Tamil News | Online Tamil News |
- மின் கட்டணம் மீண்டும் உயரும் அபாயம்
- அதிரடி:ஜாதி பிரச்னையை கிளப்பியவர்கள் கட்சியில் இருந்து நீக்கம்...
- ரூ.3,250 கோடிசெயல்:தமிழக தண்ணீர் தாகத்தை தீர்க்க திட்டம்:
- அடுத்த முறையும் அமித் ஷா தான் தலைவர்
- 'புளுகு மூட்டையை பொத்தி வைக்க முடியுமா'
- வெள்ள தடுப்பு நிதியில் ஊழலா? ஸ்டாலின் சந்தேகம்
- லண்டனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
- உலகில் சிறந்த 100 பல்கலைகள்: இந்தியா முதன் முதலாக தேர்வு
- சட்ட விரோத பணப் பரிமாற்றம்: தடுக்க விரும்பாத 'ஜி - 20'
- இங்கிலாந்து தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை
| மின் கட்டணம் மீண்டும் உயரும் அபாயம் Posted: தமிழ்நாடு மின் வாரியம், ஆண்டு தோறும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம், வருவாய் தேவை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதன் அடிப்படையில், மின் கட்டண உயர்வு குறித்து, ஆணையம் முடிவு செய்யும். நடப்பு ஆண்டில், இதுவரை மின் வாரியம், வருவாய் தேவை அறிக்கையை தாக்கல் செய்யாததால், ஆணையம், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, மின் கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. ஒழுங்கு முறை ஆணையம்: தமிழகத்தில், மின் கட்டணம் உயர்த்தும் அதிகாரம், தமிழக அரசிடம் இருந்தது. 2003 மின்சார சட்டப்படி, மின் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ... |
| அதிரடி:ஜாதி பிரச்னையை கிளப்பியவர்கள் கட்சியில் இருந்து நீக்கம்... Posted: அ.தி.மு.க.,வில், அமைச்சருக்கு எதிராக, ஜாதி பிரச்னையை கிளப்பியவர்கள்,கட்சியில் இருந்தே அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைக்கு, பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயபாஸ்கர்; சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளார். இவர் மீது, கட்சியின் கறம்பக்குடி முன்னாள் ஒன்றிய செயலர் சொக்கலிங்கம்; அவரது மனைவியும், கறம்பக்குடி ஒன்றிய தலைவருமான கெங்கையம்மாள் ஆகியோர் புகார் தெரிவித்தனர். 'தாய் சேய் நல விடுதி அமைப்பது தொடர்பாக, அமைச்சரிடம் ஆலோசிக்க சென்ற போது, ஜாதியை சொல்லி ... |
| ரூ.3,250 கோடிசெயல்:தமிழக தண்ணீர் தாகத்தை தீர்க்க திட்டம்: Posted: நகர்ப்புறங்களில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வர, தமிழக அரசு, 3,250 கோடி ரூபாயில் செயல்திட்டம் தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது. அதில், 'மத்திய அரசின் பங்காக, 1,372 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என கோரியுள்ளது. இதன் மூலம், சென்னை உட்பட மாநிலத்தின் முக்கிய நகரங்களின் தண்ணீர் தாகத்தை நான்காண்டுகளில் தீர்க்க, செயல் திட்டத்தில் திட்டங்கள் உள்ளன. மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கனவு திட்டங்களில் ஒன்றான, 100 'ஸ்மார்ட்' மற்றும் 500 'அம்ருட்' நகரங்கள் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் மாதம் ... |
| அடுத்த முறையும் அமித் ஷா தான் தலைவர் Posted: 'பீஹார் தேர்தல் தோல்விக்காக, பா.ஜ., தலைவர் அமித் ஷாவின் பதவிக்கு, நெருக்கடி ஏற்பட வாய்ப்பில்லை; அவருக்கு இன்னொரு முறை வாய்ப்பு தரப்பட்டு, உ.பி., சட்டசபை தேர்தல் வரை, தலைவர் பதவியில் அவரே நீடிப்பார்' என, தகவல்கள் தெரிவிக்கின்றன. சலசலப்பு: பீஹார் சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, பா.ஜ.,வில், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர், கட்சி தலைமையை விமர்சித்து, அறிக்கை விட்டிருந்தனர். அதில், 'பீஹார் தேர்தல் தோல்விக்கு, அனைவருக்கும் பொறுப்பு உள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது; டில்லி ... |
| 'புளுகு மூட்டையை பொத்தி வைக்க முடியுமா' Posted:
சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னையில் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும், 'ஜாஸ்' சினிமா நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருப்பவர், சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக். அவர் நிர்வாகத்தில் உள்ள நிறுவனம், தியேட்டரை வாடகைக்கு எடுத்து நடத்துகிறது என்றால், அதற்கான முதலீடு எங்கிருந்து, யார் மூலம் கிடைத்தது? ஜாஸ் சினிமா நிறுவனம், கோவை, பீளமேடு, பாங்க் ஆப் இந்தியாவில் இருந்து, 2015 ஜனவரியில் பெற்ற, 42.50 கோடி ரூபாய் கடனுக்கு, 'லுாக்ஸ்' திரையரங்குகளில் உள்ள புரொஜக்டர், பர்னிச்சர், 'ஏசி' ஆகியவற்றை அடமானமாக காட்டிஉள்ளனர். ... |
| வெள்ள தடுப்பு நிதியில் ஊழலா? ஸ்டாலின் சந்தேகம் Posted: கடலுார்: ''வெள்ளத் தடுப்பு பணிக்காக செலவு செய்ததாக கூறப்படும், 600 கோடி ரூபாயில், ஊழல் நடந்துள்ளதா என, மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். குறை கேட்டார்: கடலுார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, நேற்று, பார்வையிட்ட ஸ்டாலின், மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின், அவர் அளித்த பேட்டி: 'வடகிழக்கு பருவமழை கடுமையாக இருக்கும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. அதனால் தான், இத்தனை பெரிய பாதிப்பு. ஏரிகள், கண்மாய்கள், ... |
| லண்டனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு Posted: லண்டன்:முதல் முறையாக, பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டில், மூன்று நாட்கள், பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். பார்லிமென்டில் உரை, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துடன் விருந்து, அம்பேத்கர் நினைவு இல்லம் திறப்பு, வெம்ப்லே ஸ்டேடியத்தில் உரை என, மோடியின் பயண திட்டம் சுறுசுறுப்பாக அமைந்துள்ளது. டில்லியிலிருந்து நேற்று காலை, சிறப்பு விமானத்தில் லண்டன் புறப்பட்ட பிரதமர் மோடி, இந்திய நேரப்படி, நேற்று மதியம், லண்டன் சென்றடைந்தார். உலகின் மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்றான, லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில், மோடியை, ... |
| உலகில் சிறந்த 100 பல்கலைகள்: இந்தியா முதன் முதலாக தேர்வு Posted: லண்டன்: உலகில், மிகச் சிறந்த, 100 பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில், முதன் முதலாக, பெங்களூரில் உள்ள, ஐ.ஐ.எஸ்.சி., எனப்படும், இந்திய அறிவியல் மையம் இணைந்துள்ளது.டைம்ஸ் உயர்கல்வி அமைப்பு, உலகின் தலை சிறந்த, 100 பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதை தயாரித்த, பில் பேட்டி கூறியதாவது: இந்த பட்டியலில், அமெரிக்காவைச் சேர்ந்த, ஸ்டான்போர்டு, கால்டெக் மற்றும் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப மையம் ஆகியவை, முதல் மூன்று இடங்களைத் தக்க வைத்துக் கொண்டு உள்ளன. இந்தாண்டு, இந்த பட்டியலில் முதன் முதலாக, இந்தியா ... |
| சட்ட விரோத பணப் பரிமாற்றம்: தடுக்க விரும்பாத 'ஜி - 20' Posted:
இஸ்தான்புல்: 'இந்தியா, பிரிட்டன் தவிர, இதர 'ஜி-20' நாடுகள் எதுவும், உண்மையான அக்கறையுடன், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என, ஜெர்மனியைச் சேர்ந்த, 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற, ஊழல் எதிர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் துருக்கி கிளையின் நிர்வாக இயக்குனர், கோபஸ் - டி - ஸ்வார்ட் வெளியிட்டு உள்ள அறிக்கை விவரம்:ஆஸ்திரேலியாவில், 2014ல், ஜி - 20 மாநாடு நடைபெற்றது; அதில், ஊழல், வரி ஏய்ப்பு, சட்ட விரோத பணப் பரிமாற்றம் ஆகிய வற்றை தடுக்க, அனைத்து நாடுகளும் உறுதி பூண்டன. அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும், ... |
| இங்கிலாந்து தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை Posted: லண்டன் : இங்கிலாந்து தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இங்கிலாந்து அரசுடனும், நிறுவனங்களுடன் பணியாற்ற விரும்புவதாகவும், இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறும், அந்நாட்டு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடி பேசியதாவது: சிறந்த நாடான இங்கிலாந்துக்கு நான் மிக தாமதமாக வந்துள்ளேன். ஆனால் நானும், இங்கிலாந்து பிரதமர் கேமரூனும் நல்ல தொடர்பில் தான் இருந்தோம். எங்கள் மக்கள் ஒருங்கிணைவு பற்றி நன்கு அறிந்தவர்கள். அதனால் தான் இங்கிலாந்துடனான நட்புறவில் இந்தியா நீடிக்கிறது. தற்போது இளைஞர்களுக்கு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 13,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |