Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ராஜபாளையத்தில் துக்கம் விசாரிக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி சாவு
- இலங்கைச் சிறையிலிருந்து விடுதலையான 126 மீனவர்கள் தமிழகம் வருவதில் தாமதம்
- நரிக்குடி அருகே கோஷ்டி மோதல்: 4 பேருக்கு அரிவாள் வெட்டு
- திருத்தங்கலில் இரு இடங்களில் தீ விபத்து
- உணவக உரிமையாளரை தாக்கிய 3 பேர் கைது
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு பிரிவினரிடையே மோதல்: 2 பேர் காயம்; பொறியியல் பட்டதாரி உள்ளிட்ட இருவர் கைது
- தலைமை ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம்
- ஸ்ரீவிலி.பள்ளியில் நுகர்வோரியல் கருத்தரங்கு
- "அம்மா' உணவக பணியாளர்கள் இருவருக்கு வெட்டு: ஒருவர் கைது
- சிவகாசி அருகே மினி லாரி ஓட்டுநர் வெட்டிக் கொலை
- இது பா.ஜ.க.வுக்கு நல்லதல்ல!
- காவிரித் தண்ணீரும், கண்ணீரும்
- மழை, மழை, அடைமழை!
- உல்ஃபா தீவிரவாதத் தலைவரை இந்தியாவிடம் ஒப்படைத்தது வங்கதேசம்
- குரூப்-2 தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
- கட்டுமானம், பாதுகாப்பு உள்பட 15 துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு
- அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை: கட்கரி வலியுறுத்தல்
- புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கை நவ.14-இல் தொடங்கும்: நிதீஷ் குமார்
- ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்: பதக்கங்களை எரிக்க முன்னாள் ராணுவத்தினர் முயற்சி
- கடலூர்: மின் விநியோக சீரமைப்பு பணியில் 2,039 பணியாளர்கள்
- அனைத்துத் துறைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன
- ஐ.பி.எல். நிதி முறைகேடு: ஷாரூக்கிடம் அமலாக்கத் துறை விசாரணை
- அன்னிய நேரடி முதலீடு: மோடி மீது சிதம்பரம் தாக்கு
- ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம்: "விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்'
- 30 நிமிடத்துக்கு முன்பாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி
- போடி பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் இளைஞர் உள்பட 3 பேர் தற்கொலை
- கொடைக்கானல் அருகே மோதல்: 4 பேர் கைது
- விஷத்தால் சுனந்தா உயிரிழக்கவில்லை
- மனைவி பிரிந்த சோகத்தில் கணவர் தற்கொலை
- பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநர் கொலை
- கணவரை அடித்துக் கொன்ற மனைவி, மகன் கைது
- பட்டாசு வெடித்ததில் மோதல்: குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது
- பஞ்சாப்: தடுப்புக் காவலில் சீக்கியத் தலைவர்கள்
- வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 6 பேர் மீது வழக்கு
- நேபாள நெருக்கடி: போக்குவரத்து தடையை நீக்க ஐ.நா. வலியுறுத்தல்
- கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
- தலைக்கவசம் அணிந்து தொடர் வழிப்பறிகேரள இளைஞர் கைது: 22 பவுன் நகைகள் மீட்பு
- நடந்து சென்றவரை தாக்கிய 4 பேர் கைது
- ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடினார் பிரதமர் மோடி
- திண்டுக்கல் பகுதியில் மழை
- பழனியில் பலத்த மழை: வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
- மோட்டார் சைக்கிள்கள் மோதல்: இளைஞர் சாவு
- அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு
- சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
- ஹஸாரா இனத்தவர் படுகொலை: ஆப்கனில் மாபெரும் கண்டனப் பேரணி
- ஒருவர் மீது தாக்குதல்: 2 பேர் கைது
- பழனி மானூர் சுவாமிகள் குருபூஜை
- மியான்மரில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம்
- சின்னமனூர் அருகே சாலையில் சடலத்துடன் பொதுமக்கள் மறியல்
- பழனி
- கொடைக்கானலில் மண் சரிவு
- அமெரிக்காவில் விமான விபத்து: 9 பேர் பலி
- குரூப் 2 தேர்வுகள்: இளைஞர்களுக்கு இலவச பயிற்சி முகாம்
- மாலத்தீவில் அவசர நிலை வாபஸ்
- மோட்டார் சைக்கிள்- ஆட்டோ மோதல்: ஒருவர் சாவு
- ஆண்டிபட்டியில் பேருந்து நிறுத்துமிடம் மாற்றம்: கிராம மக்கள் அவதி
- கிரிக்கெட் விளையாடுவதில் தகராறு: 8 பேர் கைது
- 25 நாள்களாக வைகையில் கலக்கும் மஞ்சளாற்று உபரிநீர்: கால்வாய் சீரமைக்கப்படாததால் 5 கண்மாய்கள் பாதிப்பு
- ரசாயன உரத்தின் அளவைக் குறைக்க யோசனை
- பாலுசெட்டிசத்திரம்-முசரவாக்கம் சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்
- கோயில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
- பூச்சி, நோய்க் கட்டுப்பாடு: நவம்பர் மாதத்துக்கான முன்னறிவிப்பு
- வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவர் காயம்
- குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
- மின் கம்பங்கள் சாய்வா? புகார் தெரிவிக்கலாம்
- அதிமுக சாதனை விளக்க பொதுக் கூட்டம்
- தெரு நாய்கள் அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சம்
- சாலைகளை செப்பனிட தீர்மானம் நிறைவேற்றம்
- தனியாருக்கு மீன்பிடி உரிமம்: குடிநீர் மாடுபடும் அபாயம்
- குண்டும், குழியுமாக மாறிய சாலைகள்
- நவ. 17, 18-இல் ஆட்சிமொழிப் பயிலரங்கம்
- மேலமையூர் ஏரி ஆக்கிரமிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் குடியிருப்புப் பகுதிகள்
- பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
- மழையால் ஸ்தம்பித்தது கும்மிடிப்பூண்டி
- பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆய்வு
- டி.வி., பெட்டி வெடித்ததில் முதியவர் சாவு
- காவலர் தற்கொலை
- மது அருந்த பணம் தர மறுப்பு: 4 பேர் மீது கத்திக் குத்து
- இரு சக்கர வாகன விபத்து: இருவர் சாவு
- தீர்த்தகிரி வலசை பெரிய ஏரி உடைப்பு
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- நிரம்பும் நிலையில் மதுராந்தகம் ஏரி
- 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஓமலூர் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு
- கோத்தகிரியில் பலத்த மழை: பெண் சாவு, 8 வீடுகள் சேதம்
- வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிசாட்-15
- சாத்தான்குளம் தேவாலயத்தில் புனிதர்கள் கண்காட்சி
- குலசேகரன்பட்டினம் பள்ளியில் பண்பாட்டுப் போட்டிகள்
- தலாய் லாமாவை சந்தித்தார் நடிகர் கமல்
- சங்கரேஸ்வரி கோயிலில் கேதார கெளரி விரத பூஜை
- கோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம்
- ஆழ்வார்திருநகரி வட்டார விவசாயிகளுக்கு இயந்திர நெல் நடவுக்கு ரூ.18 லட்சம் வரை மானியம்
- ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா
- தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிறுவனர் தின விழா
- கோவில்பட்டி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது
- ஆறுமுகனேரி கோயிலில் பிரதோஷ பவனி
- சாத்தான்குளம் கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
- மண் சரிவு: திருமலை மலைப் பாதை மூடல்
- சித்தூரில் நிரம்பி வழியும் ஏரிகள்
- மழையால் காய்கறி விலை கடும் உயர்வு
- தொடர் மழை: சாலைகள் சேதம், வீடுகளில் தண்ணீர் புகுந்தது
| ராஜபாளையத்தில் துக்கம் விசாரிக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி சாவு Posted: 11 Nov 2015 01:03 PM PST ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை துக்கம் விசாரிக்க சென்ற பெண் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். |
| இலங்கைச் சிறையிலிருந்து விடுதலையான 126 மீனவர்கள் தமிழகம் வருவதில் தாமதம் Posted: 11 Nov 2015 01:02 PM PST பாக் நீரிணைப்புப் பகுதியில் பலத்த சூறாவளி வீசி வருவதால் இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 126 மீனவர்கள் தமிழகம் திரும்பி வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. |
| நரிக்குடி அருகே கோஷ்டி மோதல்: 4 பேருக்கு அரிவாள் வெட்டு Posted: 11 Nov 2015 12:31 PM PST விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. |
| திருத்தங்கலில் இரு இடங்களில் தீ விபத்து Posted: 11 Nov 2015 12:30 PM PST சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை ராக்கெட் பட்டாசு வெடித்தபோது இரு இடங்களில் தீவிபத்து ஏற்பட்டது. |
| உணவக உரிமையாளரை தாக்கிய 3 பேர் கைது Posted: 11 Nov 2015 12:30 PM PST சிவகாசியில் செவ்வாய்க்கிழமை இரவு உணவக உரிமையாளரை தாக்கிய மூவரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 11 Nov 2015 12:29 PM PST விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக பொறியியல் பட்டதாரி உள்ளிட்ட இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| தலைமை ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் Posted: 11 Nov 2015 12:29 PM PST அனைவருக்கும் கல்வி இயக்கம், வத்திராயிருப்பு வட்டார வளமையம் சார்பில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான அடைவுத் தேர்வு குறித்த மீளாய்வுக் கூட்டம் மகாராஜபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. |
| ஸ்ரீவிலி.பள்ளியில் நுகர்வோரியல் கருத்தரங்கு Posted: 11 Nov 2015 12:28 PM PST ஸ்ரீவில்லிபுத்தூர், ஜி.எஸ்.இந்து மேல்நிலைப் பள்ளி நுகர்வோர் கழகம் சார்பில் நுகர்வோரியல் கருத்தரங்கு புதன்கிழமை தலைமை ஆசிரியர் ஆர்.ஏ.அழகர்சாமி தலைமையில் நடைபெற்றது. |
| "அம்மா' உணவக பணியாளர்கள் இருவருக்கு வெட்டு: ஒருவர் கைது Posted: 11 Nov 2015 12:27 PM PST சாத்தூரில் அம்மா உணவகத்தில் பணியாற்றும் இருபெண்களை அரிவாள்மனையால் வெட்டியவரை போலீஸார் கைது செய்தனர். |
| சிவகாசி அருகே மினி லாரி ஓட்டுநர் வெட்டிக் கொலை Posted: 11 Nov 2015 12:27 PM PST சிவகாசி அருகே புதன்கிழமை மினிலாரி ஓட்டுநர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். |
| Posted: 11 Nov 2015 12:21 PM PST வெற்றிக்கு ஆயிரம் தந்தைகள்; தோல்வி ஓர் அநாதை' என்ற பழமொழி உண்டு. பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளை அடுத்து பாரதிய ஜனதா கட்சிக்குள் எழுந்துள்ள அதிருப்திக் குரல்களைக் கேட்கும்போது இந்தப் பழமொழிதான் நினைவில் வருகிறது. |
| Posted: 11 Nov 2015 12:20 PM PST சோழ நாடு சோறுடைத்து' என்பது ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் பெருமைமிகு பொன்மொழியாகும். இதனை தமிழ்நாட்டின் "நெற்களஞ்சியம்' என்று கூறுவர். இப்போது இந்தப் பெருமைகள் எல்லாம் பொய்யாய், பழங்கதையாய் மெல்லப் போய்க் கொண்டிருக்கின்றன. |
| Posted: 11 Nov 2015 12:16 PM PST தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலத்தில் மழையினால் 42 பேர் இறந்துள்ளனர். இவர்களில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களைவிட, மழை ஓதம் காரணமாக வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் இறந்தவர்களே அதிகம். ஓரிருவர் மின் கம்பி அறுந்து விழுந்ததில் இறந்துள்ளனர். |
| உல்ஃபா தீவிரவாதத் தலைவரை இந்தியாவிடம் ஒப்படைத்தது வங்கதேசம் Posted: 11 Nov 2015 12:08 PM PST உல்ஃபா தீவிரவாத இயக்கத்தின் முக்கியத் தலைவர் அனூப் சேத்தியாவை இந்தியாவிடம் வங்கதேசம் புதன்கிழமை ஒப்படைத்தது. |
| குரூப்-2 தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு Posted: 11 Nov 2015 12:04 PM PST தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்படும் குரூப்-2 (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வருகிற 18-ஆம் தேதி வரை இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். |
| கட்டுமானம், பாதுகாப்பு உள்பட 15 துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு Posted: 11 Nov 2015 12:03 PM PST கட்டுமானத் துறை, பாதுகாப்பு, உள்நாட்டு விமானப் போக்குவரத்து உள்பட 15 துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு மேலும் தளர்த்தியுள்ளது. |
| அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை: கட்கரி வலியுறுத்தல் Posted: 11 Nov 2015 12:03 PM PST பிகார் தேர்தல் தொடர்பாக பாஜக தலைமையை கடுமையாக விமர்சிக்கும் அதிருப்தியாளர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். |
| புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கை நவ.14-இல் தொடங்கும்: நிதீஷ் குமார் Posted: 11 Nov 2015 12:01 PM PST பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் மதச்சார்பற்ற மகா கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கை, வரும் 14-ஆம் தேதி தொடங்கும் என்று அந்த மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தள (ஜேடியு) தலைவருமான நிதீஷ் குமார் கூறினார். |
| ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்: பதக்கங்களை எரிக்க முன்னாள் ராணுவத்தினர் முயற்சி Posted: 11 Nov 2015 12:01 PM PST மத்திய அரசு அறிவித்துள்ள "ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தைக் கண்டித்து தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இரண்டு முன்னாள் ராணுவ வீரர்கள், தாங்கள் பெற்ற பதக்கங்களை எரிக்க முயன்றனர். |
| கடலூர்: மின் விநியோக சீரமைப்பு பணியில் 2,039 பணியாளர்கள் Posted: 11 Nov 2015 11:53 AM PST கடலூர் மாவட்டத்தில் மின் விநியோகத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணியில் விழுப்புரம், கரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 2,039 மின் வாரியப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். |
| அனைத்துத் துறைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன Posted: 11 Nov 2015 11:52 AM PST மழைச் சேதங்களைச் சீரமைக்கவும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் அரசின் அனைத்துத் துறைகளும் விழிப்புடன் செயல்படுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார். |
| ஐ.பி.எல். நிதி முறைகேடு: ஷாரூக்கிடம் அமலாக்கத் துறை விசாரணை Posted: 11 Nov 2015 11:43 AM PST ஐ.பி.எல். நிதி முறைகேடு தொடர்பாக பாலிவுட் நடிகர் ஷாரூக் கானிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. |
| அன்னிய நேரடி முதலீடு: மோடி மீது சிதம்பரம் தாக்கு Posted: 11 Nov 2015 11:43 AM PST காங்கிரஸ் ஆட்சியின்போது அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்த மோடி, இப்போது அதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். |
| ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம்: "விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்' Posted: 11 Nov 2015 11:43 AM PST தீபாவளிப் பண்டிகையையொட்டி, ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும் நீட்டிக்கும் வகையில், அதன் அறிவிக்கையில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. |
| 30 நிமிடத்துக்கு முன்பாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி Posted: 11 Nov 2015 11:41 AM PST ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் இணையத்தின் மூலம் பயணச் சீட்டை முன்பதிவு செய்யும் முறை வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்படுகிறது. |
| போடி பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் இளைஞர் உள்பட 3 பேர் தற்கொலை Posted: 11 Nov 2015 11:37 AM PST போடி பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். |
| கொடைக்கானல் அருகே மோதல்: 4 பேர் கைது Posted: 11 Nov 2015 11:36 AM PST கொடைக்கானல் அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். |
| விஷத்தால் சுனந்தா உயிரிழக்கவில்லை Posted: 11 Nov 2015 11:36 AM PST சுனந்தா புஷ்கர் விஷத்தால் உயிரிழக்கவில்லை என்று அமெரிக்க விசாரணை அமைப்பான எஃப்பிஐ ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| மனைவி பிரிந்த சோகத்தில் கணவர் தற்கொலை Posted: 11 Nov 2015 11:35 AM PST தேனியில், மனைவி பிரிந்த சோகத்தில் கணவர் தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார். |
| பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநர் கொலை Posted: 11 Nov 2015 11:35 AM PST பெரியகுளம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு அரசுப் பேருந்து ஓட்டுநர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட மகளிர் அணிச் செயலர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| கணவரை அடித்துக் கொன்ற மனைவி, மகன் கைது Posted: 11 Nov 2015 11:34 AM PST தேனி அருகே கணவரை அடித்துக் கொன்ற மனைவி மற்றும் மகனை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| பட்டாசு வெடித்ததில் மோதல்: குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது Posted: 11 Nov 2015 11:34 AM PST உத்தமபாளையத்தில் பட்டாசு வெடித்ததில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, குண்டர் சட்டத்தின் கீழ் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| பஞ்சாப்: தடுப்புக் காவலில் சீக்கியத் தலைவர்கள் Posted: 11 Nov 2015 11:34 AM PST பஞ்சாபில் பல்வேறு சீக்கிய அமைப்புகள் ஒன்றிணைந்து புதிதாக நியமித்த அகால் தக்த் அமைப்புக்கான தலைவர்கள், சீக்கிய சமூகத்தினருக்கு உரை நிகழ்த்த உள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அந்தத் தலைவர்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். |
| வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 6 பேர் மீது வழக்கு Posted: 11 Nov 2015 11:32 AM PST தேனி அருகே கடைக்குச் சென்ற பெண்ணை வழிமறித்து, அத்துமீறி நடந்து கொண்டதாக 6 பேர் மீது செவ்வாய்க்கிழமை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| நேபாள நெருக்கடி: போக்குவரத்து தடையை நீக்க ஐ.நா. வலியுறுத்தல் Posted: 11 Nov 2015 11:32 AM PST மதேசிகளின் போராட்டத்தால் இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்ல ஏற்பட்டுள்ள தடையை நீக்க முயற்சி மேற்கொள்ளுமாறு, ஐ.நா.பொதுச் செயலாளர் பான்-கி-மூன் அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளார். |
| கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு Posted: 11 Nov 2015 11:32 AM PST திண்டுக்கல் அடுத்துள்ள கோபிநாத சுவாமி கோயில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| தலைக்கவசம் அணிந்து தொடர் வழிப்பறிகேரள இளைஞர் கைது: 22 பவுன் நகைகள் மீட்பு Posted: 11 Nov 2015 11:31 AM PST தேனி மாவட்டத்தில் தலைக்கவசம் அணிந்து வழிப்பறியில் ஈடுபட்ட கேரள இளைஞரை போலீஸார் கைது செய்து அவரிடம் இருந்து 22 பவுன் நகைகளை மீட்டனர். |
| நடந்து சென்றவரை தாக்கிய 4 பேர் கைது Posted: 11 Nov 2015 11:30 AM PST போடி அருகே நடந்து சென்றவரை தாக்கியதாக 4 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். |
| ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடினார் பிரதமர் மோடி Posted: 11 Nov 2015 11:30 AM PST பிரதமர் நரேந்திர மோடி தீபாவளிப் பண்டிகையை, பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் அருகே ராணுவ வீரர்களுடன் புதன்கிழமை கொண்டாடினார். |
| Posted: 11 Nov 2015 11:30 AM PST திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது. |
| பழனியில் பலத்த மழை: வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீரால் பொதுமக்கள் அவதி Posted: 11 Nov 2015 11:29 AM PST பழனியில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால், சாக்கடை கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். |
| மோட்டார் சைக்கிள்கள் மோதல்: இளைஞர் சாவு Posted: 11 Nov 2015 11:28 AM PST வடமதுரை அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில், இளைஞர் உயிரிழந்தார். |
| அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு Posted: 11 Nov 2015 11:27 AM PST தேனி மாவட்டம் மற்றும் பெரியாறு அணை நீர்பிடிப்பில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. |
| சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் Posted: 11 Nov 2015 11:26 AM PST தென் அமெரிக்க நாடான சிலியின் கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. |
| ஹஸாரா இனத்தவர் படுகொலை: ஆப்கனில் மாபெரும் கண்டனப் பேரணி Posted: 11 Nov 2015 11:25 AM PST ஆப்கனில் ஹஸாரா இனத்தைச் சேர்ந்த 7 பேர் தலிபான் பயங்கரவாதிகளால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தலைநகர் காபூலில் புதன்கிழமை மாபெரும் பேரணி நடைபெற்றது. |
| ஒருவர் மீது தாக்குதல்: 2 பேர் கைது Posted: 11 Nov 2015 11:20 AM PST போடியில் புதன்கிழமை ஓட்டுநரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். |
| பழனி மானூர் சுவாமிகள் குருபூஜை Posted: 11 Nov 2015 11:19 AM PST பழனி அருகே கோதைமங்கலம் மானூர் சுவாமிகள் கோயிலில் 71ஆவது குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. வியாழக்கிழமை மறுபூஜை, அன்னதானம் நடைபெறுகிறது. |
| மியான்மரில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் Posted: 11 Nov 2015 11:19 AM PST மியான்மிரில் கூடுதல் ஜனநாயகத்துடன் கூடிய புதிய ஆட்சியை ஏற்படுத்த முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தற்போதைய அரசு வாக்குறுதி அளித்துள்ளது. |
| சின்னமனூர் அருகே சாலையில் சடலத்துடன் பொதுமக்கள் மறியல் Posted: 11 Nov 2015 11:19 AM PST சின்னமனூரை அடுத்த சீலையம்பட்டியில் குடிபோதையில் பேருந்தை ஓட்டிச் சென்றவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சடலத்துடன் புதன்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| Posted: 11 Nov 2015 11:18 AM PST |
| Posted: 11 Nov 2015 11:18 AM PST கொடைக்கானல் பகுதியில் புதன்கிழமை மாலை மழை பெய்யத் தொடங்கியது. இதனால் கொடைக்கானல்- மதுரை மலைச்சாலையான நண்டாங்கரைப் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் மரம் விழுந்ததால் 4 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத்துறையினர் அவற்றை சீரமைத்ததும் போக்குவரத்து சீரானது. |
| அமெரிக்காவில் விமான விபத்து: 9 பேர் பலி Posted: 11 Nov 2015 11:18 AM PST அமெரிக்காவில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த 9 பேர் உயிரிழந்தனர். |
| குரூப் 2 தேர்வுகள்: இளைஞர்களுக்கு இலவச பயிற்சி முகாம் Posted: 11 Nov 2015 11:17 AM PST மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. |
| Posted: 11 Nov 2015 11:17 AM PST மாலத்தீவில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலையை அந்த நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றது. |
| மோட்டார் சைக்கிள்- ஆட்டோ மோதல்: ஒருவர் சாவு Posted: 11 Nov 2015 11:17 AM PST உத்தமபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். |
| ஆண்டிபட்டியில் பேருந்து நிறுத்துமிடம் மாற்றம்: கிராம மக்கள் அவதி Posted: 11 Nov 2015 11:16 AM PST ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே செயல்பட்டு வந்த பேருந்து நிறுத்தம் தற்போது இல்லாததால், கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். |
| கிரிக்கெட் விளையாடுவதில் தகராறு: 8 பேர் கைது Posted: 11 Nov 2015 11:16 AM PST வருசநாடு அருகே கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். |
| 25 நாள்களாக வைகையில் கலக்கும் மஞ்சளாற்று உபரிநீர்: கால்வாய் சீரமைக்கப்படாததால் 5 கண்மாய்கள் பாதிப்பு Posted: 11 Nov 2015 11:15 AM PST வரத்து கால்வாய் சீரமைக்கப்படாததால், நிலக்கோட்டை பகுதியில் உள்ள 5 கண்மாய்களுக்கு கிடைக்க வேண்டிய மஞ்சளாற்று உபரிநீர் கடந்த 25 நாள்களாக வைகை ஆற்றில் கலப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். |
| ரசாயன உரத்தின் அளவைக் குறைக்க யோசனை Posted: 11 Nov 2015 11:15 AM PST நெல் பயிரில் உயிர் உர விதை நேர்த்தி செய்து ரசாயன உரத்தின் அளவை விவசாயிகள் குறைக்கலாம் என, வேளாண் துறை தெரிவித்தது. |
| பாலுசெட்டிசத்திரம்-முசரவாக்கம் சாலை சீரமைக்கும் பணி தொடக்கம் Posted: 11 Nov 2015 11:14 AM PST காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பாலுசெட்டிசத்திரம்-முசரவாக்கம் சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. |
| கோயில் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது Posted: 11 Nov 2015 11:14 AM PST காஞ்சிபுரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக கோயில் குளத்தின் சுற்றுச்சுவர் செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்தது. |
| பூச்சி, நோய்க் கட்டுப்பாடு: நவம்பர் மாதத்துக்கான முன்னறிவிப்பு Posted: 11 Nov 2015 11:14 AM PST தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது நிலவும் பருவநிலை மாற்றம், வட கிழக்கு பருவமழை, பனி மூட்டத்துடன் பெய்து வரும் மழை போன்றவற்றால் பூச்சிகள், நோய்கள் பயிர்களைத் தாக்கி சேதம் விளைவிக்கும் வாய்ப்பு உள்ளது. |
| வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவர் காயம் Posted: 11 Nov 2015 11:14 AM PST காஞ்சிபுரம் அருகே உள்ள கிராமத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவர் காயமடைந்தனர். |
| குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது Posted: 11 Nov 2015 11:12 AM PST செங்கல்பட்டு மதுவிலக்கு அமல்பிரிவுக்கு உள்பட்ட பகுதிகளில் கள்ளச் சாராயம் விற்பனை செய்து வந்தவர் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். |
| மின் கம்பங்கள் சாய்வா? புகார் தெரிவிக்கலாம் Posted: 11 Nov 2015 11:12 AM PST பலத்த மழை காரணமாக, செங்கல்பட்டை அடுத்துள்ள சதுரங்கப்பட்டினம், திருக்கழுக்குன்றம் இ.சி.ஆர், மானாமதி திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன. |
| அதிமுக சாதனை விளக்க பொதுக் கூட்டம் Posted: 11 Nov 2015 11:11 AM PST அதிமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் செங்கல்பட்டில் நடைபெற்றது. |
| தெரு நாய்கள் அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சம் Posted: 11 Nov 2015 11:10 AM PST திருவள்ளூரில், தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. |
| சாலைகளை செப்பனிட தீர்மானம் நிறைவேற்றம் Posted: 11 Nov 2015 11:09 AM PST மழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது என பூண்டி ஒன்றியக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| தனியாருக்கு மீன்பிடி உரிமம்: குடிநீர் மாடுபடும் அபாயம் Posted: 11 Nov 2015 11:09 AM PST பூண்டி நீர்த்தேக்கத்தில், தனியாருக்கு மீன்பிடி உரிமம் வழங்கினால் குடிநீர் மாசுபடும் அபாயம் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். |
| குண்டும், குழியுமாக மாறிய சாலைகள் Posted: 11 Nov 2015 11:08 AM PST கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கன மழை காரணமாக அம்பத்தூர், கொரட்டூர், மேற்கு முகப்பேர், கிழக்கு முகப்பேர், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பிரதான சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளன. |
| நவ. 17, 18-இல் ஆட்சிமொழிப் பயிலரங்கம் Posted: 11 Nov 2015 11:08 AM PST திருவள்ளூர் மாவட்டத்தில் நவம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும், பணியாளர்களும் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் கேட்டுக் கொண்டுள்ளார். |
| மேலமையூர் ஏரி ஆக்கிரமிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் குடியிருப்புப் பகுதிகள் Posted: 11 Nov 2015 11:07 AM PST செங்கல்பட்டு, அதை அடுத்துள்ள மேலமையூர் பகுதிகளில் உள்ள ஏரிப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு காரணமாக அதையொட்டியுள்ள குடிருப்புப் பகுதிகள் மழை வெள்ளத்தில் மிதக்கும் நிலை உருவாகியுள்ளது. |
| பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை Posted: 11 Nov 2015 11:07 AM PST அம்பத்தூர் தொழிற்பேட்டை, வாவின் திருமங்கலம் சாலையில் உள்ள "கோல்டன் ஃபிளாட்ஸ்' குடியிருப்பில் வசிப்பவர் குமாரி (64). இவர் கடந்த 7-ஆம் தேதி தனது மகள் வீட்டுக்குச் சென்றுள்ளார். |
| மழையால் ஸ்தம்பித்தது கும்மிடிப்பூண்டி Posted: 11 Nov 2015 11:06 AM PST கும்மிடிப்பூண்டியில், கடந்த 3 நாள்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. |
| பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆய்வு Posted: 11 Nov 2015 11:06 AM PST திருத்தணியில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| டி.வி., பெட்டி வெடித்ததில் முதியவர் சாவு Posted: 11 Nov 2015 11:06 AM PST திருமுல்லைவாயிலில் தொலைக்காட்சி பெட்டி வெடித்து முதியவர் இறந்தார். |
| Posted: 11 Nov 2015 11:06 AM PST அம்பத்தூர் அருகே உள்ள சூரப்பேடு, சிவபிரகாசம் நகர் பிரதானசாலையை சேர்ந்தவர் வேலுமணி (39). இவர், செம்பியம் போக்குவரத்துக் காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். |
| மது அருந்த பணம் தர மறுப்பு: 4 பேர் மீது கத்திக் குத்து Posted: 11 Nov 2015 11:06 AM PST திருவள்ளூர் அருகே மது அருந்த பணம் தர மறுத்ததால் 4 பேர் கத்தியால் வெட்டப்பட்டனர். |
| இரு சக்கர வாகன விபத்து: இருவர் சாவு Posted: 11 Nov 2015 11:06 AM PST அம்பத்தூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற நண்பர்கள் இருவர் மேம்பால தடுப்புச்சுவர் மீது மோதி உயிரிழந்தனர். |
| தீர்த்தகிரி வலசை பெரிய ஏரி உடைப்பு Posted: 11 Nov 2015 11:00 AM PST கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே தீர்த்தகிரி வலசை பெரிய ஏரி கரை உடைந்ததை அடுத்து, பெங்களூரு - புஹதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு Posted: 11 Nov 2015 10:58 AM PST ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து புதன்கிழமை அதிகரித்தது. |
| நிரம்பும் நிலையில் மதுராந்தகம் ஏரி Posted: 11 Nov 2015 10:57 AM PST காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. தமிழகத்தில் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி, பலத்த மழையால் நிரம்பும் நிலையில் உள்ளது. |
| 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஓமலூர் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு Posted: 11 Nov 2015 10:56 AM PST ஓமலூர் சரபங்கா நதியில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். |
| கோத்தகிரியில் பலத்த மழை: பெண் சாவு, 8 வீடுகள் சேதம் Posted: 11 Nov 2015 10:55 AM PST கோத்தகிரியில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக, ஆற்றைக் கடக்க முயன்ற பெண் வெள்ளத்தில் சிக்கி பலியானார். மேலும், மழையால் 8 வீடுகள் சேதமடைந்தன. |
| வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிசாட்-15 Posted: 11 Nov 2015 10:42 AM PST இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரித்துள்ள "ஜிசாட்-15' செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து புதன்கிழமை அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. |
| சாத்தான்குளம் தேவாலயத்தில் புனிதர்கள் கண்காட்சி Posted: 11 Nov 2015 10:41 AM PST சாத்தான்குளம் புனித மரியாளின் திருஇருதய மாதா ஆலயத்தில் புனிதர்களின் கண்காட்சி நடைபெற்றது. |
| குலசேகரன்பட்டினம் பள்ளியில் பண்பாட்டுப் போட்டிகள் Posted: 11 Nov 2015 10:41 AM PST குலசேகரன்பட்டினம் பண்டார சிவன் நினைவு நடுநிலைப் பள்ளியில் விவேகானந்த கேந்திரம் சார்பில், ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. |
| தலாய் லாமாவை சந்தித்தார் நடிகர் கமல் Posted: 11 Nov 2015 10:40 AM PST திபெத் நாட்டு புத்த மதத் தலைவர் தலாய் லாமாவை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். கமலுடன் நடிகை கெளதமியும் தலாய் லாமாவை சந்தித்தார். |
| சங்கரேஸ்வரி கோயிலில் கேதார கெளரி விரத பூஜை Posted: 11 Nov 2015 10:39 AM PST கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்று கோயிலில் புதன்கிழமை கேதார கெளரி விரத பூஜை நடைபெற்றது. |
| கோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம் Posted: 11 Nov 2015 10:39 AM PST கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோயில் மற்றும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை (நவ.12) தொடங்குகிறது. |
| ஆழ்வார்திருநகரி வட்டார விவசாயிகளுக்கு இயந்திர நெல் நடவுக்கு ரூ.18 லட்சம் வரை மானியம் Posted: 11 Nov 2015 10:36 AM PST ஆழ்வார்திருநகரி வட்டார விவசாயிகளுக்கு இயந்திரத்தின் மூலம் நெல் நடவு செய்வதற்கு ரூ.18 லட்சம் வரை மானியம் வழங்கப்பட உள்ளது என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஜெயக்குமார் தெரிவித்தார். |
| ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா Posted: 11 Nov 2015 10:35 AM PST கோவில்பட்டியையடுத்த ஊத்துப்பட்டி குமாரபுரத்தில் பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் 90ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. |
| தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிறுவனர் தின விழா Posted: 11 Nov 2015 10:35 AM PST தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 94 ஆவது நிறுவனர் தின விழா புதன்கிழமை தூத்துக்குடியில் நடைபெற்றது. |
| கோவில்பட்டி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது Posted: 11 Nov 2015 10:34 AM PST கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது. |
| ஆறுமுகனேரி கோயிலில் பிரதோஷ பவனி Posted: 11 Nov 2015 10:34 AM PST ஆறுமுகனேரி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு பவனி நடைபெற்றது. |
| சாத்தான்குளம் கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் Posted: 11 Nov 2015 10:33 AM PST சாத்தான்குளத்தில் உள்ள கடைகளில் பேரூராட்சிப் பணியாளர்கள் புதன்கிழமை சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். |
| மண் சரிவு: திருமலை மலைப் பாதை மூடல் Posted: 11 Nov 2015 10:33 AM PST மலைப் பாதையில் மண்சரிவு அதிகரித்துள்ளதால் திருமலை மலைப் பாதை மூடப்பட்டுள்ளது. |
| சித்தூரில் நிரம்பி வழியும் ஏரிகள் Posted: 11 Nov 2015 10:33 AM PST பலத்த மழையால், சித்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. |
| மழையால் காய்கறி விலை கடும் உயர்வு Posted: 11 Nov 2015 10:33 AM PST வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, காய்கறிகளின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். |
| தொடர் மழை: சாலைகள் சேதம், வீடுகளில் தண்ணீர் புகுந்தது Posted: 11 Nov 2015 10:33 AM PST வேலூரில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்த தொடர் மழை காரணமாக பெரும்பாலான சாலைகள் பாதிக்கப்பட்டிருப்பதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |