Tamil News | Online Tamil News |
- அமைச்சர்கள் மாற்றமா? அ.தி.மு.க.,வில் கலக்கம்
- தீபாவளிக்கு தமிழகத்தில் 5,300 கிலோ தங்க நகைகள் விற்பனை
- கொள்ளிடத்தில் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீ ர் வீணடிப்பு
- பீஹார் சட்டசபைக்கு தேர்வான 143 பேர் கிரிமினல்கள் : 96 பேர் மீது கொலை, ஆள் கடத்தல் வழக்குகள்
- மோடி அமித் ஷாவை விமர்சிக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை: கட்காரி
- எப்படி இறந்தார் சுனந்தா?எப்.பி.ஐ., அறிக்கை தாக்கல்
- கருணாநிதி தூது: கம்யூ., நிராகரிப்பு
- கடலூர் மாவட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு சேதம்
- வடசென்னையில் இயல்பு வாழ்க்கை முடக்கம்
- சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்புக்கு தயாராகும் ஐகோர்ட்: தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரம்
- எல்லையில் இந்திய - பாக்., வீரர்கள் இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து
| அமைச்சர்கள் மாற்றமா? அ.தி.மு.க.,வில் கலக்கம் Posted: 'தமிழக அமைச்சரவை மாற்றப்படலாம்' என்ற தகவலால், அமைச்சர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.தமிழக அமைச்சரவையில், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், வைத்தி லிங்கம், மோகன், காமராஜ் ஆகியோர், தலா, இரண்டு துறைகளை கவனித்து வருகின்றனர். இதனால், அமைச்சரவையில் மாற்றம் வரலாம்; புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு, எம்.எல்.ஏ.,க்களிடமும், 'மாஜி' அமைச்சர்களிடமும் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், முத்தரையர் சமுதாயத்தை அவமதித்து பேசியதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும், சசிகலா தரப்பினர் தியேட்டர் வாங்கிய விவகாரம் குறித்து, ஏடாகூடமாக பேசியதாக, அமைச்சர் வீரமணி ... |
| தீபாவளிக்கு தமிழகத்தில் 5,300 கிலோ தங்க நகைகள் விற்பனை Posted: தீபாவளியையொட்டி, நான்கு நாட்களில், தமிழகம் முழுவதும், 5,300 கிலோ தங்க நகைகள் விற்பனையாகி உள்ளன; விலை குறைவால், கடந்த ஆண்டு சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கன மழை பெய்த போதும், 4,800 கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனை நடந்துள்ளது. நம்நாட்டில், தங்கம் பயன்பாட்டில் தமிழகம் முன்னணியில் உள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில், தங்க நகைகள் மீதான செய்கூலி குறைவாக இருப்பதுடன், நகைக் கடைகளும் ஏராளமான சலுகைகளை அறிவிக்கின்றன. அதனால், தினமும் சராசரியாக, 1,200 கிலோ தங்க நகைகள் விற்பனையாகின்றன. ஆண்டுதோறும் தீபாவளிக்கு, தங்க ... |
| கொள்ளிடத்தில் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீ ர் வீணடிப்பு Posted: திருச்சி மாவட்டம், முக்கொம்பில் துவங்கி, தஞ்சாவூர், நாகை மாவட்டங்கள் வழியாக, கடலூர் மாவட்டத்தில், வங்கக்கடலில் கலப்பது கொள்ளிடம் ஆறு. இது, காவிரியின் வெள்ள வடிகாலாக பயன்படுத்தப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை, கொள்ளிடம் ஆறு வழியாக கடலுக்கு அனுப்பி வீணடிப்பதை, பொதுப்பணித் துறையினர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.இந்த ஆற்றின் குறுக்கே கதவணை கட்டினால், ஆண்டுதோறும், ஏராளமான டி.எம்.சி., தண்ணீரை சேமிக்க முடியும். இது தொடர்பாக, விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் என, பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை ... |
| பீஹார் சட்டசபைக்கு தேர்வான 143 பேர் கிரிமினல்கள் : 96 பேர் மீது கொலை, ஆள் கடத்தல் வழக்குகள் Posted: பாட்னா : மொத்தம், 243 எம்.எல்.ஏ.,க்களை கொண்டுள்ள பீஹார் சட்டசபையில், 143 எம்.எல்.ஏ.,க்கள் மீது, கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர்களில், 96 பேர் மீது, கொலை, ஆள் கடத்தல் போன்ற பயங்கர குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ள தகவல் தெரியவந்து உள்ளது.பீஹார் சட்டசபைக்கு, அக்., 12ம் தேதி துவங்கி, நவ., 5ம் தேதி முடிவடைந்த, ஐந்து கட்ட தேர்தலில் பதிவான ஓட்டுகள், 8ம் தேதி எண்ணப்பட்டன. தேர்தல் முடிவுகளின் படி, இப்போதைய முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, 'மெகா' கூட்டணி அமோக வெற்றி பெற்றது; பா.ஜ., கூட்டணி, 58 இடங்களை மட்டுமே பிடித்து, எதிர்க்கட்சியாக ... |
| மோடி அமித் ஷாவை விமர்சிக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை: கட்காரி Posted: புதுடில்லி: பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் விமர்சிக்கும் நிர்வாகிகள் மீது, கட்சி மேலிடம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.நரேந்திர மோடி, பிரதமராகவும், அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவராகவும் பொறுப்பேற்ற பின், அந்த கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி, யஷ்வந்த் சின்ஹா, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர், கட்சியிலும், ஆட்சியிலும் ஓரங்கட்டப்பட்டனர். சமீபத்தில், பீஹாரில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, பா.ஜ., மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷியின் வீட்டில், அத்வானி, யஷ்வந்த் சின்ஹா, சாந்த குமார் ... |
| எப்படி இறந்தார் சுனந்தா?எப்.பி.ஐ., அறிக்கை தாக்கல் Posted: புதுடில்லி : மர்மமான முறையில் மரணம் அடைந்த, சுனந்தா புஷ்கரின் உடல் உள் உறுப்புகளில், கதிர்வீச்சு தாக்கம், மிகக் குறைந்த அளவே இருந்ததாகவும், அவர், நச்சுத்தன்மை மிக்க, 'பொலோனியம்' ரசாயனத்தால் கொல்லப்படவில்லை என்றும், டில்லி போலீஸ் கமிஷனர், பி.எஸ்.பாஸ்சி கூறியுள்ளார். காங்., மூத்த தலைவர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், 51. இவர், இரு ஆண்டுகளுக்கு முன், டில்லி ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர், அணுக்கதிர் வீச்சை ஏற்படுத்தக்கூடிய, நச்சுத்தன்மை மிக்க பொலோனியம் ரசாயனப் பொருளை பயன்படுத்தி கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, சுனந்தா ... |
| கருணாநிதி தூது: கம்யூ., நிராகரிப்பு Posted: மார்க்சிஸ்ட் தேசிய செயலர் சீதாராம் யெச்சூரிக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தூது அனுப்பிய தகவல் வெளியாகிஉள்ளது. மக்கள் நலக் கூட்டணியுடன் சேரும் திட்டத்தில், தி.மு.க., தூது விடுத்துள்ளதாஅல்லது இந்த கூட்டணியைஉடைக்கும் எண்ணத்தில் இது நடந்து உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.இது குறித்து, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் அடங்கிய, மக்கள் நலக் கூட்டணியில், மார்க்சிஸ்ட் கட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், கூட்டணி குறித்து மார்க்சிஸ்ட் தலைமையுடன் பேச விரும்பிய கருணாநிதி, அதற்காக, முன்னாள் மத்திய ... |
| கடலூர் மாவட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு சேதம் Posted: கடலூர் மாவட்டத்தில், கன மழை மற்றும் வெள்ளத்தால், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. மின்சாரம் மற்றும் போக்குவரத்து, இரண்டாவது நாளாக துண்டிக்கப்பட்டு உள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, 9ம் தேதி மாலை, கடலூர் அருகே கரையைக் கடந்தது. அப்போது, சூறைக்காற்றுடன் கன மழை பெய்ததால், கடலூர் மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. தண்ணீரில் மூழ்கியும், வீடுகள் இடிந்தும், 28 பேர் இறந்துள்ளனர்; ஏராளமான கால்நடைகள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மின்சாரம் துண்டிப்பு: கன மழையுடன், 90 கி.மீ., வேகத்தில் காற்று ... |
| வடசென்னையில் இயல்பு வாழ்க்கை முடக்கம் Posted: சென்னையில், கடந்த இருநாட்களில் பெய்த மழையால், திருவொற்றியூர், திரு.வி.க., நகர், அம்பத்துார், சோழிங்கநல்லுார் மண்டலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரட்டூர், கொளத்துார், துரைப்பாக்கத்தில், பகுதிவாசிகளின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. |
| சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்புக்கு தயாராகும் ஐகோர்ட்: தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரம் Posted: சென்னை: சென்னை உயர் நீதிமன்றம், நவ., 16 முதல், மத்திய தொழில் பாதுகாப்புப் படையான, சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்புக்குள் வருகிறது. இதனால், உயர் நீதிமன்றத்தை மட்டும் தனியாகப் பிரிக்கும் வகையில், தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.தமிழை வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி தலைமையிலான, 'முதல் பெஞ்ச்' அமைந்துள்ள நீதிமன்ற அறைக்குள் சில வழக்கறிஞர்களும், சட்ட மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 'சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நவ., 16 முதல், சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, தலைமை நீதிபதி ... |
| எல்லையில் இந்திய - பாக்., வீரர்கள் இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து Posted: அட்டாரி : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அட்டாரி எல்லையில், இந்திய - பாகிஸ்தான் வீரர்கள், இனிப்பு வழங்கி, வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். பஞ்சாப் மாநிலத்தில், பாக்., எல்லையை ஒட்டியிருக்கும், அட்டாரியில், தீபாவளி, ரமலான், சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில், இந்திய - பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்கள், இனிப்பு வழங்கி, வாழ்த்துகளை பரிமாறி கொள்வது வழக்கம். கடந்த ஜூலை, ஆகஸ்டில், பாக்., ராணுவம், காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் அத்துமீறி, பலமுறை தாக்குதல் நடத்தியது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் உறவில் பதற்றம் நிலவியது. இதையடுத்து, சுதந்திர ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 12,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |