மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சகிப்புத்தன்மையை உணர்த்த இந்தி நடிகர் அனுபம்கேர் தலைமையில் ஜனாதிபதி மாளிகையை நோக்கிச் சென்ற பேரணி
- பீகார் வெற்றியை வாரணாசியில் கொண்டாடுவேன்: லல்லு பிரசாத்
- மருமகள், 3 பேரன்கள் மர்மசாவு: ஆந்திர முன்னாள் எம்.பி. வீட்டில் போலீஸ் சோதனை
- தெலுங்கானாவில் இடைத்தேர்தல் பிரசாரம்: துணை முதல்–மந்திரி மீது செருப்பு வீசிய விவசாயி
- கருப்பாக இருப்பதால் எனக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டது: பாபா ராம்தேவ் வேதனை
- பிரதமர் மோடியின் பொதுக்கூட்டம்: வரலாறு காணாத பாதுகாப்பு - ஸ்ரீநகரில் கைபேசி இணையச் சேவைகள் துண்டிப்பு
- வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
- ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்றதாக 40 தமிழர்கள் கைது
- கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை: 4 மாநகராட்சிகளில் இடதுசாரிகள் முன்னணி
- திருச்சூர் அருகே வேன் சேற்றில் மூழ்கி 7 பேர் பலி
- பீகார் சட்டசபை தேர்தல்: 125 இடங்களை கைப்பற்றி பா.ஜ.க., ஆட்சி அமைக்கும் - புதிய கருத்துக் கணிப்பில் தகவல்
- ஆந்திராவில் ரெயில்களில் பயணிகளை மிரட்டி நகை கொள்ளை
- பிரதமரின் தங்க முதலீடு திட்டத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்கம் டெபாசிட் செய்ய முடிவு
- நிழல் உலக தாதா சோட்டா ராஜனை சி.பி.ஐ., விசாரணை காவலில் எடுத்தது
- சபரிமலை கோவிலில் 2015-16-ம் ஆண்டு நடைபெறும் விழாக்கள் பற்றிய விவரம்
- டெல்லியில் ஜனாதிபதியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு
- மு.க.ஸ்டாலின் வெற்றிக்கு எதிரான வழக்கை ஐகோர்ட்டில் தொடர்ந்து நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி திடீர் உயர்வு - பெட்ரோல் விலையில் ரூ.1.60, டீசல் விலையில் 40 காசுகள் அதிகரிப்பு
- ராமேசுவரத்தில் அமைய உள்ள அப்துல் கலாம் மணி மண்டபம் பற்றி மத்திய மந்திரிகள் ஆலோசனை
- ரெயில் டிக்கெட் ரத்து கட்டணம் இரு மடங்கு ஆகிறது: 12-ந் தேதி அமலுக்கு வருகிறது
| சகிப்புத்தன்மையை உணர்த்த இந்தி நடிகர் அனுபம்கேர் தலைமையில் ஜனாதிபதி மாளிகையை நோக்கிச் சென்ற பேரணி Posted: 06 Nov 2015 11:27 PM PST இந்தியாவில் சகிப்புத்தன்மை உள்ளது என்பதை வலியுறுத்தி ஜனாதிபதி மாளிகையை நோக்கி இந்தி நடிகர் அனுபம்கேர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் இன்று பேரணியாக சென்றனர். நாட்டில் சகிப்பு தன்மையற்ற நிலை நிலவி வருவதாக கூறி டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பேரணியாக சென்று ஜனாதிபதி பிரணாப் |
| பீகார் வெற்றியை வாரணாசியில் கொண்டாடுவேன்: லல்லு பிரசாத் Posted: 06 Nov 2015 11:24 PM PST 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்ட சபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதன் ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு பற்றி 8 தொலைக்காட்சிகள் தகவலை வெளியிட்டுள்ளன. இதில் 5 தொலைக்காட்சிகள் நிதிஷ் குமார் தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்றும், 3 தொலைக்காட்சிகள் |
| மருமகள், 3 பேரன்கள் மர்மசாவு: ஆந்திர முன்னாள் எம்.பி. வீட்டில் போலீஸ் சோதனை Posted: 06 Nov 2015 11:20 PM PST தெலுங்கானா மாநிலம் வரங்கல் எம்.பி. தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்.பி. சிர்சில்லா ராஜய்யா அறிவிக்கப்பட்டார். வேட்பு மனு தாக்கல் செய்யும் ஏற்பாட்டில் இருந்த நிலையில் ராஜய்யா மருமகள் சரிகா, மற்றும் 3 பேரன்கள் வீட்டில் மர்மமான முறையில் தீயில் கருகி பலியானார்கள். |
| தெலுங்கானாவில் இடைத்தேர்தல் பிரசாரம்: துணை முதல்–மந்திரி மீது செருப்பு வீசிய விவசாயி Posted: 06 Nov 2015 11:07 PM PST தெலுங்கானா மாநிலம் வரங்கல் பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக துணை முதல்–மந்திரி கதியம் ஸ்ரீஹரி பிரசாரம் செய்தார். யாம்பேட் பகுதியில் நேற்று அவர் பிரசாரம் செய்தார். அப்போது ஒரு விவசாயி ஸ்ரீஹரிக்கு எதிராக கோஷமிட்டு அவர் மீது செருப்பை வீசினார். இவருக்கு ஆதரவாக தயாகர் என்ற விவசாயியும் கோஷமிட்டார். |
| கருப்பாக இருப்பதால் எனக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டது: பாபா ராம்தேவ் வேதனை Posted: 06 Nov 2015 10:58 PM PST உத்தரகாண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் நடைபெற்ற ஒரு யோகா நிகழ்ச்சியின்போது பேசிய யோகா குரு பாபா ராம்தேவ் தான் கருப்பாக இருப்பதால் தனக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதாக கூறியுள்ளார். நான் அழகான தோல் கொண்ட மனிதனாக இருந்திருந்தால் யோகா |
| Posted: 06 Nov 2015 10:53 PM PST காஷ்மீரில் முப்தி முகமது சயீத்தின் மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின் கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகரில், எஸ்.கே. மைதானத்தில் இவ்விரு கட்சிகளின் கூட்டு பொதுக்கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். |
| வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை Posted: 06 Nov 2015 10:36 PM PST இந்தியாவில் மிகப்பெரிய நாசவேலை செய்ய பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் எல்லை பகுதிகளில் மட்டும் சுமார் 300 தீவிரவாதிகள் நாசவேலை திட்டத்துடன் பதுங்கி இருப்பதாக சமீபத்தில் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முயற்சிகள் |
| ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்றதாக 40 தமிழர்கள் கைது Posted: 06 Nov 2015 10:02 PM PST ஆந்திராவில் உள்ள வனப்பகுதிகளில் செம்மரம் வெட்ட சென்றதாக தமிழ்நாட்டை சேர்ந்த 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 2 ஆயிரம் தமிழர்கள் ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு |
| கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை: 4 மாநகராட்சிகளில் இடதுசாரிகள் முன்னணி Posted: 06 Nov 2015 09:58 PM PST கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக கடந்த 2 மற்றும் 5–ந்தேதிகளில் நடந்தது. 2–ம் கட்ட தேர்தல் நடந்த இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 114 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு ஓட்டுப்பதிவு நடந்தது. 2 கட்ட தேர்தலிலும் மொத்தம் 78.33 சதவீதம் |
| திருச்சூர் அருகே வேன் சேற்றில் மூழ்கி 7 பேர் பலி Posted: 06 Nov 2015 09:49 PM PST கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரை அடுத்துள்ள காட்டுச்சேரியை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 70). இவரது மகன் இஸ்காசி (45). இஸ்காசி கத்தார் நாட்டில் வேலை செய்து வந்தார். சொந்த ஊருக்கு வர முடிவெடுத்த அவர் அதிகாலை 3 மணிக்கு கத்தார் விமானம் மூலம் |
| Posted: 06 Nov 2015 09:41 PM PST இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலமான பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்துகட்ட வாக்குப்பதிவின் முடிவுகள் நாளை (8-ம் தேதி) வெளியாகவுள்ள நிலையில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 125 இடங்களில் பா.ஜ.க., வெற்றிபெற்று, ஆட்சி அமைக்கும் என சமீபத்திய கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. |
| ஆந்திராவில் ரெயில்களில் பயணிகளை மிரட்டி நகை கொள்ளை Posted: 06 Nov 2015 09:35 PM PST புனே மாநிலம் நாம் தேடு நகரில் இருந்து பெங்களூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 11 மணியளவில் ஆந்திர மாநிலம் கூத்தி ரெயில்வே நிலையத்துக்குள் செல்வதற்காக சிக்னலுக்கு நின்று கொண்டிருந்தது. அப்போது இருட்டில் மறைந்திருந்த கொள்ளையர்கள் ரெயிலுக்குள் ஏறி 2 |
| பிரதமரின் தங்க முதலீடு திட்டத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்கம் டெபாசிட் செய்ய முடிவு Posted: 06 Nov 2015 09:02 PM PST தங்கத்தில் முதலீடு செய்வதற்கு மாற்றாக தங்க சேமிப்பு பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தது. இந்த தங்க முதலீடு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். |
| நிழல் உலக தாதா சோட்டா ராஜனை சி.பி.ஐ., விசாரணை காவலில் எடுத்தது Posted: 06 Nov 2015 08:52 PM PST இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜனை சி.பி.ஐ. இன்று விசாரணை காவலில் எடுத்துள்ளது. இந்திய போலீசாரின் கண்களில் மண்ணைத்தூவி கடந்த 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் |
| சபரிமலை கோவிலில் 2015-16-ம் ஆண்டு நடைபெறும் விழாக்கள் பற்றிய விவரம் Posted: 06 Nov 2015 08:22 PM PST சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் மிக பிரசித்திபெற்ற பெற்ற பூஜைகள், மண்டல பூஜையும், மகர விளக்கு பூஜையும் ஆகும். மண்டல பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து புதிய மேல் சாந்தி பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் கோவிந்தன் நாயர், உறுப்பினர்கள் சுபாஷ்வாசு, குமாரன், கமிஷனர் ராம ராஜ பிரேம பிரசாத் ஆகியோர் |
| டெல்லியில் ஜனாதிபதியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு Posted: 06 Nov 2015 07:26 PM PST த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மரியாதை நிமித்தமாக ஜனாதிபதியை சந்தித்து பேசினேன். தமிழ்நாடு |
| மு.க.ஸ்டாலின் வெற்றிக்கு எதிரான வழக்கை ஐகோர்ட்டில் தொடர்ந்து நடத்தலாம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 06 Nov 2015 07:15 PM PST கடந்த சட்டசபை தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சைதை துரைசாமியும், தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு மு.க.ஸ்டாலின் |
| Posted: 06 Nov 2015 07:08 PM PST பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்றிரவு திடீரென உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, வர்த்தக அடையாளம் இல்லாத சாதாரண பெட்ரோல் மீது முன்னர் விதிக்கப்பட்டிருந்த கலால் வரி லிட்டர் ஒன்றுக்கு ரூ.5.46-லிருந்து தற்போது ரூ.7.06 ஆக உயர்ந்துள்ளது. |
| ராமேசுவரத்தில் அமைய உள்ள அப்துல் கலாம் மணி மண்டபம் பற்றி மத்திய மந்திரிகள் ஆலோசனை Posted: 06 Nov 2015 07:05 PM PST முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கடந்த ஜூலை 27-ந் தேதி காலமானார். அவரது உடல், அவருடைய குடும்பத்தினரின் விருப்பப்படி, அவர் பிறந்த ஊரான ராமேசுவரத்தில் உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. |
| ரெயில் டிக்கெட் ரத்து கட்டணம் இரு மடங்கு ஆகிறது: 12-ந் தேதி அமலுக்கு வருகிறது Posted: 06 Nov 2015 06:49 PM PST ரெயில்களில் பயணம் செய்வதற்கு முன் பதிவு செய்து விட்டு, அந்த டிக்கெட்டை ரத்து செய்து, பணத்தை திரும்பப்பெறுவதற்கு ஒரு தொகையை ரெயில்வே பிடித்து வருகிறது. டிக்கெட்டை ரத்து செய்வதற்கான இந்த தொகையை 12-ந் தேதி முதல் இரு மடங்காக உயர்த்தி ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |