Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அத்வானியை அவமதிக்கவில்லை: கட்காரி

Posted:

நாக்பூர்:'பீஹார் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த கட்சியின் மூத்த தலைவர்களிடம், மேலிடத் தலைவர்கள் பேசி வருகின்றனர். மூத்த தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நான் ஒருபோதும் சொன்னதில்லை' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரான, பா.ஜ.,வைச் சேர்ந்த நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றில் அவர் கூறியுள்ளதாவது: 'பீஹார் சட்டசபை தேர்தல் தோல்விக்கு, தேர்தலை முன்னின்று நடத்தியவர்களே பொறுப்பேற்க வேண்டும்' என, மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா மற்றும் சாந்தகுமார் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுஇருந்தனர். ...

உயில் சொத்து மனைவிக்கே; வாரிசுக்கு அல்ல

Posted:

புதுடில்லி: மனைவிக்கு கணவன் எழுதி வைத்த சொத்து மீது, மகன்கள் உரிமை கோர முடியாது' என சுப்ரீம் கோர்ட், அதிரடி தீர்ப்பு வழங்கிஉள்ளது. ஆந்திராவைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பா. இவர், 1920ல், தன் உயிலில், மூன்றாவது மனைவி, வீரராகவம்மாவுக்கு, ராஜமுந்திரியில் உள்ள வீட்டை எழுதி வைத்தார். ஆனால், வாரிசு இல்லாத வீரராகவம்மா, தன் வீட்டை, சுப்பாராவ் என்ற உறவினருக்கு, 1976ல் கொடுத்து விட்டார். இந்நிலையில், அந்த வீட்டை, வெங்கட சுப்பாவின் இரண்டாவது மனைவி மகன் நரசிம்மராவ், பார்த்தசாரதி என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இதை எதிர்த்து, சுப்பாராவ் தொடர்ந்த வழக்கில், 'சொத்தில் ...

பீஹார் காங்., தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை

Posted:

புதுடில்லி: பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசில் இடம் பெறுவது தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன், கட்சியின் துணைத் தலைவர் ராகுல், நேற்று ஆலோசனை நடத்தினார்.

மொத்தம், 243 தொகுதிகளை உடைய, பீஹார் சட்டசபைக்கு நடந்து முடிந்த தேர்தலில், 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், 27 இடங்களில் வெற்றி பெற்று, லாலு பிரசாத்தின், ஆர்.ஜே.டி., முதல்வர் நிதிஷ்குமாரின், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கட்சிகளுக்கு அடுத்த படியாக, நான்காவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரை, மீண்டும் முதல்வராக்க, அக்கட்சி மற்றும் ...

இங்கிலாந்து தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி... அழைப்பு இந்தியாவில் உள்ளது எண்ணற்ற முதலீட்டு வாய்ப்பு

Posted:

லண்டன்:மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடி, இரண்டாவது நாளான நேற்று, தொழிலதிபர்கள் கூட்டம், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்ராணியுடன் விருந்து, பொதுக்கூட்டம் என, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.லண்டனில், இந்தியா - பிரிட்டன் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில், மோடியுடன், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொண்டார். இதில், மோடி பேசியதாவது:இந்தியாவில், பேரலை போல் முதலீட்டு வாய்ப்புகள் காத்து கிடக்கின்றன. அண்மையில், 15 துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ...

வெள்ள பாதிப்பு பகுதிகளில் அ.தி.மு.க., கோஷ்டி மோதல்...அடிதடி!

Posted:

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான சென்னை, ஆர்.கே.நகரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் தலைமையில் சென்ற அ.தி.மு.க.,வினர் இடையே மோதல் வெடித்தது. இதில் சென்னை மேயர் சைதை துரைசாமியும் அவரது உதவியாளர்களும் தாக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, சென்னையில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகர் முழுவதும் வெள்ளக்காடாகி உள்ளது. குறிப்பாக வட சென்னை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, சமூக நலத்துறை அமைச்சர் ...

ரூ.400 கோடி சதுப்பு நிலங்கள் 'அபேஸ்'

Posted:

சென்னை, பள்ளிக்கரணையில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான சதுப்பு நிலங்கள் அபகரிக்கப் பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருப்பினும், வருவாய் துறை, பதிவுத்துறை ஒத்துழைப்பு இல்லாததால், போலீசார் நடவடிக்கைகள் முடங்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.பள்ளிக்கரணையில், 66 ஏக்கர் மோசடியாக விற்பனை செய்யப்பட்டது குறித்த வழக்கு உயர் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலங்கள் மட்டுமல்லாது, கூடுதலான நிலங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.வனத்துறை புகார்குறிப்பாக, வழிகாட்டி மதிப்புகள் நிர்ணயிக்கப்படாத, 167 நிலங்கள் ...

நேரில் ஆறுதல் கூற வேண்டாமா? ஜெ.,விடம் கேட்கிறார் கருணாநிதி

Posted:

சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகில், து.மண்டபத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு, நிவாரணம் வழங்கக் கோரி, மறியலில் ஈடுபட்ட போது, அவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்; இது, கண்டிக்கத்தக்கது.தமிழகத்தில், தொடர்ந்து மழை பெய்கிறது. அமைச்சர்கள் ஆங்காங்கு துயர் துடைப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். இருந்த போதும், முதல்வர் ஜெயலலிதா, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லவில்லை. ஆறுதல் கூற, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முதல்வர் செல்வது, கடமை அல்லவா.சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், கல்லுாரி ...

பிரதமர் மோடியின் இமேஜ் குறையவில்லை

Posted:

பெங்களூரு:மத்திய நகர அபிவிருத்தி துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பெங்களூருவில் கூறியதாவது:

பீஹார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்துள்ளது. இதனால், தேசிய அரசியலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அங்கு தேர்தல் நடந்தது, முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக; பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக அல்ல. மாநில விஷயங்களின் அடிப்படையில் தேர்தல் நடந்ததால், பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
பீஹார் தேர்தல் முடிவு, பிரதமர் மோடியின் இமேஜுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது போன்ற செய்திகள் சரியல்ல. இதற்கு முன்னரும்கூட பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியின் தலைமை யில் 2004, 2009ல் ...

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் குவிப்பு

Posted:

சென்னை:சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், நேற்று மாலை முதல், மத்திய தொழில் பாதுகாப்பு படையான, சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் குவிக்கப்பட்டனர். நாளை முதல், அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்புக்கு ஏதுவாக, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், என்.எஸ்.சி., போஸ் சாலையில் உள்ள, 'மெட்ராஸ் பார் அசோசியேஷன் கேட்' நுழைவு வாயிலில் இருந்து, வடக்கு கோட்டை சாலை வரை இரும்பு கம்பி வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. கீழமை நீதிமன்ற வளாகத்தில் இருந்து உயர் நீதிமன்றத்திற்கு, இரும்பு கம்பி வேலி இடையே, ஐந்து இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நுழைவு வாயில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™