Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஒடிசாவில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் பணியில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

Posted: 11 Nov 2015 11:11 PM PST

ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கர் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படை போலீசார் மற்றும் மாநில போலீசார் இணைந்து மேற்கொண்ட தேடுதல் பணியில் 2 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். ஒடிசா மாநிலத்தின் கஜபதி, கன்ஜம், கந்தாமல், கியோன்ஞ்சர், ஜாஜ்பூர், தேங்கனல், மயூர்பஞ்ச், சம்பல்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த பகுதிகளில்

மராட்டியத்தில் சாக்லேட் என்று நினைத்து பட்டாசை தின்ற சிறுமி சாவு

Posted: 11 Nov 2015 10:00 PM PST

மராட்டிய மாநிலம் ரத்னகிரி அருகே உள்ள திசாங்கி கிராமத்தில் தீபாவளியை முன்னிட்டு ஏராளமான பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. நேற்று காலை அந்த கிராமத்தின் மைதானப் பகுதியில் வெடிக்காத பட்டாசுகளை சிலர் போட்டு விட்டு சென்றிருந்தனர். நேற்று மதியம் அந்த மைதானத்தில் சிறுவர்– சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது தாமினி என்ற 5 வயது சிறுமி

3 நாள் பயணம்: பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து சென்றார்

Posted: 11 Nov 2015 09:53 PM PST

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 3 நாள் பயணமாக இங்கிலாந்து நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். புறப்படும் முன்பு மோடி டுவிட்டர் பக்கத்தில் ஒரு தகவல் வெளியிட்டார். அதில் அவர், ''இந்தியா – இங்கிலாந்து இடையே பொருளாதார உறவை

பாட்னாவில் 20–ந்தேதி நடைபெறும் நிதிஷ்குமார் பதவி ஏற்பு விழாவில் உத்தவ் தாக்கரே பங்கேற்பு அழைப்பு

Posted: 11 Nov 2015 09:50 PM PST

பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளின் மெகா கூட்டணி 178 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அம்மாநில முதல்–மந்திரியாக நிதிஷ்குமார் 5–வது முறையாக பதவி ஏற்க உள்ளார். புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கை வரும் 14–ந்தேதி தொடங்கும்

பீகார் தேர்தல் தோல்வி: பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு

Posted: 11 Nov 2015 09:41 PM PST

பீகார் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி படுதோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 243 இடங்களில் 53 இடங்களையே பாரதீய ஜனதா கட்சியால் பெற முடிந்தது. பா.ஜ.க.வுக்கு பீகாரில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு யார் பொறுப்பு ஏற்பது என்பதில் தலைவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ''பா.ஜ.க. பெற்ற

உண்மை கண்டறியும் கருவி மூலம் சசிதரூரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு

Posted: 11 Nov 2015 08:44 PM PST

காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள ஓட்டலில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது மர்ம மரணம் குறித்து டெல்லி சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்.

மாணியை தொடர்ந்து மேலும் ஒரு மந்திரி மீது ஊழல் புகார்: உம்மன்சாண்டி அரசுக்கு நெருக்கடி

Posted: 11 Nov 2015 08:38 PM PST

கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இந்த கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் (எம்) கட்சியின் தலைவர் மாணி கேரள மந்திரிசபையில் நிதி மந்திரியாக பதவி வகித்து வந்தார்.

ரெயில் டிக்கெட் ரத்துக்கான கட்டணம் இன்று முதல் இரு மடங்காக உயர்வு

Posted: 11 Nov 2015 02:58 PM PST

ரெயில்களில் முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யும் போது பிடிக்கப்படும் கட்டணம் இன்று முதல் இரு மடங்காகிறது. மேலும் அட்டவணை தயாரித்த பின்னும் டிக்கெட் முன்பதிவு செய்யும் புதிய முறையும் அமலுக்கு வருகிறது.

கிராமச் சாலைகள் திட்டம் குறித்து பிரதமருக்கு அகிலேஷ் கடிதம்

Posted: 11 Nov 2015 02:29 PM PST

பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ், உத்தரப் பிரதேச மாநிலத்துக்கான நடப்பு நிதியாண்டின் நிரந்தரச் செலவினத்தை ரூ.2,600 கோடியாக உயர்த்துமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடி, இன்று இங்கிலாந்து செல்கிறார்

Posted: 11 Nov 2015 02:20 PM PST

பிரதமர் மோடி இன்று இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று (வியாழக்கிழமை) இங்கிலாந்து புறப்பட்டு செல்லும் அவருக்கு, அங்கு சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு

பீகார் தேர்தல் முடிவுகள் எதிரொலி: பாராளுமன்ற கூட்டத்தொடரில் வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்

Posted: 11 Nov 2015 02:06 PM PST

பீகார் தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 26–ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் குறைகளை நீதிக்குழு ஆராயும்: மோடி உறுதி

Posted: 11 Nov 2015 09:49 AM PST

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தில் குறைகள் இருந்தால், அதை நீதிபதிகள் கொண்ட குழு ஆராயும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். முன்னாள் ராணுவ வீரர்களின் நீண்டநாள் கோரிக்கையான ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் தொடர்பாக மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அறிவிக்கை

பெங்களூர் விமான நிலையத்திற்கு திப்பு சுல்தான் பெயர்: மன்னிப்பு கோரினார் நடிகர் கிரிஷ் கர்னாட்

Posted: 11 Nov 2015 08:14 AM PST

பெங்களூர் விமான நிலையத்திற்கு திப்பு சுல்தான் பெயர் வைக்க வேண்டும் என்ற தமது கோரிக்கை யாருடைய மனதினையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக தாம் மன்னிப்பு கோருவதாக நடிகரும், இலக்கியவாதியுமான கிரீஷ் கர்னாட் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 18ம் நூற்றாண்டில் மைசூர் நகரை ஆட்சி செய்தவர் திப்பு சுல்தான். அவரது பிறந்த நாள் கர்நாடக அரசு சார்பில் நேற்று

உ.பி.யில் காணாமல் போன சிறுமி பிணமாக மீட்பு

Posted: 11 Nov 2015 04:56 AM PST

உத்தர பிரதேச மாநிலத்தில் காணாமல் போன 15 வயது சிறுமி, மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பரேலி மாவட்டம் பகேரி பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமி கடந்த 5ம் தேதி காணாமல் போனார். அவரை அப்பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவர்

இந்துத்துவா கொள்கைக்கான வெற்றிடத்தை சிவசேனா நிரப்பும்: உத்தவ் தாக்கரே

Posted: 11 Nov 2015 04:36 AM PST

இந்துத்துவா கொள்கைக்கான வெற்றிடத்தை சிவசேனா நிரப்பும் என அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மராட்டிய மாநிலத்தில் சுமார் 25 ஆண்டுகள் நகமும் சதையுமாக இருந்த பா.ஜ.க. – சிவசேனா கட்சிகளிடையே கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது திடீர் பிளவு ஏற்பட்டது. இரு கட்சிகளுக்கும் இடையே சுமூகமான உடன்பாடு ஏற்படாததால் சட்டசபை தேர்தலை தனித்தனியே சந்தித்தன.

மத்திய அரசை கண்டித்து முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்: பதக்கங்களை எரிக்க முயன்றதால் பரபரப்பு

Posted: 11 Nov 2015 03:36 AM PST

தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் தங்களது பதக்கங்களை தீயிட்டு கொளுத்தி டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்கள் கடந்த ஜூன் மாதம் முதல் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பீகார் தோல்விக்கு மோடி, அமித் ஷா மீது பழிபோடுவதில் நியாயமில்லை: நிதின் கட்காரி வக்காலத்து

Posted: 11 Nov 2015 01:37 AM PST

பீகாரில் கட்சி சந்தித்த தோல்விக்கு மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை மட்டுமே குற்றம்சாட்டக்கூடாது என மத்திய மந்திரியும் பா.ஜ.க.வின் முன்னாள் தேசிய தலைவருமான நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மக்கள்தொகையில் நாட்டின் மூன்றாவது பெரிய மாநிலமான பீகார்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்தியா-பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்

Posted: 11 Nov 2015 01:14 AM PST

தீபாவளி பண்டிகையையொட்டி இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான சாலை வழி எல்லைப் பகுதியான வாகா எல்லைக்கோடு அருகே இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை வழங்கி பரிமாறிக் கொண்டனர்.

பிரபல உல்பா தலைவனை இந்தியாவிடம் ஒப்படைத்த ஷேக் ஹசினாவுக்கு தொலைபேசி மூலம் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்

Posted: 11 Nov 2015 01:10 AM PST

உல்பா தலைவன் அனுப் சேட்டியாவை இந்தியாவிடம் ஒப்படைத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம்வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். அசாமை சேர்ந்த உல்பா தீவிரவாதி அனுப் சேட்டியா. அந்த அமைப்பின்

உ.பி.யில் மினி பஸ்–லாரி மோதி விபத்து: 3 பேர் பலி - 24 பேர் காயம்

Posted: 11 Nov 2015 12:43 AM PST

இமாசல பிரதேச மாநிலம் சோலன் பகுதியில் இருந்து ஒரு மினி பஸ் புறப்பட்டு ருபைதீகா என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது. அதில் நேபாளம் பீர்புரை சேர்ந்த 29 பேர் பயணம் செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் சோநகர் பகுதியில் உள்ள சிகையா கிராமத்தில் வந்த போது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™