Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பிரம்டனில் வாகனவிபத்து – மாது மரணம்

Posted: 21 Nov 2015 08:05 PM PST

u

uபிரம்டன் பகுதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் 56 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நெடுஞ்சாலை 410இன் வடக்கு நோக்கிய வழித்தடத்தில், பிரம்டன் பகுதியில் இன்று இரவு 8.45 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த அந்த பெண் செலுத்திச் சென்ற வெள்ளி நிற Toyota sedan ரக வாகனம், நெடுஞ்சாலை 407இன் மேற்கு நோக்கிய தடத்தில் இருந்து விலகிச் சென்று வீதி ஓர தடுப்புக்களை மோதிக்கொண்டு, நெடுஞ்சாலை 410இன் வடக்கு நோக்கிய சாலைப் பகுதிக்குள் சென்று நின்றதாக, சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விபரித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த அவசர மீட்பு படையினர், சேதமடைந்த வாகனத்தினுள் இருந்து அந்த பெண்ணை மீட்டு வெளியே கொண்டுவந்ததுடன், அங்கு பிரசன்னமாகியிருந்த அவசர மருத்துவ பிரிவினர் அவருக்கு உயிர்காப்பு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

குறித்த அந்த பெண் வாகனத்தினை செலுத்திச் சென்றுகொண்டிருந்த வேளையில் அவருக்கு உடல்நலக் கோளாறுகளும் ஏற்பட்டிருக்கக் கூடும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

The post பிரம்டனில் வாகனவிபத்து – மாது மரணம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Annex பகுதியில் அதிகாலை இடம்பெற்ற கத்திக்குத்தில் மூவர் காயம்

Posted: 21 Nov 2015 08:00 PM PST

hj

hjAnnex பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலையில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் கத்திக்குத்துக் காயங்களுக்கு ஆளான மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் கூறுகையில், சுமார் 10 தொடக்கம் 15 பேர் கையில் போத்தல்களையும், கத்திகளையும் கொண்டு வீதியில் சண்டையில் ஈடுபட்டுள்ளனர் என தமக்கு நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து முறையிட்டிருந்தாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுள் ஒருவருக்கு மோசமான காயம் ஏற்பட்டிருந்ததாகவும்,எனினும் அது உயிராபத்தான காயம் அல்ல என்றும் தெரிவித்துள்ள அவசர மருத்துவப் பிரிவினர், அவர் மத்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறியுள்ளனர்.hj

அதேவேளை மற்றைய இருவரும் சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர் என்றும், அவர்கள் அருகில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் குறித்த வீட்டின் உள்ளே நட்பு ரீதியான விருந்து நிகழ்வு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் காவல்த்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post Annex பகுதியில் அதிகாலை இடம்பெற்ற கத்திக்குத்தில் மூவர் காயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிரிய அகதிகளை குடியேற்றுவது தொடர்பான விபரம் செவ்வாய்கிழமை வெளியிடப்படும்

Posted: 21 Nov 2015 09:43 AM PST

Syrian_refugees_-_11212015

Syrian_refugees_-_11212015சிரியாவில் இருந்து அழைத்துவரப்படும் அகதிகளை எவ்வாறு கனடாவில் குடியேற்றுவது என்பது குறித்த விபரம் எதிர்வரும் செவ்வாய்கிழமை வெளியிடப்படும் என்று லிபரல் அரசாங்கம் அறிவித்துள்ளது.

வழங்கப்பட்ட தேர்தல் உறுதி மொழிக்கு இணங்க பிரதமர் ஜஸ்டின் ரூடோ தலைமையிலான புதிய அரசாங்கம் இந்த வருடத்தினுள் 25,000 அகதிகளைக் கனடாவுக்கு அழைத்து வரவுள்ளது.

பாரீஸ் தாக்குதல்களின் பின்னரும் அகதிகளை கனடாவுக்கு அழைத்து வரும் தமது அறிவிப்பை கனேடியப் பிரதமர் மீள் உறுதிப்படுத்தியுள்ளார்.Syrian_refugees_-_11212015

எனினும் இந்த வருட இறுதிக்குள் பெருமளவான சிரிய நாட்டு அகதிகளை கனடாவுக்குள் அழைத்துவரும் நடவடிக்கையை மத்திய அரசு எவ்வாறு கையாளப்போகிறது என்பது மர்மமாகவே உள்ளது என கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையிலேயே சிரிய அகதிகளை கனடாவிற்கு அழைத்து வருவது தொடர்பிலான விபரங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதேவேளை அகதிகள் விவகாரம் தொடர்பில் அண்மைய நாட்களாக நாட்டில் மொத்தம் உள்ள 13 மாநிலங்களின் முதல்வர்களுடனும், பெரும்பாலான நகரபிதாக்களுடனும் ஆலோசனை நடாத்தி வருவதாக மத்திய குடியுரிமை அமைச்சர் ஜோன் மக்கலம் நேற்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை பெரு நகரங்களின் நகரபிதாக்களுடனான சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாகவும், அதே நாளில் மாகாண முதலமைச்சர்களை பிரதமர் ஜஸ்டின் ரூடோ சந்தித்து கலந்துரையாடவிருப்பதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

உறுதியளிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையிலான சிரிய அகதிகளை இயலுமானவரையில் விரைவாக கனடாவுக்குள் அழைத்து வருவதை இலக்காகக் கொண்டு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கனடாவின் குடியுரிமை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post சிரிய அகதிகளை குடியேற்றுவது தொடர்பான விபரம் செவ்வாய்கிழமை வெளியிடப்படும் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோ, வோன் பகுதிகளில் சோதனை நடவடிக்கை – போதைப் பொருள்,ஆயுதங்கள் மீட்பு

Posted: 21 Nov 2015 06:31 AM PST

seize_drugs_3_submachine_guns_silencer__-_1121

seize_drugs_3_submachine_guns_silencer__-_1121ரொரன்ரோ, வோன்(Vaughan) நகரங்களின் வெவ்வேறு பகுதிகளில் ரொரன்ரோ காவல்த்துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டள்ளனர்.

அவசரகால நடவடிக்கை சிறப்பு படையினரின் உதவியுடன் நேற்று முன்தினம் இந்த தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கையில் தானியங்கித் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

11 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதுடன்,பெருமளவு பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

3 தானியங்கி துப்பாக்கிகள், 4 கைத்து துப்பாக்கிகள், துப்பாக்கிக்காக ஒலி அமுக்கி ஒன்று, துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 9mm ரவைகள், 40 கலிபர் மற்றும் 45 கலிபர் ரவைகள், அவற்றுக்கான ரவைக் கூடுகள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.seize_drugs_3_submachine_guns_silencer__-_1121

கைப்பற்றப்ப்பட்ட துப்பாக்கிகளில் இரண்டு, ஸ்டேர்லிங் Mk4s ரகத்தைச் சேர்ந்தவை எனவும், அவ்வாறான துப்பாக்கிகள் முன்னர் கனேடிய இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் 5 பேர் வோன் பகுதியையும், 4 பேர் ரொரன்ரோவையும் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் 25 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

The post ரொரன்ரோ, வோன் பகுதிகளில் சோதனை நடவடிக்கை – போதைப் பொருள்,ஆயுதங்கள் மீட்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நோய் எதிர்ப்பு சக்தியை தரும் காய்கறிகள்!

Posted: 21 Nov 2015 06:23 AM PST

yi

yiநோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் விரைவில் நம்மை தாக்குகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் எந்த நோய் தாக்கினாலும், விரைவில் குணமாகிவிடும் குறிப்பாக காய்கறிகளில் ஆன்டி வைரஸ் மற்றும் ஆன்டி பாக்டீரியல் இருப்பதால் காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பூண்டு

பூண்டில் அல்லிசின் என்னும் பொருள், உடலில் உள்ள திசுக்களை, கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.

மேலும் ஆய்வுகளில் பூண்டானது பக்கவாதம், இதய நோய்கள், புற்றுநோய், நோயெதிர்ப்பு குறைபாடு, ஆர்த்ரிடிஸ் மற்றும் கண்புரை ஆகியவற்றை தடுப்பதில் சிறந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றாட உணவில் பூண்டு சேர்ப்பதைத் தவிர்க்காதீர்கள்.y

வெங்காயம்

வெங்காயத்தில் க்யூயர்சிடின் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது புற்றுநோயின் தாக்கத்தையே குறைக்கும் அளவில் சக்தி வாய்ந்த ஒன்று. மேலும் பூண்டைப் போன்றே வெங்காயத்திலும் அல்லிசின் என்னும் அற்புதமான பொருள் உள்ளது. அதுமட்டுமின்றி, இவற்றில் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஆந்தோசையனின்கள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.uu

தக்காளி

தக்காளி அன்றாட சமையலில் சேர்க்கும் தக்காளிக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது. குறிப்பாக இதில் லைகோபைன் மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன.uy

பீட்ரூட்

பீட்ரூட் இரத்தத்தை சுத்தம் செய்யும் ஓர் அற்புதமான காய்கறி. மேலும் பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது இரத்த அணுக்களை குறிப்பாக இரத்த வெள்ளையணுக்களை அதிகம் உற்பத்தி செய்கிறது. எனவே இந்த காய்கறியை தவறாமல் வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்ப்பது அவசியம்.yi

கீரைகள்

கீரைகளில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டீன், போன்ற நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமை மற்றும் செயல்பாட்டை அதிகரிக்கும் சத்துக்கள் ஏராளமாக உள்ளது. அதிலும் பசலைக்கீரையை அடிக்கடி உட்கொண்டு வந்தால், இதய நோய், புற்றுநோய் மற்றும் இதர நோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.bn,

The post நோய் எதிர்ப்பு சக்தியை தரும் காய்கறிகள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™