Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பிரான்ஸ் குண்டுவெடிப்புகளில் ...” plus 17 more

Tamilwin Latest News: “பிரான்ஸ் குண்டுவெடிப்புகளில் ...” plus 17 more

Link to Lankasri

பிரான்ஸ் குண்டுவெடிப்புகளில் ...

Posted: 17 Nov 2015 04:47 PM PST

பிரான்ஸில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அவன்ட்கார்ட் ஊழியர்கள் அமைச்சர் ...

Posted: 17 Nov 2015 04:42 PM PST

அவன்ட் கார்ட் நிறுவன ஊழியர்கள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் நடவடிக்கைகள் தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வரவு செலவுத்திட்டத்தில் ...

Posted: 17 Nov 2015 04:28 PM PST

எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வசதிபடைத்தவர்களுக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படவுள்ளன.

அலரிமாளிகைக்கு தனிவாகனத்தில் ...

Posted: 17 Nov 2015 04:19 PM PST

அலரி மாளிகை வைபவங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு வருகை தரும் அரச அதிகாரிகள் தனி வாகனங்களில் வரக்கூடாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசாங்கத்தை விமர்சிக்கும் ...

Posted: 17 Nov 2015 04:14 PM PST

பல்வேறு முறைகேடுகள் தொடர்பில் அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமாச் செய்ய முன்வர வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

ஒருநிறுவனம், இரண்டு தலைவர்கள்! ...

Posted: 17 Nov 2015 04:01 PM PST

பல்வேறு அரச நிறுவனங்களுக்கு இரண்டிரண்டு தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஊழியர் சேமலாப, ஊழியர் நம்பிக்கை ...

Posted: 17 Nov 2015 03:09 PM PST

ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியங்களில் அரசாங்கம் கைவைக்குமானால் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்று உள்நாட்டு நிறுவனங்களின் சேவையாளர்கள் சங்கம் அரசுக்குக் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஆறு அரச நிறுவனங்களின் 13 உயர் ...

Posted: 17 Nov 2015 03:03 PM PST

கடந்த அரசின் ஆட்சிக்காலத்தில் பாரதூரமான ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆறு அரச நிறுவனங்களைச் சேர்ந்த 13 உயர் அதிகாரிகளை உடனடியாக பதவிநீக்கம் செய்யுமாறு பாரதூர ஊழல் மற்றும் மோசடிகள் பற்றிய விசாரணை ஆணைக்குழு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

பாரிஸ் தாக்குதலுக்கு அமைச்சர் ...

Posted: 17 Nov 2015 01:45 PM PST

பிரான்ஸில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும், இந்தத் தாக்குதல் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாகவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபா தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸை அடுத்து ஜெர்மனியிலும் ...

Posted: 17 Nov 2015 01:31 PM PST

ஜெர்மனியில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் எனும் அச்சுறுத்தல் காரணமாக ஹானோவர் நகரில் நடைபெறவிருந்த சர்வதேச கால்பந்து போட்டி இருபது நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா- நியூசிலாந்து 2-வது ...

Posted: 17 Nov 2015 05:25 AM PST

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்துள்ளது.

இங்கிலாந்து- பிரான்ஸ் ...

Posted: 17 Nov 2015 04:37 AM PST

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதும் கால்பந்தாட்ட போட்டி விம்ப்லே மைதானத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே இன்று இரவு நடைபெறவுள்ளது.

“என் கண்கள் கலங்கிவிட்டன” ஜான்சன் ...

Posted: 17 Nov 2015 02:56 AM PST

அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஜான்சனின் ஓய்வு குறித்து கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

விளையாடிய மழை: ரத்து செய்யப்பட்ட ...

Posted: 17 Nov 2015 12:05 AM PST

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டியின் 4 வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க வீரருக்கு நேர்ந்த ...

Posted: 16 Nov 2015 11:55 PM PST

இந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஒருவர் தலையை வெட்டி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிஸ்பாவின் ஆசை நிறைவேறுமா?

Posted: 16 Nov 2015 10:52 PM PST

ஓய்வு பெறுவதற்கு முன்னதாக இந்தியாவுடன் விளையாட வேண்டும் என்று ஆசை உள்ளதாக பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு என்ன தான் பிரச்சனை? ...

Posted: 16 Nov 2015 10:49 PM PST

இந்தியா வந்து விளையாடுவோம் என்ற பேச்சிற்கு இடமில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷகாரியார் கான் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் முன்னணி ...

Posted: 16 Nov 2015 09:29 PM PST

அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஜான்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™