Tamil Star |
- தற்கொலை செய்துகொள்ளும் கனேடிய படையினர் – இராணுவத் தளபதி கவலை
- சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் முன்னாள் காவல்த்துறை உத்தியோகத்தர் கைது
- மெக்சிக்கோ விடுதியில் கனேடிய தம்பதி சடலமாக மீட்பு
- கனேடிய வீரர்கள் நினைவுநாள் இன்று
| தற்கொலை செய்துகொள்ளும் கனேடிய படையினர் – இராணுவத் தளபதி கவலை Posted: 11 Nov 2015 08:14 PM PST
இவ்வாறான தற்கொலை உணர்வுகள் எப்போதும் ஏற்படாத வகையில் கனேடிய படை வீரர்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக போர்களில் ஈடுபடாத இராணுவ வீரர்களை விடவும், பாரிய போர்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் மத்தியிலேயே இவ்வாறான தற்கொலை உணர்வுகள் அதிகரித்து காணப்படுவதாக, இராணுவ மருத்துவப் பிரிவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக தரைவழித் தாக்குதல்களில் ஈடுபடும் தரைப்படை வீரர்கள் மத்தியிலேயே இவ்வாறான தற்கொலை முனைப்புகள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், இந்த பிரச்சினைக்கு எந்த வகையில் தீர்வினைக் காணமுடியும் என்பது தொடர்பில் தாம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஆரோக்கியமும் நலவாழ்வுமே தனது அதிமுக்கிய குறிக்கோள் எனவும் கனேடிய இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். கனேய இராணுவத்தினர் மத்தியில் தற்கொலைகளைத் தடுக்கும் வகையிலான அதி உச்ச நடவடிக்கைகள் தற்போது நடப்பில் உள்ள போதிலும், அவற்றில் மேலும் முன்னெற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த வகையில் அவ்வாறான மருத்துவ, உளவளத் தேவை உள்ள இராணுவ வீரர்கள் உடனடியாகவே உதவியை நாட வேண்டும் எனவும், அவ்வாறு வேறு ஒரு இராணுவ வீரருக்கு உதவி தேவைப்படுவதாக அறிந்தாலும் அது தொடர்பிலும் தமக்கு உடனடியாக தெரியப்படுத்துமாறும் கனேடிய இராணுவத் தளபதி ஜொனாதன் வான்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். The post தற்கொலை செய்துகொள்ளும் கனேடிய படையினர் – இராணுவத் தளபதி கவலை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் முன்னாள் காவல்த்துறை உத்தியோகத்தர் கைது Posted: 11 Nov 2015 10:08 AM PST
கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி குறித்த அந்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பிலான விசாரணைகளை தாம் கடந்த மூன்றாம் திகதி ஆரம்பித்ததாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். விசாரணைகளின் தொடர்ச்சியாக Donald Clark எனப்படும் முன்னாள் காவல்த்துறை உத்தியோகத்தர் நேற்று கைது செய்யப்பட்டதாகவும், பாலியல் குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அவர் நியூமார்க்கெட் நீதிமன்றில் நிறுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்த நபர் கடந்த 1976ஆம் ஆண்டில் இருந்து 2006ஆம் ஆண்டு வரையில் யோர்க் பிராந்திய காவல்த்துறையினர் பணியாற்றியதாகவும், 2007ஆம் ஆண்டு முதல் அவர் காவல்த்துறையினர் பகுதிநேர பணியாளராக பணியாற்றி வந்ததாகவும், தற்போது அவரது வேலை ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. The post சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் முன்னாள் காவல்த்துறை உத்தியோகத்தர் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மெக்சிக்கோ விடுதியில் கனேடிய தம்பதி சடலமாக மீட்பு Posted: 11 Nov 2015 09:47 AM PST
தங்களது மகளின் திருமண நிகழ்வுக்காக அங்கு சென்றிருந்த நிலையிலேயே இவர்களது மரணம் சம்பவித்துள்ளதாக கூறப்படுகிறது. மெக்சிக்கோவின் Playa del Carmen எனும் இடத்தில் அமைந்துள்ள Playacar Palace எனப்படும் விருந்தினர் விடுதியில் இவர்கள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும், இருவருக்கும் சுமார் 60 வயது இருக்கும் எனவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருவரது உடலிலும் தாக்குதல் அடையாளங்கள் எவையும் காணப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் திங்கட்கிழமை அதிகாலை ஒரு மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட வேளையில் உயிரிழந்திருக்க கூடும் எனவும், ஆண் மாரடைப்பு காரணமாகவும், பெண் மூச்சுத் திணறல் காரமாகவும் உயிரிழந்துள்ளதாகவும் உடற்கூற்று பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. எனினும் அவர்களின் உடல்கள் குளியல் தொட்டி ஒன்றினுள் காணப்பட்டதாகவும், அவர்கள் மின்சாரம் தாக்கியே உயிரிழந்திருக்க கூடும் எனவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த இரு கனேடியர்களின் பெயர் விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை. The post மெக்சிக்கோ விடுதியில் கனேடிய தம்பதி சடலமாக மீட்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனேடிய வீரர்கள் நினைவுநாள் இன்று Posted: 11 Nov 2015 09:37 AM PST
அந்த வகையில் இன்று 11ஆம் மாதம் 11ஆம் திகதி 11 மணிக்கு அனைத்து கனேடியர்களும் வீரர்களுக்க மரியாதை செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மெளன வணக்கத்தினை செலுத்தியுள்ளனர். கனடாவின் ஆளுநர் நாயகம் டேவிட் ஜோன்ஸ்டன் தலைமையில் நடைபெறும் பிரதான நினைவேந்தல் நிகழ்வு, ஒட்டாவாவில் உள்ள தேசிய போர் நினைவகத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது. இன்று முற்பகல் 11 மணிக்கு, வீரர்களை நினைவுகூரும் அந்த இரண்டு நிமிட மெளன வணக்கத்தின் போதும், ரொரன்ரோ போக்கவரத்து கழகத்தின் அனைத்து பேரூந்துகளும் நிறுத்தப்படும் என்பதுடன், தொடரூந்துகளும் தொடரூந்து நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் தற்போதய இராணுவ வீரர்கள் ரொரன்ரோ போக்குவரத்து சேவைகளை இன்று நாள் முழுவதும் இலவசமாக பயன்படுத்த முடியும் எனவும், அவர்கள் தம்முடன் மேலும் ஒருவரை இலவச பயணத்தின் போது கூட்டிச் செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1918ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி முதலாம் உலகப்போர் முடிவுக்கு வந்து முதன்முதலில் அமைதி திரும்பியதை குறிக்கும் வகையில் இந்த நினைவு நிகழ்வு கடைப்பிடிக்க ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. The post கனேடிய வீரர்கள் நினைவுநாள் இன்று appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

கனேடிய படை வீரர்க்ள மத்தியில் காணப்படும் தற்கொலை செய்துகொள்ளும சம்பவங்கள் கவலையளிப்பதாக உள்ளது என கனேடிய இராணுவத் தளபதி ஜொனாதன் வான்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த மாத இறுதிப் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதான முறைப்பாடு தொடர்பில், யோர்க் பிராந்திய காவல்த்துறையில் பணியாற்றிய 65 வயதான முன்னாள் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெக்சிக்கோவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் கனேடிய தம்பதியர் இருவர் நேற்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
