Tamil Star |
- ரொரன்ரோவில பனிச்சறுக்கு மையங்கள் திறக்கப்படுகின்றன
- ரொப் ஃபோர்ட்டின் புற்றுநோய்க்கான இரண்டாம் கட்ட கீமோ தெரபி ஆரம்பம்
- இரத்தத்தைச் சுத்திகரிக்கும் அற்புத உணவு காளான்!
- நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை குறைக்க வேண்டுமா?
- வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற சாரதி மீது குற்றச்சாட்டு
- அகதிகளுக்காக தயார் படுத்தப்படும் இராணுவ முகாம்கள்
| ரொரன்ரோவில பனிச்சறுக்கு மையங்கள் திறக்கப்படுகின்றன Posted: 26 Nov 2015 06:32 PM PST
எதிர்வரும் சனிக்கிழமையளவில் Nathan Phillips Square, Greenwood Park, Colonel Samuel Smith Park, Dieppe மற்றும் Rennie Parks உட்பட 35 இடங்களில் இந்த பனிச்சறுக்கு மையங்கள் திறக்கப்படும் என ரொரன்ரோ நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. பனிப் பொழிவும், பருவநிலையும் ஒத்துளைத்தால் இந்த பனிச் சறுக்கு மையங்கள் எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் 20ஆம் திகதி வரையில் திறந்திருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இவற்றை விட மேலும் 15 பனிச் சறுக்கு மையங்கள் அடுத்துவரும் சனிக்கிழமையளவில் ரொரன்ரோவில் திறக்கப்படும எனவும் ரொரன்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. The post ரொரன்ரோவில பனிச்சறுக்கு மையங்கள் திறக்கப்படுகின்றன appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொப் ஃபோர்ட்டின் புற்றுநோய்க்கான இரண்டாம் கட்ட கீமோ தெரபி ஆரம்பம் Posted: 26 Nov 2015 06:29 PM PST
இந்த கவலை ரொப் ஃபோர்ட்டின் நிறைவேற்று உதவியாளரான டான் ஜேக்கொப் இன்று மின்னஞ்சல் வாயிலாக வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். தற்போது இரண்டாம் கட்ட கீமோ தெரபி ஆரம்பமாகியுள்ள நிலையில், மூன்றாம் சுற்று கீமோ தெரபி எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருந்த போதிலும் ரொப் ஃபோர்ட்ருக்கான அடுத்தகட்டமாக எவ்வாறான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை தீர்மானிப்பதற்கான மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அநத ஆய்வு முடிவுகளுக்காக ரொப் ஃபோர்ட்டும் அவரது குடும்பத்தினரும் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். The post ரொப் ஃபோர்ட்டின் புற்றுநோய்க்கான இரண்டாம் கட்ட கீமோ தெரபி ஆரம்பம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இரத்தத்தைச் சுத்திகரிக்கும் அற்புத உணவு காளான்! Posted: 26 Nov 2015 04:53 PM PST
இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது. மருத்துவ பயன்கள் காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது. இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றை குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். The post இரத்தத்தைச் சுத்திகரிக்கும் அற்புத உணவு காளான்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை குறைக்க வேண்டுமா? Posted: 26 Nov 2015 04:47 PM PST
வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டுமணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச் சாறு அருந்தினால் பலன் தெரியும். அடங்கியுள்ள சத்துக்கள் வெள்ளரியில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் குளோரின் இதில் உண்டு. இரத்ததில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகம் உண்டு. மேலும் விட்டமின்களான பி1, பி5 மற்றும் பி7 உள்ளன. மருத்துவ பயன்கள் காலரா நோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒருமணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்த வேண்டும். வறண்ட தோல், காய்ந்து விட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம். இது நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கச்செய்யும். மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும். நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக் காய் என்றாலும் பெரியவகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன் தான் அரைத்துச் சாறு அருந்தவேண்டும். இதனால் ஆண்மை பெருகும். வெள்ளரியில் உள்ள நீர் சத்து நாக்கு வறட்சியைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கும். வெள்ளரிக்காய் ஜூஸ் வெள்ளரிக்காய் – 50 கிராம் தயிர் – 100 மி.லி மிக்ஸியில் அடித்து உப்பு, மிகப் பொடிதாக நறுக்கிய புதினா, குடமிளகாய் சேர்த்து ருசிக்கலாம்! பயன்கள் வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும்.
The post நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை குறைக்க வேண்டுமா? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற சாரதி மீது குற்றச்சாட்டு Posted: 26 Nov 2015 10:20 AM PST
நேற்று புதன்கிழமை காலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. Steeles அவனியூ மற்றும் Kennedy வீதிப்பகுதியில் 21 வயது பாதசாரி ஒருவர் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் குப்பை சேகரிக்கும் வாகனம் ஒன்றினால் அவர் மோதப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் காயமடைந்த அந்த பதசாரியை பிரம்டன் பொது மருத்துமனையில் உடனடியக அனுமதித்திருந்த போதிலும், அவருக்கு ஏற்பட்டிருந்த மோசமான காயம் காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை பாதசாரியை மோதிய நபர் சம்பவ இடத்தில் தரிந்து நிற்காது அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்பட்டது. பின்னர் காவல்த்துறையினர் மேற்கொண்டு வந்த விசாரணைகளில் இருந்து குப்பை சேகரிக்கும் வாகனத்தின் சாரதி ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், வாகனத்தால் மோதுண்ட நபர் உயிரிழந்தமை தொடர்பில் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குறித்த நபரை எதிர்வரும் டிசர்ம் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்த்துறையினருடன் அல்லது குற்றத் தடுப்புப் பிரிவினருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். The post வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற சாரதி மீது குற்றச்சாட்டு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அகதிகளுக்காக தயார் படுத்தப்படும் இராணுவ முகாம்கள் Posted: 26 Nov 2015 10:12 AM PST
குறிப்பாக நாடு முழுவதிலும் உள்ள இராணுவ முகாம்கள் பல இந்த தயார் படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடத்தினுள் கனடாவிற்கு அழைத்து வரப்படும் அகதிகளுக்கான தங்குமிட வசதிகள், உணவு வினியோகங்கள் போன்றவற்றை உரிய முறையில் மேற்கொள்வதற்கான திட்டமிடல்களில் கனேடிய படை முகாம்கள் ஈடுபடடுள்ளன. நியூ பிரவுன்ஸ்விக் இராணுவ முகாம் அதிகாரி ஒருவர் இந்த நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கையில்,இந்த வருட இறுதிக்குள் 25,000 சிரிய அகதிகளை தருவிப்பதாக இருந்த நிலையில், தற்போது அந்த 25,000 அகதிகளையும் அழைத்து வருவதற்கான கால எல்லை எதிர்வரும் பெப்ரவரி மாதமாக அறிவிக்க்பபட்டுள்ள போதிலும், இது தொடர்பில் தமக்கு எத்தகைய அறிவுப்புக்களும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். எனினும் தமது முகாம்களுக்குள் எவ்வளவு மக்களை தங்க வைக்க முடியும் என்ற ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தமக்கு பணிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இவ்வாறு இராணு முகாம்கள் அகதிகளுக்காக ஒழுங்கமைக்கப்பட்டு வருவதனால், தமக்கான மாற்று ஏற்பாடுகளையும் தாம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் விபரித்தள்ளார். அத்துடன் சிரிய அகதிகள் அழைத்துவரப்படும் வேளையில், அவர்களை வரவேற்று தேவையான உதவிகளை வழங்குமாறு அழைக்கப்பட்டால் அவர்களுக்கான உதவிகளை செய்துகொடுக்க தாம் எப்போதும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கனடாவை வந்தடையும் அகதி மக்களுக்கான உணவு, மருத்துவ உதவிகளை வழங்குதல், அவர்களுக்கான மத வழிபாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பவற்றிலேயே தாம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். The post அகதிகளுக்காக தயார் படுத்தப்படும் இராணுவ முகாம்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

பனிப் பருவகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், ரொரன்ரோவில் வெளிக்கள பனிச் சறுக்கு மையங்கள் இந்த வார இறுதியில் திறக்கப்படவுள்ளன.
ரொரன்ரோவின் முன்னாள் நகரபிதா ரொப் ஃபோர்ட்டுக்கு மீண்டும் ஏற்பட்டுள்ள புற்றுநோய்க் கட்டியினை சுருங்கச் செய்வதற்கான கீமோ தெரபி சிகிச்சை இன்று மருத்துவமனையில் ஆரம்பமானது.
காளான் இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம்.

