Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


எதிர்பாபை ஏற்படுத்தியுள்ள சிரிய அகதிகளை உள்வாங்கும் கனடாவின் திட்டம்

Posted: 24 Nov 2015 07:07 AM PST

m

mசிரிய நாட்டு அகதிகளை உள்ளவாங்குவது குறித்த கனடாவின் திட்டம் இன்று வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று மதியம் வெளியாக உள்ள அந்த திட்டத்தை அறிய பல்வேறு மட்டத்தினரும் பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்த எதிர்பார்ப்பு உள்ளூர், தேசிய மட்டத்தில் மட்டுமின்றி அனைத்துலக மட்டத்திலும் காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் ( ஏறக்குறைய இன்னமும் ஐந்து வாரங்களுக்குள்) 25,000 சிரிய நாட்டு அகதிகளை கனடாவினுள் குடியேற்றவுள்ளதான அறிவிப்பினை பிரதமர் ஜஸ்டின் ரூடோ கடந்த வாரமும் மீள் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.m

இந்த பெரிய எண்ணிக்கையான மக்களை, மிகக் குறுகிய காலத்தினுள் எவ்வாறு கனேடிய அரசாங்கம் கையாளப்போகிறது என்பது தொடர்பிலும், அதற்கான செலவீனங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்படவுள்ளன என்பது தொடர்பிலுமே அனைத்து தரப்பின் எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

சிரிய நாட்டு அகதிகளை கனடாவுக்குள் அழைத்து வருவதற்கான செலவுக்கும் அப்பால், அவர்களை இங்கு குடியமர்த்தி, அவர்களுக்கான தங்குமிட, சுகாதார, கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு மேலும் பல மில்லியன் டொலர்கள் செலவாகும் எனவும் கணிக்கப்படுகிறது.

The post எதிர்பாபை ஏற்படுத்தியுள்ள சிரிய அகதிகளை உள்வாங்கும் கனடாவின் திட்டம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கிழக்கு யோர்க் பகுதியில் கத்திக்குத்துச் சம்பவம்

Posted: 24 Nov 2015 06:59 AM PST

juku

jukuO'Connor–Parkview குடியிருப்புப் பகுதியில் கத்திக்குத்துச் சம்பவம் ஒன்று இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

கத்திக்குத்துக்கு ஆளான ஆண் நபரை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

Dawes மற்றும் Gower வீதிப்பகுதிக்கு அருகில் அதிகாலை 3 மணிக்கு சற்று முன்னராக இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கத்திக்குத்துக்கு ஆளான அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் சுயநினைவுடனும்,சுவாசத்துடனும் இருந்ததாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.juku

எனினும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவரின் நிலைமை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை இந்த கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் குறித்த தகவல்கள் எதனையும் காவல்த்துறையினர் வெளியிடவில்லை.

The post கிழக்கு யோர்க் பகுதியில் கத்திக்குத்துச் சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வீடுடைப்புச் சம்பவங்கள் குறித்து காவல்த்துறையினர் எச்சரிக்கை

Posted: 24 Nov 2015 06:54 AM PST

j

jவீடுடைப்புச் சம்பவங்கள் குறித்து ரொரன்ரோ காவல்த்துறையினர் பொதுமக்களுக்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நோர்த் யோர்க் பகுதியில் சுமார் 10 இற்கும் அதிகமான வீடுடைப்பு, திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றதை அடுத்தே காவல்த்துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

கடந்த சில வாரங்களில் மட்டும் 12 வீடுடைப்புச் சம்பவங்கள் Bayview Village, Hillcrest Village மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள காவல்த்துறையினர், இந்த குற்றச் செயல்கள் பெரும்பாலும் நள்ளிரவுக்கும் அதிகாலை ஐந்து மணிக்கும் இடைப்பட்ட வேளையிலேயே இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளனர்.j

இதேவேளை பின்வரும் பகுதிகளை உள்ளடக்கிய இடங்களிலும் இவ்வாற குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பேவியூ அவனியூவில் இருந்து மேற்காக உள்ள பகுதிகள்

நெடுஞ்சாலை 404ற்கு கிழக்காக உள்ள பகுதிகள்

ஷெப்பேர்ட் அவனியூவின் தென் பகுதிகள்

ஸ்டீல்ஸ் அவனியூவின் வட பகுதிகள்

வீடுகளில் யாரும் இல்லாத நேரங்களில் அல்லது வீட்டில் உள்ளவர்கள் உறங்கிக்கொண்டிருக்கும் நேரங்களில் வீட்டை உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

அதேவேளை உடைக்கப்பட்ட வீடுகளில் இருந்து எத்தகைய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என்ற விபரங்களை விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்த்துறையினர் வெளியிடவில்லை.

இரவு வேளைகளில் வீட்டின் வெளிப்பகுதி விளக்குகளை முடியுமானவரையில் ஒளிர விடுமாறும் காவல்த்துறையினர் குடியிரு்பபாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன் அருகாமையில் இடம்பெறும் நிகழ்வுகளை கண்காணிக்குமாறும், சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் காணப்படின் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறும் அவர்கள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post வீடுடைப்புச் சம்பவங்கள் குறித்து காவல்த்துறையினர் எச்சரிக்கை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™