Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஒகேனக்கல்லில் தொடர்ந்து மழை

Posted: 13 Nov 2015 01:20 PM PST

கடந்த இரு நாள்களாக தருமபுரி நகரப் பகுதிகள் மழையின்றி வானம் வெளிவாங்கிய நிலையில், பென்னாகரம், ஒகேனக்கல் பகுதிகளில் மட்டும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Posted: 13 Nov 2015 01:20 PM PST

கெலவரப்பள்ளி நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்ததால், அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதுடன், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

மப்பேடு -தக்கோலம், சித்தராஜ கண்டிகை சாலைகள் சீர்செய்யப்படுமா?

Posted: 13 Nov 2015 01:19 PM PST

மப்பேடு - தக்கோலம் நெடுஞ்சாலை, கனரக வாகனங்களின் போக்குவரத்து காரணமாக கடுமையாக சேதமடைந்துள்ளதால்

தொடர் மழை: சென்னையில் இயல்பு வாழ்க்கை முடக்கம்

Posted: 13 Nov 2015 01:17 PM PST

வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பெய்த பலத்த மழையால் சென்னை, புறநகர்ப் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.

மியான்மர் தேர்தல்: ஆங் சான் சூ கி கட்சி அபார வெற்றி

Posted: 13 Nov 2015 01:15 PM PST

மியான்மரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொதுத் தேர்தலில், அமைதிக்கான

பாஜக மூத்த தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரவில்லை: கட்கரி

Posted: 13 Nov 2015 01:15 PM PST

பாஜக மூத்த தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரவில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

தீவிரமடைகிறது பருவமழை: பலி எண்ணிக்கை 108ஆக உயர்வு

Posted: 13 Nov 2015 01:14 PM PST

கடந்த இரு நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

சேலத்தில் கர்நாடக தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் பறிப்பு: போலீஸார் விசாரணை

Posted: 13 Nov 2015 01:11 PM PST

சேலத்தில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.20 லட்சத்தை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மாணவரிடம் மனிதக் கழிவை அகற்றச் சொன்ன ஆசிரியை கைது

Posted: 13 Nov 2015 01:09 PM PST

மாணவரை மனிதக் கழிவை கையால் எடுக்கச் சொன்ன நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியை வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும், அவரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வரை முகநூலில் அவதூறாக சித்திரித்த உதகை வழக்குரைஞர் கைது

Posted: 13 Nov 2015 01:09 PM PST

முதல்வர் ஜெயலலிதாவை முகநூலில் அவதூறாக சித்திரித்ததாகக் கூறி உதகையைச் சேர்ந்த வழக்குரைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

பாரதிதாசனின் படைப்புகளை மொழிபெயர்க்க வேண்டும்

Posted: 13 Nov 2015 01:08 PM PST

பாரதியாரின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வருவதைப் போன்று பாரதிதாசனின் நூல்களும் வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்று கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

குமாரபாளையம் நகரின் பசுமையை பாதுகாக்க 750 மரக்கன்றுகள்

Posted: 13 Nov 2015 01:04 PM PST

குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நகரின் பசுமையைப் பாதுகாக்கும் வகையில் முதல்கட்டமாக 750 மரக்கன்றுகள் நடும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

வழிப்பறி வழக்குகளில் தொடர்பு: ஒருவர் கைது

Posted: 13 Nov 2015 01:04 PM PST

சேலத்தில் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

செம்மறியாட்டுக் குட்டிகளை பராமரித்தல் குறித்த இலவச பயிற்சி

Posted: 13 Nov 2015 01:03 PM PST

செம்மறியாட்டுக் குட்டிகளை செழுமைப்படுத்துதல் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

டெங்கு நோயைத் தடுக்க மரக்கன்று நடும் திட்டம் தொடக்கம்

Posted: 13 Nov 2015 01:03 PM PST

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் டெங்கு நோயைத் தடுக்கும் நடவடிக்கையாக வார்டுகள் தோறும் மரக்கன்றுகள் நடும் திட்டம் நகராட்சி சுகாதாரத் துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம்

Posted: 13 Nov 2015 01:03 PM PST

ராசிபுரம் வட்ட தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது.

டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 13 Nov 2015 01:03 PM PST

குமாரபாளையம் ஜேகேகே நடராஜா மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மிதிவண்டி ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 13 Nov 2015 01:03 PM PST

பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி அருகே உள்ள வசந்தபுரத்தில் நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தேமுதிக தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள்

Posted: 13 Nov 2015 01:03 PM PST

நாமக்கல் மாவட்ட தேமுதிக தொழிற் சங்க பேரவை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நவ. 26-ல் அஞ்சல் துறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

Posted: 13 Nov 2015 01:02 PM PST

அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் வரும் 26-ஆம் தேதி கோவையில் நடைபெறுகிறது.

அஞ்சல் தலை வடிவமைப்புப் போட்டி: படைப்புகளை அனுப்ப வேண்டுகோள்

Posted: 13 Nov 2015 01:02 PM PST

தேசிய அளவிலான அஞ்சல் தலை வடிவமைப்புப் போட்டிக்கு அனைத்துத் தரப்பிலும் இருந்து ஓவியங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல்: சிகிச்சை பலனின்றி 5 வயது பெண் குழந்தை சாவு

Posted: 13 Nov 2015 01:02 PM PST

நாமக்கல் அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த 5 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.

அடையாளம் தெரியாத மூதாட்டி சாவு: தகவல் அளிக்க போலீஸார் வேண்டுகோள்

Posted: 13 Nov 2015 01:02 PM PST

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்த மூதாட்டி குறித்து தகவல் அளிக்கலாம் என போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு வார விழா இன்று துவக்கம்

Posted: 13 Nov 2015 01:02 PM PST

நாமக்கல் மாவட்டத்தில் 62வது கூட்டுறவு வார விழா சனிக்கிழமை (நவ.14)தொடங்குகிறது.

கூலித் தொழிலாளியின் உடலை மீட்டு போலீஸார் விசாரணை

Posted: 13 Nov 2015 01:01 PM PST

பரமத்தி வேலூர் வட்டம், நன்செய் இடையாறு புது சாலையில் உள்ள விநாயகர் கோவில் அருகே வியாழக்கிழமை இரவு இறந்து கிடந்த கூலித் தொழிலாளியின் உடலை மீட்டு, பரமத்தி வேலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

599 ஹெக்டேரில் அரசு மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு

Posted: 13 Nov 2015 01:01 PM PST

நாமக்கல் மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் 599.74 ஹெக்டேரில் அரசு மானியத்தில் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படும் என, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

திருச்செங்கோடு மலைப்பாதை சீரமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு

Posted: 13 Nov 2015 01:01 PM PST

திருச்செங்கோடு மலைப்பாதை சீரமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 13 Nov 2015 01:01 PM PST

எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடந்தது.

மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.1 கோடி தேவை

Posted: 13 Nov 2015 01:01 PM PST

மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.1 கோடி நிதி தேவை என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உத்தேசமாக மதிப்பீடு செய்துள்ளனர்.

ஆடை வடிவமைத்தல் இலவச பயிற்சி: பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு

Posted: 13 Nov 2015 01:01 PM PST

இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் அளிக்கப்படவுள்ள ஆடை வடிவமைத்தல் குறித்த இலவச தொழில் பயிற்சியில் சேர பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நிரம்பாத ஏரி, குளங்கள்

Posted: 13 Nov 2015 01:01 PM PST

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை பெய்த மழைக்கு 63 ஏரிகள் பாதியளவு கூட நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

சேகோ ஆலைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி சோதனை

Posted: 13 Nov 2015 01:01 PM PST

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேகோ ஆலைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி சோதனை மேற்கொண்டு 141 மூட்டை ஜவ்வரிசியை விற்பனை செய்யத் தடை விதித்தார்.

பாதுகாப்பான இடத்துக்கு மாணவர்கள் இடமாற்றம்

Posted: 13 Nov 2015 01:01 PM PST

தம்மம்பட்டியில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) உயர் மின்னழுத்தத்தால் வெள்ளிக்கிழமை தீப்பற்றி எரிந்தது. இதனால் அருகில் இருந்த பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அம்மம்பாளையம் பொதுமக்கள் பட்டா வழங்கக் கோரி மனு

Posted: 13 Nov 2015 01:01 PM PST

ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையம் அன்னை சத்யாநகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோட்டாட்சியர் சீ.ஜெயச்சந்திரனிடம் பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனர்.

பூச்சிகள் கடித்ததால் 6 பேர் மயக்கம்

Posted: 13 Nov 2015 01:01 PM PST

ஓமலூர் அருகே பூச்சிகள் கடித்ததால் மயக்கமடைந்த பள்ளி மாணவி உள்பட 6 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

நவ.16-இல் அழியா இலங்கை அம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

Posted: 13 Nov 2015 01:01 PM PST

ராசிபுரம் அருகே, கூனவேலம்பட்டிபுதூரில் அழியா இலங்கை அம்மன் (ஆயா கோயில்) கோயில் திருவிழா திங்கள்கிழமை (நவ.16) பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை: போலீஸார் விசாரணை

Posted: 13 Nov 2015 01:01 PM PST

ஓமலூர் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்காட்டில் இயல்பு வாழ்க்கை திரும்பியது

Posted: 13 Nov 2015 01:01 PM PST

ஏற்காட்டில் நான்கு நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

பள்ளி வளாகத்தில் மண்டல அலுவலகக் கட்டுமானம்

Posted: 13 Nov 2015 01:01 PM PST

சேலம் தாதகாப்பட்டி பகுதியில் 1955-இல் முன்னாள் முதல்வர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட பழைமையான மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில், கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் கட்டும் பணிகளைத் தடுத்து நிறுத்தி, பள்ளியைக் காப்பாற்ற வேண்டும் என கல்வியாளர்கள், பெற்றோர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

Posted: 13 Nov 2015 12:31 PM PST

சேலத்தில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண், வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டார்.

தலைவாசல் அருகே கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

Posted: 13 Nov 2015 12:31 PM PST

தலைவாசல் அருகே கொலை வழக்கில் மேலும் இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

இளம்பெண் கடத்தல்: இளைஞர் கைது

Posted: 13 Nov 2015 12:30 PM PST

ஆத்தூர் அருகே இளம்பெண்ணைக் கடத்தியதாக இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

வழிப்பறி வழக்குகளில் தொடர்பு: ஒருவர் கைது

Posted: 13 Nov 2015 12:30 PM PST

சேலத்தில் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

உணவு முறையும் - சர்க்கரை நோயும்

Posted: 13 Nov 2015 12:28 PM PST

பன்னாட்டு சர்க்கரை நோய் கூட்டமைப்பு 2014, 2015, 2016 ஆகிய மூன்று ஆண்டுகளையும் உணவின் முக்கியத்துவத்தை பொதுமக்களும்,

பண்டித நேரு - நிறையும் குறையும்!

Posted: 13 Nov 2015 12:27 PM PST

ஆசியாவின் ஜோதி, மனிதர்களின் மாணிக்கம் என்று அழைக்கப்பட்ட பண்டிதர் நேரு பிறந்து 125 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

அம்மம்பாளையத்தில் புதிய கால்நடை மருந்தகம் திறப்பு

Posted: 13 Nov 2015 12:26 PM PST

ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையத்தில் நபார்டு 20-ஆவது திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகக் கட்டடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.

ஓடைகளை போர்க்கால அடிப்படையில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்

Posted: 13 Nov 2015 12:25 PM PST

சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஓடைகள் போர்க்கால அடிப்படையில் தூர்வாரப்படும் என மேயர் எஸ்.சௌண்டப்பன் கூறினார்.

இளம்பிள்ளை அருகே மின்கசிவு: குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது

Posted: 13 Nov 2015 12:25 PM PST

இளம்பிள்ளை அருகே மின்கசிவால் குடிசை வீடு வெள்ளிக்கிழமை தீப்பற்றி எரிந்தது.

"அம்மா' திட்ட முகாம்

Posted: 13 Nov 2015 12:24 PM PST

சங்ககிரி வருவாய்த் துறை சார்பில் "அம்மா' திட்ட முகாம் சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அன்னியமல்ல, அன்னிய முதலீடு!

Posted: 13 Nov 2015 12:24 PM PST

பதினைந்து தொழில் பிரிவுகளில் அன்னிய நேரடி முதலீடு செய்வதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்தப் புதிய விதிமுறைத் தளர்வுகளால் அதிகம் பயன்பெறப் போகின்றவை கட்டுமானத் தொழில், விமானப் போக்குவரத்து, தனியார் வங்கி, ஒற்றை வணிகமுத்திரைப் பொருள் விற்பனை அங்காடி ஆகியவைதான்.

"தொழில்நுட்ப வசதிகளை ஆசிரியர்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்'

Posted: 13 Nov 2015 12:23 PM PST

தொழில்நுட்ப வசதிகளை ஆசிரியர்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று, பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் மா.மணிவண்ணன் தெரிவித்தார்.

அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் எவ்வளவு?

Posted: 13 Nov 2015 12:23 PM PST

அரசின் திருமண உதவித் தொகை, முதியோர் உதவித் தொகைகளைப் பெற வழங்கப்படும் கால அவகாசம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வீடு இடிந்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி

Posted: 13 Nov 2015 12:22 PM PST

தாரமங்கலத்தில் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.4 லட்சம் நிதியுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தர வலியுறுத்தல்

Posted: 13 Nov 2015 12:19 PM PST

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் என அகில இந்தியத் தொழிற்சங்க மையக் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

2 வாரங்களாக இல்லாத அளவு தேசியப் பங்கு சந்தையில் சரிவு

Posted: 13 Nov 2015 12:18 PM PST

கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் இல்லாத அளவுக்கு தேசியப் பங்கு சந்தைக் குறியீட்டு எண் (நிஃப்டி) வெள்ளிக்கிழமை 62.7 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.

ஆத்தூரில் இயற்கை இடர்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

Posted: 13 Nov 2015 12:18 PM PST

ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் சீ.ஜெயச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இறக்குமதி தங்கத்தின் விலை மதிப்பு குறைப்பு

Posted: 13 Nov 2015 12:17 PM PST

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலை மதிப்பை மத்திய அரசு குறைத்துள்ளதுள்ளது.

"ஸ்னாப்டீல்' தீபாவளி விற்பனை: 10,000 வீடுகளுக்கு முன்பதிவு

Posted: 13 Nov 2015 12:16 PM PST

இணையதள வர்த்த நிறுவனமான "ஸ்னாப்டீல்' மேற்கொண்ட தீபாவளி சிறப்பு விற்பனை விழாவில், புதிய வீடுகள் வாங்குவதற்காக

16,444 "எக்கோஸ்போர்ட்' கார்களை திரும்பப் பெறுகிறது ஃபோர்டு

Posted: 13 Nov 2015 12:14 PM PST

முன்னணி கார்த் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்டு இந்தியா, தனது புகழ்பெற்ற "ஸ்போர்ட்ஸ்' பயன்பாட்டுக் கார் ரகமான

இலங்கையில் தமிழர் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு

Posted: 13 Nov 2015 12:13 PM PST

இலங்கையில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரி,

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தோல்வி: இந்தியா குற்றச்சாட்டு

Posted: 13 Nov 2015 12:12 PM PST

பயங்கரவாதத்துக்கு எதிரான திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தோல்வியடைந்துவிட்டதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம்

Posted: 13 Nov 2015 12:11 PM PST

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய 2016, ஏப்.15-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.ஸிடமிருந்து சிஞ்சார் நகரம் மீட்பு

Posted: 13 Nov 2015 12:11 PM PST

இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளிடமிருந்து இராக்கிலுள்ள ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த

கப்பன் பூங்காவில் இன்று மலர் கண்காட்சி

Posted: 13 Nov 2015 12:10 PM PST

பெங்களூரு கப்பன் பூங்காவில் 14-ஆவது மலர்க் கண்காட்சி சனிக்கிழமை (14) நடைபெறுவதால், பூங்கா வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய சீனத் தீவு அருகே அமெரிக்க போர் விமானங்கள்

Posted: 13 Nov 2015 12:10 PM PST

தென் சீனக் கடல் பகுதியிலுள்ள சர்ச்சைக்குரிய சீன தீவுகள் அருகே அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.நா. அகதிகள் அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்

Posted: 13 Nov 2015 12:09 PM PST

ஐ.நா. அகதிகள் உரிமை அமைப்பின் புதிய தலைவராக இத்தாலியைச் சேர்ந்த ஃபிலிப்போ கிராண்டியை

அமெரிக்கத் தாக்குதலில் "ஜிகாதி ஜான்' சாவு?

Posted: 13 Nov 2015 12:08 PM PST

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் விடியோக்களில் பிணையக் கைதிகளின் தலைகளைத் துண்டித்துப் படுகொலை செய்யும்

லெபனானில் ஐ.எஸ். தாக்குதல்: 43 பேர் பலி; 239 பேர் காயம்

Posted: 13 Nov 2015 12:07 PM PST

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்த்தப்பட்ட இரட்டை மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 43 பேர் உயிரிழந்தனர்; 239 பேர் காயமடைந்தனர்.

கோலின்றி டிராவில் முடிந்தது மும்பை - புணே ஆட்டம்

Posted: 13 Nov 2015 12:05 PM PST

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை நடந்த மும்பை சிட்டி - புணே சிட்டி அணிகள் இடையிலான

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வார்னர் இரட்டைச் சதம்; ஆஸ்திரேலியா-416/2

Posted: 13 Nov 2015 12:03 PM PST

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில்

வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

Posted: 13 Nov 2015 12:03 PM PST

மடிக்கேரி கலவரத்தை முன்வைத்து வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் எச்சரித்தார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20: வங்கதேசம் வெற்றி

Posted: 13 Nov 2015 12:01 PM PST

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது வங்கதேசம்.

பாரா ஒலிம்பிக்: நரேஷ் குமார் தகுதி

Posted: 13 Nov 2015 12:00 PM PST

அடுத்த ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க

சென்னை மாவட்ட தடகளம் இன்று தொடக்கம்

Posted: 13 Nov 2015 11:59 AM PST

ராஜ்யோகா கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை, பிரம்ம குமாரிகள் ஐஸ்வர்ய விஷ்வ வித்யாலய விளையாட்டுத் துறையின் சார்பில்,

சச்சினை கொந்தளிக்க வைத்த பிரிட்டிஷ் ஏர்வேஸ்

Posted: 13 Nov 2015 11:59 AM PST

பிரிட்டிஷ் ஏர் வேஸ் விமான நிறுவனம், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் குடும்பத்தினருக்கு

பெங்களூரில் இன்று தொடங்குகிறது: இந்தியா - தென் ஆப்பிரிக்கா 2-வது டெஸ்ட்

Posted: 13 Nov 2015 11:58 AM PST

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.

பெங்களூரு

Posted: 13 Nov 2015 11:57 AM PST

நவ.16-இல் சட்டப்பேரவைக் கூட்டம் தொடக்கம்

Posted: 13 Nov 2015 11:56 AM PST

கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் வருகிற 16-ஆம் தேதி தொடங்கி 10 நாள்களுக்கு நடைபெறுகிறது.

கப்பன் பூங்காவில் கூட்டு பலாத்காரம்: நிபுணர்கள் குழு விசாரணை

Posted: 13 Nov 2015 11:55 AM PST

கப்பன் பூங்காவில் பெண் மீதான கூட்டு பலாத்காரம் குறித்து மாநில மகளிர், குழந்தைகள் மீதான வன்முறை, தாக்குதல், பாலியல் பலாத்காரத் தடுப்பு மற்றும் பரிந்துரை வழங்கல் நிபுணர் குழுத் தலைவர் வி.எஸ்.உக்ரப்பா வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்

Posted: 13 Nov 2015 11:54 AM PST

பெங்களூரில் வருகிற 18-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

சீன ஓபன் பாட்மிண்டன்: அரையிறுதியில் சாய்னா

Posted: 13 Nov 2015 11:53 AM PST

சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளா

குழந்தைகள் திருவிழா: கூடுதல் பேருந்துகள் இயக்கம்

Posted: 13 Nov 2015 11:53 AM PST

குழந்தைகள் திருவிழாவை முன்னிட்டு, பெங்களூரில் கூடுதல் பேருந்துகள் இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

லோக் ஆயுக்த நீதிபதியை நீக்கக் கோரி கையெழுத்து இயக்கம்

Posted: 13 Nov 2015 11:52 AM PST

லோக் ஆயுக்த நீதிபதியை நீக்கக் கோரி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

கொட்டும் மழையில் சாலை செப்பனிடும் பணி: பொதுமக்கள் எதிர்ப்பு

Posted: 13 Nov 2015 11:52 AM PST

களியக்காவிளையில் கொட்டும் மழையில் மேற்கொள்ளப்பட்ட சாலை செப்பனிடும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்

Posted: 13 Nov 2015 11:52 AM PST

பெங்களூரில் வருகிற 18-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

மதுபானக் கூட முறைகேடு விவகாரம்: கேரள அரசைக் குறிவைத்து மார்க்சிஸ்ட் எம்எல்ஏ இல்லத்தில் சதித் திட்டம்;அமைச்சர் பாபு புகார்

Posted: 13 Nov 2015 11:52 AM PST

கேரளத்தில் ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசைக் குறிவைக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவின் இல்லத்தில்

தக்கலையில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

Posted: 13 Nov 2015 11:51 AM PST

தக்கலையில் சமூகவளையம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மோடி எதிர்ப்பு அணியில் மேலும் இரு எம்.பி.க்கள்

Posted: 13 Nov 2015 11:51 AM PST

பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததற்கு தவறான உத்திகளைக் கையாண்டதுதான் காரணம் என்று

தோவாளை திருமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் 17 இல் சூரசம்ஹாரம்

Posted: 13 Nov 2015 11:51 AM PST

தோவாளை திருமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹார விழா செவ்வாய்க்கிழமை(நவ.17) நடைபெறுகிறது.

சோட்டா ராஜன் சகோதரிகளின் மனுவை பரிசீலிக்க சிபிஐ-க்கு தில்லி நீதிமன்றம் உத்தரவு

Posted: 13 Nov 2015 11:50 AM PST

நிழல் உலக தாதா சோட்டா ராஜனைச் சந்திக்க அனுமதி கேட்டு அவருடைய சகோதரிகள் கொடுத்துள்ள மனுவை பரிசீலிக்குமாறு,

ஐக்கிய அரபு நாடுகளுக்கு அருண் ஜேட்லி நாளை பயணம்

Posted: 13 Nov 2015 11:50 AM PST

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, அரசு முறைப் பயணமாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை செல்லவுள்ளார்.

மூத்த தலைவர்கள் உள்கட்சி பிரச்னைகளை வெளியே பேசியிருக்க வேண்டாம்

Posted: 13 Nov 2015 11:49 AM PST

மூத்த தலைவர்கள் உள்கட்சிப் பிரச்னைகளை பொதுஇடங்களில் பகிரங்கமாகப் பேசியிருக்க வேண்டாம் என்று

சட்ட மசோதாக்கள் எதுவும் நிலுவையில் இல்லை

Posted: 13 Nov 2015 11:48 AM PST

சட்ட மசோதாக்கள் எதுவும் மேலவையில் நிலுவையில் இல்லை என்று, அதன் தலைவர் டி.எச்.சங்கரமூர்த்தி தெரிவித்தார்.

மடிக்கேரி கலவரத்தைக் கண்டித்து சாலை மறியல்

Posted: 13 Nov 2015 11:47 AM PST

மடிக்கேரி கலவரத்தை கண்டித்து, விசுவ ஹிந்து பரிஷத், பாஜக, பஜ்ரங்தள் உள்ளிட்ட ஹிந்து ஆதரவு அமைப்புகள் வெள்ளிக்கிழமை பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டன.

கோலார் தங்கவயல் நகராட்சி தலைவராக கே.சி.முரளி தேர்வு

Posted: 13 Nov 2015 11:47 AM PST

கோலார் தங்கவயல் நகராட்சித் தலைவராக கே.சி.முரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேடப்படும் குற்றவாளியை வங்கதேசத்திடம் ஒப்படைத்தது இந்தியா

Posted: 13 Nov 2015 11:47 AM PST

வங்கதேசத்தின் நாராயண்கஞ்ச் பகுதியில் 7 பேர் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய எதிரியான

பெங்களூரில் இன்று குழந்தைகள் திருவிழா

Posted: 13 Nov 2015 11:46 AM PST

பெங்களூரில் சனிக்கிழமை (நவ.14) குழந்தைகள் திருவிழா நடைபெறுகிறது.

கேரளத்துக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 13 Nov 2015 11:46 AM PST

களியக்காவிளை அருகே சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க குழு அமைப்பு

Posted: 13 Nov 2015 11:46 AM PST

மருத்துவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிக்க குழு ஒன்றை அமைத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட நீதிபதி தேர்வு முடிவுகள் வெளியீடு

Posted: 13 Nov 2015 11:45 AM PST

கர்நாடகத்தில் மாவட்ட நீதிபதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™