Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


உத்தரகாண்டில் கோவிலுக்குள் செல்ல முயன்ற தலித் கர்ப்பிணிக்கு அடி–உதை

Posted: 21 Nov 2015 11:01 PM PST

உத்தரகாண்டில் கோவிலுக்கு செல்ல முயன்ற தலித் கர்ப்பிணிக்கு அடி–உதை விழுந்தது. கணவன்–மாமனாருக்கு ரூ.501 அபராதம் விதிக்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் கபேலா கிராமத்தில் குகர்ஷி மகராஜ் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் செல்ல தலித் பிரிவினருக்கு அனுமதி மறுத்து கிராமத்தினர் தடை விதித்து இருந்தனர். இதை எதிர்த்து தலித் பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கார்கள் இல்லாத டெல்லியை காண ஆசையா? ஜனவரி 22 வரை காத்திருங்கள்

Posted: 21 Nov 2015 11:00 PM PST

நாட்டின் தலைநகரான டெல்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி கார்கள் ஓடாத நாளாக கடைபிடிக்கப்படும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள துவாரகா செக்டர் பகுதியின் சாலைகளில் இன்று 'கார்களே இல்லாத சாலை' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய கெஜ்ரிவால் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டிய அவர்

மந்தமாக வேலைசெய்யும் மத்திய அரசு பணியாளர்களுக்கு இனி சம்பள உயர்வு கிடையாது?

Posted: 21 Nov 2015 10:38 PM PST

அலுவலக வேலை நேரத்தின்போது சுறுசுறுப்பாக பணியாற்றி பிரகாசமாக சோபிக்காமல், கடமைக்காக அலுவகத்துக்குச் சென்று வெட்டியாக பொழுதைப்போக்கிவிட்டு வீட்டுக்கு திரும்பும் அரசு ஊழியர்களுக்கு இனி சம்பள உயர்வை அமல்படுத்தாமல் இருப்பது தொடர்பாக பரிசீலிக்கும்படி மத்திய அரசுக்கு ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

அழியாத அடையாள மைக்கு பதிலாக விரைவில் மார்க்கர் குறி: தேர்தல் கமிஷன் பரிசீலனை

Posted: 21 Nov 2015 09:53 PM PST

சுதந்திரத்துக்கு பின்னர் நமது நாட்டில் நடைபெற்றுவரும் தேர்தல்களில் வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் அழியாத மைக்கு பதிலாக நவீன மார்க்கர்களின் மூலம் அடையாளம் பதிக்கும் புதிய நடைமுறை பற்றி மத்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகின்றது. கடந்த 1962-ம் ஆண்டில் இருந்து கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 'மைசூர் பெயிண்ட்ஸ்' நிறுவனம்தான் பாராளுமன்ற தேர்தல், மாநில சட்டசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் அடையாள மையை அனுப்பி வருகின்றது. பாட்டிலில் இருந்து பஞ்சால்

ஐஐடி மாணவருக்கு ரூ. 1¼ கோடி சம்பளம்: கூகுள் நிறுவனத்தில் வேலை

Posted: 21 Nov 2015 09:46 PM PST

டெல்லி ஐ.ஐ.டி. மாணவரை ஆண்டுக்கு ரூ. 1¼ கோடி சம்பளத்துக்கு கூகுள் நிறுவனம் வேலைக்கு எடுத்துள்ளது. டெல்லி பூசா சாலை ஸ்பிரிங்தலேஸ் பகுதியைச் சேர்ந்த மாணவர் சேதன் கக்கர் (வயது 22). இவர் டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு துறை இறுதியாண்டு படித்து வருகிறார்.

மண் சரிவால் மூடப்பட்ட திருப்பதி மலை நடைபாதை மீண்டும் திறக்கப்பட்டது

Posted: 21 Nov 2015 09:42 PM PST

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடப்பா, சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதில் நெல்லூர் மாவட்டம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. வெள்ளத்தின் பிடியில் இருந்து இம்மாவட்டம் இன்னும் மீளவில்லை.

மாணியை குற்றமற்றவர் என்று கூறுவதா?: முதல்–மந்திரி உம்மன்சாண்டிக்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம்

Posted: 21 Nov 2015 09:33 PM PST

கேரளாவில் உம்மன் சாண்டி மந்திரிசபையில் நிதி மந்திரியாக இருந்த மாணி பார் ஊழல் குற்றச்சாட்டில் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். மாணி மீதான வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு மாணி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதாக கூறி இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு கோர்ட்டு தொடர்ந்து மீண்டும் விசாரிக்கலாம் என்று கூறியதால் மாணி பதவி இழந்தார்.

நாளை 90–வது ஜெயந்தி விழா: புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்தில் 1 லட்சம் பேருக்கு அன்னதானம்

Posted: 21 Nov 2015 09:14 PM PST

புட்டபர்த்தி சாய்பாபாவின் 90–வது ஜெயந்தி விழா நாளை (23–ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில் ஒருவாரம் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. கடந்த 18–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை ஆசிரமத்தில் தினமும் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தென்இந்திய உணவு, வடஇந்திய உணவு, பஞ்சாபி உணவுகள் பரிமாறப்படுகிறது.

சத்தீஸ்கரில் 4 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

Posted: 21 Nov 2015 08:54 PM PST

நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பெண் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது, அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கிச்சூட்டில்

ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் களைகட்டிய முலாயம் சிங் யாதவின் ஆடம்பர பிறந்தநாள் விழா

Posted: 21 Nov 2015 07:53 PM PST

உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோவில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள எட்டாவா மாவட்டத்தின் சைஃபை நகரில் சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் முலாயம் சிங் யாதவின் 76-வது பிறந்தநாள் விழா, மூன்றுநாள் பெருவிழாவாக வெகு ஆடம்பரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டாம் நாளான நேற்று, ஆஸ்கார் விருதுபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஹரிஹரன் உள்ளிட்ட பிரபல பாடகர்கள்,

பத்ராவதியில் இருந்து மும்பைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: வாலிபர் கைது

Posted: 21 Nov 2015 07:21 PM PST

பத்ராவதியில் இருந்து மும்பைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் முக்கிய குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். சமீப காலமாக ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் செம்மரக்கட்டைகள் கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த சில

நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்று கூறுவது பிரதமர் மோடிக்கு எதிராக தீட்டப்படும் சதி திட்டம்: எடியூரப்பா பேச்சு

Posted: 21 Nov 2015 07:10 PM PST

பிரதமர் நரேந்திரமோடி குறித்த புத்தக வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு அந்த புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:- நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்று இப்போது பேசுகிறார்கள். முன்பு அவசர நிலை, சீக்கியர்கள் மீது நடந்த தாக்குதல் மற்றும் மும்பை

ஷீனா போரா கொலை வழக்கில் பீட்டர் முகர்ஜி மீதான குற்றச்சாட்டு மூர்க்கத்தனமானது - மகன் ராகுல் சொல்கிறார்

Posted: 21 Nov 2015 06:44 PM PST

ஷீனா போரா கொலை வழக்கில் ''என் தந்தை மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் மூர்க்கத்தனமானது'' என்று ராகுல் தெரிவித்துள்ளார். மும்பையை சேர்ந்த பிரபல தனியார் தொலைக்காட்சியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் முகர்ஜி (வயது 59). இவரது மனைவி இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை

சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதில் எந்த சமரசமும் இல்லை: நிதிஷ்குமார் அதிரடி உத்தரவு

Posted: 21 Nov 2015 04:31 PM PST

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் எந்தவித சமரசமும் கிடையாது என்று பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் அதிரடியாக தெரிவித்துள்ளார். பீகார் மாநில முதல்-மந்தியாக நிதிஷ்குமார் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர்.

பன்முகத்தன்மையே இந்திய ஆன்மாவின் மையம்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

Posted: 21 Nov 2015 04:16 PM PST

பன்முகத்தனமையும், பல்வேறு கலாச்சார பண்பாடுகளுமே இந்திய ஆன்மாவின் மையம் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்திய கலாச்சார பண்பாடு துறை அறிஞர்கள் மாநாட்டின் தொடக்கவிழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு உரையாற்றினார்.

தனி நாடு கோரும் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் ஒரு தேசவிரோத கட்சி: அகாலிதளம் பகிரங்க குற்றச்சாட்டு

Posted: 21 Nov 2015 03:03 PM PST

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 'சர்பாத்-இ-ஹால்சா' என்ற சீக்கிய அமைப்பின் சார்பில் கடந்த 10-ந்தேதி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சீக்கியர்களுக்காக காலிஸ்தான் தனி நாடு உருவாக்க வேண்டும் என்று தீர்மானம்

உ.பி.யில் தனித்து போட்டியிடுமா காங்கிரஸ்?: மூத்த தலைவர்கள் விருப்பம்

Posted: 21 Nov 2015 11:08 AM PST

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்று அம்மாநில மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்

இந்திய- பாகிஸ்தான் எல்லையில் 105 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

Posted: 21 Nov 2015 08:07 AM PST

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாபிற்கு இந்திய- பாகிஸ்தான் எல்லை வழியாக ஹெராயின் போன்ற போதைப்பொருள் கடத்தும் சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதை தடுப்பதற்காக எல்லை பாதுகாப்புப் படையினர் பஞ்சாப் புலனாய்வுத் துறையுடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

லக்னோவில் பட்டப்பகலில் வங்கியில் நுழைந்து கொள்ளையடித்த முகமூடி கும்பல்

Posted: 21 Nov 2015 07:34 AM PST

உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள சின்காட் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.) வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி இன்று மதியம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது முகமூடி அணிந்த மூன்று பேர் துப்பாக்கியுடன் திடீரென நுழைந்தனர். அப்போது வங்கி காவலாளி அவர்களை தடுத்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு 5-நாள் சுற்றுப்பயணம்: காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இன்று புறப்படுகிறார்

Posted: 21 Nov 2015 06:25 AM PST

காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் மாநில தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சச்சின் பைலட் 5-நாள் சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு இன்று செல்கிறார். ஆஸ்திரேலிய அரசின் அழைப்பை ஏற்று சச்சின் பைலட் அங்கு செல்வதாகவும், 5-நாள் சுற்றுப்பயணத்தில் அங்குள்ள கான்பெரா, பெர்த்,


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™