Tamil Star |
- Woburn பகுதியில் கத்திக்குத்துச் சம்பவம் – ஒருவர் மருத்துவமனையில்
- ரொப் ஃபோர்ட்டின் அடிவயிற்றில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டவையும் புற்றுநோய் கட்டிகள்
- பழமைவாதக் கட்சி சிறந்த முறையில் மீளக் கட்டியமைக்கப்பட வேண்டும் – பிரைன் மல்றோனி
- பழமைவாதக் கட்சியின் இடைக்காலத் தலைவராகிறார் றோனா அம்ப்றோஸ்
- அதிகமாக உணவு உட்கொள்கிறீர்களா? ஏற்படும் தாக்கங்கள் என்ன?
| Woburn பகுதியில் கத்திக்குத்துச் சம்பவம் – ஒருவர் மருத்துவமனையில் Posted: 06 Nov 2015 07:13 PM PST
Ellesmere வீதி மற்றும் மார்க்கம் வீதிப் பகுதியின் அருகில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபருக்க தலையிலேயே இந்த கத்திக்குத்துக் காயம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அந்த காயங்கள் உயிராபத்தான காயங்களாக இருக்க மாட்டாது என தாம் நம்புவதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த தகவல் வெளியிட்ட போது கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர் குறித்த தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை. காவல்த்துறையினர் இது தொடர்பில் விசாரணைகளில் ஈடபட்டுள்ளனர். The post Woburn பகுதியில் கத்திக்குத்துச் சம்பவம் – ஒருவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொப் ஃபோர்ட்டின் அடிவயிற்றில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டவையும் புற்றுநோய் கட்டிகள் Posted: 06 Nov 2015 02:57 PM PST
ரொப் ஃபொர்ட்டின் வயிற்றுப் பகுதியில் புதிய கட்டி ஏற்பட்டுள்ளமை கடந்த வாரம் கண்டறியப்பட்ட நிலையில், அவற்றின் மீதான பரிசோதனைகளை மருத்துவர்கள் ஆராய்ந்து வந்திருந்தனர். தற்போது அவை புற்றுநோய்க் கட்டிகளே என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த விபரங்களை ரொப் ஃபொர்ட்டின் சகோதரரும் ரொரன்ரோ நகரமன்ற உறுப்பினருமான டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 12 சென்ரிமீட்டர் நீள அகலமுள்ள புற்றுநோய்க் கட்டி ஒன்று ரொப் ஃபோர்ட்டின் அடிவயிற்றுப் பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது உருவாகியுள்ள கட்டிகளும் முன்னைய புற்றுநோய் வகையைச் சார்ந்ததே எனவும் அவர் விபரித்துளார். தற்போதய சிறுநீர்ப் பை அமைந்துள்ள பகுதியில் இரண்டு கட்டிகளும் ஒன்றன் மீது ஒன்றாக உருவாகியுள்ளதாகவும் கட்டி ஐந்திலிருந்து ஏழு சென்ரிமீட்டர் வரையில் வளர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவற்றுக்கான கீமோ தெரபி சிகிக்சைகள் மவுண் சினாய் மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் டக் ஃபோர்ட் கூறியுள்ளார். ரொப் ஃபோர்ட்க்கு எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு கீமோ தெரபி வழங்கப்படவுள்ளதாகவும், அதனை அடுத்து மூன்றுவார இடைவெளியின் பின்னர் இரண்டாம் கட்ட கீமோ தெரபி ஆரம்பமாகும் எனவும் டக் ஃபோர்ட் தகவல் தெரிவித்துள்ளார். The post ரொப் ஃபோர்ட்டின் அடிவயிற்றில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டவையும் புற்றுநோய் கட்டிகள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பழமைவாதக் கட்சி சிறந்த முறையில் மீளக் கட்டியமைக்கப்பட வேண்டும் – பிரைன் மல்றோனி Posted: 06 Nov 2015 02:51 PM PST
கட்சியின் புதுப்பிப்பு நடவடிக்கையில் பெரும்பாலான வாக்காளர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் கொள்கைகள் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள பழமைவாதக் கட்சியினை மீள புதுப்பிப்பதில் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரின் பங்கும் முக்கியமானது எனவும், அதன் மூலமே கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையினை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். நாட்டுக்கான போட்டித்தன்மை மிக்க குரல்கள் மற்றும் சிறந்த சிந்தனைகளின் ஒன்றிணைவின் மூலமே கனடாவின் துடிப்புமிக்க சனநாயகமானது கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த விடயம் சிலருக்கு ஆச்சரியமானதாக இருக்கக்கூடும் என்ற போதிலும், தனிப்பட்ட தாக்குதல்கள் அற்ற கொள்கைகள் மூலமே இதனைத் திறம்படச் சாதிக்க முடியும் எனவும் பரிந்துரைத்துள்ளார். பழமைவாதக் கட்சியினர் அனைவரும், எந்தவித வேறுபாடுகளும் இல்லாது ஒன்றாக இணைவதன் மூலமே, மக்கள் பழமைவாதிகளை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் நிலையினை ஏற்படுத்த முடியும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாற்றம் ஒருநாள் மீண்டும் வரும் என்ற போதிலும், தமது நலன்களை அது பூர்திசெய்யும் என கனேடியர்கள் நம்புகின்ற ஒரு நிலையினை உருவாக்கும் போதே அது சாத்தியப்படும் எனவும் முன்னைநாள் பிரதமர் பிரைன் மல்றோனி (Brian Mulroney) மேலும் தெரிவித்துள்ளார். The post பழமைவாதக் கட்சி சிறந்த முறையில் மீளக் கட்டியமைக்கப்பட வேண்டும் – பிரைன் மல்றோனி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பழமைவாதக் கட்சியின் இடைக்காலத் தலைவராகிறார் றோனா அம்ப்றோஸ் Posted: 06 Nov 2015 02:44 PM PST
இம்முறை நடைபெற்ற கனேடியப் பொதுத் தேர்தலில் பழமைவாதக் கட்சி தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து கட்சியைத் தலைமைதாங்கி வந்த முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் பதவியில் இருந்து விலகிக்கொண்டார். தேர்தலின் பின்னர் நேற்றைய தினம் கூடிய பழமைவாதக் கட்சியின் உயர்பீடம், கட்சிக்கான இடைக்காலத் தலைவருக்கான தேர்வை நடாத்தியதில் றோனா அம்ப்றோஸ் (Rona Ambrose) கனேடிய பழமைவாதக் கட்சியின் இடைக்காலத் தலைவராக தேர்வானார். 48 வயதான இவர் முன்னைய ஆட்சியின் போது சுகாதார அமைச்சராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் நாடாளுமன்றில் மரியாதையான, குடியியல்சார் விவாதங்கள் இடம்பெற வேண்டும் என்பதனையும் அவர் தீவிரமான வலியுறுத்தி வந்துள்ளார். புதிய நாடாளுமன்றில் எதிர்க்கட்சியாக செயற்படவுள்ள பழமைவாதக் கட்சியின் இடைக்காலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள றோனா அம்ப்றோஸ் கருத்து வெளியிடுகையில், நாடாளுமன்றில் புதிய எதிர்க்கட்சித் தலைவராக செயற்படப் போவதனை எண்ணி மிகவும் பெருமைப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். தாம் அனைவரும் இணைந்து முற்போக்கான சிந்தனைகளுடனும், தைரியத்துடனும் பலமான எதிர்க்கட்சியாக செயற்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். The post பழமைவாதக் கட்சியின் இடைக்காலத் தலைவராகிறார் றோனா அம்ப்றோஸ் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அதிகமாக உணவு உட்கொள்கிறீர்களா? ஏற்படும் தாக்கங்கள் என்ன? Posted: 06 Nov 2015 07:22 AM PST
அன்றாட உணவு அன்றாடம் நீங்கள் உண்ணும் உணவின் அளவு முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், நீங்கள் உண்ணும் உணவின் அளவு செரிமான செயல்முறையின் மீது வெகுவான தாக்கங்களை உண்டாக்கும். இரண்டு வேளைகளுக்கு நடுவே அதிகமான இடைவெளி எடுத்துக் கொள்பவர்கள் அதிகமாக உண்ணுவார்கள். இப்படி அதிகமாக உண்ணுவதால் செரிமான அமைப்பின் மீதான பளு அதிகரிக்கும். இதனால் அமில சுரப்பும் அதிகரிக்கும். மாறாக, சிறிய அளவில் அதிக முறை உண்ணவும் (ஒரு நாளில் 4-5 முறை). மேலும், 30 நிமிடங்கள் உண்ணுபவர்களுக்கு அமில சுரப்பு 8.5 தடவை நடந்துள்ளது, அதுவே 5 நிமிடங்களில் உண்ணுபவர்களுக்கு 12.5 தடவை அமில சுரப்பு ஏற்பட்டுள்ளது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அதிகமாக உட்கொண்டால் வயிற்றில் அதிகளவிலான உணவுகள் தேங்கும். இதனால் அளவுக்கு அதிகமான அமில உற்பத்தி ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். காலை உணவு தொடர்ந்து 3 மாதங்களுக்கு காலை உணவைத் தவிர்க்கிற பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி முறையற்றுப் போவது, ரத்தசோகை, ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகிறது. மூன்றே மாதங்களில் எடை அதிகரிப்பதும், மேலும் மாதக்கணக்காக வராமலிருக்கும் ரத்தப்போக்கை வரவழைக்க, ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அது மாதவிலக்கை வரச்செய்வதுடன், கூடவே சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது, உதட்டுக்கு மேலும், தாடையிலும் முடி வளர்வது, எடை அதிகரிப்பது என போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. The post அதிகமாக உணவு உட்கொள்கிறீர்களா? ஏற்படும் தாக்கங்கள் என்ன? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ஸ்காபரோவின் Woburn பகுதியில் இடம்பெற்றுள்ள கத்திக்குத்துச் சம்பவம் ஒன்றில் காயமடைந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னாள் நகரபிதா ரொப் ஃபோர்ட்டின் அடிவயிற்றுப் பகுதியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கட்டிகளும் புற்றுநோய் கட்டிகள் என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பழமைவாதக் கட்சி சிறந்த முறையில் மீளக் கட்டியமைக்கப்பட வேண்டும் என கனடாவின் முன்னை நாள் பிரதமர் பிரைன் மல்றோனி (Brian Mulroney) வலியுறுத்தியுள்ளார்.
அல்பேர்ட்டா மாநில நாடாளுமன்ற உறுப்பினர் றோனா அம்ப்றோஸ் (Rona Ambrose) கனேடிய பழமைவாதக் கட்சியின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில அடிப்படையான பழக்கவழக்கங்கள் சிலவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.