மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் மணிப்பூர் சட்டசபைக்குள் கால்பதித்தது பா.ஜ.க.,
- குடியுரிமை பிரச்சனை: ராகுலுக்கு எதிரான வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
- வாராங்கல் பாராளுமன்ற இடைத்தேர்தல்: 1 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி வேட்பாளர் முன்னிலை
- ஆன்லைன் விபசார வழக்கில் கைதான முத்தப்போராட்ட தம்பதி உள்பட 6 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல்
- தீவிரவாதிகள் தாக்குதலுக்கு சதி: திருப்பதி, ஐதராபாத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
- சபரிமலையில் நடைஅடைத்த பிறகும் பக்தர்கள் 18–ம் படி ஏற அனுமதி
- காஷ்மீர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர் கேரளாவின் முதல் பெண் விமானி
- அப்பாவி மக்களை கொல்பவன் முஸ்லிமே அல்ல: நடிகர் அமிர் கான் கருத்து
- நிதிஷ்குமார் முதல்–மந்திரியானதால் கை விரல்களை துண்டித்து தொண்டர் காணிக்கை
- பதவியேற்ற பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி டிச.15-ம் தேதி கேரளா செல்கிறார்
- குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல்: அடுத்த இன்னிங்சுக்கு தயாராகிறது பா.ஜ.க.
- மும்பையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சதுக்கம் திறப்பு விழா 29–ந்தேதி நடக்கிறது
- சகிப்புத்தன்மையின்மை குறித்த அமீர்கானின் கருத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு
- ஜப்பான், சிங்கப்பூர் போல் இந்தியாவும் ஆசியாவின் சுறுசுறுப்பான நாடாக மாறும்: பிரதமர் மோடி நம்பிக்கை
- மீண்டும் ராமர் கோவில் விவகாரத்தை கையிலெடுக்கும் வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ்: சட்டம் இயற்ற கோரிக்கை
- பெண்களின் சொத்துக்களுக்கு யாரும் உரிமை கோர முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து
- தமிழகம் மற்றும் ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் வருகிறார்?
- திருப்பதி கோவில் பிரகாரங்களில் மழைநீர் தேங்கியது: கோவில் நடை சாத்தப்பட்டதாக வதந்தி
- நிதிஷ்குமார், கெஜ்ரிவாலுக்கு மேற்குவங்க முதல்மந்திரி மம்தா பானர்ஜி அழைப்பு
- கடனை திருப்பி செலுத்தாத மோசடிக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் விஜய் மல்லையா
| இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் மணிப்பூர் சட்டசபைக்குள் கால்பதித்தது பா.ஜ.க., Posted: 23 Nov 2015 11:30 PM PST இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் மணிப்பூர் சட்டசபைக்குள் கால்பதித்தது பா.ஜ.க., |
| Posted: 23 Nov 2015 11:08 PM PST காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இங்கிலாந்து நாட்டு குடிமகன் என்று அவர் பங்குதாரராக உள்ள லண்டன் நிறுவனம் ஆண்டறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே ராகுல் காந்தியின் இந்திய நாட்டு குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று பா.ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கூறினார். இதுகுறித்து அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதுடன் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். |
| Posted: 23 Nov 2015 10:33 PM PST தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாராங்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டுவரும் நிலையில் மாநிலத்தை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி வேட்பாளரான தயாகர் காங்கிரஸ், பா.ஜ.க. - தெலுங்குதேசம் கூட்டணி வேட்பாளர்களை பின்னுக்குத்தள்ளி 1 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். |
| ஆன்லைன் விபசார வழக்கில் கைதான முத்தப்போராட்ட தம்பதி உள்பட 6 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல் Posted: 23 Nov 2015 10:29 PM PST கேரளாவில் மாடல் அழகிகள், சிறுமிகளை போதைக்கு அடிமையாக்கி விபசாரத்தில் ஈடுபடுத்தும் கும்பலை போலீசார் பொறி வைத்து பிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆன்லைன் மூலம் விபசாரத்திற்கு ஆள் பிடிப்பதும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் முத்தப்போராட்டம் |
| தீவிரவாதிகள் தாக்குதலுக்கு சதி: திருப்பதி, ஐதராபாத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு Posted: 23 Nov 2015 10:28 PM PST பல நாடுகளின் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் லஷ்கர்–இ.தொய்பா தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தலாம் என்று மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபடலாம் என உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. |
| சபரிமலையில் நடைஅடைத்த பிறகும் பக்தர்கள் 18–ம் படி ஏற அனுமதி Posted: 23 Nov 2015 10:08 PM PST சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. இதனால் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது சபரிமலையில் மழை குறைந்து உள்ளதால் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் மலை ஏறி செல்கிறார்கள். நேற்று அப்பச்சிமேடு பகுதியிலேயே அதிகளவு பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. மேலும் 18–ம் படி ஏறும் இடத்திலும் அதி |
| காஷ்மீர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர் கேரளாவின் முதல் பெண் விமானி Posted: 23 Nov 2015 08:41 PM PST காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் திரிகுடா மலையில் பிரசித்திபெற்ற வைஷ்ணவி தேவி மலை கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்களை ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. தனியார் ஹெலிகாப்டர் மூலம் வைஷ்ணவிதேவி |
| அப்பாவி மக்களை கொல்பவன் முஸ்லிமே அல்ல: நடிகர் அமிர் கான் கருத்து Posted: 23 Nov 2015 08:15 PM PST மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறை வெறியாட்டங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாலிவுட் நடிகர் அமிர் கான், அப்பாவி மக்களை கொல்பவன் யாரும் முஸ்லிமாக இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில், பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் 130 உயிர்களை பலிவாங்கிய ஐ.எஸ். தீவிரவாதிகளின் வெறியாட்டம் தொடர்பாக தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமிர் கான் கூறியதாவது:- |
| நிதிஷ்குமார் முதல்–மந்திரியானதால் கை விரல்களை துண்டித்து தொண்டர் காணிக்கை Posted: 23 Nov 2015 08:12 PM PST பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. நிதிஷ்குமார் முதல்–மந்திரியாக 4–வது முறையாக பதவி ஏற்றார். நிதிஷ்குமார் முதல்–மந்திரியானதைத் தொடர்ந்து தொண்டர் ஒருவர் தனது கைவிரல்களை துண்டித்து காணிக்கை செலுத்தினார். அவரது பெயர் அனில் சர்மா. ஐக்கிய ஜனதா தளம் தொண்டரான இவர் நிதிஷ்குமாரின் தீவிர |
| பதவியேற்ற பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி டிச.15-ம் தேதி கேரளா செல்கிறார் Posted: 23 Nov 2015 07:35 PM PST பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து 26-5-2014 அன்று இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுகொண்ட நரேந்திர மோடி, தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களிலும், உலகின் பல நாடுகளிலும் தொடர்ச்சியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். |
| குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல்: அடுத்த இன்னிங்சுக்கு தயாராகிறது பா.ஜ.க. Posted: 23 Nov 2015 07:34 PM PST பாராளுமன்ற தேர்தலில் அபரிமிதமான வெற்றியைப் பெற்ற பா.ஜ.க. தொடர்ந்து மராட்டியம், ஜார்கண்ட், அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைகளில் வெற்றிபெற்றும், டெல்லி சட்டசபையிலும், தொடர்ந்து இப்போது பீகார் சட்டசபை தேர்தலிலும் தோல்வி அடைந்துள்ளது. இவ்வளவுக்கும் 2010 பீகார் சட்டமன்ற தேர்தலில் 16.49 சதவீத |
| மும்பையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சதுக்கம் திறப்பு விழா 29–ந்தேதி நடக்கிறது Posted: 23 Nov 2015 07:11 PM PST மும்பை தாராவியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சதுக்கம் திறப்பு விழா 29–ந்தேதி நடக்கிறது. 'தினத்தந்தி'யின் அதிபர் மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், பத்திரிகை உலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர். கல்வி, விளையாட்டு, ஆன்மிக |
| சகிப்புத்தன்மையின்மை குறித்த அமீர்கானின் கருத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு Posted: 23 Nov 2015 04:20 PM PST மதத்தின் பெயரால் நடைபெறும் வன்முறை சம்பங்களை கண்டித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்திருந்த கருத்திற்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கூறியுள்ளார். டுவிட்டர் வலைதளத்தில் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அரவிந்த் |
| ஜப்பான், சிங்கப்பூர் போல் இந்தியாவும் ஆசியாவின் சுறுசுறுப்பான நாடாக மாறும்: பிரதமர் மோடி நம்பிக்கை Posted: 23 Nov 2015 04:06 PM PST ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் கொரிய நாடுகளை தொடர்ந்து இந்தியாவும் சுறுசுறுப்பான ஆற்றல்மிக்க நாடாக மாறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தெற்காசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர |
| மீண்டும் ராமர் கோவில் விவகாரத்தை கையிலெடுக்கும் வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ்: சட்டம் இயற்ற கோரிக்கை Posted: 23 Nov 2015 03:55 PM PST அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொதுச்செயலாளர் பிரவின் தொகடியா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரவின் தொகடியா, "குஜராத் |
| பெண்களின் சொத்துக்களுக்கு யாரும் உரிமை கோர முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து Posted: 23 Nov 2015 03:19 PM PST ஒரு பெண் தன்னுடைய பராமரிப்பில் உள்ள சொத்துக்களை விருப்படி யாருக்கு வேண்டுமானும் விட்டுச் செல்ல முடியும் என்றும் அவள் இறந்த பிறகு அவளுடைய சொத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
| தமிழகம் மற்றும் ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் வருகிறார்? Posted: 23 Nov 2015 03:16 PM PST தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலங்கள் கடுமையான மழை காரணமாகவும், வெள்ளத்தாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும் வெள்ளச்சேதம் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் இரு மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. |
| திருப்பதி கோவில் பிரகாரங்களில் மழைநீர் தேங்கியது: கோவில் நடை சாத்தப்பட்டதாக வதந்தி Posted: 23 Nov 2015 02:46 PM PST திருப்பதியில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு வரை கடும் வறட்சி நிலவியது. நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் வாரம் ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. பலர் கீழே இருந்து டேங்கர் வாகனங்கள் மூலம் தண்ணீரை திருப்பதி மலைக்கு எடுத்துச் சென்றனர். அதன் பிறகு புயல் மழை பெய்யத்தொடங்கியது. நேற்று வரை தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. |
| நிதிஷ்குமார், கெஜ்ரிவாலுக்கு மேற்குவங்க முதல்மந்திரி மம்தா பானர்ஜி அழைப்பு Posted: 23 Nov 2015 02:46 PM PST மேற்குவங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக மாநாட்டிற்கு பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மற்றும் டில்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். |
| கடனை திருப்பி செலுத்தாத மோசடிக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் விஜய் மல்லையா Posted: 23 Nov 2015 12:17 PM PST 1600 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத விவகாரத்தில் "வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்' என்ற பட்டியலின் கீழ் விஜய் மல்லையாவை பாரத ஸ்டேட் வங்கி இணைத்துள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |