Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மறுஅறிமுகம்

Posted: 12 Nov 2015 09:53 AM PST

பெயர்:பூங்குழலி
சொந்த ஊர்:திருப்பூர்
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:இணையம்
பொழுதுபோக்கு:கவிதைகள்
தொழில்:
மேலும் என்னைப் பற்றி: முதுகலை  பட்டபடிபிற்காக விடுதியில் தங்கியருந்ததினால் ஈகரை உறவுகளை பிரிய நேரிட்டது. மீண்டும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி :வணக்கம்:

பட்டினத்தார் உணர்த்திய உண்மைகள்

Posted: 12 Nov 2015 08:42 AM PST


தாம் உணர்ந்த உண்மைகளை சித்தர்களும் புலவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் நமக்கு எடுத்துக் காட்டி உள்ளார்கள்

அவற்றை நாம் படித்துப்பார்த்தால் தவறுகளைச் செய்யும் போது அச்சப்படுவோம்

பட்டினத்தார் பாடிய சில பாடல்களை நாம் பார்ப்போம்

நன்றி-முகநூல்

பெற்றோர்கள் கவனத்திற்கு ,

Posted: 12 Nov 2015 08:27 AM PST

பெற்றோர்கள் கவனத்திற்கு , நான் இரண்டு நாட்களுக்கு முன் தீபாவளி விடுமுறைக்காக எனது கிராமத்திற்கு சென்றிருந்தேன் , அங்கே எனது வீடருகே சிறுவர்கள் விளையாடிகொண்டிருன்தனர் , அவர்களிடம் பெயர் , படிக்கும் வகுப்புக்களை கேட்டு கொண்டிருந்தேன் , வகுப்புகளை கேட்கும் பொழுது தமிழ் வழி கல்வியா ?, ஆங்கில வழி கல்வியா ? என கேட்க்கும் பொழுது அவர்களுக்கு நான் கேட்க்கும் கேள்வி புரியவில்லை .. இங்க்லீஷ் மீடியமா ? தமிழ் மீடியமா ? என்று கேட்டேன் ஒரு சிலர் இங்க்லீஷ் மீடியம் என்றனர் , இன்னும் பலர் தமிழ் மீடியம் ...

திருமந்திரம் விளக்கப்படங்கள்

Posted: 12 Nov 2015 07:56 AM PST

திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ...

உயிரைத் தேடி ! கிராமம் நோக்கி ஒரு பயணம் ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Posted: 12 Nov 2015 07:48 AM PST

உயிரைத் தேடி ! கிராமம் நோக்கி ஒரு பயணம் ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை. thirugeetha@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! புதிய வாழ்வியல் பதிப்பகம், 17, 1-வது மெயின் ரோடு, கோட்டூர் கார்டன், சென்னை-600 086. பேச : 044 42072076, மின்னஞ்சல் : puthiyavazhviyal@gmail.com பக்கங்கள் : 136, விலை : ரூ. 70. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ***** நூல்ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்கள் மதுரையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டவர்,பண்பாளர், மிக ...

கீதையின் நாயகன் யார் ?

Posted: 12 Nov 2015 07:36 AM PST

கீதை போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு உபதேசிக்கபட்டால் மற்றவர்கள் அதை படிக்கவேண்டிய அவசியம் என்ன?போர்க்களத்தில் உபதேசிப்பதை யாரும் குறித்துவைக்க கண்டிப்பாக முடியாது..அப்படியானால் கீதையின் நோக்கம் என்ன?எதற்காக கீதை உபதேசிக்கப்பட்டது..சற்று சிந்திப்போம்.. கீதையின் முன்பக்கத்தில் மட்டும் ஸ்ரீ கிருஷ்ணரின் படம் போடப்பட்டு இருக்கின்றது..உள்ளே அதை படித்தவர்கள் உணரலாம்.. சிவன்.. ஈஸ்வரன்..என்ற வார்த்தைகளே அதிகம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.. அப்படியானால், கீதையை உபதேசித்தது சிவபெருமானா?சிவனுடைய கோவிலுக்கு ...

நவம்பர் 10-வல்லிக்கண்ணன் பிறந்தநாள்

Posted: 12 Nov 2015 06:44 AM PST

வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி, நவம்பர் 10, 1920 - நவம்பர் 9, 2006) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. ...

கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?

Posted: 12 Nov 2015 06:16 AM PST

முருகன் ஒரு தமிழ்க் கடவுள்." என்று சொல்லப் படுகின்றது. சுப்பிரமணியன்,ஸ்கந்தன், என்று சம்ஸ்கிருத மொழியில் அழைக்கப் பட்டாலும், வட இந்திய இந்துக்களுக்கு முருகன் வழிபாட்டுக்கு உரிய தெய்வமல்ல. வட நாட்டிற்கு மாறாக, தமிழகத்தில் ஊருக்கொரு முருகன் கோயில் காணப் படுகின்றது. அதை வைத்துக் கொண்டு, முருகன் தமிழர்க்கே உரிய தெய்வம் என்ற முடிவுக்கு அவ்வளவு எளிதில் வந்து விட முடியாது. அது எந்தளவிற்கு சரியானது?முருகன் வழிபாடு தமிழகத்திற்கு மட்டுமே உரிமையானதல்ல. பிற திராவிட இனங்களான மலையாளிகள், கன்னடர், தெலுங்கர்கள் ...

அப்பா

Posted: 12 Nov 2015 06:11 AM PST

அனைத்து அப்பாக்களும்..

ஆணிணமே!

Posted: 12 Nov 2015 06:09 AM PST

அடக்க நினைக்கும் 
ஆணிணமே 
அகன்று விடு!! 

பெண்கள் 
இன்னும் 
அகிம்சையாய் 
இருப்பதால் 
தான் 
அகல மறுக்கிறாய்!! 

வீறு கொண்டு 
எழுந்தால் 
வெற்றி 
எங்களுக்கு 
தான்!!

தமிழ்நாட்டில் தாவரங்கள் (137)

Posted: 12 Nov 2015 05:47 AM PST

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

தொடர்வண்டி மக்கள்

Posted: 12 Nov 2015 05:46 AM PST

ஈரமில்லா சட்டை
சோர்வு இல்லா முகம்
வியர்வை ஆகா விரல்கள்
நிற்க நினைக்கா கால்கள்
பறக்க துடிக்கும் கைகள்
பக்கத்தில் பார்க்க கூட
முயலாத கண்கள்
காதணியாய் காதொலிகள்
கால்களை கவனிக்க
வெளிநாட்டு காலணிகள்
பேச்சு இல்லை
சிரிப்பு இல்லை
தூக்கம் இல்லை
பார்ப்பவர்கள் எல்லோரும்
உயிரோட்டம் உள்ள இயந்திரமாய்

அப்பாவின் கவலை

Posted: 12 Nov 2015 05:36 AM PST

பெரியவளுக்கு அடுத்தமாசம்
தலை பிரசவம்...
பி.இ படிக்கும் மகனுக்கு
பீஸ் கட்டணும்...
பிளஸ் டூ முடிச்சதும்
சின்னவளை
டீச்சர் டிரெய்னிங்ல சேர்க்கணும்...
மாடி வீட்ட சீக்கிரம்
கட்டி முடிச்சி
கிரக பிரவேசம் நடத்தணும்...
இப்படி,
அடுத்தடுத்த கவலைகளுடன்
பேங்க்க்கு நடந்துசென்றார் அப்பா...
வேற என்ன
லோன் வாங்கலாம் என்று!

விடலை

Posted: 12 Nov 2015 05:23 AM PST

மோகமுள்ளின் கூர்மை கொடுமையாய் குத்துவதால் தான் பாரதி மோகத்தை முறித்துவிடு என்றாரோ? விடலையாய் இருந்தால் பசலைநோய் பற்றிக்கொள்கிறது.. பாலுணர்வு தூண்டல் பாடாய் படுத்துகிறது. பவித்ர ஞாநிகளின் உபதேசங்கள் பறந்து போகின்றன.. மெய் ஞானம் அகன்று மென்மையான தேகம் மட்டுமே மினுமினுக்கின்றன.. கண்களுக்கு கட்டுப்பாடுகள் என்னும் கதவிடபட்டிருந்தால் அதை கடந்து செல்ல துடிக்கின்றன வயதும் அறிவும்.. தெரியாத உறுப்புகளின் தேடல்களை தெரியாத உணர்வுகளுக்கு தெரிவித்தது யாரோ......? திண்ணாத கிளிகளுக்கும் திகட்டாத ...

என்னைப்பற்றிய தகவல்.

Posted: 12 Nov 2015 05:20 AM PST

பெயர்:செந்தில்குமார் மனைவி:ஹேமலதா மகன்:நரேந்தர் சொந்த ஊர்:தொட்டியம் -திருச்சிராப்பள்ளி மாவட்டம் வசிப்பது:எருமப்பட்டி-நாமக்கல் மாவட்டம் ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:இணையத்தில் உலவும் பொழுது. பொழுதுபோக்கு:வாசிப்பு தொழில்:சிறிய அளவில் குளிர்பானக்கடை நடத்தி வருகிறேன். மேலும் என்னைப் பற்றி: படிப்பு:இளங்கலை வரலாறு. இதுவரை எனது என்ன ஓட்டங்களை நாட்குறிபேட்டில் மட்டுமே எழுதி வந்தேன்.அனல் தற்பொழுது ஈகரை மூலமாக பதிவது (பகிர்வது) மனதிற்கு உற்சாகத்தை தருகிறது............ ஈகரைக்கு எனது நன்றிகள்...

செய்தது குறைவு, செய்ய வேண்டியது அதிகம்.

Posted: 12 Nov 2015 05:16 AM PST

எனது நூறாவது பதிப்பு : - ஏற்கனவே இக்கடூரையை அழியும் மொழிகளின் வரிசையில் தமிழ் மொழி என்ற பதிப்பில் , பதித்திருந்தேன் ..இக்கடூரையை தனியே பதிப்பதற்கு எனக்கும் என் தமிழுக்கும் உள்ள காதல் எனக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? யோசித்துப் பார்த்தால் மிகவும் தற்செயலான ஒன்றுதான். தமிழகத்தில் பிறக்காமல், வேறு எந்த மாநிலத்திலாவது, நாட்டிலாவது பிறந்திருந்தால், அல்லது வேறு உயிரினமாகவே பிறந்திருந்தால் எனக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு இருக்கக்கூடும்? குறிப்பிட்ட தம்பதிக்குப் பிறந்த குழந்தை அவர்களுக்குத் தாய், ...

வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை

Posted: 12 Nov 2015 04:40 AM PST

வாட்ஸ் ஆப் செயலியை மொபைல்களில் மட்டுமல்லாது இனி கணினியிலும் பயன்படுத்தலாம். Whatsapp கணினியில் பயன்படுத்தும் முறை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப் செயலி அனைத்து விதமான மொபைல் ஃபோன்களிலும் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுந்தகவல்களோடு, புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், குரல் பதிவுகள் என பலவற்றை வாட்ஸ் ஆப் மூலம் பகிரமுடியும். இந்தச் செயலியை மொபைல்களில் பயன்படுத்தும் அதே வேளையில் கணினியிலும் பயன்படுத்த பல பயனர்கள் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்திருந்தனர். தற்போது ...

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!

Posted: 12 Nov 2015 03:49 AM PST

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் 1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும். 2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார். 3. அநாகரீகமான வார்த்தைகள் ...

அழியும் மொழிகளின் வரிசையில் தமிழ்மொழி ! அழிக்கும் வகையினில் தமிழினம் முன்னணி !!

Posted: 12 Nov 2015 03:42 AM PST

கற்ககசடறக் கற்பவைகற்றபின் நிற்க அதற்கு தக கற்ககசடறக் கற்பவைகற்றபின் நிற்க அதற்கு தக கல்வியை தவறின்றிக்கற்று கற்றபின் அதன்படி வாழுதல் உயர்வு. எப்பொருள் யாா் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. அழியும் மொழிகளின் வரிசையில் தமிழ்மொழி ! அழிக்கும் வகையினில் தமிழினம் முன்னணி !! தாயும் சேயும் பேசுவது அன்னியமொழி! அழியாதோ எம் தமிழ்மொழி!! அது நடக்க விடலாமோ தடுக்க முயற்ச்சிகள் வேண்டாமோ! பூமியின் முதல் மொழியான ...

கடலுக்கடியில் பூம்புகார்..தமிழர் பெருமையை உலகம் அறிய செய்வோம்

Posted: 12 Nov 2015 03:25 AM PST

கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் ...

உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில் எது தெரியுமா?

Posted: 12 Nov 2015 02:52 AM PST

சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை.இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது. ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம். சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும். உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் ...

தமிழ் நாகரிகத்தின் உச்சங்கள்

Posted: 12 Nov 2015 12:15 AM PST

1. உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்ப்புற நகரி எழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன். படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றைப் பரப்பியவனும் தமிழன். 2. சங்கங்கள் அமைத்து, மொழியை வளர்த்தவனும் தமிழன்தான். ஏறத்தாழ 10,000 ஆண்டுகளாய் இந்நிலை இருந்து வந்தது. 3. சாதி, சமயம் சிற்சில விதிவிலக்குகளைத் தவிர - சங்க இலக்கியங்களில் இல்லை, இல்லவே இல்லை. ஆனால் உரோமபுரி, கிரேக்கம், சீனம், எபிரேயம்(பிப்ரு) ...

பழந்தமிழ் இசைக்கருவிகள்

Posted: 12 Nov 2015 12:09 AM PST

பழந்தமிழ் இசை ******************** இசைக்கருவிகள் *********************** முரசு ********** நமது முன்னோர்கள் எந்த ஒரு செயலைச் செய்தாலும், அதை பலர் அறியும் விதமாகப் பறைசாற்றிச் செய்வார்கள். "பறை அடித்தல்" அல்லது "முரசு கொட்டுதல்" என்று அதற்கு பெயர். தோற்கருவிகளுள் மிகவும் பெருமை வாய்ந்தது முரசமாகும். இத்தகைய முரசம் பலவகைப்படும். கொடை முரசு ************** தான தர்மங்கள் செய்வதை அறிவிப்பது. மணமுரசு ************** மங்கல காரியமான மணம் புரிதலை தெரிவிப்பது. வெற்றிமுரசு ************** அரசன் ...

இந்தியாவின் பூர்வீக குடிகள் தமிழர்களே!!!

Posted: 12 Nov 2015 12:06 AM PST

பாரத பெரும் தேசத்தின் பழங்குடியினர் நம் தமிழரே. இன்று நம்மை ஆண்டு கொண்டிருப்பவர்கள் எல்லாம் நமக்கு பின்னர் பஞ்சம் பிழைக்க வந்தவர்களே..,! கடந்த 26-9-2009இல் மலேசிய நாளிதழ்களில் வெளிவந்த செய்தி இது. 'நேச்சர்' என்ற ஆங்கில ஏட்டில் வெளிவந்த இந்தச் செய்தியைத் தமிழ் நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன…. இந்தியா என்று இன்று சொல்லப்படுகின்ற நாட்டின் ஆதி(பூர்வீக) குடிமக்கள் தென்னிந்தியர்களே அதாவது தமிழர்களே என்றும், இன்றைக்கு இந்தியாவை ஆதிக்கம் செய்யும் வட இந்திய இனம் பிற்காலத்தில் இந்தியாவில் குடியேறியவர்கள் ...

பழந்தமிழரின் பண்பாட்டு அடையாளம் பனம்பழம்

Posted: 12 Nov 2015 12:05 AM PST

தமிழகத்தின் தேசிய மரம் எதுவென்று எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள்? பனைமரத்துக் குத்தான் அந்தப் பெருமை என்பது பலருக்கும் ஆச்சரியமூட்டும் தகவலாக இருக்கும். வளமிக்க தமிழ் பூமியில் எண்ணற்ற மரங்கள் விளைந்து செழிக்க, அப்படி என்ன உசத்தி இந்த பனைமரத்துக்கு என்ற கேள்வி எல்லோ ருக்குள்ளும் எழும். பசேலென்றுதழைத்திருக்கும் வாழையின் அத்தனை பாகங்களையும் பயன்படுத்தத் தெரிந்த தமிழ் இனம் வாழையை விடவும் கூடுதலாக பயன்படுத்திய மற்றொரு தாவரம் பனை தான். அதுமட்டுமின்றி இந்தியாவில் விளையும் மொத்த பனை மரங்களில் 80 சதவிகிதம் ...

தமிழைக் காப்பாற்றுவீர்களா?

Posted: 12 Nov 2015 12:02 AM PST

எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழ் என்று முழங்கு சங்கே ! என்று பாடிய எங்கள் புரட்சிக்கவிஞனின் பிள்ளைகள் நாங்கள்.நெற்றிக்கண்ணைத்திறப்பினும் குற்றம் குற்றமே ! என்று சொன்னவன் எங்கள் முப்பாட்டன் . ஆத்திசூடியும் கொன்றைவேந்தனும் பாடியவள் எங்கள் ஔவைப்பாட்டி உலகம் போற்றும் பொதுமறையாம் திருக்குறளை பாடிவிட்டு கன்னியாகுமாரிகடற்கரையில் தலைநிமிர்ந்து நிற்பவன் எங்கள் பாட்டனார் வள்ளுவனார் . இப்படிப்பட்ட பரம்பரையில் வந்த தமிழர்களாகிய நாங்கள் இன்று எத்தனையோ இழப்புகளுக்கு மத்தியிலும் தமிழர்கள் என்ற தனித்துவத்தை ...

ஆவாரம் செடி இயற்கை மருத்துவ குணங்கள்

Posted: 11 Nov 2015 11:58 PM PST

ஆவாரை செடியின் மருத்துவ குணங்கள் :- ஆவாரை என்பது செடிவகையைச் சார்ந்தது. ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர், பிசின் ஆகியன அனைத்துமே நமக்கு பயன்படுபவை ஆகும். ஆவாரை இலை வற்றச்செய்தல் குணத்தை உடையது. குளிர்ச்சியூட்ட கூடியது. ஆவாரைப்பூ உடற்சூட்டையும் எரிச்சலையும் போக்கக்கூடியது. ஆவாரம்பட்டை வற்றச் செய்வது மற்றும் ஒரு ஊட்டச்சத்துள்ள மருந்துப் பொருளாகும் ஆவாரைவேர் ஆஸ்துமா மற்றும் தோல் நோய்களுக்கு மர...ுந்தாகும். நன்றி-முகநூல்

செம்மொழி என்றால் என்ன?

Posted: 11 Nov 2015 11:00 PM PST

கிறிசுஆண்ட2012தமிழாண்டு2042-செம்மொழியென்றால் முதலில் தெளிவாக சொல்வதானால் பிறமொழி எழுத்துக்கள் சொற்கள் இன்றி மொழிபெயர்புகளற்ற சுயஇலக்கண வருத்தி சுயமான இலக்கியங்கள் கொண்டு 1000 ஆண்டுகள் முதல் 2000ஆண்டுகளுக்கு முற்பட்டவையான செம்மையான மொழியே செம்மொழி அவற்றில் தலைசிறந்து நிற்பதாக தமிழ் இருப்பது பெருமைக்குரியது. (சிவந்தமொழியல்ல) தமிழ்நாடெங்கும் கோலாகலம். படித்தவர்கள்,படிக்காதவர்கள், ஏழைகள், பணக்காரர்கள், ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது செம்மொழி மாநாடு நடப்பதுப் ...

கேட்பாறற்று கிடக்கும் இராசேந்திர சோழனின் கல்லறை! தமிழர்கள் நாம் என்ன செய்ய போகிறோம்?

Posted: 11 Nov 2015 10:55 PM PST

தமிழ்மொழியைச்சாட்டி-தமிழினத்தைச்சாட்டி அதிகரத் திற்காக போரிடும் தலைவர்களென வேடமிடு பவர்களும் அத்தகைய வேந்தர்களுக்கும் இதுதான் கதி. தஞ்சைப்பெரிய கோவிலையே மராட்டியருக்கு தாரை வார்த்த இராயராய சோழனுக்கு கல்லறை கூடு இல்லை ஒரு முதியவர் அந்த இடத்தை பராமரித்து வரும்நிலை. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக் காவி லிருந்து முப்பது கி.மீ தொலைவில் இருக்கிறது நாட்டேரி என்ற அழகான கிராமம். நாட்டேரிக்குப் பக்கத்தில் பிரம்மதேசம் என்னும் ஊர். இந்த ஊரின் வெளிப்புறத்தில் பசுமையான வயல்வெளிக்கு மத்தியில் ...

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Posted: 11 Nov 2015 10:37 PM PST

போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன் உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார். என்பெற்ற தாயாரும் என்னைப் பிணமென்று இகழ்ந்துவிட்டார் பொன்பெற்ற மாதரும் போவென்று சொல்லிப் புலம்பிவிட்டார் கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடமுடைத்தார் உற்றொழிய ...

பண்டைய தமிழர் உணவுகள்

Posted: 11 Nov 2015 10:32 PM PST

பண்டைத் தமிழர்கள் விருந்தோம்பலில் தலைசிறந்து விளங்கினர். தம்மை நாடிவந்த விருந்தினரு க்கு சுவையான உணவு வகைகளைச் செய்து விருந்தளித்து மகிழ்வித்தனர். தாம் உண்ணும் உணவு எதுவாயினும் அதை மறைக்காது விருந்தினர்களுக்குக் கொடுத்துத் தாமும் உண்டு மகிழ்வர். தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கங்களையும், விருந்தோம்பும் பண்பாட்டையும் பத்துப்பாட்டு விரிவாக எடுத்துரைக்கின்றது. மதுவும் புலாலும் மதுவும், புலாலும் சங்க இலக்கிங்களில் மணம் வீசிக்கொண்டு கிடப்பதைக் காணலாம். பழந்தமிழர் மதுவையும் இறைச்சியையும் சிறந்த ...

தமிழின் சிறப்பு!

Posted: 11 Nov 2015 10:25 PM PST

தமிழ்' என்பது. தமிழை ""உயர்தனிச் செம்மொழி'' என்பர் அறிஞர். தமிழ் உயர்ந்த மொழி, தனித்த மொழி, செம்மையான மொழி என்பது இதன் பொருள். "தமிழ்' என்பதற்கு "அழகு' எனவும் பொருள் உண்டு. இவ்வுண்மையைத் ""தமிழ் தழுவிய சாயல்'' என்பதால் நன்கறியலாம். தமிழுக்கு "இனிமை' எனவும் பொருள் உண்டு. இதைத் தேன்தமிழ், தீந்தமிழ் என்ற அடைமொழிகளே மெய்ப்பிக்கும். தமிழ் என்பதை தம்-இழ் எனப் பிரித்து, தம்மிடத்தில் "ழ்'ழை உடையது "தமிழ்' எனப் பொருள் கூறுவதும் உண்டு. தமிழுக்கு இனம் மூன்று. அவை வல்லினம், மெல்லினம், இடையினம், என்பவை. ...

செம்பு குடங்களில் நீர் எதற்கு.....?

Posted: 11 Nov 2015 10:21 PM PST

அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ, நாடே நவீன மயமாகிவிட்டதால், கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பல தண்ணீர்கள் முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். சித்தர்கள் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா? செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரைவைத்திருந்து ...

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் ஒரு பரபரப்பான நகரம்

Posted: 11 Nov 2015 09:51 PM PST

ஆதிச்சநல்லூரின் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் பூமியில் ஒரு பரபரப்பான நகரமே இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அங்கு வாழ்ந்த மனிதர்கள் வெள்ளி, செம்பு, தங்கத்தால் ஆன ஆபரணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அழகிய மதிற்சுவர்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அது யாரும் கேள்வி கேட்பாரற்ற பொட்டல்காடு. ஏனிந்த நிலைமை என்று பார்த்தோமானால்.. "எல்லாம் அந்த பாழாய்ப்போன அரசியல்தான்" எல்லாம் இந்த வடக்கத்தியர்களுக்கு தமிழன் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான். இதுதான் இன்றைய ராமேஸ்வரம் ...

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை..!!

Posted: 11 Nov 2015 09:24 PM PST

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழக த்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெரு வெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெ டுத்தான் . ஆனால், அது சாதாரன விசயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண் ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபி டித்தார்கள் தமிழர்கள். நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™