Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நதிகள் இணைப்பு திட்டம் தாமதத்தால் ஏராளமான தண்ணீர் வீணடிப்பு: கிடப்பில் காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம்

Posted:

காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், காவிரியில் ஏராளமான தண்ணீர் வீணாக கடலை நோக்கி செல்கிறது. குறுவை சாகுபடி செய்ய தண்ணீர் இல்லாமல் தவித்த விவசாயிகள், வீணாகும் தண்ணீரை வேதனையுடன் பார்த்து செல்கின்றனர்.

காவிரி ஆற்றில் உபரி நீரை வீணாக்காமல் இருக்கும் வகையில், தேசிய மேம்பாட்டு முகமை, உள்நாட்டு நதிகள் இணைக்கும் திட்டத்தில், 254 கோடி ரூபாய் மதிப்பில், கரூர் மாவட்டம் மாயனுார் காவிரியில்தடுப்பணை கட்டியது. இந்த தடுப்பணையில், 1.05 டி.எம்.சி., தண்ணீரை தேக்கமுடியும்.தடுப்பணையின் மேற்கு பகுதியில் உள்ள கட்டளை படுகை அணையில் ...

ஜெ.,யின் அடுத்த அதிரடி எப்போது?

Posted:

ஜாதி அரசியல் செய்ய முயன்றவர்களை கட்சியில் இருந்து நீக்கி, கடும் உத்தரவு பிறப்பித்த ஜெயலலிதா, கட்சியில் கோஷ்டி பூசலில் ஈடுபடுபவர்கள் மீதும், அதிரடி நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவராக இருந்தவர் கெங்கையம்மாள்; அவர் கணவர் சொக்கலிங்கம். இருவரும் அ.தி.மு.க.,வில் இருந்தனர்.

கடும் எரிச்சல்:
உள்ளாட்சி தேர்தலின் போது, கெங்கையம்மாளுக்கு, கட்சியில், 'சீட்' கொடுக்காததால், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகும், இருவரும் அ.தி.மு.க.,விலேயே தொடர்ந்தனர். ...

தடை போடும் திட்டம் கருணாநிதியிடம் எடுபடுமா?

Posted:

தேர்தலில் போட்டியிடாமல், தி.மு.க., தலைவர் கருணாநிதியை தடுக்க, அக்கட்சியின், 'இளைய தலைமுறை ஐவரணி' முயற்சித்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.சட்டசபை தேர்தல்களில், தொகுதிகள் மாறினாலும், வெற்றியை தவறவிடாத ஒரே தலைவர் என்ற பெருமை, கருணாநிதிக்கு மட்டுமே உண்டு. 1957ல், குளித்தலை தொகுதியில் ஆரம்பித்த அவரது வெற்றி, 2011 தேர்தலில், திருவாரூர் வரை தொடர்கிறது.மீண்டும் அங்கே போட்டியிடும் எண்ணத்தில், சில மாதத்திற்கு முன், நலத் திட்டங்களை துவக்கி வைத்து, பொதுக் கூட்டத்தில் பேச கருணாநிதி விரும்பினார்; கடைசி நேரத்தில், அது ரத்தானது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு சட்டசபை ...

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று முதல் கனமழை: தேசிய பேரிடர் மீட்பு குழு, தமிழக அரசு முழு வீச்சில் தயார்

Posted:

'தமிழகத்தில், இன்று முதல், மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழையை எதிர்கொள்ள, தேசிய பேரிடர் மீட்பு குழுவும்,தமிழக அரசும் முழு வீச்சில் தயாராக உள்ளன. மாவட்ட அளவிலான அதிகாரிகள் அனைவரும், விடுமுறை நாளிலும் பணிக்கு வர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 12ம் தேதி இரவு முதல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கனமழை பெய்ததால், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.ஏற்கனவே பெய்த மழை நீர் வடியாத ...

ஐகோர்ட்டில் நாளை முதல் சி.ஐ.எஸ்.எப்.,

Posted:

சென்னை:சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள், நாளை முதல், அடையாள அட்டை இல்லாமல் யாரும் நுழைய முடியாது.'சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பை, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழில் பாதுகாப்பு படை மேற்கொள்ள வேண்டும்' என, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய, முதல் அமர்வு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, பாதுகாப்பு பொறுப்பை, சி.ஐ.எஸ்.எப்., வசம் ஒப்படைக்க, 16 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு, தமிழக அரசு செலுத்தியது. அதன்படி, உயர் நீதிமன்ற பாதுகாப்பை, சி.ஐ.எஸ்.எப்., படை, தங்கள் ...

விஜயகாந்த் திடீர் 'டென்ஷன்': எம்.எல்.ஏ.,வுக்கு சரமாரி அடி

Posted:

பண்ருட்டி: மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரண உதவிகள் வழங்க வந்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தன் கட்சி எம்.எல்.ஏ.,வை அடித்ததால் பரபரப்பு நிலவியது.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுப்பாளையம், விசூர் கிராமங்களில், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நேற்று காலை பண்ருட்டி வந்தார்.பெரியகாட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் எதிரே, நிவாரண உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரசார வேனில் இருந்து இறங்கிய விஜயகாந்த், அங்கு ...

பன்முகத்தன்மையே இந்தியாவின் பெருமை: லண்டனில் மோடி பெருமிதம்

Posted:

லண்டன்: ''இந்தியாவின் பெருமை, அதன் பன்முகத்தன்மையில் அடங்கியுள்ளது,'' என, பிரதமர் மோடி பேசினார்.பிரிட்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் இரவு, லண்டன், வெம்ப்ளே அரங்கில், இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் பேசியதாவது:பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், இந்தியாவின் நண்பர்; அவரது வரவேற்பு, எனக்கு, இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது. இரு சிறந்த ஜனநாயக நாடுகளுக்கு, இது வரலாற்று சிறப்பு மிக்க நாள். இந்தியா, இளைஞர்கள் நிரம்பிய நாடு. அதனால், நாம் தொடர்ந்து ஏழை நாடாக இருப்பதில் அர்த்தமில்லை. இந்தியாவில் ...

பிரான்சில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 128 பேர் பலி: ஐ.எஸ்., வெறிச் செயலுக்கு தலைவர்கள் கண்டனம்

Posted:

பாரிஸ்:ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சின் பாரிஸ் நகரில், பயங்கரவாதிகள், ஆறு இடங்களில் நடத்திய தாக்குதலில், 128 பேர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள, 'ஸ்டேட் டி பிரான்ஸ்' விளையாட்டு அரங்கில், நேற்று முன்தினம் இரவு, பிரான்ஸ் - ஜெர்மனி கால்பந்து அணிகளின் காட்சிப் போட்டி நடந்தது. இப்போட்டியைக் காண, 80 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அரங்கில் குவிந்திருந்தனர். அப்போது, அரங்கிற்கு வெளியே, திடீரென பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. விளையாட்டு விறுவிறுப்பில், ரசிகர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ...

பிரதமர் மோடி மீது சோனியா தாக்கு

Posted:

புதுடில்லி:''மதவாத கொள்கையை மறைக்கும் முகமூடியாக, வளர்ச்சி என்ற வார்த்தையை, நரேந்திர மோடி அரசு பயன்படுத்துகிறது,'' என, காங்., தலைவர் சோனியா குற்றஞ்சாட்டினார்.

நாட்டின் முதல் பிரதமரான நேருவின் பிறந்த தின நிகழ்ச்சி, டில்லியில் நேற்று நடந்தது. இதில், காங்., தலைவர் சோனியா பேசியதாவது:தங்களின் மதவாத கொள்கைகளை மறைக்க, சிலர் வளர்ச்சி என்ற வார்த்தையை, முகமூடியாக அடிக்கடி பயன்படுத்துகின்றனர். நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதாக கூறி, இன்று பலர் தாங்கள் பெற்ற விருதுகளை திரும்ப தருகின்றனர். ஆனால், சாஹித்ய அகாடமி யின் முதல் தலைவராக இருந்த நேரு, ...

தலைநகரமே வெள்ளக்காடு: மழையால் மிரளுது தமிழ்நாடு

Posted:

சென்னை: வானிலை மையத்தின் அறிவிப்பால், மிரண்டு போயுள்ளனர் சென்னைவாசிகள்வெளுத்து வாங்கும் வடகிழக்கு பருவமழையால், சென்னை நகரமே வெள்ளக்காடாக மாறிவிட்டது. சாலைகள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதால், வீடுகளில் சிறைபட்டு கிடக்கும் மக்கள், அத்தியாவசிய தேவைகளுக்குகூட பரிதவிக்கின்றனர். மழை இன்னும் தீவிரமடையுமென்ற வானிலை மையத்தின் அறிவிப்பால், மிரண்டு போயுள்ளனர் சென்னைவாசிகள்.

ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு:
அ.தி.மு.க., கட்சி தலைமை அலுவலகம் முன், மழைநீர் தேங்காமல் இருக்க, 25க்கும் மேற்பட்ட மாநகராட்சி ...

நிதிஷ் 20ம் தேதி முதல்வராக பதவி ஏற்பு

Posted:

பாட்னா:பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்., ஆகிய கட்சிகள் அடங்கிய, 'மெகா' கூட்டணியின் சட்டசபை தலைவராக, நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார். இதைஅடுத்து, பீஹாரில் அமையவுள்ள புதிய அரசின் முதல்வராக, வரும், ௨௦ல், அவர் பதவியேற்க உள்ளார்.

ஐந்து கட்டமாக...
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. 243 தொகுதிகள் உடைய பீஹார் சட்டசபைக்கு, ஐந்து கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், நிதிஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்., கட்சிகள் இடம் பெற்ற மெகா கூட்டணி, 179 தொகுதி களை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™