மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பாஸ்மதி நெல் கொள்முதல் விலை வரலாறு காணாத வீழ்ச்சி: போராட்டம் நடத்த அரியானா, பஞ்சாப் விவசாயிகள் முடிவு
- காங். எம்.எல்.ஏ. கொலையில் சந்திரபாபுவுக்கு தொடர்பு: முன்னாள் தெலுங்கு தேச பிரமுகர் புத்தகத்தில் தகவல்
- ஐதராபாத்தில் அப்துல்கலாம் சிலையை அகற்ற முஸ்லிம் அமைப்பு கோரிக்கை: தெலுங்கானா அரசு ஏற்க மறுப்பு
- காவிரியில் தண்ணீர் கேட்டு தமிழக அரசு மனு: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- சந்திரகிரி அருகே பைனான்சியர் எரித்து கொலை
- அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிவு டிசம்பர் 10–ந்தேதிக்கு ஒத்திவைப்பு: சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவு
- பிரதமர் மோடி கொடும்பாவி எரிக்க முயன்ற மாணவர்களை ஓட ஓட விரட்டி தாக்கிய பா.ஜனதா தொண்டர்கள்
- திருப்பதியில் விடிய விடிய பலத்த மழை: கடும் குளிரால் பக்தர்கள் அவதி
- கேரளாவில் இன்று முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
- 2ஜி வழக்கில் இருந்து ஒருவர் எச்சரித்து, விடுவிப்பு
- 2 சிறுமிகளை கற்பழித்தவரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்
- விருதுகளை திரும்ப ஒப்படைக்கும் செயலுக்கு ஷபனா ஆஸ்மி ஆதரவு
- ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை: 5 உறுப்பினர் குழுவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க முடிவு
- பெண் டாக்டர் மானபங்க புகார் எதிரொலி: டெல்லி திகார் சிறையில் இருந்து 26 நர்சுகள் இடமாற்றம்
- ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் கோரிக்கை: துணை ராணுவத்தினர் இன்று முதல் தர்ணா போராட்டம்
- கேரள மாநிலத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல்: முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் வாக்குப்பதிவு
- காங்கிரஸ், இடதுசாரிகள் மீது அருண்ஜெட்லி கடும் தாக்கு
- மேக் இன் மத்திய பிரதேசம்: சிவராஜ் சிங் சவுகான் புது முழக்கம்
- பீகார் தேர்தல்: அமித்ஷா, லாலு பிரசாத், ராகுல் காந்தி ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
- விருதுகளை ஒப்படைப்பது தொடர்பாக எழுத்தாளர்களுக்கு ராஜ்நாத்சிங் வேண்டுகோள்
| Posted: 01 Nov 2015 11:39 PM PST இந்தியாவில் வெளிச்சந்தையில் பாஸ்மதி அரிசி சில்லறை விலையில் ஒருகிலோ நூறு ரூபாய்க்கு மேல் விற்பனையாகிவரும் பாஸ்மதி நெல்லின் கொள்முதல் விலை கிலோ 15 ரூபாயாக வரலாறு காணாத அளவில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் போராட்டம் நடத்த அரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். அதிகமாக நீரை உறிஞ்சாத, அதிக பலன் தரக்கூடிய நீண்டகால பயிர்களை வளர்க்கும்படி விவசாயிகளை மாநில அரசுகள் வலியுறுத்திவரும் |
| Posted: 01 Nov 2015 11:30 PM PST ஆந்திராவில் கடந்த 1989–ம் ஆண்டு வரை மறைந்த என்.டி.ராமராவ் தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடந்தது. அக்கால கட்டத்தில் விஜயவாடா காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த வங்கவிட்டி மோகனரங்கா என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த போது உண்ணாவிரத மேடையிலேயே அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்போது பெரும் |
| ஐதராபாத்தில் அப்துல்கலாம் சிலையை அகற்ற முஸ்லிம் அமைப்பு கோரிக்கை: தெலுங்கானா அரசு ஏற்க மறுப்பு Posted: 01 Nov 2015 11:30 PM PST ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி கழகத்தில் கடந்த மாதம் அப்துல்கலாம் சிலை திறக்கப்பட்டது. இதற்கு தெலுங்கானாவில் உள்ள அவாமி மஜ்லிஸ்–இ–அமல் தெலுங்கானா எனும் முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இஸ்லாமிய கோட்பாடுகளின்படி மனிதர்களுக்கு சிலை அமைப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே அப்துல்கலாம் சிலையை உடனே அகற்ற வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கை விடுத்தது. |
| Posted: 01 Nov 2015 10:43 PM PST காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மனுவுக்கு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யு மாறு கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. காவிரி நடுவர்மன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்து வருகிறது. இந்த ஆண்டு தமிழகத்துக்கு தர வேண்டிய 45 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. |
| சந்திரகிரி அருகே பைனான்சியர் எரித்து கொலை Posted: 01 Nov 2015 10:13 PM PST ஆந்திர மாநிலம் சந்திரகிரி ஏ.ரெங்கம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹரிநாத் (வயது 40). இவர், திருப்பதி உள்பட பல இடங்களில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்தார். இவருக்கு பத்மஜா என்ற மனைவியும், பிரியங்கா, குருஷிதா என்ற இரு மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் குருஷிதாவுக்கு பிறந்த நாளாகும். மகள் பிறந்த நாளுக்காக ஹரிநாத், புது துணிமணிகள், கேக், சாக்லேட் ஆகியவற்றை வாங்கி வருவதாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு |
| அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிவு டிசம்பர் 10–ந்தேதிக்கு ஒத்திவைப்பு: சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவு Posted: 01 Nov 2015 10:00 PM PST பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் சுகாதாரத்துறை மந்திரியாக பதவி வகித்தார். அப்போது இந்தூர், லக்னோவில் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி டாக்டர் அன்புமணி உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. |
| பிரதமர் மோடி கொடும்பாவி எரிக்க முயன்ற மாணவர்களை ஓட ஓட விரட்டி தாக்கிய பா.ஜனதா தொண்டர்கள் Posted: 01 Nov 2015 09:46 PM PST ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அம்மாநிலத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விஜயவாடாவில் மாணவர் அமைப்பினர் மாநில சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து பா.ஜனதா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். இதில் 100–க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். |
| திருப்பதியில் விடிய விடிய பலத்த மழை: கடும் குளிரால் பக்தர்கள் அவதி Posted: 01 Nov 2015 09:30 PM PST திருப்பதி மலையில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 5 மணியளவில் பெய்ய தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய கொட்டி தீர்த்தது. ஏழுமலையான் கோவில் முன்பாக மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் மழை தண்ணீர் ஆறுபோல சென்றது. மேலும் இரவில் பனி மூட்டத்துடன் கடுங்குளிர் |
| கேரளாவில் இன்று முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு Posted: 01 Nov 2015 08:59 PM PST கேரளாவில் முதல் மந்திரி உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. உம்மன் சாண்டியின் மந்திரி சபையில் உள்ள பல்வேறு மந்திரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. நிதி மந்திரியான மாணி மீது பார் உரிமையாளர்களிடமிருந்து ரூ.1 கோடி |
| 2ஜி வழக்கில் இருந்து ஒருவர் எச்சரித்து, விடுவிப்பு Posted: 01 Nov 2015 08:51 PM PST தொலைத்தொடர்புத் துறையில் 2ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறைக்கான அதிவேக அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கில் ஆள்மாறாட்டம் செய்து பிணை கையொப்பமிட்ட ஒருவரை டெல்லி சிறப்பு கோர்ட் எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளது. |
| 2 சிறுமிகளை கற்பழித்தவரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார் Posted: 01 Nov 2015 08:48 PM PST மராட்டிய மாநிலம் கோல்காபூர் மாவட்டத்தில் உள்ள குலம்ப் எனும் ஊரைச் சேர்ந்தவன் மோகன் சவான். கடந்த 1999–ம் ஆண்டு இவன் அதே ஊரைச் சேர்ந்த 2 சிறுமிகளை கற்பழித்து கொலை செய்த சம்பவம் மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மிட்டாய் கடையில் நின்றிருந்த அவனிடம் குலம்ப் கிராமத்தை சேர்ந்த 2 சிறுமிகள் வந்து தங்களுக்கு இனிப்பு வாங்கி தரும்படி கேட்டனர். உடனே |
| விருதுகளை திரும்ப ஒப்படைக்கும் செயலுக்கு ஷபனா ஆஸ்மி ஆதரவு Posted: 01 Nov 2015 07:15 PM PST எழுத்தாளர் கல்புர்கி கொலை, மாட்டிறைச்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு கண்டனம் தெரிவித்து, எழுத்தாளர்கள், சினிமா தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர், தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்து வருகின்றனர். இந்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வரும் நிலையில், விருதுகளை திரும்ப ஒப்படைக்கும் செயலுக்கு பிரபல நடிகை ஷபனா ஆஸ்மி ஆதரவு தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் |
| ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை: 5 உறுப்பினர் குழுவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க முடிவு Posted: 01 Nov 2015 04:18 PM PST நிதிக் கொள்கை குழு (எம்பிசி) குறித்து அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக கூறப்பட்ட நிலையில், 5 உறுப்பினர் கொண்ட குழுவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க முன்வந்துள்ளதாக நிதி அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 5 பேர் கொண்ட குழுவில் 3 பேரை ரிசர்வ் வங்கி நியமிக்கலாம் என்பதால் 4 மாதங்களுக்கு பிறகு இந்த சிக்கல் முடிவிற்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது. |
| பெண் டாக்டர் மானபங்க புகார் எதிரொலி: டெல்லி திகார் சிறையில் இருந்து 26 நர்சுகள் இடமாற்றம் Posted: 01 Nov 2015 04:01 PM PST டெல்லி திகார் சிறையில் தண்டனை விதிக்கப்பட்ட ஏராளமான குற்றவாளிகளும், விசாரணை கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்குள்ள ஆஸ்பத்திரியில் பணிபுரியும் பெண் டாக்டர் ஒருவர் சமீபத்தில் டெல்லி மகளிர் ஆணையத்திடம், குற்றவாளி ஒருவரால் தான் மானபங்கப்படுத்தப்பட்டதாக புகார் கூறினார். |
| ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் கோரிக்கை: துணை ராணுவத்தினர் இன்று முதல் தர்ணா போராட்டம் Posted: 01 Nov 2015 02:45 PM PST ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று முன்னாள் ராணுவத்தினர் பல ஆண்டுகளாக வற்புறுத்தி வருகின்றனர். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்துவோம்'' என்று பா.ஜ.க., வாக்குறுதி அளித்தது. |
| கேரள மாநிலத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல்: முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் வாக்குப்பதிவு Posted: 01 Nov 2015 12:47 PM PST கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக கொல்லம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு, கண்ணூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. |
| காங்கிரஸ், இடதுசாரிகள் மீது அருண்ஜெட்லி கடும் தாக்கு Posted: 01 Nov 2015 12:32 PM PST மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, தனது 'பேஸ்புக்' வலைத்தள பக்கத்தில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை முடுக்கி விட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் பாரதீய |
| மேக் இன் மத்திய பிரதேசம்: சிவராஜ் சிங் சவுகான் புது முழக்கம் Posted: 01 Nov 2015 11:44 AM PST பிரதமர் நரேந்திர மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை அறிவித்து அதற்காக பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். |
| பீகார் தேர்தல்: அமித்ஷா, லாலு பிரசாத், ராகுல் காந்தி ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் Posted: 01 Nov 2015 10:50 AM PST தேர்தல் விதி மீறல் குறித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பாரதீய ஜனதா கட்சி தேசியத்தலைவர் அமித்ஷா, ராஷ்டீரிய தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. |
| விருதுகளை ஒப்படைப்பது தொடர்பாக எழுத்தாளர்களுக்கு ராஜ்நாத்சிங் வேண்டுகோள் Posted: 01 Nov 2015 10:05 AM PST உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த ஒரு விழாவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, ''சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக கூறி எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்கள் விருதுகளை ஒப்படைத்து வருவது சரியானதல்ல. எழுத்தாளர்கள் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |