Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


போர் விமானங்களை மீட்டுக் கொள்வது தொடர்பில் கனேடிய பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்

Posted: 23 Nov 2015 03:01 PM PST

ty

tyமத்திய கிழக்கில் ஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு எதிரான, அமெரிக்கா தலைமையிலான விமானத் தாக்குதல் நடவடிக்கைகளில் இருந்து தமது போர் விமானங்களை மீட்டுக் கொள்வதாக கனடா ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமது அரசாங்கத்தின் குறித்த அறிவித்தலை தற்காத்து பேசிய கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன், ஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு எதிரான,தரைவழித் தாக்குதல் நடவடிக்கைகள் சரிவர மேற்கொள்ளப்படாத நிலையில்,வான்வழித் தாக்குதல்களை மட்டும் மேற்கொள்வதனால் பாரிய பலன்கள் எதனையும் பெற்றுவிட முடியாது என தெரிவித்துள்ளார்.

தரைவழித் தாக்குதல்கள் சீரான முறையில் மேற்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தாதவிடத்து, விமானத் தாக்குதல்களை மட்டும் மேற்கொள்வதனால் எந்தவித பலனும் இல்லை என அவர் விபரித்துள்ளார்.

ஈராக்கில் கனடா வழங்கிவரும் தரைவழித் தாக்குதல் பயிற்களில் முழுமையான கவனத்தினை செலுத்தாது, CF-18 ரக போர் விமானங்களால் மட்டும் குண்டுவீச்சுக்களை மேற்கொள்வதனால், தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சிறிய அளவு மாற்றங்களை மட்டுமே ஏற்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ty

தான் மட்டுமின்றி கனேடிய அரசாங்கமும் பயிற்சி நடவடிக்கைகளிலேயே அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என கருதுவதாகவும், அதனைச் சரியாக செய்யாத நிலையில் எங்கு குண்டுகளை வீசுகிறோம் என்பதில் எந்தவித பலனும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் நிலைகள் மீதான தாக்குதல் நடவடிக்கைகளில் இருந்து கனடாவின் போர் விமானங்களை மீட்டுக் கொள்வதான முடிவினை மீண்டும் மறு உறுதிப்படுத்தியுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, ஈராக்கில் தரைப்படைகளுக்க பயிற்சிகளை வழங்குவதற்கான கனேடிய படைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்கவுள்ளதாக கடந்த வாரத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது 69 கனேடிய படை நிபுனர்கள் அங்கு பயிற்சி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பது, ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான கூட்டு தாக்குதல் நடவடிக்கைக்கு பாரிய பங்களிப்பினை வழங்குவதாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

The post போர் விமானங்களை மீட்டுக் கொள்வது தொடர்பில் கனேடிய பாதுகாப்பு அமைச்சர் விளக்கம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிரிய அகதிகளை தங்கவைப்பதற்கான இடங்களை ஒழுங்கமைக்கும் பணிகள் முன்னெடுப்பு

Posted: 23 Nov 2015 02:55 PM PST

uuy

uuyஇன்னமும் ஒரு வார காலத்தினுள் முதற்கட்ட சிரிய அகதிகள் கனடாவை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனால் கனடாவை வந்தடையவுள்ள சிரிய நாட்டு அகதிகளை முதற்கட்டமாக தங்கவைப்பதற்காக, ஒன்ராறியோவின் கிங்ஸ்டன் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் தயார்ப்படுத்தப்பட்டு வருகிறது.

அதனால் எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் அந்த முகாமை அகதிகளுக்காக தயார்படுத்துமாறு இராணுவத்தினருக்கு பணிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அந்த முகாமில் இருந்து தமது பொருட்களையும தளவாடங்களையும் அகற்றும் நடவடிக்கைகளை அந்த முகாமில் இருந்த இராணுவ வீரர்கள் ஆரம்பித்துள்ளனர்.

அதனை அடுத்து அங்கிருந்த பல்வேறு இராணுவக் குடியிருப்புகளும் அப்புறப்படுத்தப்பட்டு வருவதுடன், அனைத்து இராணுவ தள அமைப்புகளும் அகதிகள் குடியிருப்புக்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்படுகின்றன.uuy

இராணுவத்தினரை அங்கிருந்து அகற்றும் இந்த நடவடிக்கை காரணமாக, அந்த முகாமில் பயிற்சி பெற்றுவந்த சில அதிகாரிகளின் நடவடிக்கைக்ள தடைப்பட்டு போயுள்ளதாகவும், அவர்களில் பலருக்கான பரீட்சைகள் நெருங்கிவரும் காலத்தில் இந்த இடமாற்றம் ஏற்பட்டுளு்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை மிகக் குறுகியகால அறிவிப்பில் அங்கிருந்து படைகள் வெளியேற்றப்படுகின்ற போதிலும், அவர்கள் எங்கு தங்கவைக்கப்படவுள்ளனர் என்ற மேலதிக விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

The post சிரிய அகதிகளை தங்கவைப்பதற்கான இடங்களை ஒழுங்கமைக்கும் பணிகள் முன்னெடுப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

புரூசெல்சில் உள்ள கனேடிய தூதரகம் மூடப்படுவதாக அறிவிப்பு

Posted: 23 Nov 2015 02:49 PM PST

gh

ghபெல்ஜியத்தின் தலைநகர் புரூசெல்சில் உள்ள கனேடிய தூதரகம் மூடப்பட்டுள்ளது.

எந்தவேளையிலும் பயங்ரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாகவே தூதரகம் மூடப்படுவதான அறிவித்தல் நேற்றைய நாள் விடுக்கப்பட்டுள்ளது.

தூதரகம் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருக்கும் எனவும், அவசரகால தூதரக உதவிகள் மட்டுமே வழங்கப்படும் எனவும் பெல்ஜிய தலைநகரில் உள்ள கனேடிய தூதரகம் அறிவித்துள்ளது.

அதேவேளை பெல்ஜியத்திற்கு பயணிக்கும் கனேடியர்களுக்கு பயணம் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியத்திற்கு பயணிக்கும் கனேடியர்கள் மிக அதிக அளவிலான அவதானமாக செயற்படுமாறும், புரூசெல்ஸ் மட்டுமின்றி பெல்ஜியத்தின் எந்தப் பகுதிக்கு சென்றாலும் கவனமாக இருக்குமாறும் கனேடிய வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.

புரூசெல்சிலில் பயங்கரவாத தாக்குதல்கள் நடாத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல்கள் காரணமாக, அங்குள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், தொடரூந்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.gh

அத்துடன் அங்கு அவசரகால நிலைமையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் இடம்பெற்றது போன்ற தாக்குதல்கள் புரூசெல்சில் மேற்கொள்ளப்படக்கூடும் என்ற நம்பகரமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதனை அடுத்தே இந்த அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பெல்ஜியத்தின பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடுமையான பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு நடவடிக்கைகளை பெல்ஜிய படையினர் புரூசெல்சில் முன்னெடுத்துவருகின்றனர்.

The post புரூசெல்சில் உள்ள கனேடிய தூதரகம் மூடப்படுவதாக அறிவிப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கூரையில் இருந்து விழுந்த நபர் மருத்துவமனையில் அனுமதி (மிசிசாகாவில் சம்பவம்)

Posted: 23 Nov 2015 06:58 AM PST

orange_-_11232015

orange_-_11232015நபர் ஒருவர் வீட்டுக் கூரையில் இருந்து விழுந்து உயிராபத்தான காயத்திற்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் மத்திய மிசிசாகாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாகவும், இதில் 38 வயதான ஆண் நபர் மோசமான காயங்களுக்கு ஆளானதாகவும் பீல் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 5.15 மணியளவில் நபர் ஒருவர் விழுந்து விட்டதாக தெரிவித்து, Mavis வீதி மற்றும் நெடுஞ்சாலை 403 இன் சந்திப்பின் அருகில் Gladebrook Crescent பகுதியில் உள்ள வீட்டிற்கு வருமாறு தமக்கு அழைப்பு வந்திருந்ததாக அவசர மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற அந்த வீட்டில் கட்டட வேலைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே அவர் கூரையில் இருந்து விழுந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.orange_-_11232015

பாதிக்கப்பட்ட அந்த நபர் கட்டட மேற்பார்வையாளருடன் வீட்டில் நடந்துகொண்டிருந்ததாக தெரிவித்துள்ள விசாரணை அதிகாரிகள்,எத்தககைய வேலைகள் அங்க முன்னனெடுக்கப்பட்டிருந்தன என்று கூறவில்லை.

எனினும் அந்த நபர் விழுந்ததற்கு கிறிஸ்மஸ் ஒளிவிளக்குகளை தொங்க விடும் சம்பவம் காரணம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டில் கடந்த ஓகஸ் மாதத்தில் இருந்து கட்டட வேலைகள் நடைபெற்று வருவதாக அந்த வீட்டின் அயலில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் காயமடைந்த அந்த நபர் வீட்டுக் கூரைகள் தொடர்பான வேலைக்கான நிறுவனம் ஒன்றிலிருந்து பணிக்கு அமர்த்தப்பட்டவர் என அந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான அந்த நபர் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், அவசர உலங்கு வான்னூர்தி மூலமாக அவர் மிசிசாகாவில் உள்ள Credit Valley மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றும் பீல் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை விசாரணைகளை மேற்கொண்டு வரும் விசாரணையாளர்கள் பாதிக்கப்பட்ட நபர் வெளிநாட்டவர் என்றும், அவருக்கு குடும்பத்தினர் என யாரும் இங்கு காணப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

The post கூரையில் இருந்து விழுந்த நபர் மருத்துவமனையில் அனுமதி (மிசிசாகாவில் சம்பவம்) appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™