Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ரெரன்ரே டவுன்ரவுன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

Posted: 01 Nov 2015 09:41 PM PST

Police_identify_driver_shot_to_death_-_1101 (1)

Police_identify_driver_shot_to_death_-_1101 (1)ரொரன்ரோ டவுன்ரவுனில் சனிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த நபரை காவல்த்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

அவர் ரொரன்ரோவைச் சேர்ந்த 25 வயதான Charles Shillingford என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சனி்க்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் Yonge மற்றும் Charles வீதிப் பகுதியில் வைத்து இந்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்த போதிலும், அவரின் நெஞ்சில் ஏற்பட்டிருந்த ஆபத்தான காயம் காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குழு மோதல் தொடர்பு பட்டதாக இருக்காது என நம்புவதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.Police_identify_driver_shot_to_death_-_1101 (1)

அத்துடன் உயிரிழந்த இந்த நபர் காவல்த்துறையினருக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் கண்காணிப்புக் கருவி மற்றும் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் என ஆதாரங்கள் சேகரித்து விசாரணைகளை காவல்த்துறையினர் தொடந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தம்மைத் தொடர்ப்பு கொள்ளுமாறும் காவல்த்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post ரெரன்ரே டவுன்ரவுன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

48 மணித்தியாளங்களில் அல்பேட்டா வீதிகளில் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்

Posted: 01 Nov 2015 02:27 PM PST

gh

ghவெள்ளிக்கிழமை இரவு 8 மணியில் இருந்த ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் வரையிலான 48 மணித்தியாள இடைவெளில் இடம்பெற்ற வேறு வேறான 8 விபத்துக்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் அடங்குகின்றனர்.

விபத்துக்கள் இடம்பெற்ற விபரங்களை மத்திய காவல்த்துறை வெளியிட்டுள்ளது.

எட்மண்டனுக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோமீடடர் தொலைவில், வில்லிங்டன் பகுதியில் கார் ஒன்று கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 44 வயது கார்ச் சாரதி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவித்து சில மணி நேரங்களுள், அதே இடத்துக்கு அருகே ஏழு பேருடன் பயணித்த வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நான்கு பேர் உயிரிழந்ததுடன், மூவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.gh

அதனைத் தொடர்ந்து ஈவின்ஸ்பேர்க் (Evansburg) பகுதியில் இடம்பெற்ற மூன்றாவது விபத்தில் ஒருவரும், பீஸ் றிவர் (Peace River) பகுதியில் வாகனம் ஒன்று கவிழ்ந்ததில் மேலும் இருவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிது நேரத்தின் பின்னர் எட்மண்டனின் மேற்கு பகுதியில் ஸ்புறுஸ் குறோவில்(Spruce Grove) பிக்கப் ரக வாகனம் ஒன்று மண் ஏற்றிக் சென்ற கனரக வாகனத்துடன் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற பகுதிகளில் வீதிகள் எவ்வாறு காணப்பட்டன என்பது தெளிவாக தெரியவராத போதிலும், பெரும்பாலும் இரவிலிருந்து அதிகாலை வரையிலான வேளைகளிலேயே இடம்பெற்றுள்ள இந்த விபத்துக்களுக்கு மது போதை காரணமாக இருக்கக்கூடும் என காவல்த்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

The post 48 மணித்தியாளங்களில் அல்பேட்டா வீதிகளில் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நேர மாற்றத்திற்கு அதிருப்தி வெளியிடும் சில தரப்பினர்

Posted: 01 Nov 2015 12:20 PM PST

ljk

ljkகனடாவின் பெரும்பாலான பாகங்களிலும் இன்று முதல் நேரமாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது.

தூக்கம் வராத பிரச்சினையைக் கொண்டுள்ள பலரும், இந்த நேர மாற்றத்தினால் தாம் அதிக அளவு துன்பத்தினை அனுபவிக்க நேர்வதாக கூறுகின்றனர். பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த சிலரே இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், இந்த நேரமாற்ற நடைமுறைக்கு எதிராக முறைப்பாட்டு மனு ஒன்றையும், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தாம் சரியான தூக்கம் இன்றி படுக்கையில் தேவையற்ற சிந்தனைகளுடன் புரண்டுகொண்டிருக்கும் நிலையில், மேலும் ஒருமணிநேரம் அவ்வாறு தூக்கம் இன்றி நேரத்தினைக் கடத்துவது தமக்குள்ள வேதனையை அதிரிப்பதாக அவர்கள் தமது மனுவில் கூறுகின்றனர்.

நவம்பர் மாதத்தில் முன்னோக்கியும், மீண்டும் மார்ச் மாதத்தில் பின்நோக்கியும் நேரத்தினை நகர்த்தும் நடவடிக்கையை கைவிடுமாறு அவர்கள் அந்த மனுவில்கோரியுள்ளனர்.ljk

இதேவேளை இவ்வாறான நேர மாற்றம் உடலின் இயற்கையான நேரக்கணிப்பு வலுவாக செயற்படும் குழந்தைகள், முதியவர்களுக்கு அசெளகரியங்களை உண்டுபண்ணும் என சில அறிவியலாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

நேரமாற்றங்கள் நடப்புக்குவரும் ஓரிரு வார காலப்பகுதியில் வீதி விபத்துக்களும், வேலையிட விபத்துக்களும் அதிகரிப்பதனை ஆய்வுகள் காட்டுவதனையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கனடாவில் நேர மாற்றம் செய்யப்படாத இடங்களும் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சாஸ்காச்சுவானில் பெரும்பாலும் அனைத்து பகுதிகள் உட்பட கனடாவின் வேறு சில இடங்களில் இந்த நேர மாற்றம் நடைமுறை மேற்கொள்ளப்படுவதில்லை.

The post நேர மாற்றத்திற்கு அதிருப்தி வெளியிடும் சில தரப்பினர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மிசிசாகாவில் கொள்ளைச் சம்பவம் – சந்தேக நபருக்கு காவல்த்துறை வலை வீச்சு

Posted: 01 Nov 2015 12:13 PM PST

gh

ghமிசிசாகாவில் உள்ள வங்கி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரைத் காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.

மிசிசாகாவின் Westwood Mall இல் அமைந்துள்ள CIBC வங்கிக் கிளையில், நேற்றுப் பிற்பகல் வேளை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந்த கொள்ளைச் சம்பவத்தின் போது எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் ஈடுபட்டு வரும் பீல் பிராந்தியக் காவல்த்றையினர் குறித்த கொள்ளைச் சம்பவம் தொடாபான சந்தேக நபா ஒருவரின் அடையாளத்தை வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர் 30 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட கறுப்பு இன ஆண் என்று விபரித்த காவல்த்துறையினர், இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post மிசிசாகாவில் கொள்ளைச் சம்பவம் – சந்தேக நபருக்கு காவல்த்துறை வலை வீச்சு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

உளுந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Posted: 01 Nov 2015 05:53 AM PST

ju

juஉளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

மருத்துவ பயன்கள்:

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.ju

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

The post உளுந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™