மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- அக்னி–1 ஏவுகணை சோதனை வெற்றி
- இன்று மாலை தேநீர் விருந்து: சோனியா, மன்மோகனுக்கு பிரதமர் மோடி அழைப்பு
- இந்தியாவில் தாக்குதல் நடத்த 30 தீவிரவாதிகள் ஊடுருவல்
- ஐதராபாத்தில் 18 கொலைகள் செய்தவர் மனம் திருந்தி டீக்கடை நடத்தி பிழைக்கிறார்
- ராகுல் அதிரடி உத்தரவால் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா
- தாஜ்மகாலுக்கு கூடுதல் பாதுகாப்பு: அல்கொய்தா மிரட்டலால் நடவடிக்கை
- மழை சேத நிவாரணத்துக்கு ரூ.3819 கோடி வேண்டும்: மத்திய அரசுக்கு சந்திரபாபுநாயுடு கடிதம்
- டெல்லியில் ரூ.22 கோடியுடன் தலைமறைவான வேன் டிரைவர் பிடிபட்டார்: பணம் மீட்கப்பட்டது
- கவர்னரை மாற்றாவிட்டால் தினமும் போராட்டம் நடத்துவோம்: அசாம் காங்கிரஸ் அறிவிப்பு
- மண் சரிவால் மூடப்பட்ட திருப்பதி 2–வது மலைப்பாதை மீண்டும் திறக்கப்பட்டது
- சபரிமலை கோவில் பகுதியில் லாட்டரி விற்க தடை: கேரள ஐகோர்ட்டு உத்தரவு
- சகிப்புத்தன்மை விவகாரம்: அமீர்கானின் ரசிகை தற்கொலை
- 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 1-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
- சரக்கு, சேவை வரி மசோதாவுக்கு 30 அரசியல் கட்சிகள் ஆதரவு
- இந்தியாவை விட்டு வெளியேறு என்று அமீர்கானை யாரும் சொல்ல முடியாது: மம்தா பானர்ஜி ஆதரவு குரல்
- போர்த்துகல் நாட்டின் புதிய பிரதமர் அந்தோணியோ கோஸ்டாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
- உறுப்பினர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டெல்லி மேல்-சபை ஒத்திவைப்பு
- விமான போக்குவரத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் இந்தியா: 2026-ல் உலக அளவில் 3-வது இடத்தை பிடிக்கும்
- டெல்லியில் தனியார் வங்கியின் பணம் ரூ.22.5 கோடியுடன் ஓட்டம் பிடித்த வேன் டிரைவர்
- பாராளுமன்றத்தில் அரசியல் சாசன விவாதம்: ராஜ்நாத் சிங்குடன் காங்கிரஸ் நேரடி மோதல்
| Posted: 26 Nov 2015 11:27 PM PST குறைந்த தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட 'அக்னி–1' ஏவுகணை இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதத்தை தாங்கிச் சென்று தாக்கும் இந்த 'அக்னி–1' ஏவுகணை இன்று ஒடிசா கடற்கரை பகுதியில் இருந்து சோதித்து பார்க்கப்பட்டது. இது |
| இன்று மாலை தேநீர் விருந்து: சோனியா, மன்மோகனுக்கு பிரதமர் மோடி அழைப்பு Posted: 26 Nov 2015 11:20 PM PST பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நவம்பர் 26–ந்தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் என்பதால் குளிர்கால கூட்டத் தொடரின் முதல் 2 நாட்களில் அது தொடர்பான விவாதம் நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி நேற்றும், இன்றும் பாராளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதான விவாதம் நடந்தது. |
| இந்தியாவில் தாக்குதல் நடத்த 30 தீவிரவாதிகள் ஊடுருவல் Posted: 26 Nov 2015 10:55 PM PST மும்பையில் கடந்த 2008–ம் ஆண்டு மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது போன்று மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அடுத்த மாதம் (டிசம்பர்) முழுவதும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பை நடத்த வேண்டும் என்பது பாகிஸ்தான் உளவு அமைப்பின் திட்டமாக உள்ளது. |
| ஐதராபாத்தில் 18 கொலைகள் செய்தவர் மனம் திருந்தி டீக்கடை நடத்தி பிழைக்கிறார் Posted: 26 Nov 2015 10:46 PM PST ஐதராபாத்தை சேர்ந்தவர் பிரசாத் ரெட்டி. இவரைக் கண்டால் ஐதராபாத் நகரம் ஒரு காலத்தில் நடுநடுங்கும். அந்த அளவுக்கு கொலை– கொள்ளை சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். 30 ஆண்டுகளாக திருட்டு, கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டார். 18 கொலைகள் செய்ததாகவும் போலீசில் ஆவணம் உள்ளது. இன்னும் 6 வழக்குகளில் அவருக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்டு |
| ராகுல் அதிரடி உத்தரவால் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா Posted: 26 Nov 2015 10:22 PM PST பஞ்சாப் மாநிலத்தில் 2017–ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் பஞ்சாப் |
| தாஜ்மகாலுக்கு கூடுதல் பாதுகாப்பு: அல்கொய்தா மிரட்டலால் நடவடிக்கை Posted: 26 Nov 2015 10:19 PM PST உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உலகப் புகழ் பெற்ற காதல் சின்னமான தாஜ்மகால் உள்ளது. தினமும் தாஜ்மகாலை பார்வையிட சராசரியாக 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். தாஜ்மகால் வளாகத்தில் ஒரே சமயத்தில் சுமார் 4 ஆயிரம் பேர் நிற்க இட வசதி உள்ளது. |
| மழை சேத நிவாரணத்துக்கு ரூ.3819 கோடி வேண்டும்: மத்திய அரசுக்கு சந்திரபாபுநாயுடு கடிதம் Posted: 26 Nov 2015 09:45 PM PST குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திராவில் பலத்த மழை பெய்தது. நெல்லூர், பிரகாசம், சித்தூர், கடப்பா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, அனந்தபுரம், கிருஷ்ணா ஆகிய 8 மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளானது. ஏராளமான வீடுகள் இடிந்தது. பல ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் அழிந்தது. |
| டெல்லியில் ரூ.22 கோடியுடன் தலைமறைவான வேன் டிரைவர் பிடிபட்டார்: பணம் மீட்கப்பட்டது Posted: 26 Nov 2015 09:44 PM PST டெல்லி விகாஸ்புரி பகுதியில் தனியார் வங்கி ஒன்றின் தலைமை அலுவலகம் உள்ளது. நேற்று மாலை அந்த வங்கியில் இருந்து ரூ.38 கோடி மதிப்புள்ள பணம் 4 வேன்களில் ஏற்றி டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏ.டி.எம். எந்திரங்களில் வைப்பதற்காக அந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டது. |
| கவர்னரை மாற்றாவிட்டால் தினமும் போராட்டம் நடத்துவோம்: அசாம் காங்கிரஸ் அறிவிப்பு Posted: 26 Nov 2015 09:27 PM PST அசாம் மாநிலத்தில் பிபி ஆச்சார்யா கவர்னராக உள்ளார். இவர் சமீபத்தில் விழா ஒன்றில் பேசும்போது, "இந்தியா இந்துக்களுக்கே சொந்தம்" என்று பேசினார். அசாம் மாநில காங்கிரஸ் கட்சி, கவர்னர் ஆச்சார்யாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆச்சார்யாவை உடனே அசாம் மாநிலத்தில் இருந்து மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மத்திய அரசு அதை கண்டு கொள்ளவில்லை. |
| மண் சரிவால் மூடப்பட்ட திருப்பதி 2–வது மலைப்பாதை மீண்டும் திறக்கப்பட்டது Posted: 26 Nov 2015 09:17 PM PST ஆந்திராவில் பெய்த மழையால் திருப்பதி மலைபாதை பெரும் சேதத்துக்குள்ளானது. 2–வது மலைபாதையில் மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. |
| சபரிமலை கோவில் பகுதியில் லாட்டரி விற்க தடை: கேரள ஐகோர்ட்டு உத்தரவு Posted: 26 Nov 2015 08:20 PM PST பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையையொட்டி நடை திறக்கப்பட்டு உள்ளதால் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது தமிழகம், ஆந்திரா போன்ற வெளிமாநில பக்தர்கள் அதிக அளவில் சபரிமலையில் குவிய தொடங்கி உள்ளனர். இதைத் தொடர்ந்து |
| சகிப்புத்தன்மை விவகாரம்: அமீர்கானின் ரசிகை தற்கொலை Posted: 26 Nov 2015 07:20 PM PST நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும், இதனால் இந்தியாவை விட்டு குடும்பத்துடன் வெளியேறி விடலாமா? என தனது மனைவி கூறியதாகவும், பிரபல இந்தி நடிகர் அமீர்கான் சமீபத்தில் கூறியிருந்தார். அவரது இந்த கருத்தால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை கிளம்பி உள்ளது. |
| Posted: 26 Nov 2015 06:26 PM PST தமிழக சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரையின்போது குறுக்கிட்டு ரகளை செய்ததாக தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், வி.சி.சந்திரகுமார், எல்.வெங்கடேசன், சி.எச்.சேகர், கே.தினகரன், எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டனர். |
| சரக்கு, சேவை வரி மசோதாவுக்கு 30 அரசியல் கட்சிகள் ஆதரவு Posted: 26 Nov 2015 06:00 PM PST மறைமுக வரிகளுக்கு மாற்றாக கொண்டுவர உத்தேசித்துள்ள சரக்கு, சேவை வரியை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையா நாயுடு, |
| இந்தியாவை விட்டு வெளியேறு என்று அமீர்கானை யாரும் சொல்ல முடியாது: மம்தா பானர்ஜி ஆதரவு குரல் Posted: 26 Nov 2015 04:08 PM PST நாட்டில் நிலவி வரும் சகிப்பின்மை குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், அமீர்கானை இந்தியாவை விட்டு வெளியே செல்லுமாறு யாரும் சொல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். |
| போர்த்துகல் நாட்டின் புதிய பிரதமர் அந்தோணியோ கோஸ்டாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து Posted: 26 Nov 2015 04:03 PM PST போர்த்துகல் நாட்டில் கடந்த 7 வாரங்களுக்கும் மேலாக நிலவிவந்த அரசியல் குழப்பத்திற்கு அந்நாட்டின் புதிய சோசலிச நிர்வாகத்தின் தலைமையகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. போர்த்துகல் நாட்டின் புதிய பிரதமராக அந்தோணியோ கோஸ்டா அறிவிக்கப்பட்டுள்ளார். |
| உறுப்பினர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டெல்லி மேல்-சபை ஒத்திவைப்பு Posted: 26 Nov 2015 03:33 PM PST நாகாலாந்து மக்கள் முன்னணி சார்பில் டெல்லி மேல்- சபைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தவர், கெகிகோ சிமோமி (வயது 69). பக்கவாத நோயால் கடந்த சில நாட்களுக்கு முன் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலையில் மரணமடைந்தார். |
| விமான போக்குவரத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் இந்தியா: 2026-ல் உலக அளவில் 3-வது இடத்தை பிடிக்கும் Posted: 26 Nov 2015 03:23 PM PST வரும் 2026-ம் ஆண்டிற்குள் விமான போக்குவரத்தில் உலக அளவில் 3-வது இடத்தை இந்தியா பிடிக்கும் என சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு (ஐ.ஏ.டி.ஏ.) தகவல் வெளியிட்டுள்ளது. 2014-ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது ஆண்டுதோறும் 3.8 சதவீதம் அளவுக்கு இந்தியாவில் விமான போக்குவரத்து துறை |
| டெல்லியில் தனியார் வங்கியின் பணம் ரூ.22.5 கோடியுடன் ஓட்டம் பிடித்த வேன் டிரைவர் Posted: 26 Nov 2015 01:41 PM PST டெல்லியில் தனியார் வங்கியின் பணத்தை எடுத்துச் சென்ற வேன் டிரைவர் ரூபாய் 22.5 கோடியுடன் தப்பித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் வங்கி ஒன்று தெற்கு டில்லியில் உள்ள தன்னுடைய வங்கி கிளைக்கு பணத்தை கொண்டு செல்வதற்காக வினய் பட்டேல் என்ற |
| பாராளுமன்றத்தில் அரசியல் சாசன விவாதம்: ராஜ்நாத் சிங்குடன் காங்கிரஸ் நேரடி மோதல் Posted: 26 Nov 2015 11:29 AM PST பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்திய அரசியல் சாசனம், 1949-ம் ஆண்டு, நவம்பர் 26-ந் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய அரசியல் சாசனத்தின் முக்கியத்துவத்தை பரப்பவும், அரசியல் சாசனத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |