியாக, உலகிலேயே செல்பீ எடுக்க மிகவும் பிரபலாமன டாப் 10 இடங்களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம். ...

முரண்பாடு-தமிழ்சுவை

Posted: 16 Nov 2015 06:12 AM PST

மலர் மலர் நாடி போவோம் வாடும்-கவி மலர் நாடி போவோம் உள்ளம் களிப்பில் ஆடும் பால் பால் பருக உண்டாகும் மந்தம் முப்பால் பருக உண்டாகும் மனிதம் தேன் தேன் உண்டால் திகட்டாது-மாறாக தெள்ளுத்தமிழ் சுவையுண்டால் திகட்டிவிடும் தித்திப்பு பழம் அளவான முக்கனியை நா ருசிக்கும் அளவற்ற முத்தமிழை மனம் ரசிக்கும் காதல் புவிமகளை காதலித்தால் வம்பு செய்வாள் -அன்றி கவிமகளை காதலித்தால் வண்ணம் செய்வாள் உரிமை கவி வடிப்போன் கற்பனையில் தகப்பன் கவி படிப்போன் கற்பனையில் கணவன் பட்டிமன்றம், வானொலி ...

மழையின் கோபம்

Posted: 16 Nov 2015 05:44 AM PST

யார் மேல்  உள்ள கோபம்  இப்படி கொட்டி தீர்க்கிறாய்??  உன்னால்  காய்ச்சல்  காய்ச்சி  எடுக்கிறது!  வெள்ளம்  வீட்டில்  புகுந்து  வாட்டி  வதைக்கிறது!!  ''கண்மாய்களை களவாடி  விட்டதால்  கடும்  கோபத்தில்  இருக்கிறாய்  போலும்! "" பின்னே  இருக்காதா?  காலம்  காலமாக  காத்து  கரை வெட்டி  ஆறு வெட்டி  குளம் வெட்டி  அணைக்கட்டி  பாதுகாத்த  பாதையெல்லாம்  ""கல் வீடுகளாய்  காட்சியளிக்கிறதே""' அந்த கோபமா??  உன் கோபம்  நியாயமானது  தான்!!  தாகத்திற்கு  தண்ணீர்க்கு  பதில்  தாதுக்களை  சாப்பிட்டு  கொள்ளலாம்  என்று  நினைத்து  விட்டார்கள்  போலும்!!  இப்பொழுதாவது  புத்தி  தெளிகின்றதா?  என்று ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™