மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- காஷ்மீர் எல்லையில் ராணுவ முகாம்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 4 வீரர்கள் காயம்
- பாரீஸ் பருவ நிலை மாற்றம் மாநாட்டில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்கிறார்
- பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த அனைத்து கட்சிகளுடன் வெங்கையாநாயுடு ஆலோசனை
- சபரிமலையேறும் பக்தர்கள் சோர்வாக இருந்தால் தேவஸ்தான உதவி மையத்தை அணுகவும்: டாக்டர் பேட்டி
- திருவனந்தபுரம் அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி: 25 பேர் காயம்
- தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: திருப்பதி கோவிலில் அதிரடி சோதனை
- கேரளாவுக்கு லாரியில் ரகசிய அறை அமைத்து வெடிபொருட்கள் கடத்தல்: 3 பேர் கைது
- சபரிமலை வரும் பக்தர்கள் மரணமடைந்தால் ரூ.50 ஆயிரம் இன்சூரன்ஸ்: தேவஸ்தான அதிகாரி தகவல்
- சபரிமலையில் தினமும் களபாபிஷேகத்திற்கு ஏற்பாடு
- டெல்லியில் அப்துல் கலாம் தேசிய அறிவுசார் மையம் விரைவில் அமைக்கப்படும்: மந்திரி தகவல்
- ஷீனா போரா கொலை வழக்கு: பீட்டர் முகர்ஜியிடம் டெல்லியில் விசாரணை
- ஒடிசாவில் சிறுமி கற்பழித்து கொலை: 5 பேருக்கு மரணதண்டனை
- சபரிமலையில் வெளிநாட்டு பெண்கள் சாமி தரிசனம்
- நான் பேசும் பாணியை ராகுல்காந்தி காப்பி அடிக்கிறார்: மத்திய மந்திரி ஸ்மிருதி ராணி கிண்டல்
- ஐ.எஸ். தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் சர்வதேச பொருளாதாரத்தை பாதிக்கிறது: அருண்ஜெட்லி எச்சரிக்கை
- மலேசியா, சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி
- பாராளுமன்ற கூட்டம் நாளை தொடங்குகிறது: சகிப்பின்மை பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு
- அமீர்கான் காங்கிரசால் தவறாக வழி நடத்தப்பட்டார்: வெங்கைய்யா நாயுடு மறைமுக குற்றச்சாட்டு
- நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருகிறது - நடிகர் அமீர்கான் பேச்சு: மத்திய அரசு நிராகரிப்பு - ராகுல் காந்தி ஆதரவு
- ராணுவ ரீதியாக இந்தியா-சிங்கப்பூர் இணைந்து செயல்பட ஒப்பந்தம்: மோடி- லீ சியான் லூங் கூட்டு பிரகடனம் வெளியீடு
| காஷ்மீர் எல்லையில் ராணுவ முகாம்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 4 வீரர்கள் காயம் Posted: 24 Nov 2015 11:40 PM PST காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் பலியானார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரவாதிகள் ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். வடக்கு காஷ்மீரில் தங்தார் பகுதியில் 31 கூர்க்கா ரைபிள் படை பிரிவின் ராணுவ முகாம்கள் உள்ளது. இங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். உடனே ராணுவத்தினரும் திருப்பித் தாக்குதல் நடத்தினார்கள். இரு |
| பாரீஸ் பருவ நிலை மாற்றம் மாநாட்டில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திக்கிறார் Posted: 24 Nov 2015 11:22 PM PST பாரீசில் நடைபெறும் பருவநிலை மாற்றம் மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா சந்தித்து பேசுகிறார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 30–ந்தேதி பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு தொடங்குகிறது. அதில் |
| பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த அனைத்து கட்சிகளுடன் வெங்கையாநாயுடு ஆலோசனை Posted: 24 Nov 2015 11:12 PM PST பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை (26–ந்தேதி) தொடங்குகிறது. டிசம்பர் 23–ந்தேதிவரை இந்த கூட்டத் தொடர் நடக்கிறது. இந்த கூட்டத் தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா உள்ளிட்ட 38 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் நாட்டில் நிலவும் சகிப்புத் தன்மையற்ற நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரச்சினையை கிளப்பும் என்பதால் பாராளுமன்றம் முடக்கம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| சபரிமலையேறும் பக்தர்கள் சோர்வாக இருந்தால் தேவஸ்தான உதவி மையத்தை அணுகவும்: டாக்டர் பேட்டி Posted: 24 Nov 2015 09:29 PM PST கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மண்டல பூஜைக்காக பக்தர்கள் மாலை அணிந்து நடை பயணம் வந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் மலையேறிய 4 அய்யப்ப பக்தர்கள் இருதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். |
| திருவனந்தபுரம் அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி: 25 பேர் காயம் Posted: 24 Nov 2015 09:20 PM PST திருவனந்தபுரம் அருகே பாலராமபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆண்டுவிழாவையொட்டி மாணவர்கள் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில் ஆண்டு விழா அன்று திடீரென்று மாணவர்களின் கலை நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை பற்றி தலைமை ஆசிரியர் சுற்றறிக்கை தயார் செய்து ஒரு ஆசிரியர் மூலம் மாணவர்களுக்கு |
| தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: திருப்பதி கோவிலில் அதிரடி சோதனை Posted: 24 Nov 2015 09:00 PM PST திருப்பதி கோவில் மற்றும் ஐதராபாத் நகரத்துக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து திருப்பதி கோவிலில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அலிபிரி டோல்கேட் மற்றும் ஜி.எம்.சி. டோல்கேட் பகுதியில் பலத்த |
| கேரளாவுக்கு லாரியில் ரகசிய அறை அமைத்து வெடிபொருட்கள் கடத்தல்: 3 பேர் கைது Posted: 24 Nov 2015 08:49 PM PST கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் வந்தது. போனில் பேசிய மர்ம மனிதன் கோவையில் இருந்து கேரளாவுக்கு லாரியில் வெடிபொருட்கள் கடத்துகிறார்கள் என்று கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டான். ரகசிய தகவலின் அடிப்படையில் மலப்புரம் போலீஸ் துணை சூப்பிரண்டு |
| சபரிமலை வரும் பக்தர்கள் மரணமடைந்தால் ரூ.50 ஆயிரம் இன்சூரன்ஸ்: தேவஸ்தான அதிகாரி தகவல் Posted: 24 Nov 2015 08:13 PM PST சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சாமி தரிசனத்துக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் மரணமடைந்தால் அவர்களுக்கு நிதியுதவி வழங்க திருவாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது:– |
| சபரிமலையில் தினமும் களபாபிஷேகத்திற்கு ஏற்பாடு Posted: 24 Nov 2015 08:12 PM PST சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் டிசம்பர் மாதம் மண்டல பூஜை நடைபெற உள்ளதையொட்டி கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. நடை திறந்து 7–வது நாளான நேற்றும் சபரிமலையில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். நெரிசல் இல்லாமல் பக்தர்கள் செல்ல போ |
| டெல்லியில் அப்துல் கலாம் தேசிய அறிவுசார் மையம் விரைவில் அமைக்கப்படும்: மந்திரி தகவல் Posted: 24 Nov 2015 07:31 PM PST டெல்லியில் விரைவில் அப்துல்கலாம் தேசிய அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று மாநில பண்பாட்டுத்துறை மந்திரி கபில்மிஸ்ரா தெரிவித்தார். இது குறித்து கபில்மிஸ்ரா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- |
| ஷீனா போரா கொலை வழக்கு: பீட்டர் முகர்ஜியிடம் டெல்லியில் விசாரணை Posted: 24 Nov 2015 07:19 PM PST ஷீனா போரா கொலை வழக்கில் கைதான பீட்டர் முகர்ஜியின் சி.பி.ஐ. காவல் நாளை(வியாழக்கிழமை) முடிவுக்கு வருகிறது. அவரிடம் சி.பி.ஐ. நடத்திய விசாரணையில், ஷீனா போரா கொலைக்கு பண பரிவர்த்தனை நோக்கம் மற்றும் ராகுலுடன் அவருக்கு இருந்த காதல் விவகாரம் ஆகியவையே முதன்மை காரணம் என்பது தெரியவந்துள்ளது |
| ஒடிசாவில் சிறுமி கற்பழித்து கொலை: 5 பேருக்கு மரணதண்டனை Posted: 24 Nov 2015 06:23 PM PST ஒடிசா மாநிலம் கியோன்ஜர் மாவட்டத்தில் உள்ள பெக்லுன்டி என்ற கிராமத்தில் கடந்த 2012-ம் ஆண்டு 8-ம் வகுப்பு படித்து வந்த சிறுமியை மர்மநபர்கள் சிலர் கடத்தி சென்றனர். சில நாட்களுக்கு பின்னர் அந்த சிறுமி உடலில் காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். |
| சபரிமலையில் வெளிநாட்டு பெண்கள் சாமி தரிசனம் Posted: 24 Nov 2015 06:22 PM PST நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சிசிலி, மரியம், பியா ஆகிய 3 பெண்கள் சுற்றுலா பயணத்தை முன்னிட்டு கேரளா வந்தனர். அவர்கள் 3 பேரும் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலை சுற்றுலா மையத்தில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் சுற்றுலா ஏற்பாடு செய்த குழுவினர், சபரிமலை அய்யப்பன் கோவில் குறித்து அந்த பெண்களிடம் விளக்கி கூறினர். உடனே அவர்கள்,இந்தியாவின் பிரபல ஆன்மிக தலமாக விளங் |
| நான் பேசும் பாணியை ராகுல்காந்தி காப்பி அடிக்கிறார்: மத்திய மந்திரி ஸ்மிருதி ராணி கிண்டல் Posted: 24 Nov 2015 04:19 PM PST காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தன்னுடைய பேச்சு பாணியை காப்பி அடிக்கிறார் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள அவரது வீட்டின் வெளியே தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ராகுல்காந்தி குறித்து கலகலப்பாக பேசினார். |
| ஐ.எஸ். தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் சர்வதேச பொருளாதாரத்தை பாதிக்கிறது: அருண்ஜெட்லி எச்சரிக்கை Posted: 24 Nov 2015 03:49 PM PST ஐ.எஸ். தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் உலக பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி எச்சரித்துள்ளார். |
| மலேசியா, சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி Posted: 24 Nov 2015 03:38 PM PST மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் தனது 4 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார். பிரதமர் நரேந்திரமோடி 3 நாள் சுற்றுப்பயணமாக மலேசியா சென்றார். அங்கு நடைபெற்ற 'ஆசியான்' உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு பிரதமர் நஜீப் மற்றும் தொழில் அதிபர்களை சந்தித்தார். மலேசிய வாழ் |
| பாராளுமன்ற கூட்டம் நாளை தொடங்குகிறது: சகிப்பின்மை பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு Posted: 24 Nov 2015 03:05 PM PST பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி டிசம்பர் 23-ந் தேதி வரை நடக்கிறது. பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் மத்திய ஆளுங்கட்சியான பா.ஜனதா கூட்டணி தோல்வி அடைந்த பின்னர் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால் பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றுசேர்ந்து அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் என்று தெரிகிறது. |
| அமீர்கான் காங்கிரசால் தவறாக வழி நடத்தப்பட்டார்: வெங்கைய்யா நாயுடு மறைமுக குற்றச்சாட்டு Posted: 24 Nov 2015 02:09 PM PST நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாக பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்த கருத்திற்கு நேர் மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் அமீர்கானின் |
| Posted: 24 Nov 2015 01:36 PM PST நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருவதாக நடிகர் அமீர்கான் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது பேச்சை உள்நோக்கம் கொண்டது என கூறி மத்திய அரசு நிராகரித்து உள்ளது. ஆனால் ராகுல் காந்தி, கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். |
| Posted: 24 Nov 2015 01:02 PM PST பிரதமர் மோடி ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மலேசியா தலைநகர் கோலாலம்பூர் சென்றார். அங்கு தனது 3 நாள் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் மாலை அவர் சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |